Thursday, June 4, 2020

மெய்ஞானத்துள் பொதிந்த விஞ்ஞானம்!

எனது கற்பனையில் உருவான இந்த உரையாடல் விஞ்ஞானத்தையும் ஆழவார்கள் அருளிய மெய்ஞ்ஞானத்தையும் இணைக்கும் ஒரு சிறு முயற்சி.
                                             🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

செந்நெலூடு வாழை மஞ்சள் கரும்போங்கி வளர்ந்த வயல்கள் செழித்த அழகிய சிறு க்ராமம், பெயர் "சத்யாகாலம்"!  
ஆஹா! நம் தேஸிக ஸார்வபௌமன் பல வருஷங்கள் தங்கி காலக்ஷேபம் ஸாதித்து "அபீதிஸ்தவம்" என்ற ஸ்தோத்ரக்ரந்தத்தை பலமுறை அநுஸந்தித்து அரங்கனை அரங்கத்தில் மீண்டும் அரங்கேற்றிய சிறப்புப் பெற்ற இடமாயிற்றே!!
இங்கு பெருந்தேவி  தாயார் உடனுறை  வரதனின் திருக்கோவிலருகே அமைந்துள்ளதுதான் "அனந்தாக்ஷர குருகுலம்"
சாந்த‌ ஞான சிந்தனையாளரான வரதரங்கராஜ ஸ்வாமியின் அரு முயற்சியால் வேதாத்யேனத்தையும் அருளிச்செயல்களையும் இளம் பிள்ளைகளிடம் கொண்டு சேர்க்க அவர் கொண்ட ஆர்வத்தின் பயனே இந்த குருகுல ஸ்தாபனம்.
த்ராவிட வேதமான அருளிச்செயல்களை ப்ரகாசிக்கச்செய்த நம்மாழ்வார் திருநக்ஷத்ரம் இன்று.
"உண்டோ வைகாசி விசாகத்துக்கொப்பொருநாள் 
 உண்டோ சடகோபருக்கொப்பொருவர்"  
என்பது மணவாளமாமுனிகளின் வாக்கு.
கரை புரண்டோடும் காவரியில் காலை அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு கரையிலமைந்த நீண்ட நெடிய அரசமரத்தடியிலமர்ந்தார் ஆசான் வரதரங்கராஜ ஸ்வாமி.
பின் தொடர்ந்தனர் வித்யார்த்தி "நவ மணிகளான" -
  1. பரத்வாஜ்
  2. ப்ரஹ்லாதவரதன்
  3. வரததேசிகன்
  4. கௌஸ்துபன்
  5. ஸ்ரேயஸ்
  6. வெங்கடேஷன்
  7. ஹரீஷ்வர் 
  8. வேதாந்த்
  9. விஸ்ருத்
ஆசார்யனை நமஸ்கரித்து  குழந்தைகள் "ஸ்ரீமான் வேங்கட நாதார்ய:" என ஏககுரலில் தனியனை ஸேவித்த போது நம் தேசிகர் காலத்துக்கே சென்ற உணர்வு ஏற்பட்டதென்றால் மிகையாகாது!!
இதனைத்தொடர்ந்த வித்யார்த்திகளின் கலந்துரையாடல் ஆசார்யனையே ஆச்சர்யத்திலா‌ழ்த்தியது.

இன்றைய விக்ஞான உலகம் பெருமை படப்பறை சாற்றிக்கொள்ளும் கருத்துக்களை ஆழ்வார்கள் அன்றே ஆய்ந்துரைத்த பெற்றியை அழகாய் விவரித்த பாங்கு  அச்சிறார்களின் ஆழ்ந்த ஞானத்தையும் ஈடுபாட்டையும் காட்டி வியக்க வைத்தது!!
வாருங்கள் நாமும் ரசிக்கலாம்.
**********************************************************************

ப்ரஹ்லாதவரதன் was the first to share his thoughts as below -
Aandal Naachiar in her, "திருப்பாவை", brings out the happening of green revolution and the subsequent revolutions in her days.
ஓங்கு பெரும்செந்நெல் refers to “Green Revolution
ஊடுகயலுகள் means Pisciculture
பூங்குவளைப்போதில் பொறிவண்டு கண்படுப்ப -- Api culture
சீர்த்தமுலை பற்றி வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் -- White Revolution.
If people take the righteous path and sing the glory of ஓங்கி உலகளந்த உயர்ந்த உத்தமன் (Trivikraman) then, they will be blessed with wealth and prosperity in bounty causing no side-effects!!! 
"ஆஹா! நன்று" என்றார் ஆச்சார்யர் 
                                                🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

