Wednesday, March 30, 2022

ந்யாஸ த்ரயீ - Part 2- Nyaasa Vimshati



Shloka 3:
सद् भुद्धिः साधु सेवी समुचित चरितस् तत्व बोध अभिलाषी
शुश्रूषुः त्यक्त मानः प्रणिपतन परः प्रश्न काल प्रतीक्षः।
शान्तो दान्त:+अनसूयुः शरणमुपगतः शास्त्र विश्वास शाली
शिष्यः प्राप्तः परीक्षां कृतविद् अभिमतं तत्त्वतः शिक्षणीयः॥ ३

இத்தகைய ஆசார்யனை வந்தடையும் சிஷ்யனுக்கு இருக்க வேண்டிய லக்ஷணங்களாக 14 அம்சங்களை ச்சொல்கிறார் ஸ்வாமி தேஶிகன் இந்த 3ம் ஶ்லோகத்தில்.
  • ஸத்புத்தி - நல்ல ஸ்திர புத்தி உள்ளவனாக சிஷ்யன் இருக்க வேண்டும்.
  • ஸாது ஸேவீ - பெரியோர்களை மதிப்பவனாயும், பாகவதர்களோடு பழகும் தன்மை உடையவனாயும் இருக்க வேண்டும். (க்ருஷ்ணன் அர்ஜுனனிடம் ஆசார்யனைப் பணிந்து உபதேசம் கேட்க வேண்டும் என அறிவுறுத்தினார்)
  • ஸமுசித சரித: - ஸாஸ்த்ரத்தை யொட்டிய கால தேச வர்த்தமானத்தை அனுசரித்த அனுஷ்டானமும், நல்லொழுக்கமும் உடையவனாக இருக்க வேண்டும்.
  • தத்வபோதாபிலாஷி - தத்வ, ஹித, புருஷார்த்த ஞானத்தை அறியும் ஆசையுடையவனாயிருக்க வேண்டும். தர்மங்களை அறிந்து விசாரம் செய்யும் விருப்பம் (உத்காட இச்சா) உடையவனாயிருக்க வேணும்.
  • ஸுஸ்ரூஷு - ஆசார்யனுக்குப் பணிவிடை செய்யுமுகத்தான் அவரிடம் உபதேசங்களைப் பெற வேண்டும்.
  • த்யக்தமான: - "தான்" எனும் அஹங்காரம் அற்றவனாயிருத்தல். ஞானத்திலும், செல்வத்திலும், வயதிலும் ராமானுஜரை விட உயர்ந்த வராயிருந்த போதும் தன் சிஷ்ய பாவத்தைச் சற்றும் என்றும் மாற்றிக் கொள்ளாத முக்குறும்பறுத்த கூரத்தாழ்வானே சிஷ்ய லக்ஷணத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாவார்.
  • ப்ரணிபதந பர - கீழே விழுந்து ஆசார்யனை வணங்குபவனாக ஸிஷ்யன் இருக்க வேண்டும். த்ரிகரணத்தால் சங்கோசமின்றி காலக்ஷேபம் கேட்கும் முன்பும் பின்பும் ஆசார்யனை ஸேவிக்கவைண்டும்.
  • ப்ரஶ்ன கால ப்ரதீக்ஷ: - தனக்கு ஏற்படும் சந்தேகங்களை ஆசார்யனிடம் உசிதமான காலத்தை எதிர்நோக்கிக் கேட்டுத் தெளிய வேணும்.
  • ஶாந்த: - சஞ்சலங்களைத் தவிர்த்து மனதை அடக்கியவனாக இருக்க வேணும்.
  • தாந்த: - புற இந்த்ரியங்களை தறிகெட்டுப் போகாமல் அடக்கியவனாயிருக்க வேண்டும். லௌகீக விஷயங்களில் அதிகம் ஈடுபடும்போது வித்தை கற்பதற்கு விருத்தம் ஏற்படும்.
  • அஸூய: - பிறருடைய பெருமையில் பொறாமையும் அதன் மூலம் போட்டியும் ஏற்படக் கூடாது. அவர்களின் குணங்களில் தோஷம் கற்பிக்காதிருக்க வேணும்.
  • ஶரணம் உபகத: - ஆசார்யனைத் தேடிப் போய் சிஷ்யன் பணிய வேணும். ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டுக் கொண்டு ஶரணாகதி செய்து உபதேசம் கேட்க வேணும்.
  • ஶாஸ்த்ர விஶ்வாஸ ஶாலி - ஆசார்யனிடமும் அவர் உபதேசிக்கும் ஶாஸ்த்ர விஷயங்களிலும் முழு நம்பிக்கை கொள்ள வேண்டும். "ஆயிரம் மாதா பிதாக்கள் சேர்ந்தாலும் ஶாஸ்த்ரம் போன்று ஹிதம் சொல்வதற்குச் சமானமாகாது" என்கிறார் பகவத் ராமானுஜர். ஆசார்யன் செய்யும் ஹிதோபதேசம் பின்னால்தான் சிஷ்யனுக்கு நன்கு புரியும்.
  • ஶிஷ்ய: ப்ராப்த: பரீக்ஷாம் - ஆசார்யன் செய்யும் பரீக்ஷைக்குட்பட்டு சிஷ்யனாக வேணும்.
  • க்ருத விது - இவ்விதமாக சிஷ்யனாகிய பின் ஆசார்ய பக்தியுடன் நன்றி மறவாதிருக்கவேணும். க்ருதஞையுடனிருந்தால்தான் ஆசார்ய உபதேசங்கள் மனதில் நிலைக்கும்.
இத்தகைய நல்ல குணவானாகிய சிஷ்யனுக்கு வஞ்சனையின்றி ஆசார்யன் ஸம்ப்ரதாய விஷயங்களை உபதேசிப்பார்.
(1/4 பாகம் உபதேசம், 1/4 பாகம் தானே படிப்பதால், 1/4 பாகம் வாத உரையாடல்களால், 1/4 பாகம் காலக்ரமேண சிஷ்யன் தெரிந்து கொள்வான்)

