Sri APN Swami has compared the contents of this great grantham to a big bottle of fruit juice! He mentioned that, from that big bottle he is giving the very essence of all the 32 Adhikarams (in 30days ) as 1 spoon, which is beyond one's imagination considering the volume of matter in each of the Adhikaarams.
From that Upanyasam series held during Margazhi 2020 as part of the GSPK programs, adiyen is giving what ever little I have understood and grasped - may be a few drops from that one spoon!!
The real intention of this Upanyasam was to make us understand the great efforts of Swami Desikan to enable the Jeevan to perform Prapatthi, thereby lift the Jeevan from the clutches of samsaaram.
*************************************************************
அவதாரிகை
**************************************************************
ஆத்யாத்மிக
ஞானம் பெற்று எம்பெருமானை அணுகுவதற்குச் சிறந்த இம்மதி நிறைந்த மார்கழி
நன்னாளில் ஸ்வாமி தேஶிகன் பரமக்ருபையுடன் அருளிச்செய்த "ஶ்ரீமத் ரஹஸ்யத்ரய
ஸாரத்தின் "ரஸத்தை GSPK மூலம் ஶ்ரீ.உ.வே APN ஸ்வாமி அளிக்க நாம்
அனுபவிப்போம்.
ரஹஸ்ய க்ரந்தங்ளை ஆசார்யனை அணுகி
நேரிடையாக க்ரஹிக்க வேணும். ஸாஸ்த்ர ஞானம் பெற்று ஆத்மலாபமடைய
3 க்ரந்தங்களைக் காலக்ஷேபம் செய்ய வேணும் என்பர்
பெரியோர். "ப்ரஸ்தானத்ரயம்" என்னு ம் இதில் -
1. உபநிஷத் பாஷ்யம்
2. பகவத் கீதாபாஷ்யம்
3. ப்ரம்ஹஸுத்ரபாஷ்யம் அடங்கும். இவை ஆதிசங்கரர் அருளியவை.
ஶ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் "க்ரந்த சதுஷ்டயம்"
என்று 4காரந்தங்கள் காலக்ஷேப க்ரந்தங்களாய் அருளப்பட்டுள்ளன.
அவை-
1. கீதாபாஷ்யம்
2. ஶ்ரீபாஷ்யம் (ஸ்வாமி ராமானுஜர் அருளிச்செய்தது)
3. பகவத் விஷயம (பிள்ளான் அருளியது)
4. ரஹஸ்யத்ரய ஸாரம் (ஸ்வாமி தேஶிகன் அருளியது)
இவற்றை வாசித்தும், கேட்டும், ப்ரவர்த்திப்பதும் ஶ்ரீவைஷ்ணவ தர்மமாகக் கொள்ளப்படுகிறது.
****************************************************************
16/12/20 - குருபரம்பரா
****************************************************************
கிடைத்துள்ள
இப்பிறவியை வீணாக்காது ஜீவனைக் கடைத்தேற்ற எம்பெருமானே ஆசார்யனாகி செய்த
அவதாரமே ஸ்வாமி தேஶிகன். அஷ்டாக்ஷரம் த்வயம் ஶரமஶ்லோகம் என்ற மூன்றினையும்
சேர்த்து ஸ்வாமி அளித்த இக்ரந்தம் 32 அதிகாரங்களைக்கொண்டது.
இதில்-
1. அர்த்தானுஸாசனம்
2. ஸ்திரீகரணம்
3. பதவாக்ய யோஜனா பாகம்
4. ஸம்ப்ரதாய ப்ரக்ரியாய
பாகம்
என நான்கு உப பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு அதிகாரத்தின் முடிவுரையாக
வரும் பாசுரமே "அதிகார ஸங்க்ரஹம்" என்ற தேசிகப்ரபந்தமாகிறது.
ரஹஸ்யத்ரயஸாரம்
என்ற இந்த க்ரந்தத்தினை முழுதுமாய் ஒருவர் அறிந்தால் எல்லாவற்றையும்
அறிந்தவராக முடியும் என்பது மெய்ப்பாடு.எல்லார்க்கும் பொதுவான இக்ரந்தம்
வேதார்த்தங்கள், இதிகாச, புராண, ஆழ்வார், ஆசார்ய ஸுக்திகளனைத்தலிருந்தும்
உதாஹரணங்களைக் கொண்டுள்ளது.
