திருவரங்கத்தமுதனார் அருளிச்செய்த
இராமானுச நூற்றந்தாதி வரிகளுடன் இணைந்த108 இராமானுச மந்த்ரஜபம் செய்து
தானுகந்த, தமருகந்த, தானேயான ஶ்ரீபாஷ்யகாரர் திருமேனியை மனத்திலிருத்தி உய்வோமாக!!
🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻
- பல்கலையோர் தாம் மன்னவந்த ராமானுசா!!
- குறையல் பிரானடிக்கீழ் விள்ளாத அன்பன் ராமானுசா!!
- பொருவரும்சீர் ஆரியன் செம்மை ராமானுசா!!
- ஊழி முதல்வனையே பன்னப்பணித்த ராமானுசா!!
- எனக்குற்ற செல்வம் ராமானுசா!!
- கவிகள் அன்பால் மயல் கொண்டு வாழ்த்தும் ராமானுசா!!
- பழியைக்கடத்தும் ராமானுசா!!
- பொய்கைப்பிரான் எரித்த திருவிளக்கைத்தன் திருஉள்ளத்தேஇருத்தும் பரமா ராமானுசா!!
- பூதத்திருவடித்தாள்கள் நெஞ்சத்து உறைய வைத்தாளும் ராமானுசா!!
- தமிழ்த்தலைவன் பொன்னடி போற்றும் ராமானுசா!!
- புகழ்ப் பாண் பெருமாள் சரணாம் பதுமத்தாரியல் ராமானுசா!!
- இடங்கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணையடிப்போது அடங்கும் இதயத்து ராமானுசா!!
- பேராத சீர்அரங்கத்தையன் கழற்கணியும் .பரன் தாளன்றி ஆதரியா மெய்யன் ராமானுசா!!
- கொல்லி காவலன் சொல்பதிக்கும் கலைக்கவிபாடும் பெரியவர் பாதங்களே துதிக்கும் பரமனே ராமானுசா!!
- பல்லாண்டென்று காப்பிடும் பான்மையன் தாள் பேராத உள்ளத்து ராமானுசா!!
- அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக்கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல் ராமானுசா!!
- தண்தமிழ்செய்த நீலன் தனக்கு இனியானே ராமானுசா !!
- சடகோபனை சிந்தையுள்ளே பெய்தற்கிசையும் பெரியவர்சீரை உயிர்களெல்லாம் உய்தற்குதவும் ராமானுசா!!
- மாறன் விளங்கிய சீர் நெறிதரும் செந்தமிழாரணமே என்று இந்நீள் நிலத்தோர் அறிதர நின்ற ராமானுசா!!
- சீலங்கொள் நாதமுனியை நெஞ்சால் வாரிப்பருகும் ராமானுசா!!
- யமுனைத்துறைவன் இணையடியாம் கதிபெற்றுடைய ராமானுசா!!
- வாணன் பிழைபொறுத்த தீர்த்தனை ஏத்தும் ராமானுசா!!
- நல்லன்பர் மனத்தகத்தே எப்போதும் வைக்கும் ராமானுசா!!
- பொய்த்தவம் போற்றும் புலைச்சமயங்கள் நிலத்தவியக்கைத்த மெய்ஞானத்து ராமானுசா!!
- காரேய்க் கருணை ராமானுசா!!
- திக்குற்ற கீர்த்தி ராமானுசா!!
- வெள்ளைச்சுடர்விடும் உன் பெருமேன்மைக்கு இழுக்கென்று தள்ளுற்றிரங்கி வல்வினையேன் மனம் புகுந்த ராமானுசா!!
- பஞ்சித்திருவடிப் பின்னைதன்காதலன் பாதம் நண்ணா வஞ்சர்கரிய ராமானுசா!!
- தென்குருகைப்பிரான் பாட்டெனும் வேதப்பசுந்தமிழ்தன்னைத் தன்பத்திஎன்னும் வீட்டின்கண் வைத்த ராமானுசா!!