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka 4:

स्वाधीनाशेष सत्ता स्थिति यतन फलं विद्धि लक्ष्मीश मेकं
प्राप्यं नान्यं प्रतीया न च शरणतया कञ्चिदन्यं वृणीयाः।
एतस्मादेव पुंसां भयमितरद् अपि प्रेक्ष्य मोज्झीस् तदाज्ञां
इत्येकान्तोपदेशः प्रथममिह गुरोः एकचित्तेन धार्यः॥ ४||

மோக்ஷத்தை விரும்பித் தன்னை வந்தடைந்த சிஷ்யனுக்கு ஆசார்யன் செய்யும் உபதேசம் பற்றி இந்த ஶ்லோகம் சொல்கிறது.
ஆசார்யன் செய்யும் ரஹஸ்ய ஏகாந்த உபதேசமாகும் இது. மிக ஶ்ரேஷ்டமான திரு அஷ்டாக்ஷரம் த்வயம் சரமஶ்லோகம் ஆகியவற்றின் ஸாரமான அர்த்த விசேஷங்களை உபதேசிக்கிறார்.
(18 முறை நடந்து திருக்கோட்டியூர் நம்பியிடம் ராமானுஜர் கேட்டறிந்தார் இந்த அர்த்தங்களை)
இந்த திருமந்த்ரார்த்தங்கள் நம் ஆத்மாவைக் காட்டித் தருபவை. பெரிய உருவைக் காட்டும் சிறிய கண்ணாடி என்கிறார் ஸ்வாமி தேஶிகன் இதனை. பெரிய விஷயங்களைச் சுருங்கச் சொல்வதே இந்த திருமந்த்ரம். இதனை ஆத்ம யாத்ரை என்பர் தேக யாத்ரை என்பது தேக வளர்ச்சி. ஆத்ம ஸ்வரூபத்தைத் தெரிந்து கொள்வது திருமந்த்ரத்தாலேதான். ஆக ஆசார்யன் செய்யும் இந்த முதல் உபதேசம் பிறந்த சிஸுவுக்கு ப்பாலூட்டுவதற்கொப்பாகும்.

