1. அவதாரிகை
"ஆரணநூல் வழிச்செவ்வை அளித்திடும் ஐதுகர்க்கு ஓர்
வாரணமாய் அவர்வாதக் கதலிகள் மாய்த்த பிரான்
ஏரணிகீர்த்தி ராமானுச முனி இன்னுரை சேர்
சீரணி சிந்தையினோம் சிந்தியோம் இனித்தீவினையே"
- (அதிகார ஸங்க்ரஹம் 4)
என்று ஸ்வாமி தேஶிகன் எதிராசர் பெருமையைப் பறை சாற்றுகிறார்.
தேசமெலாம் உகந்திடவே பெரும்பூதூரில் சித்திரையில் ஆதிரைநாள் வந்து தோன்றிய எம்பெருமானார் நம் விஸிஷ்டாத்வைத தர்ஶன ஸ்தாபகர். "பகவத் ராமானுஜ தர்ஶனம்" என்று இதனை திருக்கோட்டியூர் நம்பி கொண்டாடுகிறார். நம் குரு பரம்பரா வைபவங்களுள் மிக முக்யமானது உடையவர் அருளிய ஸ்ரீ பாஷ்யம். உலகில் எத்தனையோ பாஷ்யங்களிருப்பினும் ஸ்ரீ என்ற அடைமொழியுடன் கூடியது இது மட்டுமே. ஸரஸ்வதி தேவியே அங்கீகரித்து அருளிய பெயர் இந்த க்ரந்தத்துக்கும் அதனை அருளிச்செய்தவர்க்கும்.
இத்தகைய சிறப்புமிக்க ஸ்ரீபாஷ்யம், கற்க நியமங்கள் ஏராளம் இருப்பினும் அதன் ஸாரத்தை எல்லோரும் அறியலாம் என்பது ஸ்வாமி தேஶிகன் திருவுள்ளம்.
உபநிஷத் வார்த்தைகளுக்கு விசாரம் செய்யும் வகையில்
வ்யாஸர் சூத்ரங்களைச் (சுருக்கமான வாக்கியங்கள்) செய்தார். உபநிஷத் என்ற பாற்கடலில் கடைந்தெடுத்த அமுதமே இந்த சூத்ரங்கள். பகவத் விஷயம் பகவத் கீதை இவற்றைப் போல இதனையும் உபதேசிக்க வேணும் என்பது வ்யாசரின் உத்தேஸ்யம். இவரது சிஷ்யரான போதாயனர், “போதாயன சூத்ர வ்ருத்தி” என்ற க்ரந்தத்தைச் செய்தார். மகாபாரதத்தைவிடப் பெரியது இது. இதனைப்படித்து விட்டு வ்யாசர் திருவுள்ளத்தையொட்டி பாஷ்யம் செய்ய நினைத்தார் ராமானுஜர். காஷ்மீரத்தில் ஸரஸ்வதி பீடத்தில் இருந்த ஒரே சுவடியை அங்கு சென்று படித்து எழுத முடியாத நிலை. எண்ணம் ஈடேறாது பரமபதித்த ஆளவந்தாரின் மடங்கிய மூன்று விரல்களும் ராமானுஜரின் ப்ரதிஞையால் விரிந்தன. மூன்று விஷயங்களுள் ஒன்று ப்ரும்ஹ சூத்ரத்துக்கு பாஷ்யம் செய்வது. ஆளவந்தார் திருவுள்ளத்தை ராமானுஜரைக் கொண்டு நிறைவேற்ற அரங்கன் ஸங்கல்பித்தான். ஆக மொழியைக் கடக்கும் பெரும்புகழானாகிய தன் சிஷ்யன் கூரத்தாழ்வானுடன் காஷ்மீரம் சென்று அங்கு ஆழ்வான் மனதில் ஏற்றிக்கொண்ட சூத்ரங்களை ராமானுஜர் வியாக்யானம் செய்ய அதனைப் பட்டோலைப்படுத்தினார் ஆழ்வான். இதனைத் திரும்ப காஷ்மீரம் சென்று ஸரஸ்வதி பீடத்தில் வைத்து அங்கீகாரம் பெற வேண்டுமாகையால் ஆங்கே ஸரஸ்வதிதேவி தன் ஸிரஸில் ஏற்று ஸ்ரீபாஷ்யம் என்று பெயரிட ராமானுஜரும் ஸ்ரீபாஷ்யகாரர்
ஆனார். ஸ்ரீ என்ற வேதத்துடன் பொருந்தியிருப்பது இந்த ஸ்ரீபாஷ்யம். வித்யாமூர்த்திகளாகிய வ்யாசர், தக்ஷிணாமூர்த்தி, ஸரஸ்வதி ஆகியோர்க்கு ஆராத்ய தெய்வமாகிய ஹயக்ரீவமூர்த்தியையும் அளித்தாள் தேவி. ஆக நம் சம்ப்ரதாயத்துடன் எம்பெருமானும் கூடவே வருகிறான். ஸம்ரதாய வ்ருத்திக்கு 74 ஸிம்ஹாஸநாதிபதிகளை நியமித்தார் ராமானுஜர். தன் ஞானபுத்ரரான திருக்குருகைப் பிரான்பிள்ளான், முதலியாண்டான், நடாதூராழ்வான், கிடாம்பி ஆச்சான் ஆகிய நால்வரும் நேரடியாக பாஷ்யகாரரிடம் ஸ்ரீபாஷ்யம் கேட்டவர்கள். பிள்ளானின் சிஷ்யன் எங்களாழ்வான், அவரது சிஷ்யன் நடாதூரம்மாள், தொடர்ந்து அப்புள்ளார், இவரிடம் ஸ்வாமி தேஶிகன் என பரம்பரையாகிற்று.
ரங்கநாதனால் பிறப்பிக்கப்பட்ட ஸ்ரீபாஷ்யம் பேரருளானால் வளர்க்கப் பட்டது. பெற்றதாய் ராமானுஜன் வளர்த்த தாய் தேஶிகன். ஆக ஆளவந்தார் நினைத்ததை காரேய் கருணை ராமானுஜர் செய்தார் .செயல்படுத்தி மக்களிடையே ஞானம், பக்தி, அனுபவம் ஏற்படுத்தியவர் ஸ்வாமி தேஶிகன்.
2 - பரப்ரஹ்மம்
ஸ்ரீபாஷ்யம் என்ற க்ரந்தம் அருளியவர் ஸ்ரீபாஷ்யகாரர். இப்படி பெயரமைவது வெகுஶ்ரேஷ்டம்.
"பவமரு பரிகிந்ந-........நாடிந்தமான: (யதிராஜ ஸப்ததி 30) இன்ப நாடியைத் தட்டினால் மிகுந்த இன்பம் விளைவது போல எம்பெருமானின் ரஹஸ்யங்களைக்காட்டி நமக்கு பேரானந்தத்தைத் தர வல்லது இந்த எம்பெருமானாரின் ஸ்ரீபாஷ்யம் என்கிறார் ஸ்வாமி தேஶிகன். 4 அத்யாயங்களளுள் 16 பாதங்களை அடக்கியது. இத்தனையிலும் மொத்தமாகப் காட்டப்படும் விஷயம் "பரப்ரஹ்மம்".
முதலிரண்டு அத்யாயங்கள் ஆதிகாரணன் ஸ்ரீமன்நாராயணனே என்பதை உறுதிபட ஸ்தாபிக்கிறது.
3ம் அத்யாயம் உபாயத்வத்தையும்
4ம் அத்யாயம் பலாத்யாயமாயும் அமைகின்றன. இந்த 4 அத்யாயங்களின் மையக்கருத்தை பெரியாழ்வாரின் இத்திருமொழி தெளிவாய்த் தெரிவிக்கிறது.
"அண்டக்குலத்துக்கதிபதியாகி"--(ப்ரபஞ்ச ஸ்ருஷ்டி "அசுரர்இராக்கதரை...இருடீகேசன்தன்னை"--(தடையற்ற பெருமை)
"தொண்டக்குலத்துள்ளீர்"---(உபாயம்)
பண்டைக்குலத்தைத் தவிர்ந்து"---(ஸம்ஸாரம் தவிர்க்கும் பலம்)
"பூவளரும் திருமாது புணர்ந்த நம் புண்ணியானார்
தாவளமான தனித்தவம் சேர்ந்து தமருடனே
நாவளரும் பெரு நான்மறை ஓதிய கீதமெலாம்
பாவளரும் தமிழ் ப்பல்லாண்டிசையுடன் பாடுவமே" (பரமபத சோபானம் 18) என்கிறார் ஸ்வாமி.
வேதம் சொல்லும் பரப்ரஹ்மம் நம்மாழ்வார் குறிப்பிடும் "உயர்வற உயர்நலம் உடையவன்". உலகங்களைப்டைத்து , அதில் வ்யாபித்து எண்ணற்ற கல்யாண குணகணங்களைக் கொண்டவனாகையால் உயர்ந்தவன் எம்பெருமான். ஜீவர்களுக்கு மோக்ஷஸ்தானமளிப்பதால் உயர்த்துபவன். நம்மாழ்வார் குறிப்பிடும் "உயர்வற உயர்நலமுடையவனும்", "ஒத்தார்மிக்காரை இலையாய மாமாமயனும்" "பகம்"என்ற 6 குணங்களையுடையனுமாகிய எம்பெருமானே ஶ்ருஷ்டி,ஸ்திதி, லய காரணனாவான். ஸத்ய, ஞான,
அனந்த ஆனந்த ஸ்வரூபனாகிய எம்பெருமானை தேச, கால, வஸ்துக்களால் வரையறுக்க முடியாது என்பதை "நந்தா விளக்கே அளத்தற்கரியாய்" என திருவாய்மொழியும்,
"நந்துதலில்லா நல்விளக்காகி
அந்தமில் அமுத ஆழியாய் நிற்றி"
என மும்மணிக்கோவை யும்
முழக்கமிடுகின்றன.
இப்படி பட்ட எம்பெருமானைத்
தெரிந்து கொள்ள ஸாஸ்த்ரம் ஒன்றே உபகாரமாயிருக்கும்.
எங்கும் கண்டிராத ப்ரஹ்மத்தை அனுமானிக்க முடியாது.
வேதமும் நாராயணனும் பிரிக்க முடியாத பதி பத்நீ பிணைப்பை
ஒத்தவை.வேதம் பத்நீ.நாரயணன் நினைப்பதை வேதம் சொல்லும்.
ஆக வேதமாகிய பத்நீக்கு அதீனமான பதி நாராயணன்.
இத்தகைய வேதத்துக்கு ராமானுஜர் செய்த அலங்காரமே ஸ்ரீபாஷ்யம்
."ப்ரமாணம் லக்ஷ்மண முனி: ப்ரதி க்ருண்ணாது மாமகம்
ப்ரஸாதாயதி யத்ஸூக்தி: ஸ்வாதீன பதிகாம் ஶ்ருதிம்"----
(யதிராஜ ஸப்ததி)
வேதத்தின் மூலம் எம்பெருமானை புருஷார்த்தமாக அனுபவிக்க வேணும் குழந்தையிடமிருந்து அம்மாவுக்கும் அம்மாவுடனிருக்கும் குழந்தைக்கும் கிடைக்கும்ஆனந்தம் போன்றது
ஜீவனுக்கும் எம்பெருமானுக்குமிடையே கிடைக்கும் ஆனந்தம்.உலகில் உள்ள வஸ்துக்களனைத்திலிருந்து விலக்ஷணமானவன் எம்பெருமான்.உவமைகூற
முடியாத ஞான, ஶக்தி, பல, வீர்ய, ஐஸ்வர்ய , தேஜஸ் உடையவன்.
"கோணைபெரிதுடைத்து எம் பெம்மானைக்கூறுதலே" (2-6-10)
என்கிறார் நம்மாழ்வார். ஜகச்சக்ஷு எனப்படும் சூர்யனுக்கும் சிறிய விளக்கின்ஒளிக்கும் உள்ளவித்யாசம் போன்றும் , புழுவுக்கும் மனுஷ்யனுக்கமுள்ளதுபோன்றும், மனுஷ்யனுக்கும் தேவர்களுக்குமுள்ள வித்யாசம்போன்றும்
எல்லா வஸ்துக்களிலிருந்தும் வேறுபட்டு மேம்பட்டு விளங்குபவனே எம்பெருமான்.
3- காரண வாக்யங்கள்
எம்பெருமானை அறிய பொருத்தமான ஸாஸ்த்ரம் வேதம் ஒன்றே. வேதமும் பகவானும் பிரிக்கக் கூடாதவை. வேத்தின் பூர்வ பாகம் அனுஷ்டானம் பற்றியும் பல தேவதைகளை க்குறித்த யாக யக்ஞங்கள் பற்றியது. உத்தரபாகமாகிய பின்பகுதி தேவதைகளுக்குள் அந்தர்யாமியாயிருந்துபலனளிக்கும் எம்பெருமானைப் பற்றிப் பேசுகிறது.

"வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர் விழுங்கும் கோதிலின் கனியை"-- என்கிறார் கலியன்.
பிற தேவதைகள் எம்பெருமானுக்கு அங்கமாயுள்ளனர். க்ருஷ்ணன் திருவடியில் அர்ஜுனன் அர்ச்சித்த புஷ்பங்களை சிவன் திருமுடியால் ஏற்றான் என்பது வரலாறு. ஆகஜீவர்களாகிய நாம் எம்பெருமானின் தாஸர்கள்.
ஆனால் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்பது அபேத ஶ்ருதி. இதை "அத்வைதம்" என்பர்.
இந்த இரண்டும் வேறானது என்பது பேத ஶ்ருதி. இதை "த்வைதம்" என்பர். இவ்விரண்டுக்கும் நடுவே உள்ளது கடகஶ்ருதி.
ராமானுஜர் இந்த இரண்டையும் எடுத்துக்கொண்டு ப்ரஹ்மம் தனியாக இல்லை எல்லா வஸ்துக்களிலும் சேர்ந்துள்ளது என்றார். ப்ரபஞ்சத்துடன் கூடியவன் பகவான் என்று சமன்வயப்படுத்தியவர் பாஷ்யகாரர். ஜீவாத்மாவேறு பரமாத்மா வேறு ஆனால் அந்தஜீவனுள் அந்தர்யாமியாக உள்ளான் எம்பெருமான்.
"க்ஷரந்த்யம்ருதமக்ஷரம் யதிபுரந்நரஸ்யோக்தய:
சிரந்தந ஸரஸ்வதீ சிகுர பந்த ஸைரந்த்ரிகா:"---(யதிராஜ ஸப் 36)
வேதமாதாவுக்கு உபநிஷத் சிரோபாகமாயுள்ளது. குத்ருஷ்டிகள் சொன்ன தவறான வேதார்த்தங்களாகிய சிக்கல்களை நீக்கி அழகான மூன்று கால் பின்னலாகிய சிகையலங்காரத்தை ராமானுஜர் தன்விஸிஷ்டாத்வைத சித்தாந்த ஸ்தாபகத்தாலே செய்தார் என்று ஸ்வாமி கூறுகிறார. இத்தகைய பாஷ்யம் அமுதம் போன்றது. ஸகுண ஸ்ருதி , நிர்குண ஸ்ருதி என்றும் வேதம் சொல்கிறது. எண்ணற்ற கல்யாண குணங்கள் எம்பெருமானுக்கு. அதே சமயம் எந்த ஹேய குணங்களும் (பசி, தாகம், மூப்பு, சோகம்) இல்லாதவன். என்பதே நிர்குணஸ்ருதியின் அர்த்தம். இப்டிக்கான வேதார்த்தங்கள் ஸ்ரீபாஷ்யம் தந்ததால் "நாட்டிய நீச சமயங்கள் மாய்ந்தன நாரணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது.".
"காரணவாக்யங்கள்" என்பற்றை வேதம் காட்டுகிறது. ஜகத்காரணன் யார் என்ற சர்சைக்கான விளக்கம் இது.
ஸத் (நிலையாயிருப்பவன்) ஆகாசம் (சுற்றிலும் ப்ரகாசிப்பவன்) ஆத்மா (உள்ளிருந்து ஆள்பவன்) ப்ராண வாயு (மூச்சுக்காற்று) இவை எல்லாமாயுமிருப்பவன் எம்பெருமானே.
"ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா அன்று
நான்முகன் தன்னொடு தேவருலகோடு உயிர் படைத்தான்"
(திருவாய் 4-10-1)
ப்ரளயகாலத்தில் அவன் ஒருவனாலேயே உருவாக்கப்பட்டது இப்ரபஞ்சமும் வஸ்துக்களும். ஆக உலகைப்படைத்தவன் நாராயணன். மற்றவர்கள் அவனால் படைக்கப்பட்டவர்கள்
சிவன்,சம்பூ, ப்ரஹ்மா, இந்த்ரன் என்ற ஸப்தங்கள் எல்லாம் எம்பெருமானையே குறிப்பிடுகிறது என்பதை உபநிஷத் வாக்யத்தைக்கொண்டு ஆராய்ந்து சொல்லலாம்.