- தொல்லுலகில் மன்பல்லுயிர்கட்கு இறைவன் மாயனென மொழிந்த ராமானுசா!!
- தென்னத்தியூரர் கழலிணைக்கீழ் பூண்ட அன்பாளனே ராமானுசா!!
- செறுகலியால் வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்தெடுத்தளித்த அருந்தவன் ராமானுசா!!
- பஞ்சாயுதங்களின் அவதாரமாய் இப்பூதலம் காக்க வந்த ராமானுசா!!
- அளப்பறிய என்பாவங்களை ஒழித்து நயப்புகழ்பெற்ற ராமானுசா!!
- பொன்னரங்கம் என்னில் மயலே பெருகும் ராமானுசா!!
- காசினியோர்இடரின்கண்வீழ்ந்தி
ட தானும் அவ்வொண்பொருள்கொண்டு அவர்பின்தொடரும் குணனே ராமானுசா!! - இராமாயணம் என்ற பக்தி வெள்ளம் குடிகொண்ட கோயில் ராமானுசா!!
- புண்ணியர்தம் வாக்கிற் பிரியா ராமானுசா!!
- இருள்கொண்ட வெந்துயர் மாற்றி சேமங்களே செய்யும் ராமானுசா!!
- தர்மம், காமம்,அர்த்தம்,மோக்ஷம் என்ற நான்கு பேறுகளில் கண்ணனுக்கே ஆமதுகாமம் என்றுரைத்த சீலனே எம் ராமானுசா!!
- உலகில் நீ வந்து தோன்றிய அப்போதே நண்ணருஞானம் தலைக்கொண்ட ராமானுசா!!
- மாயுமென் ஆவியை வந்தெடுத்து தொல்லருள் சுரந்த தீதில் ராமானுசா!!
- அறம் சீறும் உறுகலியைத்துரக்கும் ராமானுசா!!
- எண்ணரும்சீர் கல்லார் பரவும் ராமானுசா!!
- பேரொன்றும் மற்றில்லை நின்சரணன்றி என்று யான் போற்றும் ராமானுசா!!
- திசையனைத்தும் ஏறும் குணனே ராமானுசா!!
- இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கனென்று அறம் செப்பும் ராமானுசா!!
- நிகரின்றி நின்ற என் நீசதைக்கு நின் அருளன்றிப் புகலொன்றில்லை ராமானுசா!!
- தென்னரங்கன் கழல் சென்னி வைத்துத் தானதில் மன்னும் ராமானுசா!!
- உத்தமர் சிந்தையில் விடியலாக என்றும் நிலைபெறும் இணையடித் தாமரைத்தாளா ராமானுசா!!
- பாரதப்போர் முடியப் பரிநெடுந்தேர் விடும் கோனை முழுதுணர்ந்த அடியர்க்கமுதனே ராமானுசா!!
- இருவினை தீர்த்து அரங்கன் செய்ய தாளிணையோடு ஆர்த்து அற்புதம் செய்யும் ராமானுசா!!
- என்னையாள வந்த கற்பகமமே கற்றவர் காமுறும் சீலனே ராமானுசா!!
- நீசச் சமயங்கள் மாய்த்து நாரணனைக்காட்டிய வேதத்தைக்களிப்புறச் செய்த சீலனே ராமானுசா!!
- கடிபொழில் தென்னரங்கனின் தொண்டர் குலாவும் ராமானுசா!!
- புவனமெங்கும் ஆக்கிய கீர்த்தி ராமானுசா!!
- அரங்கன் மலரடிக்கு ஆள்உற்றவரே தனக்கு உற்றவராக் கொள்ளும் உத்தமனே ராமானுசா!!!
- பரமதங்களால் வந்த அல்லலெல்லாம் வாதில் வென்ற ராமானுசா!!
- கலி இ ருளை நான்மறையின் சுடரொளியால் துரந்த ராமானுசா!!
- மாமலராள்
புணர்ந்த பொன்மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்கு நிற்கும் குணந்திகழ்
கொண்டல் ராமானுசா!!