ஆசார்யன் செய்யும் உபதேசங்களாவன-
முதலில் ஶ்ரீய:பதியைத் தெரிந்துகொள்
அவனே ஶ்ருஷ்டி, ஸ்திதி, ப்ருவ்ருத்தியைச் செய்பவனாக ஸர்வ ஸ்வாமியாக உள்ளான். லக்ஷ்மீஸம் ஏகம் என்கிறது வேதம். கொசு முதல் யானை வரை எத்தனையோ விதமான ஜீவராசிகள், தாவரங்கள் இவற்றுக்கு விதவிதமான ஸ்வரூப, ஸ்திதி, ப்ருவ்ருத்தி பேதங்களைக் கொடுக்கிறான் எம்பெருமான்.
திருவாய்மொழியின் முதல் பாசுரம் எம்பெருமான் ஸ்வரூபம் இரண்டாம் பாசுரம் ஸ்திதி மூன்றாம் பாசுரம் ப்ருவ்ருத்தி பலனைச் சொல்கிறது. இவையனைத்தும் அவனது தீனம். அவனே சேஷீ. அவனே ஸ்வாமீ. கூட்டிலே வளர்க்கும் கிளி போன்றவர்கள் நாம். எம்பெருமான் நம்மை உண்டாக்கி, போகங்களை அளித்து ஸந்தோஷிக்கிறான்.
ராஜா வளர்க்கும் கிளிக்கு பட்டு வஸ்த்ரம் கட்டி நகைகள் போட்டு
ரஸிப்பதும் ஸந்தோஷிப்பதும் கிளிக்கு அனுபவமாகாது. ராஜா ஸந்தோஷித்து அனுபவிக்கிறான். இந்த லீலா ரசம் தான் பகவான் அனுபவிப்பது ஜீவன்களிடம் என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.

இரண்டாவது உபதேசம் - இத்தகைய எம்பெருமானை அடைவதே சிஷ்யனின் லக்ஷ்யமாயிருக்க வேண்டும்
ஸ்வதந்த்ரனாயில்லாமல் சூழ்நிலை தர்மத்துக்குக் கட்டுப்பட்டு நமக்கே உரிய எம்பெருமானுக்கு கீழ்படிந்திருப்பது நம் ஸ்வரூபத்துக்கு ஏற்புடையதாயிருக்கும். "எருது பரதேசம் போவதுபோல்" என்கிறார் ஸ்வாமி. இதர தேவதைகளை அடைந்தால் எருது படும் கஷ்டம் போன்று நாமும் உழலவேண்டியது புரியும்.

மூன்றாம் விஷயம் - நச ஶரணதயா - அவனை அடைவதை லக்ஷ்யமாய்க் கொண்டால் அவனே உபாயமாயிருந்து அவனை அடையச் செய்கிறான். வேறு தெய்வங்களை நாடவேண்டாம்.