"முனியே நான்முகனே முக்கணப்பா"--என்கிறார் நம்மாழ்வார்.
"சாமான்ய புத்தி ஜனகாச்ச"...(.வரதராஜ பஞ்சாஸத் 15)
இந்த ப்ரபஞ்சத்தைப்படைக்க உபாதானகாரணமும், நிமித்த காரணமுமாயிருப்பவன் நாராயணனே.

"தானே உலகெலாம் தானே படைத்திடந்து தானே உண்டுமிழ்ந்து தானே ஆள்வானே" என்கிறார் நம்மாழ்வார்.
எல்லாவற்றுள்ளும் அந்தர்யாமியாயிருந்து உண்டாக்கி ரக்ஷிக்கிறான். ஆக இத்தகைய வேத வாக்யங்களை ஒன்றாகச் சேர்த்து வேதத்தையும் பகவானையும் இணைத்தவர் ஸ்ரீபாஷ்யகாரர்.
4- தர்க்க வாதங்கள்
நம்மால் ஊகித்து, அனுமானித்து அறியமுடியாததைச் சொல்வது வேதம். பகவானுடன் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும்
தெரிவிப்பது வேதம். நாம் படித்து அறிய வேண்டிய க்ரந்தங்கள் அநேகம். ஆனால் அவற்றையெல்லாம் படித்து அறிந்து கொள்ள மனுஷ்யனின் ஆயுள் போதாது. தடைகளும் குறுக்கிடும். அதனால் முனிவர்கள் நீண்ட க்ரந்தங்களை ஶ்லோக ரூபமாய் அளித்துள்ளனர். புராணங்கள் பகவத் ஸ்வரூபத்தையையும், ஸ்ம்ருதிகள் அனுஷ்டானத்தையும் சொல்கின்றன. தர்க்கத்தின் உதவியுடன் தான் வேதத்தைப் புரிந்து கொள்ளமுடியும் என்பதை ஸ்தாபித்தவர் நம் கவிதார்க்கிக ஸிம்ஹம். ஆழ்வார் ஸுக்திகளும்
வேதத்தை அறிய பேருதவியாயுள்ளன.

"செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதி
தெளியாத மறைநிலங்ன்ள் தெளிகின்றோமே" --என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.
"இந்த ப்ரபஞ்சத்தின் ஶ்ருஷ்டி கர்த்தா ஸ்ரீமன்நாராயணனே. இதனை ஏற்காதவன் வைதிகனே அல்லன்" தன் ஸ்தோத்ர ரத்னத்தில் "ஸ்வாபாவிகா நவதிகாதிஶ யேஸித்ருத்வம் நாராயணத்வயி நம்ருஷ்யஸி வைதிக:க:" என்பதாகச் சொல்கிறார் ஆளவந்தார்.
ப்ரபஞ்சம் புதியது அல்ல.

