பிறவிக் கடலைக் கடத்து விக்கும் நாவாய் ந்யாஸ த்ரயீ!!
ந்யாஸம் என்றால் "பொறுப்புத் துறப்பு" என்று பொருள். மனிதப் பிறவியின் சாதனை எனலாம் இதனை. நிக்ஷேபணம், பரந்யாஸம், ஶரணாகதி என்றும் இதற்குப் பெயர். எல்லா தபஸ்ஸிலும் ஶ்ரேஷ்டமானது இந்த ந்யாஸம் என்ற அனுஷ்டானம் என்கிறது வேதம்.(This is the extract from the on-going upanyasam by U.Ve Naavalpaakkam Sri Vasudevachar Swami through GSPK)
ஸ்வாமி தேஶிகன் அருளிச்செய்த சாஸ்த்ர, காவ்ய, நாடக, தர்க்க, ஸ்தோத்ர க்ரந்தம் எதுவாயினும் பரந்யாஸம் என்ற கருத்தையே மைய்யமாய்க் கொண்டு விளங்குவதால் "ஓரொன்று தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு வானேரப் போமளவும் வாழ்வு" என (ஏதேனும் ஒன்றைக் கற்றறிந்தாலே) மோக்ஷத்தில் ஜீவன்களைக் கொண்டு சேர்க்கும் வல்லமை படைத்தவை இந்த க்ரந்தங்கள். இந்த அனுஷ்டானத்திற்கென்றே ந்யாஸ தஶகம், ந்யாஸ விம்ஶதி, ந்யாஸ திலகம் என்ற மூன்று க்ரந்தங்களை அருளியுள்ளார் ஸ்வாமி. இம்மூன்றின் தொகுப்பே "ந்யாஸ த்ரயீ."
இவற்றுள் தனிச்சிறப்பு வாய்ந்தது "ந்யாஸ விம்ஶதி". ஶ்ருதி, ஸ்ம்ருதி, ஆழ்வார் ஸுக்த்திகள், ஆகம க்ரந்தங்கள் ஆகியவை கூறும் ப்ரதான விஷயங்களை இந்த ஸ்தோத்ர க்ரந்தம் உள்ளடக்கியுள்ளது. இக்காரணத்தால் அக்காலத்தில் வாழ்ந்த மகான்கள் ப்ரார்த்தித்ததற்கிணங்க சுருக்கமான வ்யாக்யானமாக ("திங்மாத்ர ப்ரதர்ஶனம்") ஸ்வாமியே அருளியுள்ளதே அதன் சிறப்பு.
ஶரணாகதி என்ற இந்த அனுஷ்டானத்தை ஓர் நல்ல ஆசார்யனை ஆஶ்ரயித்து அனுஷ்டிக்க வேணும் என வேதம் விதிக்கிறது இதற்கு "நியம விதி"
என்று பெயர். ஆசார்யன் மூலம் கற்கும் வித்தைகளே நிலைத்து நிற்கும். உபநிஷத் சொல்லும் "உப கோசலன்" கதை ஆசார்ய அனுக்ரஹம் ஒரு ஸிஷ்யனை ப்ரகாசப் படுத்துவதையும், ஸிஷ்ய நிஷ்டையையும் தெளிவாய்ச் சொல்கிறது. (இக்கதையை நாவல் பாக்கம் ஶ்ரீ .உ.வே. வாஸுதேவாச்சார் ஸ்வாமியின் "வேதக் கதைகள்" என்ற அரிய புத்தகத்திலிருந்து அறிக)
என்று பெயர். ஆசார்யன் மூலம் கற்கும் வித்தைகளே நிலைத்து நிற்கும். உபநிஷத் சொல்லும் "உப கோசலன்" கதை ஆசார்ய அனுக்ரஹம் ஒரு ஸிஷ்யனை ப்ரகாசப் படுத்துவதையும், ஸிஷ்ய நிஷ்டையையும் தெளிவாய்ச் சொல்கிறது. (இக்கதையை நாவல் பாக்கம் ஶ்ரீ .உ.வே. வாஸுதேவாச்சார் ஸ்வாமியின் "வேதக் கதைகள்" என்ற அரிய புத்தகத்திலிருந்து அறிக)
ந்யாஶ விம்ஶதியின் முதல், இரண்டாம் ஶ்லோகம் ஆசார்ய லக்ஷணம் பற்றியது. ஸதாசார்யன் என்பவர் 14 லக்ஷணங்கள் பொருந்திய வராக இருக்க வேண்டும் என்பதற்கு ஸ்வாமியே எடுத்துக்காட்டாக உள்ளார் என்றால் மிகையில்லை.