- வெங்கோள் வினையால் நிரையத்து அழுந்தியிட்டேனை வந்தாட்கொண்ட ராமானுசா!!
- இருவினைப்பாசம் கழற்றி இனிவருந்தா நிலையளித்த ராமானுசா!!
- பிடியைத்தொடரும் களிறன்ன யான்உன்அடியைத்தொடரும்படி நல்கிய ராமானுசா!!
- மெய்மை கொண்ட நல்வேதக்கொழுந்தண்டமேந்தி குவலயத்தே வாதியர் வாழ்வறுத்த ராமானுசா!!
- வாதியர் தொல்லை யறுத்து,மறையவர் நிலை உயர்த்தி தாரணியின் தவம்நிறுத்திய ஞானச்செம்மலே எம் ராமானுசா!!
- ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள்தொறும் நைபவர்க்குத் தன் தகவென்னும் சரண்கொடுத்த ராமானுசா!!.
- ஆருயிர்க்கு அரணாயமைந்த ராமானுசா!!
- மாயன் அன்று தெய்வத்தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியச் சொன்ன ராமானுசா!!
- தன்சரண்தந்து என்னை வந்தெடுத்
தாட்கொண்ட ராமானுசா!! - என்னையும் என் இயல்வையும் பார்த்து கருணையுடன் உன் எண்ணிலா பல்குணத்தாலே என்னை ஆட்கொண்ட ராமானுசா!!
- என் முன்செய்வினைகளை உன் செய்வினைகளால் பேர்த்த பெருந்தகையே ராமானுசா!!
- மிக்க வண்மை செய்து என்னை நிறைபுகழோருடனே வைத்த எம் ராமானுசா!!
- இத்தாரணியோர்க்கு உண்மை நல்ஞானமுரைத்த ராமானுசா!!
- மாயவன் கூராழிகொண்டு குறைக்கும் தேரார் மறையினரை தன் கொண்டலனைய வண்மையினால் சிதையாமல் தடுக்கும் சிந்தையனே ராமானுசா!!
- திருவரங்கர் கைத்தலத்து ஆழிச் சங்குடன் வரினும் நின் புகழே என்னை மொய்த்தலைக்கும் ராமானுசா!!
- வேங்கடமும், வைகுந்தமும், பாற்
கடலும் உந்தனுங்குத் தரும் இன்பத்தை உன் இணைமலர்த்தாள்களால்எனக்கருளு ம் ராமானுசா!! - என் வினைகளை வேர் பறியக் காய்ந்த ராமானுசா!!
- மற்றோர் பொய்ப்பொருள் என் நெஞ்சில் பொருத்தப்படாது என் கருத்தில் புகுந்த ராமானுசா!!
- பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து இப்பூதலத்தே மெய்யைப்புரக்கும் ராமானுசா!!
- நல்லார் பரவும் ராமானுசா!!
- சோர்வின்றி உன்துணையடிக்கீழ் தொண்டு பட்டவர்பால் சார்வின்றி நின்ற எனக்கு அரங்கன் தாளிணிகளைப் பெறுத்தும் ராமானுசா!!
- தெளிவுற்ற ஞானம் செறியப் பெறாது உழல்கின்ற என்னை பொருவற்ற கேள்வியனாக்கி நின்ற புண்ணியனே ராமானுசா!!
- ஏர்கொண்ட வீட்டை யான் எளிதில் எய்த உன்கார் கொண்ட வண்மை அருளே ராமானுசா!!
- தொண்டு கொண்டு எனவெந்நோய் விண்டுகொண்டு உன்சீர் வெள்ள வாரியை உண்டுகொண்டேன் ராமானுசா!!
- வேதத்தின் உச்சிமிக்க சோதி நாதன் என அறியாத தொண்டர் பேதமை தீர்த்த ராமானுசா!!
- ஒள்ளியநூல் கற்றார் பரவும் ராமானுசா!!
- தன் குணங்கடகு உரிய சொல் என்றும் உடையவன் என்றென்று உணர்வில் மிக்கோர் தெரியும் வண்கீர்த்தி ராமானுசா!!