முன்பே உள்ள வஸ்துக்களை மாற்றிப் போட்டுக் கிடைக்கும் புதுஉருவமே என்பது பரிணாம வாதம். தங்கம் பலவித ஆபரணமாகி அதற்கு நாம ரூபமளித்தல்போல. ஆகாசத்துக்கு மேல் ப்ருக்ருதி. அதன் ஒரு பகுதியில் ஸ்பர்சம் ஏற்பட்டு அக்னி, வாயு, ஜலம், பூமியாக உண்டாகிறது. ஒரு வஸ்து இன்னொன்றாக பரிணாமம் அடையும்போது அதனுள் பெருமான் அந்தர்யாமியாக உள்ளான். ப்ருக்ருதிக்குள்ளே இருக்கும் எம்பெரூமான் ப்ரபஞ்சத்துக்குள்ளே வருகிறான்.
"திரியும் காற்றோடு அகல்விசும்பு
திணிந்த மண் கிடந்த கடல்
எரியும் தீயோடிரு சுடர் தெய்வம்
மற்றும் மற்றும் முற்றுமாய்" (திரு.மொழி3-6-5)
இல்லாததை ஶ்ருஷ்டிப்பதில்லை. அவனுக்கே உள்ள அகடித கடனா ஸங்கல்ப சாமர்த்யத்தால் காரண /கார்ய வஸ்துக்களுக்குள் ஸுக்ஷ்மமாயுள்ளான். இதனை மறுத்து வேதத்துக்குப் புறம்பான அர்த்தம் சொல்லும் பௌத்த ஜைன மதங்களைக் கண்டித்து
வேதத்தின் உண்மைநிலையை ஸ்தாபித்தார் பாஷ்யகாரர்.
"பார்த்தான் அறுசமயங்கள்பதைப்ப இப்பார்முழுதும் போர்த்தான் புகழ்கொண்டு புன்மையினேனிடைத்தான் புகுந்து தீர்த்தான்"--என்கிறது ராமானுசநூற்றந்தாதி 52)

"கபர்தி மத கர்தமம் கபில கல்பனா வாகுராம்
துரத்யமமதீத்ய தத் த்ருஹிண தந்த்ர யந்த்ரோதரம்
குத்ருஷ்டி குஹனா முகே நிபதத: பரப்ரம்ஹண:
கரக்ரஹ விசக்ஷணோ ஜயதி லக்ஷ்மணோயம் முனி":

(யதிராஜ ஸப் 38)
சைவச்சேற்றினின்றும், கபில வாத வலையினின்றும், கண்ட யோகா யந்த்ர சிக்கலினின்றும், மாயாவாதிகளின் பொய்ப்ரசாரத்தினின்றும் ப்ரஹ்மத்தைக் காப்பாற்றி அதன் பெருமைகளை நிலைநாட்டி கைதூக்கி நிறுத்தியவர் பாஷ்யகாரர். எம்பெருமானின் திருமேனி, ஸ்வரூப, குணம், விபவம், எல்லாவற்றையும் உண்மையென ஸ்தாபித்து ப்ரஹ்மத்தின் பெருமைகளை உலகுக்குக்காட்டி ப்ரஹ்மத்தைக் காத்தவர் எம்பெருமானார்.
5 - உலகப்படைப்பு
வேதம், ஶ்ருதி, ஸுத்ரம் இவற்றைத் தவறான அர்த்தங்களுடன் ப்ரசாரம் செய்ததால் அவைகளுக்கு ஏற்பட்ட ஜ்வரத்தைப் போக்கியவர் ராமானுஜர். வேதார்த்தங்களை ஸ்தாபித்த வ்யாஸரைப் பரிஹஸித்து, பாகவதம் உபதேசித்த ஶூகரைக் கேலிசெய்து, போதாயனரை வாதாயனராக்கிய குத்ருஷ்டிகளிடமிருந்து அவர்களைக் காப்பாற்றியவர் பாஷ்யகாரர். ப்ரும்ஹ ஸூத்ரத்தின் 2ம் அத்யாயத்தின் பின்பகுதியில் ஸ்ருஷ்டியின் விளக்கமுள்ளது.
"அசிதவிஷ்டான் ப்ரளயே ஜந்தூனவலோக்ய ஜாதநிர்வேதா
கரணகளேபர யோகம் விதரஸி வ்ருஷ ஶைலநாதகருணேத்வம்"
(தயாஶதகம் 17) - என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.

இத்தகைய ஶ்ருஷ்டி அவனுக்காகவும், நமக்காகவும்
செய்துள்ளான். பலவிதமான, ஆச்சர்யமான 26 தத்வங்களைப் வைத்துள்ளான் எம்பெருமான்.
ப்ரக்ருதி, மஹத், அஹங்காரம் மூன்றும் ஆதியில் (3+) உண்டானவை. இவைகளைப்பற்றி நமக்கு எதுவும் தெரியாது.

- அஹங்காரத்தின் ஒரு பகுதியிலிருந்து ஐந்து (5+)
- ஞானேந்த்ரியங்கள் (கண், காது, மூக்கு, நாக்கு, தோல்),
- ஐந்து (5+) கர்மேந்த்ரியங்கள் (கை, கால், வாய், மலமூத்ர விஸர்ஜன உறுப்புகள்),
- மனஸ் (+1) உண்டாயின.
- அஹங்காரத்தின் மற்றொரு பக்கத்திலிருந்து பஞ்சபூதங்கள் உண்டாயின.
- ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், ப்ருத்வி ஆகியன (5+) பஞ்ச பூதங்ள் தோன்றுவதற்கு நடுவே 5 தன்மாத்ரங்கள் தோன்றுகின்றன. இவை ஒன்றிலிருந்து மற்றது மாறிவருகின்றன. இதனையே "மானாங்கார மனங்களே" என்கிறார் ஆழ்வார்.
- 25 வது தத்வம் ஜீவன்.
- எம்பெருமான் 26 வது தத்வம்.
இந்த்ரியம் என்பது ஶரீரத்தின் பாகமன்று. உறுப்பு செய்வதை உணர்வதாகிற ஞானத்தை அளிக்கவல்லது இந்த்ரியம். கண் பார்ப்பதை இன்னது என்ற ஞானத்தைக் தருவதே இந்த்ரியம்.
இதை ஶ்ருஷ்டித்தவன் ரிஷிகேசனாகிறான். (இந்த்ரியங்களை அளித்து ஆள்பவன்)
"நாற்ற தோற்ற சுவை ஒலி உறலாகிநின்ற" என்கிறார் ஆழ்வார். இந்த பஞ்சேந்த்ரியங்களுள் இந்த்ரியங்களை நடத்தும் ப்ராண வாயு மிக முக்யம் அதுவே ஶ்ரேஷ்ட ‘ப்ராணன் எனப்படும்’.
"பூநிலாய ஐந்துமாய்புனற்கண் நின்ற நான்குமாய்
தீநிலாயமூன்றுமாய் சிறந்தகாலிரண்டுமாய் மீநிலாயதொன்றுமாகி வேறுவேறு தன்மையாய் நீநிலாய வண்ண நின்னை யார் நினைக்க வல்வரே"-- திருமழிசையாழ்வாரின் திருச்சந்தவிருத்தப் பாசுரம் இது.
இந்த 24 தத்வங்களைக் கொண்டு செய்யும் ஶ்ருஷ்டி ‘ஸமஷ்டி ஶ்ருஷ்டி’ எனப்படும். சேதனத்தை அசேனத்துடன் சேர்ப்பது ‘வ்யஷ்டி ஶ்ருஷ்டி’. தாயாரின் கர்பத்தில் ஜீவனைச் சேர்க்கிறான். ஆகாசத்தின் நீல நிறம், ஜ்வாலையில் பல நிறங்கள் எல்லாம் பஞ்சபூதங்களின் பஞ்சீகரணம் என்ற கலப்படத்தாலே உண்டாகின்றன. சத்தாகிய பஞ்ச பூதத்திலிருந்து கலப்பட பஞ்சபூதம் சேர்ந்து அண்டம் உண்டாகிறது.
அதுபோல் பல அண்டங்கள் தோன்றுகின்றன. அந்த அண்டத்துள் க்ஷீராப்தியில் சயனித்துள்ள எம்பெருமானின் நாபிகமலத்திலிருந்து ப்ரும்ஹா தோன்றி வேதோபதேசம் பெற்று அவனுள் அந்தர்யாமியாயிருந்து எம்பெருமானே ஶ்ருஷ்டி கார்யங்களைச் செய்கிறான். ஆக இந்த ஜகத் ஶ்ருஷ்டிக்கு உபாதான -நிமித்த காரணம் ஸ்ரீமன் நாராயணனே.
6. ஜீவாத்மா
ஸம்ஸாரத் தளையிலிருந்து விடுபட ஆசார்ய ஸ்ரீஸுக்திகளே உதவும். ஸ்ரீபாஷ்யத்தின் 2ம்அத்யாயம் ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தையும் அதன் செயல்பாட்டையும் பற்றியது.
"நான்" என்பதன் அர்த்தம் என்ன? அது பொதுவானதல்ல - "புஸ்தகம்" என்ற சொல்லைப் போல். நான் என்பதன் உடைமையாகிய தன்னைப்பற்றிய அறிவு தனக்கே வந்தால் அதுவே நான். புஸ்தகத்தின் ஞானம் அதற்கு வராது. அதனால் அது நான் ஆகாது. இந்த ஆத்மாவகிய நான் ஶரீரத்திலிருந்து வேறுபட்டது. இந்த ஶரீரம் இந்த்ரியங்களுக்குரியவன் ஆத்மா. அவற்றிலிருந்து வேறுபட்டது. இது பெரும்பாலும் ஹ்ருதயத்துக்குள்ளிருக்கும். மிகஸுக்ஷ்ம ஸ்வரூபமுடைய ஆத்மா தேஜஸ்ஸின் ஒரு பொறியளவானது. ஞானஸ்வரூபி. தானே தன்னிருப்பைத் தெரிந்து வைத்துக்கொண்டுள்ளது. பஞ்சபூதத்தாலானதல்ல. உற்பத்தி/நாசமற்ற நித்யமானது. அடுத்தடுத்த ஶரீரத்தைச் சென்றடையக் கூடியது.