வரததேசிகன் then spoke about the references of "water cycle" in Tiruppaavai
இப்புரட்சிகளுக்கு அடிப்படை மழை
Godha devi explains the concept of water cycle in her paasuram "ஆழிமழைக்கண்ணா".
ஆழியுள்புக்கு -- heat evaporates sea water 
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து -- forms the rain bearing Nimbus clouds
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து -- followed by thunder and lightning
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் -- for the sake of living beings torrential downpour occurs
"மிஹ அருமை வரததேசிகா" என்று கூறினார் ஆச்சார்யர்
                     🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 


கௌஸ்துபன் said - 
There is a beautiful reference about how metal dolls were made, in "Naachiyaar Thirumozhi" (11-8)
மழையே மழையே மண்புறம் பூசி----
உள்ளாய் நின்று மெழுகூற்றினாற்போல்----
People who make metal vigrahams, make a wax figure first and apply cold clay on the outside. Then, melt the wax used and pour it out.
The same way the captivating "soundaryam" of Thiruvenkatavan has melted the heart of Godha devi.

"ஆஹா! நல்லது" என்றார் குரு
                                               🌺🌺🌺🌺🌺🌺🌺🌺


பரத்வாஜ் immediately recollected another interesting feature in the same Naachiyar Tirumozhi about the "conch"--
"உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை
இன்னாரினையாரென்று  எண்ணுவாரில்லைகாண்" (7-5)
In this paasuram, Aandal shows her jealousy towards the Paanchajanyam, where she mentions about the numerous conches born in the ocean but no one gets an independent name entity like you. What a blessed Paanchajanya!!!! This is a reference of Marine Biology.

"ஆம்! சங்கத்தின் பெருமையே பெருமை" என்று வியந்தார் குரு.
                                               🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

வேதாந்த் gets his turn next and exclaims —
Oh! There is an excellent example given by Kulasekara Azhwar in his Perumal Tirumozhi (5-4) on medical science.
வாளால் அருத்து சுடினும் -- even when the surgeon cuts the skin causing so much of pain to the patient
மருத்துவன்பால் மாளாத காதல் நோயாளன்பால் -- the patient still loves the doctor and keeps going to him for curing his illness.
மீளாத்துயர் தரினும் வித்துவக்கோட்டம்மா! -- like the doctor you are giving me sorrows and hardships to purify and qualify me for Sathgati.
ஆளாவுனதருளே பார்ப்பனடியேனே -- I think of your Daya Guna and never ever leave Your lotus feet.

"அஹா! என்ன புரிதல்" என்று கூறினார் ஆச்சார்யர்                                   
                                              🌺🌺🌺🌺🌺🌺🌺🌺


விஸ்ருத் was able to find the connect with Sangeetham and explained -
Look at how Nammazhwar describes the Sangeetha Shastra!! (2-3-7)
முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர்சுவையே!
Azhwar compares Emperuman  to the most enjoyable matured music which is emanates from the strings of the musical instrument called "Yaazh". It follows the rules laid with Sangeetha shastraas. Aazhwar praises the magnanimity of Emperuman and pleads to have some consideration for him.

"என்ன இனிமையான கருத்து" என்றார் குரு
                                                🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

ஸ்ரேயஸ் finds botanical references in his research activity -
Here is an interesting description in this paasuram where Thirumangai Aazhwar picturises the hilly flora and fauna.
நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம்பெருமான்
அல்லிமாதர் புல்க நின்ற ஆயிரம் தோளுடையன்
நெல்லி மல்கி கல்லுடைப்ப -- The strong roots of the gooseberry trees intrude the rocks thereby causing the biological weathering.
புல்லிலையார்த்து -- the giant palm trees  make noise by friction
அதர்வாய் சில்லு சில்லு என்றொல்லறாத சிங்கவேள் குன்றமே -- the noise produced by birds and crickets.
கல்ஒலி, புல்ஒலி, சில்ஒலியால் அச்சம் நிறைந்த மலை அஹோபிலம் ஆனால் ஆங்கே உறைகின்ற மாலோலன் கருணையின் பிறப்பிடமன்றோ!!!
குரு: - "வரிகளுக்கு தகுந்த விளக்கம்!"
                                                  🌺🌺🌺🌺🌺🌺🌺🌺


வெங்கடேஷன் gets reminded of the Tsunami of the recent past and said -
Nammazhwar's great victory paasurams (7-4-4) describe what happens at the time of deluge
நாளுமெழ நிலநீருமெழவிண்ணும்
கோளுமெழ எரிகாலுமெழ மலை
தாளுமெழச் சுடர்தானுமெழ அப்பன்
ஊளியெழ உலகம் உண்ட ஊணே. 
Emperuman ate the entire universe at the time of deluge. 
Land, fire, directions, space, air, water, planets, sun, moon, mountains were all sucked by HIM and there was no difference between them and they all lost their forms and places. 