நான்காம் விஷயம் - ஏதஸ் மாதேவ - ஸம்ஸாரத்தில் ஏற்படும்
சுகம்/துக்கம் லாபம்/நஷ்டம் பயம்/அபயம் எல்லாம் தருபவன் அவனே. ஆபத்தைத் தருகின்ற அவனே அபயத்தையும் தருகிறான் "பயக்ருத் பயநாஶன:"

ஐந்தாம் விஷயம் - எம்பெருமானுக்கு அடிமைப்பட்டதாலே அஸாஸ்த்ர விஷயங்களில் ஈடுபடாதிருக்க வேணும். 
அவன் கட்டளையை மீறக்கூடாது.
ஆசார்யன் செய்யும் இந்த உபதேசங்களில் ஒன்றிய மனத்தனாய் பசுமரத்தாணிபோல சிஷ்யன் இவற்றைப் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

                                                                                                    (to be cont.d)

🙏🙏🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼🙏🙏

Thursday, March 24, 2022

ந்யாஸ த்ரயீ - Part 1 - Nyaasa Vimshati

                       

பிறவிக் கடலைக் கடத்து விக்கும் நாவாய் ந்யாஸ த்ரயீ!!
(This is the extract from the on-going upanyasam by U.Ve Naavalpaakkam Sri Vasudevachar Swami through GSPK)

ந்யாஸம் என்றால் "பொறுப்புத் துறப்பு" என்று பொருள். மனிதப் பிறவியின் சாதனை எனலாம் இதனை. நிக்ஷேபணம், பரந்யாஸம், ஶரணாகதி என்றும் இதற்குப் பெயர். எல்லா தபஸ்ஸிலும் ஶ்ரேஷ்டமானது இந்த ந்யாஸம் என்ற அனுஷ்டானம் என்கிறது வேதம்.
ஸ்வாமி தேஶிகன் அருளிச்செய்த சாஸ்த்ர, காவ்ய, நாடக, தர்க்க, ஸ்தோத்ர க்ரந்தம் எதுவாயினும் பரந்யாஸம் என்ற கருத்தையே மைய்யமாய்க் கொண்டு விளங்குவதால் "ஓரொன்று தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு வானேரப் போமளவும் வாழ்வு" என (ஏதேனும் ஒன்றைக் கற்றறிந்தாலே) மோக்ஷத்தில் ஜீவன்களைக் கொண்டு சேர்க்கும் வல்லமை படைத்தவை இந்த க்ரந்தங்கள். இந்த அனுஷ்டானத்திற்கென்றே ந்யாஸ தஶகம், ந்யாஸ விம்ஶதி, ந்யாஸ திலகம் என்ற மூன்று க்ரந்தங்களை அருளியுள்ளார் ஸ்வாமி. இம்மூன்றின் தொகுப்பே "ந்யாஸ த்ரயீ."
இவற்றுள் தனிச்சிறப்பு வாய்ந்தது "ந்யாஸ விம்ஶதி". ஶ்ருதி, ஸ்ம்ருதி, ஆழ்வார் ஸுக்த்திகள், ஆகம க்ரந்தங்கள் ஆகியவை கூறும் ப்ரதான விஷயங்களை இந்த ஸ்தோத்ர க்ரந்தம் உள்ளடக்கியுள்ளது. இக்காரணத்தால் அக்காலத்தில் வாழ்ந்த மகான்கள் ப்ரார்த்தித்ததற்கிணங்க சுருக்கமான வ்யாக்யானமாக ("திங்மாத்ர ப்ரதர்ஶனம்") ஸ்வாமியே அருளியுள்ளதே அதன் சிறப்பு.
ஶரணாகதி என்ற இந்த அனுஷ்டானத்தை ஓர் நல்ல ஆசார்யனை ஆஶ்ரயித்து அனுஷ்டிக்க வேணும் என வேதம் விதிக்கிறது இதற்கு "நியம விதி"
என்று பெயர். ஆசார்யன் மூலம் கற்கும் வித்தைகளே நிலைத்து நிற்கும். உபநிஷத் சொல்லும் "உப கோசலன்" கதை ஆசார்ய அனுக்ரஹம் ஒரு ஸிஷ்யனை ப்ரகாசப் படுத்துவதையும், ஸிஷ்ய நிஷ்டையையும் தெளிவாய்ச் சொல்கிறது. (இக்கதையை நாவல் பாக்கம் ஶ்ரீ .உ.வே. வாஸுதேவாச்சார் ஸ்வாமியின் "வேதக் கதைகள்" என்ற அரிய புத்தகத்திலிருந்து அறிக)