ஆசார்ய சம்பந்தம் இல்லாமல் எதுவும் சித்திக்காது என்பதையும் அதுவே ஸர்வருக்கும் மோக்ஷம் என்பதையும் அறுதியிட்டுக்கூறுகிறார் ஸ்வாமி.
ஆசார்ய
சம்பந்தம் பெறாத காரணத்தால் வசிஷ்ட விஶ்வாமித்ரரை குல குருக்களாகக் கொண்ட
தஶரதமஹா சக்ரவர்த்தி எம்பெருமானையே தனயனாகப் பெற்றிருந்தபோதிலும் மோக்ஷம்
அடையவில்லை.
மிக்ககொடுந்தொழிலும்,கொடுங்கு ணங்களும் கொண்ட க்ஷத்ரபந்துவும், மஹா
தபஸ்வியாகிய புண்டரீகாக்ஷனும் ஆசார்ய சம்பந்தத்தினால் பரகதி
அடைந்தனர்.
வேதத்தை அளித்த எம்பெருமான் வேதவ்யாசராக அனுப்ரவேச அவதாரம் மூலம் அவற்றைத் தொகுத்து ஸாஸ்த்ர பாணியாக நம்மை கைதூக்கிவிட்டான். ஆசார்யனை க் காட்டி அனுக்ரஹித்தான்.
ஆக நம்மீது கொண்ட பரம க்ருபையால் ஸ்வாமி இக்ரந்த ஆரம்பத்தில் ஶ்ரீவைஷ்ணவ குரு பரம்பரையைக்காட்டுகிறார்.
"என்னுயிர் தந்தவரைச்சரணம் புக்கு
யானடையவே அவர்குருக்கள் நிரை வணங்கி
பின்னருளால் பெரும்பூதூர் வந்த வள்ளல்
பெரியநம்பி ஆளவந்தார் மணக்கால் நம்பி
நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக்கொண்டான்
நாதமுனி சடகோபன் சேனைநாதன்
இன்னமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு
எம்பெருமான் திருவடியை அடைகின்றேனே".
- பொய்கை முனி பூதம் பேயாழ்வார்
என்ற பாசுரத்தின் மூலம் ஆழ்வார்களின் பெருமையையும்,திவ்யப்ரபந்தத்தி ன்
ஏற்றத்தையும் பேசுகிறார் .
"இன்பத்தில் இறைஞ்சுதலில் இசையும் பேற்றில்"----என்ற தனிப் பாசுரத்தால் மதுர கவி ஆழ்வாருக்குத் தனிப்பெருமை
அளித்த ஸ்வாமி தேஶிகன் ஆசார்ய மேன்மையை வெளிக்கொணர்ந்த பாங்கு
வியக்கத்தக்கது. இத்தகைய தேசிகப்ரபந்தம் ஸாதித்து நம் ஆசார்ய ஸார்வ பௌமன்
ஆழ்வார் கோஷ்டியுள் சேர்ந்தார். எம்பெருமானிடம் கீதோபதேசம் பெற்ற
அர்ச்சுனனுக்கு அது மனதில் நிற்கவில்லை .யாருக்கும்
உபதேசிக்கவுமில்லை. வ்யாசர்மூலம் உபதேசம் பெற்ற ஸஞ்சயன் கீதையை உபதேசம்
செய்தார்
ஆக எம்பெருமான் தன் அபிநவ அவதாரமாக ஆழ்வார்களையும் ஆசாரயர்களையும் தோற்றுவித்த இத்தகைய குருபரம்பரையின் மேன்மையை ஸ்வாமிதேஶிகன் இந்த அதிகாரத்தில் ஸ்தாபிக்கிறார்.
**************************************************************************
முதல்அதிகாரம் - உபோத்காதம்
**************************************************************************
ஶ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்தின் முகவுரையே இந்த அதிகாரம்.
"திருவுடன் வந்த திருமால் இதயம்
மருவுமிடம் என்ன மலரடிசூடும் வகைபெறும்
நாம்கருவுடன் வந்த கடுவினையாற்றில்
விழுந்து ஒழுகாது அருவுடன்
ஐந்து அறிவார் அருள் செய்ய அமைந்தனரே". (அதி 8)
இப்பாசுரத்தின் அர்த்தம் கூறும் அதிகாரம் இது.