இதனை "ஆத்மயாத்ரை" என்பர். ஆத்மா ஞானமுள்ளவன் (ஞாதா) கார்யம் செய்பவன் (கர்த்தா) அனுபவிப்பவன் (போக்தா) ஆத்மா பராதீனன் - எம்பெருமானுக்கு கட்டுப்பட்டவன். ஸ்வதந்த்ரனல்லன். ஜீவாத்மா, ஶரீரம், இந்த்ரியங்கள், ப்ராண வாயு, எம்பெருமான் க்ருபை ஆகிய 5ம் சேர்ந்தால்தான் ஒரு கார்யம் நடக்கும். (கண் இமைப்பது, மூச்சு விடுவது உள்பட).
தனது ஞானத்தால் நல்லதையும் கெடுதலையும் தேர்ந்தெடுக்கும் சிறிய ஸ்வதந்த்ரம் ஜீவனுக்கு உள்ளது. செய்யத்தக்கவையால் நன்மையையும் அல்லாதவையால் தீமையையும் அடைகிறான். இதனைத் தேர்ந்தெடுப்பவன் ஜீவாத்மா தான் பகவானல்ல.
ஜீவாத்மாவுக்கு பல நிலைகளுள்ளன. ஸம்ஸார நிலையில் கர்த்தா போக்தாவாய் அனுபவிக்கிறான் விழிப்பு நிலையில். ஸ்வப்னம் தூக்க நிலை மற்றொன்று. 6 இந்த்ரியங்களும் ஓய்வு நிலையில் இருப்பது தூக்கம். இது எம்பெருமான் அளித்த வரப்ரசாதம். இச்சமயத்தில் உமிழ்நீர் சுரப்பதில்லை. ஆனால் ரத்த, ப்ராண வாயு ஓட்டம் நடக்கிறது. மறுநாள் காலை அதே ஞானத்துடன், புத்துணர்ச்சியுடன் எழுகிறோம்.
இதில் மனஸ் மட்டும் விழித்திருக்கும் நிலை "ஸ்வப்னம்". அதிகமான பயம், மகிழ்ச்சி, துக்கம் இவற்றின் வெளிப்பாடுதான் ஸ்வப்னம். இதனை எம்பெருமானே செய்கிறான். இது ஒரு விசித்ர அனுபவம். புண்ய பாப பலனால் ஏற்படும் அனுபவமாகிய இதனை ஒரு லகு சிக்ஷையாகச்செய்கிறான் எம்பெருமான்.
ஜீவன் ஶரீரத்திலிருந்து வெளியேறும்போது ஸுக்ஷ்ம பஞ்சபூதங்களும் உடன் செல்லும். சுக துக்க அனுபவத்துக்குப் பின் மறுபடி பிறக்கும். மேகமாகி, மழையாகி, பயிராகி, அன்னமாகி, புருஷ ஆகாரமாகி, ஸ்த்ரீ கர்பத்தில் சேர்ந்து பிறக்கிறான்.

ஶரீரம் இந்த்ரியங்களுடனிருந்தால்தான் ஞானமிருக்கும். இத்தகைய நிலைகளால் கர்ம பலன் படி பகவான் வழி நடத்துகிறான். ஞானத்துக்கு விரோதியாக அவித்யா போனால் மோக்ஷம். புண்ய பாபத்தை விடுவதே மோக்ஷம். இதற்கு நமக்கு வைராக்யம் வரணும். இனிய ரஸத்துடன் கூடிய பழத்தையும் நல்ல சுகந்தத்துடன் கூடிய புஷ்பத்தையும் எம்பெருமானுக்கு ஸமர்ப்பிப்பதுபோல ஞானத்துடன் கூடிய நம்மை (ஜீவனை) அவனிடம் ஸமர்ப்பிக்க வேணும். அவர்தானே ஶ்ருஷ்டிகர்த்தா!
7. பரமாத்மா
உயர்ந்த நிலையிலுள்ள பகவான் சேஷீ. நாம் சேஷன். ஆத்மா என்றால் வ்யாபித்திருப்பவர் எனப்பொருள். ஶரீரத்தை ஆள்பவர் என்றும் பொருள். இது இரண்டுமே பகவானுக்கு மட்டுமே பொருந்தும். எல்லா சேதன அசேதன வஸ்துக்களின் உள்ளும், புறமும் வ்யாபித்திருப்பவன் பரமாத்மா. அவன் ஆளும் ஶரீரம் இந்த ப்ரபஞ்சம் முழுதும் என வேதம் ஸ்பஷ்டமாய்க் கூறுகிறது.
புண்ய பாபத்துக்குட்பட்டே ஶரீரம் அமையும். இவை இல்லாத போது
பரமாத்வுக்கு ஶரீரம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பாஷ்யகாரர் சொல்லும் பதில். (ப்ருகதாரண்ய உபநிஷத் படி) ப்ரபஞ்சமே ஶரீரம் எனச் சொல்லும் வேதம் நம்மைப் போல கை, கால் என்ற இந்த்ரியங்கள், சுக துக்கங்கள் உள்ள ஶரீரமன்று.