ந்யாஶ விம்ஶதியின் முதல், இரண்டாம் ஶ்லோகம் ஆசார்ய லக்ஷணம் பற்றியது. ஸதாசார்யன் என்பவர் 14 லக்ஷணங்கள் பொருந்திய வராக இருக்க வேண்டும் என்பதற்கு ஸ்வாமியே எடுத்துக்காட்டாக உள்ளார் என்றால் மிகையில்லை.

Shloka 1
सिद्धं सत्-संप्रदाये स्थिर-धियमनघं श्रोत्रियं ब्रह्म-निष्ठं
सत्त्व-स्थं सत्य-वाचं समय-नियतया साधु-वृत्त्या समेतम्।
डम्भ+असूया+आदि-मुक्तं जित-विषयि-गणं दीर्घ-बन्धुं दयालुं
स्खालित्ये शासितारं स्व-पर-हित-परं देशिकं भूष्णु:+र्ईप्सेत्॥ १

ஆசார்ய லக்ஷணங்கள்
  • ஸத்ஸம்ப்ரதாயேஸ்திரமான ஸம்ப்ரதாய வழியில் வந்த ஆசார்யன் ரிஷி துல்ய பக்தி,     வைராக்ய, அனுஷ்டானமுடையவராயிருப்பர்.
  • ஸ்திர தியம்சந்தேகமற்ற ஸ்திர மான ஞானமுடையவராய் இருக்கவேண்டும்.
  • அநகம் - ஸாஸ்த்ரம் சொல்வதைச்செய்பவராய் தோஷமற்றிருத்தல்
  • ஸ்ரோத்ரியம் - வேத வேதாந்தங்களைக் கற்றவராயிருத்தல்
  • ப்ரும்ஹ நிஷ்டம் - எம்பெருமானிடம்அஸஞ்சல பக்தியுடனிருத்தல்
  • ஸத்வஸ்த்தம் - ஸத்வ குணத்தில் நிலைத்து ஸாத்விகராயிருத்தல்.
  • ஸத்ய வாசம் - ஸாஸ்த்ர ,லௌகீக விஷயங்களில் ஸத்யமாயிருத்தல்.
  • ஸமய நியதயா ஸாது வ்ருத்யா - காலத்திற்கேற்ப பெரியோர் வரையறுத்த அனுஷ்டானங்களை ச் செய்தல்.
  • டம்ப அஸூயாதி முக்தம் - தற்பெருமை,பொறாமை முதலிய தீயகுணங்களில்லாதிருத்தல்.
  • ஜித விஷயி கணம் - இந்த்ரியங்களை ஜெயித்திருத்தல்.
  • தீர்க்க பந்தும் - இம்மைக்கு மட்டுமன்றி மறுமைக்கும் வழிகாட்டும் வகையில் ஆத்ம பந்துவாயிருத்தல்.
  • தயாளும் - மாத்ரு வாத்ஸல்யம் போல கருணையுடனிருத்தல்.
  • ஸாஸிதாரம் - தவறைத் திருத்திப் பணி கொள்ளும் தகைமையனாயிருத்தல் (பயனன்றாகிலும், பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்துவார்)
  • ஸ்வபர ஹிதபரம் - ஹிதத்தைச் சொல்பவராயிருத்தல். பரஸ்பர ஆத்ம, ஶரீர ஹிதம் சொல்பவராயிருத்தல்.
ஆக இந்த குணங்களுடைய ஆசார்யனை ஸிஷ்யன் அணுக வேண்டும். இத்தகைய ஆசார்ய--ஸிஷ்ய சம்பந்தம் கர்மாதீனமாய் ஏற்படுவதல்ல. பூர்வ புண்ய பலத்தால் மட்டுமே கிட்டும்.