ஸம்ஸாரத்தில் அழுந்தியநாம் அறியவேண்டிய விஷயங்களை இழந்து அதனால் பெறப்போகும் பெருமையையும் இழக்கிறோம். இந்நிலைகளைத்
தாண்டி எம்பெருமானை அடைய வழிகாட்டுகிறது இப்பகுதி.
வேதம் என்னும் ராஜபாட்டையைச்செப்பனிட்டவர்கள் நம் ஆசார்யர்கள்.
எம்பெருமான் திருமேனியில் தாயார்அருகில் உள்ள கௌஸ்துபமணியருகே இருக்க வேண்டியவர்கள் ஜீவர்கள்.
ராஜகுமாரன் ஒருவன் ராஜாவுடன் வேட்டைக்குச் சென்றபோது தொலைந்துவிட, வெகுகாலம் வேட்டுவச்சேரியில் காலம் கழிக்கிறான். அவ்வழியே சென்ற மஹரிஷிகள் ஒருநாள் எதேச்சையாக
அக்குமாரனின் முக தேஜஸ்ஸைக்கண்டு வியந்து விசாரிக்க வேடுவத்தலைவன் விவரங்களக்கூற அவனை ராஜகுமாரன் என அறிந்து அரண்மனையில் கொண்டு சேர்க்க ராஜாவும் ராஜகுமாரனும் அடைந்த சந்தோஷம் அளவிடற்கரியது.
காட்டில் தொலைந்த ராஜ குமாரனின் நிலையில் ஸம்ப்ரதாய ஞானமற்ற நாம் இருக்கிறோம். ஏதோஒரு ஸூஹ்ருத விசேஷத்தால் மஹரிஷிகளின் த்ருஷ்டியினால் ராஜகுமாரன் மீண்டு அரண்மனைக்கு வந்து இளவரசனாகியது போல இன்று ஆசார்யசம்பந்தம் கிடைத்து எம்பெருமான் திருவடி பற்றும் சேதனன் நிலை நமக்கு.
ஆசார்யனை அடைந்த நாம் சாரமான விஷயங்களில் மனதைச் செலுத்தி
எம்பெருமானை அடையும் வழியைத் தேடவேணும். இதற்கு
"கடலிலே படகோடுவார் வழி தெரியுமாப்போல" என்ற உதாரணத்தைக்காட்டுகிறார் ஸ்வாமி.
1. ஈஶ்வரஸ்ய ஸௌஹார்தம் (எம்பெருமானின் அனுகூலம்)
2. யதிர்ச்சா ஸுஹ்ருதம் (நாமாக நல்லதைச்செய்தல்)
3. விஷ்ணு கடாக்ஷம் (பிறக்கும்போதே எம்பெருமான் கடாக்ஷம்பெறுதல்)
4. அத்வேஷம் (எம்பெருமானை விட்டு விலகாமை)
5. ஆபிமுக்யம் (எம்பெருமானுக்கே அடிமையாயிருத்தல்)
6. ஸாத்விக ஸம்பாஷணம் (பாகவத சேர்க்கை)
இந்த ஆறு காரணங்களைப் பற்றிக் கொண்டு ஸதாசார்யன் சம்பந்தம்
பெற்று இந்த ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுபட முயற்சிக்க வேணும்.
*************************************************************************
2 - ஸார நிஷ்கர்ஷ அதிகாரம்
*************************************************************************
ரஹஸ்யத்ரயத்தின் சாரத்தை நிலைநிறுத்துகிறது இந்த அதிகாரம்.
நம்மாழ்வார் திருநாவில் திருமந்திரம் என்ற மத்தால் கடைந்தெடுத்த அமுதம் திருவாய் மொழியாகும். வேதத்தின் சாரம் இது.
வேதம் கர்ம காண்டம் ஞானகாண்டம் என்ற இருபிரிவு கொண்டது.
விரும்பிய பலன்களைத்தரும் யாகம்
முதலியவற்றை முதல் பிரிவில் காட்டி நிரந்தர பலனாகிய மோக்ஷம் பெற இரண்டாம் பிரிவைக்காட்டுகிறது.
"சிறுகண்ணாடி பெரு உருவைக் காட்டுமாப்போல" எட்டுஎழுத்தில் நம் ஸம்ப்ரதாயமே அடங்கும்.