ஸகலப்ரபஞ்சமும் பகவானால் ஆளப்படுகிறது. அவற்றுக்கு சேஷியாக, தரிப்பவனாயுள்ளான். அதனாலேயே அவன் பரமாத்மா என்றும் அந்தர்யாமி (உள்ளேயிருந்து நியமனம் செய்பவன்) என்றும் சொல்லப்படுகிறான். ஸ்வரூபம், ஸ்திதி, பரவ்ருத்தி ஆகிய மூன்றும் பகவானுக்கு அதீனம்.
(கடவுள் என தமிழில் கூறுவதும் பொருந்தும்) ப்ராண வாயு, ஆகாசம் ஆகியன ஶரீரத்துள்ளே இருப்பினும் நியமிக்காது.

(எஜமானன் வேலைக்காரனுக்கு கட்டளை இடுவான், அவனுள்ளே புகுந்து செயல்பட முடியாது) ஆனால் வஸ்துவின் உள்ளேயும் வெளியிலும் வ்யாபித்து நியமிப்பவர் பரமாத்மா ஒருவனே. ஆக எது சேஷமாயும், ஆளப்படுவதாயும், தரிக்கப்படுவதாயும் உள்ளதோ அது ஶரீரம். சேஷியாயும், ஆள்பவனாயும், தரிப்பவனாயும் உள்ளவனே பரமாத்மா.
எல்லா தேவதைகள், ஆத்மாக்கள் ப்ரஹ்மா விஷ்ணு சிவன் எல்லாம் ஒன்று என்றும், சமம் என்றும், இதற்கு மேலான ப்ரஹ்மம் ஒன்று உண்டு என்ற வாதங்களிருந்தன. இவற்றை நிரஸனம் செய்து வேதவாக்யங்கள் மூலமும் ஆழ்வார் ஸ்ரீஸுக்த்திகள் மூலமும்
பாஷ்யகாரர் பரமாத்மா என்பவன் நாராயணனே என்று ஸ்தாபித்தார்.
"பாராயது உண்டுமிழ்ந்த பவளத்தூணை"(பெரிய திருமொழி)

"ஞாலத்தூடே நடந்து நின்றும் கிடந்திருந்தும்
சாலப்பலநாள் உகந்தோறுயிர்கள் காப்பானே"
சாலப்பலநாள் உகந்தோறுயிர்கள் காப்பானே"
(திருவாய்மொழி 6-9-3)
இத்தகைய பரமாத்மா ஞானானந்த ஸ்வரூபன். ஞானம் அனுகூலமாயிருப்பதுவே ஆனந்தம். ஆக ஞானத்தால் பெறுவதுவே மோக்ஷானந்தம். அதுவே நிரவதிக ஆனந்தம். மனம் வாக்கு காயத்துக்கு அப்பாற்பட்டது. இத்தகைய ஆனந்த ஸ்வரூபன் அனந்தமான கல்யாண குணங்கள், ஆஶ்சர்யமான விபூதி, திருமேனி கொண்டவன். சூர்யமண்டலத்தின் நடுவே ஸ்வர்ண மயமான திருமேனியுனிருப்பதாய் வேதம் சொல்கிறது. அவதாரங்களால் அவன் பெருமை இன்னும் கூடியது.
இவைதவிர அவனுக்கே உள்ள தனிப்பட்ட பெருமைகள் உள்ளன.
8. ப்ரஹ்ம வித்தைகள்
ஸ்ரீபாஷ்யகாரர் தத்வ விஷயங்களைமிக அழகாய் வரிசைப்படுத்தியுள்ளார். 3ம் அத்யாயம் உபாய அத்யாயம், 4ம் அத்யாயம் பலாத்யாயம். ஸித்த விஷயத்தை முன்பாதியும் ஸாத்யவிஷயத்தை பின்பாதியும் சொல்கிறது. வணங்கி ஸேவித்து பாராயணம் செய்யவேண்டிய க்ரந்தம் ஸ்ரீபாஷ்யம்.
இக்ரந்தம் "அ"வில் ஆரம்பித்து "ம"வில் முடிகிறது நடுவில் "உ". இதுவே ப்ரணவ தத்வம்.

- பிராட்டியினால் வந்த பெருமை"ஶ்ரிய:பதி" என்பது.
- தனிக்கடலே தனிச்சுடரே தனிஉலகே என்று கொண்டு ப்ரளயத்துக்குட்படாத பரமபதநாதன் என்பது.
- ஸதா நித்யசூரிகள் சூழ வீற்றிருப்பவன்.
- வேதங்கள் ஸதா கோஷித்துக்கொண்டிருக்கும் வைபவன்.
8. ப்ரஹ்ம வித்தைகள்
ஸ்ரீபாஷ்யகாரர் தத்வ விஷயங்களைமிக அழகாய் வரிசைப்படுத்தியுள்ளார். 3ம் அத்யாயம் உபாய அத்யாயம், 4ம் அத்யாயம் பலாத்யாயம். ஸித்த விஷயத்தை முன்பாதியும் ஸாத்யவிஷயத்தை பின்பாதியும் சொல்கிறது. வணங்கி ஸேவித்து பாராயணம் செய்யவேண்டிய க்ரந்தம் ஸ்ரீபாஷ்யம்.
இக்ரந்தம் "அ"வில் ஆரம்பித்து "ம"வில் முடிகிறது நடுவில் "உ". இதுவே ப்ரணவ தத்வம்.
ப்ரணவாகார விமானத்தின் கீழ் ஆதிஸேஷ ஸயனத்திலிருப்பவன் ரங்கநாதன். எம்பெருமானுக்கே சேஷனாயிருப்பவன். லீலாரசம் அனுபவிக்கும் எம்பெருமான் சேஷி. சேஷத்வம் என்பதே ஆனந்தம். அதுவே ஜீவனின் ஸ்வரூபம். இதற்கு அனுகூலமாய்
கைங்கர்யம் செய்கிறோம். புண்யபாபத்தை ஒழித்துவிட்டால் ஆத்மா எம்பெருமானுடன் கூடியிருந்து குளிரலாம்.