இத்தகைய ஆசார்யனை பகவானைத் போல உபாஸிக்க வேணும் என்றும் அதற்கான காரணங்களையும் 2ம் ஶ்லோகத்தில் சொல்கிறார்.
ஸாக்ஷாத் நாராயணனே ஆசார்யனாய் அவதாரம் செய்கிறார் என்கிறது ஸாஸ்த்ரம். பக்தி, ஸ்தோத்ரம், கைங்கர்யம் ஆகியவற்றால் ஆசார்யனை அதிதேஶ்யம் செய்ய வேண்டும். இப்படி ஆசார்யனை உயர்ந்த ஸ்தானத்தில் இருத்துவதன் காரணங்களைப் பட்டியலிடுகிறார் ஸ்வாமி.
ஆசார்யன் செய்யும் உபகாரங்களுக்கு ப்ரத்யுபகாரம் ஸிஷ்யனால் செய்யவே முடியாது.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka 2

अज्ञान-ध्वान्त रोधाद्+ अघ-परिहरणाद्+ आत्म साम्य+ आवहत्वात्
जन्म-प्रध्वंसि- जन्म- प्रद- गरिमतया दिव्य- दृष्टि- प्रभावात्।
निष्प्रत्यूह+ आनृशंस्यात् नियत- रस-तया नित्य- शेषित्व- योगात्
आचार्यः सद्भिर्+ अप्रत्युपकरण-धिया देववत् स्यादुपास्यः॥ २

ஆசார்யன் செய்யும் உபகாரங்களாவன.
  • அஞானம் என்ற இருட்டைப் போக்கி தத்வ, ஹித, புருஷார்த்தம் என்ற ஆத்ம ஞானத்தை அளிப்பவர் ஆசார்யன்.
  • ஶரணாகதி என்ற அனுஷ்டானத்தைச் செய்வித்து நம் பாவங்களனைத்தையும் அழித்து மோக்ஷத்துக்கு வழிகாட்டுபவர்.
  • ஞானம், குணம், அனுஷ்டானம் ஆகியவற்றை அளித்து தனக்குச் சமானமாக சிஷ்யனை ஆக்குகிறார்ஆசார்யன். எம்பெருமான் முக்தாத்மாவுக்கு ஸாலோக்யம், ஸாமீப்யம், ஸாரூப்யம், ஸாயுஜ்யம் அளிப்பது போல். 
    • ஸாலோக்யம்முக்தனை ஶ்ரீ வைகுண்டலோகத்துக்கு வரவழைத்தல். 
    • ஸாமீப்யம்அத்தனை பரும்ஹாண்டமான ஶ்ரீவைகுண்ட லோகத்தில் அவனுக்கு ஸமீபத்தில் நம்மை இருக்கச் செய்தல் 
    • ஸாரூப்யம்அவனைப்போல அப்ராக்ருதமான ரூபத்தை நமக்குத் தருவது.
    • ஸாயுஜ்யம்இதற்கு மேலே தனக்குச் சமமான ப்ரும்ஹானந்தத்தை நமக்குத் தருவது
    • "தன்னோடொக்கத் தன் தாளிணைக்கீழ் வைக்கும் அப்பன்" என்கிறார் ஆழ்வார். (மதுராந்தகம் பாடசாலையை ஆரம்பித்து நிகழ்த்திய அனுக்ரஹ பாஷணத்தில் இஞ்சிமேட்டழகியசிங்கர் அங்கு கற்கும் வித்யார்த்திகளனைவரும் அழகியசிங்கர்களாக வேணும் என்று ஆசி வழங்கியது ஆசார்யனுக்கே உள்ள பரந்தமனத்துக்கு உதாரணம்).
  • வித்யா ஜன்மம் அளித்து ஆத்ம போஷணம் செய்துபுதுப்பிறவி தந்து இந்த ஸம்ஸார பந்தம் தொடராது காப்பவர் ஆசார்யன். பிதாவாகிய ஆசார்யன், மந்த்ரமாகிய மாதாவினால் ஞானமாகிய புதுப் பிறவியைக் கொடுத்து சிஷ்யனை கடைத்தேறச் செய்கிறார்.
  • எம்பெருமானின் திவ்ய த்ருஷ்டியைப்போல ஆசார்யனும் சிஷ்யனைக் குளிரக் கடாக்ஷித்து அனுக்ரஹிக்கிறார். (ஆளவந்தார் கடாக்ஷம் உடையவர் மேல் படிந்தாற்போல. நடாதூரம்மாள் கடாக்ஷம் ஸ்வாமி தேஶிகன் மேல் விழுந்தாற்போல.) 
  • எம்பெருமான் கருணை எல்லோரிடமும் தடையின்றி செல்வதுபோல் ஆசார்யனின் கருணையும் சிஷ்யனிடம் எல்லையின்றி சுரக்கின்றது.
  • எம்பெருமான் அடியார்களுக்கு என்றும் தெவிட்டாத அமுதமாய் இருப்பது போல் ஆசார்யனும் சிஷ்யர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் ஆனந்தத்தை அளிக்கிறார்.
  • எம்பெருமானைப் போல ஆசார்யனும் நித்ய ஸ்வாமி யாக உள்ளார் தன் சிஷ்யர்களுக்கு. எம்பெருமானுக்குள்ள ஜீவ சம்பந்தமும் ஆசார்யனுக்குள்ள சிஷ்ய சம்பந்தமும் ஒழிக்க ஒழியாது. இத்தகைய உயர்ந்த ஆசார்யனுக்கு ஸ்வரூபமாக, போக்யமாக, பாக்யமாக கைங்கர்யம் செய்வதே ப்ரத்யுபகாரமாக அமையும்.
                                                                                                       (to be cont.d)
🙏🙏🌼🌼🌼🌷🌷🌷🌸🌸🌷🌷🌸🌸🌷🌷🌷🌸🌸🌼🌼🌼🙏🙏