- வாதியரை வெல்லும் வலிமிக்க சீயமென இப்புவனத்தில் வந்துதித்த ராமானுசா!!.
- போற்றரும் சீலத்து ராமானுசா!!
- இந்நீள் நிலத்தே எனையாள வந்த ராமானுசா!!
- அருள்சுரந்தெல்லாஉயிர்கட்கு
ம் நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்த ராமானுசா!! - புண்ணிய நோன்பு ஏதும்புரியா என் கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் இன்று புகுந்த ராமானுசா!!
- என் பெருவினையைக் கிட்டிக்கிழங்கொடு தன்அருளென்னும் ஒள்வாளுருவி வெட்டிக் களைந்த ராமானுசா!!
- தன்னைச் சார்ந்தவர்க்குத் தவம் தரும் செல்வம் தரும் சலியாப்பிறவி பவம்தரும் தீவினை பாற்றித்தரும் ராமானுசா!!
- உண்ணின்று உயிர்களுக்கு உற்றனவே செய்து பல்லுயிர்க்கும் விண்ணின் தலைநின்று வீடளிக்கும் எம் ராமானுசா!!
- வளரும் பிணிகொண்ட வல்வினையால் தரித்தும் விழுந்தும் தனிதிரியும் எனக்கு அடைக்கலம் நீயே ராமானுசா!!
- தன்னை உற்றாட் செய்யும் தன்மையினோர்க்குத் தன்மன்னு தாமரைத்தாள் அளிக்கும் தகவுடை ராமானுசா!!
- இனிய சுவர்க்கத்திலிடினும், நரகலிட்டு
ச் சுடினும், சுழல் பிறப்பு தொடரினும் உன் சரணன்றி புகலில்லை ராமானுசா!! - தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ்சடையோன் சொற்கற்ற சோம்பரும் சூனியவாதரும் மாள வந்துதித்த பொற் கற்பகமே ராமானுசா!!
- போந்தது என் நெஞ்சென்னும்பொன் வண்டு உனதடிப்போதில் ஒண்சீராம் தெளிதேனுண்டு அமர நீ அதனை ஈந்திடவேண்டும் ராமானுசா!!
- மதி மயங்கித் துயக்கும் பிறவியில் தோன்றிய என்னை துயரகற்றி உயக்கொண்டு நல்கும் ராமானுசா!!
- நையும் மனம் உன் குணங்களை யுன்னிஎன் நாஇருந்தழைக்கும் உன் நாமமே ராமானுசா!!
- நரசிங்கனின் கீர்த்திப்பயிரெ
ழுந்து விளைந்த சிந்தையனாய் என்தன் மெய்வினை நோய் களைந்து நல் ஞானமளித்த ராமானுசா!! - கையில் கனியென்ன கண்ணனைக் காட்டித்தரிலும் உந்தன் மெய்யிற் பிறங்கிய சீரன்றி யான் வேண்டிலன் ராமானுசா!!
- செழுந்திரைப்பாற்கடல் கண் துயில் மாயன் திருவடிக்கீழ் விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நல்வேதியர்கள் தொழும் திருப்பாதனே ராமானுசா!!
- வைகுந்தம், வேங்கடம், மாலிரு
ஞ்சோலையுறையும் மாயன் வந்துறையும் மனமுடை ராமானுசா!! - உன் தொண்டர்கட்கே அன்புற்றி
ருக்கும்படி என்னையாக்கி அங்கு ஆட்படுத்த வேண்டும் இன்புற்ற சீலத்து ராமானுசா!! - தென்னரங்கன் அணியாக மன்னும் பங்கய மாமலர் பாவையைப் போற்றி பக்தியெல்லாம் தழைத்து நம் தலைமிசையே பொங்கிய கீர்த்தி ராமானுசன் அடிப்பூ மன்னவே!!
🙏🙏🌺🌺🌺🌺🌻🌼இராமானுசன் திருவடிகள ஶரணம்!🌻🌼🌺🌺🌺🌺🙏🙏
Nice. Good
ReplyDelete