வண்டு பல புஷ்பங்களிலிருந்து தேனைச் சேகரிப்பது போல வேத
ஸாரத்தை மட்டும் எடுத்துக் கொள்ளவேணும்.என்னகல்வி கற்றாலும் எட்டும் இரண்டும் (அஷ்டாக்ஷரம், த்வயம்) எண்ணிய நம் ஆசார்யர்கள் நமக்குத் தனிநிலை தந்தனர் என்பதை உணர வேண்டும். இத்தகைய ரஹஸ்யத்ரயத்தை அறிந்தவர் "ஸாரஞர்" எனப்படுவர்.
"அமையா இவை எனும்ஆசையினால்
அறுமூன்றுலகில் சுமையானகல்விகள் சூழ வந்தாலும்
தொகையிவையென்று இமையா இமையவரேத்திய
எட்டிரண்டெண்ணிய
நம் சமையாசிரியர்சதிர்க்கும் நிலை தந்தனரே" (அதிகாரஸங்க்ரஹம் 9)
*************************************************************************
3. ப்ரதானப்ரதி தந்த்ர அதிகாரம்
*************************************************************************
விஸிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் தன்னேற்றத்தைச் சொல்லும் அதிகாரம் இது.
ஶரீர / ஶரீரிபாவம், ஆதார/ஆதேயபாவம், ஸ்வாமி/ தாஸபாவம்
நியந்தா /நியாம்ய பாவம்.
இவை எம்பெருமானுக்கும் நமக்கும் உள்ளசம்பந்தத்தைக்காட்டுகிறது.
நாம்
ஶரீரத்துக்கு கொடுக்கும் முக்யத்வத்தை ஆத்மாவுக்குத் தருவதில்லை. ஆத்ம
பலம்தான் முக்யம்.ஆத்மாவைத்தவிர அனைத்தும் அசேதனம். ஆத்மா ஞானம் உள்ளது.
இந்த ஶரீரத்துக்கு நியந்தா ஆத்மா.
ஆத்மா அழிவற்றது என கண்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசிக்கிறான்.
ஆத்மாவுக்கு நியந்தாவாக, ஸ்வாமியாக, காரகனாக
இருப்பவன்
எம்பெருமான். இதனை தன் ஸங்கல்பத்தினாலும் ஸ்வரூபத்தினாலும் செய்கிறான்
எம்பெருமான். இதுவே விஸிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தின் அடிப்படை.
விஶ்வாமித்ரர் தன்
தபோபலத்தால் த்ரிசங்குவை பூமிக்கு விழாமல் தடுத்து நிறுத்த
முடிந்ததென்றால் எம்பெருமான் விஷயத்தில் அவன் ஶக்தி சாமர்த்யத்தை
தெளிவாய்ப் புரிந்து கொள்ள வேணும். அவனைத்தவிர ரக்ஷகன் இல்லை என்பதும் தெளிவாகிறது.
தன்னுடன் சம்பந்தம் பெற்ற அனைத்து அயோத்தி ஜீவன்களையும் தன்னுடன் கூட்டிச்சென்ற "இராமனையல்லால் மற்றும் கற்பரோ".என்கிறார் ஆழ்வார்.
தனக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள சம்பத்தத்தைப் புரிந்து கொண்டவர்கள்
யாராலும் கலக்கமடையமாட்டார்கள்.
" நிலைதந்த தாரகனாய் நியமிக்கும் இறைவனுமாய்
இலதொன்றெனாவகைஎல்லாம் தனதென்னும் தந்தையுமாய்த்
துலையொன்றிலை எனநின்ற துழாய்முடியானுடம்பாய்
விலையின்றி நாமடியோம் என்று வேதியர் மெய்ப்பொருளே" ---(அதி 10)
********************************************************************
4. அர்த்த பஞ்சக அதிகாரம்
********************************************************************
முமுக்ஷுவானவன் ஆத்ம லாபமடைய மூன்று ரஹஸ்யங்களுடன் ஐந்து முக்கிய கொள்கைளையும் இணைத்துச் செயல்பட வேணும்.
