சுஜாதா தேசிகன் எழுதிய "ஸ்ரீ ராமானுஜருடன் ஒரு நாள்" என்ற புத்தகத்தைப் படித்தபின் என் கருத்தினைப் பகிர்கிறேன்.
ராமானுஜரின் பல திருநாமங்கள் வந்த விவரம் சிறார்களும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. பொழுது புலர்ந்து தென்னரங்கக் காவிரியில் நீராட்டம் முதல் இரவு உறங்கும் வரை அவர் ஆற்றிய எண்ணற்ற கைங்கர்ய விவரணம் வியப்பிற்குரியது. ஆசிரியர் நம்மையும் நம் ஆசார்யனுடன் 1002 ஆண்டுகளுக்கு முன் நடத்திச் சென்ற பாங்கு நெகிழ்ச்சி கலந்த நிறைந்த பாராட்டுக்குரியது.
ராமானுஜரின் ஸிஷ்யர்கள் பற்றிய விவரங்கள் வெகு அருமை! உடையவர் அடியொற்றி வந்த தூப்புல் குலமணியின் அரும்பெரும் ஆற்றலால் நம் ஸம்ப்ரதாயம் இன்றளவும் ஆல்போலத்தழைக்க ஆற்றிய கைங்கர்ய விளக்கங்கள் பாராட்டுக்குரியன.
சூர்யனும் தண்ணீரும் தாமரையை மலர்த்துவதுபோல் ஜீவனின் ஆத்மஞானம் மலர பகவத் க்ருபையும் ஆசார்ய கடாக்ஷமும் அவஸ்யம் என ஆழ்வாரின் அருளிச்செயல் மூலம் ஆழ்ந்துரைத்துள்ளது அற்புத முடிவுரையாக மனதில் பதிந்தது .
மீண்டும் படிக்கத்தூண்டும் வகையில் இப்புத்தகம் அமைந்துள்ளது.
எம்பெருமானார் திருவடிகளே சரணம்🙏🙏
No comments:
Post a Comment