Oh! after this HE gets ready for the creation of the next yuga!!
But we do not want to get entangled in the samsaara all over again. Let us be strong in our faith!!
குரு: - "நன்று! ஷரணாகதியே உய்ய வழி என்பதை புரிந்துகொள்ளுங்கள் "
                                                 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺


ஹரீஷ்வர் was awed by the Aazhwar's expertise in Mathematics and said-
I would like you all to enjoy the rhyming mathematical description of the Creator and HIS Creation in Thirucchanda Viruttam by Tirumazhisai Piraan.
பூநிலாய ஐந்துமாய்புனற்கண்நினறநான்குமாய்
தீநிலாயமூன்றுமாய்சிறந்தகாலிரண்டு மாய்
மீநிலாயதொன்றுமாகி வேறுவேறுதன்மையாகி
நீநிலாய வண்ணநின்னை யார்நினைக்கவல்லரே.
Oh! Emperumane! You are the 5 gunaas inherent  in the Earth
You are the 4 subtle essences in water
You are the 3 gunaas inherent in fire
You are the 2 gunaas in the mighty wind
You are the 1 in the great space.
Who can understand you perfectly!!!

"அவன் கணக்கு என்றும் தப்பாது" என்று கூறிய குரு, "இதனை அதுத்த மூன்று பாசுரங்களையும் ஆராய்ந்து வாருங்கள்" என்றார் (திருச்சந்த விருத்தம் - 2,3,4).
                                                 
இவ்வளவு விரிவான நுட்பமான புரிதலுடன்  வித்யார்த்திகள் நடத்திய கலந்துரையாடலை ரசித்து மகிழ்ந்த குரு, நவமணிகளை நவரத்னங்களாக உயர்த்தி மேலும் ஸந்தோஷித்தார்.
                 
          🙏🙏ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணமஸ்து!!!!🙏🙏

Monday, June 1, 2020

Book Review - ஸ்ரீ ராமானுஜருடன் ஒரு நாள்

 
 
சுஜாதா தேசிகன் எழுதிய  "ஸ்ரீ ராமானுஜருடன் ஒரு நாள்" என்ற புத்தகத்தைப் படித்தபின்  என் கருத்தினைப் பகிர்கிறேன்.
ராமானுஜரின் பல திருநாமங்கள் வந்த விவரம்  சிறார்களும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. பொழுது புலர்ந்து தென்னரங்கக் காவிரியில் நீராட்டம் முதல் இரவு உறங்கும் வரை அவர் ஆற்றிய எண்ணற்ற கைங்கர்ய விவரணம் வியப்பிற்குரியது. ஆசிரியர் நம்மையும் நம் ஆசார்யனுடன் 1002 ஆண்டுகளுக்கு முன் நடத்திச் சென்ற பாங்கு நெகிழ்ச்சி கலந்த நிறைந்த‌ பாராட்டுக்குரியது.
ராமானுஜரின் ஸிஷ்யர்கள் பற்றிய விவரங்கள் வெகு அருமை! உடையவர் அடியொற்றி வந்த தூப்புல் குலமணியின் அரும்பெரும் ஆற்றலால் நம் ஸம்ப்ரதாயம் இன்றளவும் ஆல்போலத்தழைக்க ஆற்றிய கைங்கர்ய விளக்கங்கள் பாராட்டுக்குரியன.
சூர்யனும் தண்ணீரும் தாமரையை மலர்த்துவதுபோல் ஜீவனின் ஆத்மஞானம் மலர பகவத் க்ருபையும் ஆசார்ய கடாக்ஷமும் அவஸ்யம் என ஆழ்வாரின் அருளிச்செயல் மூலம் ஆழ்ந்துரைத்துள்ளது அற்புத முடிவுரையாக மனதில் பதிந்தது .
மீண்டும் படிக்கத்தூண்டும் வகையில் இப்புத்தகம் அமைந்துள்ளது.
எம்பெருமானார் திருவடிகளே சரணம்🙏🙏