Wednesday, March 2, 2022

My thoughts on Sharanaagati - the one and only way to attain HIM !!



The greatness and supremacy of Sharanaagati!

It is high time we have to turn our focus towards the purpose for which we are here, in this Leela Vibhuti (world).

After so many thousands of births of various kinds, a human status is obtained. This human birth is the fruit of the accumulated "Punnyam" we had done all through. (This can be compared to a highly priced article that we buy, paying huge amount of money and the amount of care we take for that article)

Human life has three stages called -
  • Birth
  • Stiti (growth)
  • Death
Of these, birth and death are not in our hands. We show more concern over Stiti. We don't know when it would stop, as our life is compared to the occurrence of a lightning (lightning disappears in no time)
"மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கை" says Nammazhwar.
What can be done to end the endless cycles of births and deaths?
Our Great Raamanujacharya performed, as well as showed us the Anushtanam called PRAPATTI on a Panguni Uttaram day in the presence of Sri RangaNayika Sametha Sri Namperumal.

Through this generous act, Udaiyavar paved the way for the entire human race to get relieved of the "Punarapi Jananam Punarapi Maranam" cycle at the end of their births.
This PRAPATTI anushtanam is the one and only means to save the jeevan from the perils of samsara.

All living beings are eligible to perform this Anushtanam. There are instances where Prapatti was done by Azhagiyasingars, even for cows and elephants.

We need to be committed to the following three things after performing Prapatti -
  1. Staunch, unmoving faith that Sriman Naarayana is the Supreme Being, as it is clearly stated in Vedas and Upanishads.(ஒத்தார்மிக்காரை இலையாய மாமாயா) எம்பெருமானே பர தத்வம் என்பதில் தெளிவு- which means there is none equal to or above Him in any context.