Shloka 1
सिद्धं सत्-संप्रदाये स्थिर-धियमनघं श्रोत्रियं ब्रह्म-निष्ठं
सत्त्व-स्थं सत्य-वाचं समय-नियतया साधु-वृत्त्या समेतम्।
डम्भ+असूया+आदि-मुक्तं जित-विषयि-गणं दीर्घ-बन्धुं दयालुं
स्खालित्ये शासितारं स्व-पर-हित-परं देशिकं भूष्णु:+र्ईप्सेत्॥ १
ஆசார்ய லக்ஷணங்கள்
- ஸத்ஸம்ப்ரதாயே - ஸ்திரமான ஸம்ப்ரதாய வழியில் வந்த ஆசார்யன் ரிஷி துல்ய பக்தி, வைராக்ய, அனுஷ்டானமுடையவராயிருப்பர்.
- ஸ்திர தியம் - சந்தேகமற்ற ஸ்திர மான ஞானமுடையவராய் இருக்கவேண்டும்.
- அநகம் - ஸாஸ்த்ரம் சொல்வதைச்செய்பவராய் தோஷமற்றிருத்தல்
- ஸ்ரோத்ரியம் - வேத வேதாந்தங்களைக் கற்றவராயிருத்தல்
- ப்ரும்ஹ நிஷ்டம் - எம்பெருமானிடம்அஸஞ்சல பக்தியுடனிருத்தல்
- ஸத்வஸ்த்தம் - ஸத்வ குணத்தில் நிலைத்து ஸாத்விகராயிருத்தல்.
- ஸத்ய வாசம் - ஸாஸ்த்ர ,லௌகீக விஷயங்களில் ஸத்யமாயிருத்தல்.
- ஸமய நியதயா ஸாது வ்ருத்யா - காலத்திற்கேற்ப பெரியோர் வரையறுத்த அனுஷ்டானங்களை ச் செய்தல்.
- டம்ப அஸூயாதி முக்தம் - தற்பெருமை,பொறாமை முதலிய தீயகுணங்களில்லாதிருத்தல்.
- ஜித விஷயி கணம் - இந்த்ரியங்களை ஜெயித்திருத்தல்.
- தீர்க்க பந்தும் - இம்மைக்கு மட்டுமன்றி மறுமைக்கும் வழிகாட்டும் வகையில் ஆத்ம பந்துவாயிருத்தல்.
- தயாளும் - மாத்ரு வாத்ஸல்யம் போல கருணையுடனிருத்தல்.
- ஸாஸிதாரம் - தவறைத் திருத்திப் பணி கொள்ளும் தகைமையனாயிருத்தல் (பயனன்றாகிலும், பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்துவார்)
- ஸ்வபர ஹிதபரம் - ஹிதத்தைச் சொல்பவராயிருத்தல். பரஸ்பர ஆத்ம, ஶரீர ஹிதம் சொல்பவராயிருத்தல்.
இத்தகைய ஆசார்யனை பகவானைத் போல உபாஸிக்க வேணும் என்றும் அதற்கான காரணங்களையும் 2ம் ஶ்லோகத்தில் சொல்கிறார்.
ஸாக்ஷாத் நாராயணனே ஆசார்யனாய் அவதாரம் செய்கிறார் என்கிறது ஸாஸ்த்ரம். பக்தி, ஸ்தோத்ரம், கைங்கர்யம் ஆகியவற்றால் ஆசார்யனை அதிதேஶ்யம் செய்ய வேண்டும். இப்படி ஆசார்யனை உயர்ந்த ஸ்தானத்தில் இருத்துவதன் காரணங்களைப் பட்டியலிடுகிறார் ஸ்வாமி.
ஆசார்யன் செய்யும் உபகாரங்களுக்கு ப்ரத்யுபகாரம் ஸிஷ்யனால் செய்யவே முடியாது.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
Shloka 2
अज्ञान-ध्वान्त रोधाद्+ अघ-परिहरणाद्+ आत्म साम्य+ आवहत्वात्
जन्म-प्रध्वंसि- जन्म- प्रद- गरिमतया दिव्य- दृष्टि- प्रभावात्।
निष्प्रत्यूह+ आनृशंस्यात् नियत- रस-तया नित्य- शेषित्व- योगात्
आचार्यः सद्भिर्+ अप्रत्युपकरण-धिया देववत् स्यादुपास्यः॥ २
ஆசார்யன் செய்யும் உபகாரங்களாவன.