அதுவே "ஸ்வரூப ப்ராப்தம்".
"அல்பாஸ்திரை ரஸுகரை ரஸுகாவஸானை"--ஶரணாகதி தீபிகை.
அல்பமான ஸந்தோஷங்களை விட்டு உன்னை அடைவிக்க உன்னால் தான் முடியும் என்கிறார் ஸ்வாமி. இதற்கு த்யானயோகம் ஒரு உபாயம். எப்படி எதனை நினைத்து த்யானம் செய்ய வேணும் என்பதைச் சொல்வதே "ப்ரஹ்ம வித்யா" 32 ப்ரஹ்ம வித்தைகள் உள்ளன.
ஒவ்வொன்றுக்கும் பகவத் குணங்கள் த்யானிக்க விஸ்தாரமாகச் சொல்லப்பட்டுள்ளது. ப்ரும்ஹகுண அனுஸந்தானத்துக்கு மிக உகந்தவை இவை. கதைரூபமாய் எப்படி த்யானிக்க வேணும் என்று சொல்கிறது. இந்த ப்ரஹ்மத்தை "பூ:பாதௌயஸ்யநாபிர்......."என்கிறது ஸஹஸ்ரநாமம்.
ஆக ஒரு வித்தையை எடுத்துக்கொண்டு ஒரு குணத்தைத் த்யானம் செய்யலாம். "வசீ" என்பது ஒரு குணம். தன்வசத்தில் வைத்திருப்பவன். பக்தர்களுக்கு வசப்பட்டன் எம்பெருமான்
‘அனன்யா தீன........’ என்ற தயாஶதக ஶ்லோகம் அவன் பக்தி பராதீனனாயிருப்தைக் காட்டுகிறது.

இந்த ப்ரஹ்ம வித்தைகளில் 32ம் வித்தையே ஶரணாகதி என்னும் "ந்யாஸ வித்யா". பாஞ்சராத்ர ஆகமத்திலுள்ள த்வயமந்த்ர அனுஸந்தானத்தை ஒட்டி ராமானுஜர் காட்டித் தந்த கண்ணன் திருவடி. அவன் கருணையால் நாம் பெறும் பலன் ஶரணாகதி.
9. த்யான முறைகள்
"உபவீதிநமூர்த்வ புண்ட்ரவந்தம் த்ரிஜகத் புண்ய பலம் த்ரிதண்ட
ஹஸ்தம்

ஶரணாகத ஸார்த்தவாஹமீடே ஶிகயா ஶேகரிணம் பதீம் யதீநாம்"— (யதிராஜ ஸப்ததி)
ஶரணாகதி செய்தவர்களின் சமூகத்தை வழிநடத்தும் யதிபதியாகிய ராமானுஜரை வணங்குகிறேன் என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.
ஸ்ரீபாஷ்யத்தில் ஆங்காங்கே ஶரணாகதி பற்றி சொல்லப் படுகிறது. ராமானுஜர் ஶரணாகதியைத் தான் அனுஷ்டித்துக்காட்டி நம்மையும் அனுஷ்டிக்கச் சொன்னார்.
த்யானம் என்பது ஒரு யோகம். த்யானம் என்பதற்கு நிரந்தர சிந்தனை என்று அர்த்தம். இதுவும் ஒரு பகவதாராதனம். அனுஷ்டான க்ரந்தமாகிய பாஞ்சராத்ர ரக்ஷையில் த்யானத்தின் முக்யத்தை ஸ்வாமி சொல்லியுள்ளார். நித்யகர்மானுஷ்டானத்துள் ஒன்றாக இதனைச் செய்வது நல்லது.
இந்த த்யானம் தைலதாரை போலமையணும். நடுவில் தடை ஏற்பட்டால் பயம்/நஷ்டம். ஸித்தியானால் அபயம்/மோக்ஷம். ப்ரீதியுடன் செய்தால் எம்பெருமான் பலமடங்கு ப்ரீதியுடன் பக்தர்களிடம் நெருங்குவான். முதலாழ்வார்களை நெருக்கினாற்போல.
‘தம்மையுகப்பாரை தாமுகப்பான்’ (நாச்சியார் திருமொழி).
த்யானம் செய்ய 4 படிகள் உள்ளன.
இத்தகைய பக்தியோகம் குருகைக்காவலப்பனுடன் முடிந்தது. நம்மைப்போன்ற ஶரணாகதர்களுக்கு ஸ்ரீபாஷ்யம் முதலான க்ரந்த காலக்ஷேபங்கள் கேட்பதே ஶ்ரவணம். கேட்பவைகளை நினைப்பதே மனனம். எம்பெருமானின் குணானுபவம் த்யானம். அர்ச்சாமூர்த்திகளை ஸேவிப்பதே தரிசனம் .

- ஶ்ரவணம் (ஆசார்யனை அணுகி எம்பெருமானின் குணங்கள், அனுஷ்டானம் முதலியன கேட்டறிதல்)
- மனனம் - கேட்பவைகளை யுக்திகளைக் கொண்டு நினைத்துப் பார்த்தல்.
- த்யானம் - பக்தியுடன் எம்பெருமானை நினைத்தல்.
- தர்ஶனம் - இவைமூன்றின் பயனாக எம்பெருமானை ஸாக்ஷாத்கரித்தல்.
இத்தகைய பக்தியோகம் குருகைக்காவலப்பனுடன் முடிந்தது. நம்மைப்போன்ற ஶரணாகதர்களுக்கு ஸ்ரீபாஷ்யம் முதலான க்ரந்த காலக்ஷேபங்கள் கேட்பதே ஶ்ரவணம். கேட்பவைகளை நினைப்பதே மனனம். எம்பெருமானின் குணானுபவம் த்யானம். அர்ச்சாமூர்த்திகளை ஸேவிப்பதே தரிசனம் .
யோகம் என்றால் ஒட்டுதல் /சேர்த்தல் என்று அர்த்தம். ஆக இந்த அனுஷ்டானம் ஆத்மாவை பகவானுடன் சேர்க்கிறது. பீஷ்மர் விதுரர் ஆகியோர் பக்தி யோகம் செய்தவர்கள். இதற்கு உள், வெளி அங்கங்கள் உண்டு. தானம், யாகம், தபஸ் போன்றவை வெளி அங்கங்கள் பக்தியோகத்திற்கு.
ஶரணாகதிக்கு வெளி அங்கங்களில்லை. பக்தியோகத்துக்கு அந்திம ஸ்ம்ருதி வரை முடிவில்லை. ஆனால் ஶரணாகதியை க்ஷணகாலத்தில் அனுஷ்டித்து சேதனன் க்ருத க்ருத்யனாகிறான். இதுவே அவனை ப்ரஹ்மத்துடன் சேர்க்கும் யாகம் போன்றது.
10. மோக்ஷமடைதல்
எல்லோரும் உஜ்ஜீவிக்க வழிகாட்டியவர் ராமானுஜர். இந்த பாரத தேசம் செய்த புண்யத்தின் பலனே அவரது திருஅவதாரம். 1000 வருடங்களாக ஞானமும் மோக்ஷமும் அருளிய ராமானுஜரை "முக்தி தரும் யதிராசர்" என்கிறார் ஸ்வாமி தேஶிகன். ஸ்ரீபாஷ்யத்தின் 4ம் அத்யாயத்தில் மோக்ஷம் பற்றி விஸ்தரிக்கிறார்.