1. மிக்க இறைநிலை---அடைய வேண்டியபொருள் (Praapta Upaayam)
2. மெய்யாம் உயிர்நிலை---ஜீவன் (Praapta)
3. தக்கநெறியும்--அடையும்வழி ( Praapta Upaayam) (Praapta Palam)
5. ஊழ்வினையும் வாழ்வினையும் தடங்கல்கள் ( Obstacles to obtain moksha - Praapta Virodhi)
லக்ஷ்மியுடன் கூடிய எம்பெருமானே ஜகத்பதி என்பதை திண்ணமாய்க்கொள்ள வேணும்.
அவனே வணங்கும் துறைகளைப் பலபலவாக்கி
அந்த தெய்வங்களையும் தானே இயக்குகிறான் என்பதனை உணர்ந்து நாராயணனே
நமக்கு மோக்ஷமளிப்பவன் என்ற திடமான ஞானத்தைப் பெறுபவரே "பரமேகாந்தி" ஆகிறார்.
கர்மாக்களால் கட்டுண்டு இந்த ஸம்ஸாரத்தில் உழல்பவர்கள் "பத்தர்"
ஶரணாகதி செய்து மோக்ஷகதிக்கு தயாராயிருப்பவர *முமுக்ஷு".
பந்தம்நீங்கி எம்பெருமானின் நித்ய கைங்கர்யத்தில் ஈடுபட்டிருப்பவர்கள்
"முக்தர்".
"பொருளொன்று எனநின்ற பூமகள்நாதன் அவனடிசேர்ந்து
அருள் ஒன்றும் அன்பன் அவன்கொள் உபாயம் அமைந்த பயன்
மருள் ஒன்றிய வினை வல் விலங்கு என்று இவை ஐந்து அறிவார்
இருள் ஒன்று இலாவகை என்மனம் தேற இயம்பினரே." --(அதிகார-11)
*******************************************************************
5. தத்வத்ரய சிந்தனாதிகாரம்
*******************************************************************
சித்து அசித்து, ஈஶ்வரன் என்ற மூன்று தத்துவங்களையும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேணும். சேதனம் என்பது ஞானம்.
அசேதனம் என்பது ப்ரக்ருதிகள்.
ஈஶ்வரன் இந்த இரண்டையும் உண்டாக்கித் தாங்குபவன்.
மனித ஶரீரம் முக்யமானது. அதனை இயக்கும் ஆத்மாதான் ஞானம் என்பது. கர்மானுபவத்தால் பிறவி எடுக்கும் ஆத்மா கால அவஸ்தைக்கு
உட்பட்டது. ஆத்மாவெளியேறிவிட்டா ல் ஶரீரம்
விழுந்து விடும். ஆக ஆத்மா இருக்கும்போதே ஆத்ம லாபத்தை ஸம்பாதிக்க
வேணும்.
கிணற்றிலிட்ட குடம் கயிறு இற்று அறுந்து வீழ்கின்ற தருணத்தில் அதை
எப்படி பிடிக்கமுடியாதோ அதேபோல கர்மா முடிந்து ஆத்மா வெளியேறும் தருணம்
நமக்குத்தெரியாதாகையால் காலத்தை வீணாக்காது ஸதாசார்யனை அண்டி ஸம்ப்ரதாய விஷயங்களைஅறிந்து ஆத்மலாபம் பெற ப்ரயாசிக்கவேணும்.
மூன்று தத்துவங்களையும் அவற்றின் ஸ்வரூப ஸ்வபாவ லக்ஷணங்களையும் தெளிய அறியவேணும்.
ஶரீரமே ஆத்மா ஜீவன் ஸ்வதந்த்ரன் எம்பெருமான் ஸ்ருஷ்டிகர்த்தாஅல்ல----
என்பன குத்ருஷ்டி வாதங்கள். இவை ப்ரபன்னன் மனதில் கலக்கம்
உண்டாக்கக்கூடாது.
ஸ்வாமி தேஶிகன் காட்டிய வழியில் ஈஶ்வர தத்வத்தைப் புரிந்து கொண்டு
மோக்ஷ விரோதிகளை விரட்டவேணும்.
"தேற இயம்பினர்சித்தும் அசித்தும் இறையுமென
வேறுபடும் வியன் தத்துவமூன்றும் வினையுடம்பில்
கூறுபடும்
கொடுமோகமும் தானிறையாம் குறிப்பும் மாற
நினைந்தருளால் மறை நூல் தந்த வாதியரே"---(அதி12)
**************************************************************To be contd.***
No comments:
Post a Comment