- அஞானம் என்ற இருட்டைப் போக்கி தத்வ, ஹித, புருஷார்த்தம் என்ற ஆத்ம ஞானத்தை அளிப்பவர் ஆசார்யன்.
- ஶரணாகதி என்ற அனுஷ்டானத்தைச் செய்வித்து நம் பாவங்களனைத்தையும் அழித்து மோக்ஷத்துக்கு வழிகாட்டுபவர்.
- ஞானம், குணம், அனுஷ்டானம் ஆகியவற்றை அளித்து தனக்குச் சமானமாக சிஷ்யனை ஆக்குகிறார்ஆசார்யன். எம்பெருமான் முக்தாத்மாவுக்கு ஸாலோக்யம், ஸாமீப்யம், ஸாரூப்யம், ஸாயுஜ்யம் அளிப்பது போல்.
- ஸாலோக்யம் - முக்தனை ஶ்ரீ வைகுண்டலோகத்துக்கு வரவழைத்தல்.
- ஸாமீப்யம் - அத்தனை பரும்ஹாண்டமான ஶ்ரீவைகுண்ட லோகத்தில் அவனுக்கு ஸமீபத்தில் நம்மை இருக்கச் செய்தல்
- ஸாரூப்யம் - அவனைப்போல அப்ராக்ருதமான ரூபத்தை நமக்குத் தருவது.
- ஸாயுஜ்யம் - இதற்கு மேலே தனக்குச் சமமான ப்ரும்ஹானந்தத்தை நமக்குத் தருவது
- "தன்னோடொக்கத் தன் தாளிணைக்கீழ் வைக்கும் அப்பன்" என்கிறார் ஆழ்வார். (மதுராந்தகம் பாடசாலையை ஆரம்பித்து நிகழ்த்திய அனுக்ரஹ பாஷணத்தில் இஞ்சிமேட்டழகியசிங்கர் அங்கு கற்கும் வித்யார்த்திகளனைவரும் அழகியசிங்கர்களாக வேணும் என்று ஆசி வழங்கியது ஆசார்யனுக்கே உள்ள பரந்தமனத்துக்கு உதாரணம்).
- வித்யா ஜன்மம் அளித்து ஆத்ம போஷணம் செய்துபுதுப்பிறவி தந்து இந்த ஸம்ஸார பந்தம் தொடராது காப்பவர் ஆசார்யன். பிதாவாகிய ஆசார்யன், மந்த்ரமாகிய மாதாவினால் ஞானமாகிய புதுப் பிறவியைக் கொடுத்து சிஷ்யனை கடைத்தேறச் செய்கிறார்.
- எம்பெருமானின் திவ்ய த்ருஷ்டியைப்போல ஆசார்யனும் சிஷ்யனைக் குளிரக் கடாக்ஷித்து அனுக்ரஹிக்கிறார். (ஆளவந்தார் கடாக்ஷம் உடையவர் மேல் படிந்தாற்போல. நடாதூரம்மாள் கடாக்ஷம் ஸ்வாமி தேஶிகன் மேல் விழுந்தாற்போல.)
- எம்பெருமான் கருணை எல்லோரிடமும் தடையின்றி செல்வதுபோல் ஆசார்யனின் கருணையும் சிஷ்யனிடம் எல்லையின்றி சுரக்கின்றது.
- எம்பெருமான் அடியார்களுக்கு என்றும் தெவிட்டாத அமுதமாய் இருப்பது போல் ஆசார்யனும் சிஷ்யர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் ஆனந்தத்தை அளிக்கிறார்.
- எம்பெருமானைப் போல ஆசார்யனும் நித்ய ஸ்வாமி யாக உள்ளார் தன் சிஷ்யர்களுக்கு. எம்பெருமானுக்குள்ள ஜீவ சம்பந்தமும் ஆசார்யனுக்குள்ள சிஷ்ய சம்பந்தமும் ஒழிக்க ஒழியாது. இத்தகைய உயர்ந்த ஆசார்யனுக்கு ஸ்வரூபமாக, போக்யமாக, பாக்யமாக கைங்கர்யம் செய்வதே ப்ரத்யுபகாரமாக அமையும்.
(to be cont.d)
🙏🙏🌼🌼🌼🌷🌷🌷🌸🌸🌷🌷🌸🌸🌷🌷🌷🌸🌸🌼🌼🌼🙏🙏
No comments:
Post a Comment