இதில் 4 விஷயங்கள் உள்ளன.
1. புண்ய பாபத்தை விடுவது எப்படி?
கர்ம வசத்தால் அநாதி காலமாய் அநந்தமாய் சேர்ந்தவையே புண்ய பாபங்கள். நாம் செய்யும் நற்செயல்களால் ப்ரீதி அடைந்த பகவானின் அனுக்ரஹ ஸங்கல்பத்தால் வருவது புண்யம். தீயசெயல்களால் அத்ருப்தி அடைந்து நிக்ரஹ ஸங்கலபத்தால் வருவது பாபம். இரண்டுமே அனுபவித்துத் தீர்க்கப்பட வேண்டியவை. இதுவரை எடுத்த ஜென்மங்களில் சேர்ந்த பாவக் குவியல்கள் சஞ்சிதம் எனப்படும். ஶரணாகதி செய்தவுடன் இப்பாபம் முடிந்துவிடும். ப்ராரப்தம் இப்பிறவி வரை அனுபவித்துக் தீர்க்கணும்.ஶரணாகதி செய்தபின்.தெரியாமல் செய்த பாபம் ஒட்டாது. தெரிந்து செய்யும் பாபம் லகு தண்டனையினால் தீரும். இதில் பாகவதாபசாரம் முற்றிலும் தவிர்க்கப் பட வேண்டியது. மோக்ஷத்துக்குத் தடையாயிருப்பது இந்த பாப புண்யமே. தங்கச்சங்கிலியால் கட்டப்பட்ட காராக்ருஹமே இந்த நம் ஸம்ஸாரபந்தம்.
"காராக்ருஹே கனக ஶ்ருங்கலயாபி பந்த:" என்கிறார் ஸ்வாமி தேஶிகன் (வரதராஜ பஞ்சாஷத்).
2. ஶரீரத்திலிருந்து ஜீவன் எப்படி வெளியேறுகிறது?
ஹ்ருதயத்துள் ஒரு பொறியளவேயுள்ள ஜீவன் இந்த்ரியங்கள், பஞ்சபூதங்கள், மனஸ், பரமாத்மாவுடன் ஸுஷும்னா நாடி வழியே வெளியேறுகிறது.
3. அர்ச்சிராதி கதி என்பது என்ன?
இப்படி வெளியேறும் ஆத்மா அக்னி, வாயு, சூர்யன், மின்னல் என்ற லோகங்களைத்தாண்டி, ஆதிவாஹிகர்கள் அளிக்கும் விசேஷ உபசாரங்களை ஏற்று விரஜா நதியை அடைகிறது. விரஜையில் நீராடிய ஜீவன் ப்ராக்ருத ஶரீரம் விட்டு அப்ராக்ருத ஶரீரம் பெற்று அமானவன் என்ற வித்யுத் புருஷன் துணைகொண்டு ஸ்ரீவைகுண்டம் சேர்கிறான்.
4. ஸ்ரீவைகுண்டம்.
அப்ராக்ருத நதியாகிய விரஜையில் ஸ்நானம் செய்து ஸங்கல்பத்தால் அதைக் கடக்கிறான் ஜீவன். அங்கு சந்திரன் கேட்கும் கேள்வி "நீ யார்" என்பது. "தாயாரின் கர்ப வாசத்திலிருந்து பிறக்கச் செய்து, ஞானமளித்து, ஶரணாகதி செய்யவைத்து, என்னை இங்கே கொண்டு சேர்த்தவன், ஆத்மாவுக்குள் ஆத்மாவாயிருக்கும் எம்பெருமானே நான்" என்கிறது ஜீவன். இதனைக் கேட்டுச் சந்திரன் கைக்கூப்பி அனுப்ப ஸ்ரீவைகுண்ட வாயிலில் சேர்ப்பிக்கிறான் அமானவன். அப்ராக்ருத ஶரீரம் பெற்ற இந்த ஜீவனை அப்ஸரஸுக்கள் அலங்கரிக்கின்றனர். நுழைந்ததும் ஜீவன் ‘அரம்' என்ற 'குளம், 'முஹுர்த்தர்' என்ற காவல் தெய்வம் 'தில்யம்' என்ற மரம் ,'விரஜா' என்ற நதி, 'லாலஜ்யம்' என்ற மாநிலம் 'அபராஜிதா' என்ற நகர், த்வார பாலகர்கள் ஆகியவைகளைத் தாண்டி திருமாமணி மண்டபம் சேர்கிறான் . ஆங்கே 'விஸக்ஷணம் ' என்ற பீடத்தில் 'அமிதௌஜஸ்' என்ற மெத்தையில் ஸ்ரீபூதேவி ஸஹிதமாய் வீற்றிருக்கும் பரமபத நாதனைக்கண்டு அவன் திருவடியைப் பற்றி ஏற, பெருமான் அவனைக் குழந்தையைத் தூக்கும் தாயாரின் வாத்ஸல்யத்துடன் தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டு , ’நீயார்' எனக் கேட்க "ஸ்வாமி !தேவரீர் தான் நான்" என்கிற ஜீவனை ப்ரீதியுடன் கொண்டாடுகிறார்.
"ஸத்யம், ஞானம், அனந்தம், ப்ரஹ்மம் தான் நீர்.

அந்த நீர்தான் நான்" என்று சொல்லிக் கொண்டு தன்னை வந்தடைந்த ஜீவனைக்கண்டு எம்பெருமான் ஸந்தோஷிக்க, ஜீவனும் இனி ஸம்சார பந்தமற்று எம்பெருமானின் பரிபூர்ண கல்யாணகுணங்கள், விபூதி, திருமேனிகளை அனுபவிக்கிறான். ‘இனி இவனைத் திரும்ப அனுப்ப மாட்டேன்’ என்கிறான் கண்ணன் கீதையில். "ஏற்றிவைத்து ஏணி வாங்கி" என்கிறார் பெரியாழ்வார்.
இத்தகைய மகத்வம் வாய்ந்த தத்வங்களடங்கிய ப்ரும்ஹசூத்ரத்தை விவரித்து பாஷ்யம் அருளிய ஸ்ரீபாஷ்யகாரரின் திருவடிகளைச்
பற்றி உய்வோமாக.
This has been written based on “Sri Bhashya Saaram”, a 10-day Upanyasam series by Navalpakkam Dr. Sri U. Ve. Vasudevachariar Swami, during GSPK’s Sri BhashyaKaarar ThiruNakshatra Utsavam, July 2022.

Please check the link below for the English translation of this article
https://vadaanyashri.blogspot.com/2022/11/sri-bhaashya-saaram-essence-of-sri.html