Shloka 5:
मोक्षोपायार्हतैवं भवति भवभृतां कस्यचित् क्वाऽपि काले
तद्वद् भक्तिप्रपत्त्योरधिकृति नियमस्तादृशा स्यान्नियत्या ।
शक्ताशक्तादि तत्तत्पुरुषविषयतः स्थाप्यते तद्व्यवस्था
यच्चाहुस्तद्विकल्पः सम इति कतिचित् तत् फलस्याविशेषात् ॥ ५॥
இதுவரை ஆசார்யன் அளித்த உபதேசத்தால் நல்ல ஞானமடைந்த சிஷ்யனுக்கு பக்தி, ப்ரபத்தி என்ற இரு உபாயங்களின் தன்மைகளை ஆசார்யன் எடுத்துக்கூறுகிறார் இதில்.
ஶ்ரீவைஷ்ணவன் செய்ய வேண்டிய முக்யமான கார்யம்
ஶரணாகதி. அடுத்த ஜன்மம் இல்லை என்ற கதி. மோக்ஷோபாயம் அனுஷ்டிக்கும் தகுதி இந்த உபதேசம் மூலம் கிடைக்கிறது. இத்தகுதி எல்லார்க்கும் கிடைப்பதில்லை.கர்ம பலனே இதற்கு மூல காரணம்.ஞானம், சக்தி, சாஸ்த்ர அனுமதி இருந்தால் இத்தகுதி பூர்த்தி யாகும். பக்தியோகம் செய்வதற்கான ஞானமும் சக்தியும் நமக்கில்லை. அது கடின உபாயம். ஶரணாகதி சுலபமானது.
மற்ற விவஸ்தைகள் தேவைப்படாமையே இதன் சிறப்பு. ஆனால் அடையப் போகும் பலன் இரண்டுக்கும் சமம்.
- ஸம்ஸாரிகளுள் யாரோ ஒருவர்க்கு மட்டுமே மோக்ஷோபாயம் அனுஷ்டிக்கும் தகுதி கிடைக்கும்.
- பக்தி/ப்ரபத்தி என்ற இரண்டு அனுஷ்டானங்களால்தான் மோக்ஷம் பெற முடியும். இதில் ஞானம்,சக்தி,சாஸ்த்ர அனுமதி,விளம்ப ஸஹிப்பு (மோக்ஷம் பெற ஏற்படும் கால தாமதம்) இவற்றுடன் செய்வது பக்தியோகம். பாபங்கள் (ஸஞ்சித, ப்ராரப்த) முற்றிலும் ஒழிந்தபின்பே மோக்ஷம் சித்திக்கும். அஞ்ஞாத ஸுஹ்ருதத்தால் நிகழ்வது ஶரணாகதி. இந்த பிறவி முடிவில் மோக்ஷம் கிடைக்கும்
- இந்த இரு அனுஷ்டானங்களும் குரு, லகு விகல்பமுடையதாயிருப்பதால் லகு உபாயத்தையே எல்லாரும் செய்வர். ஆனால் பலன் இரண்டுக்கும் சமம்.ஒருவர் இந்த இரண்டையும் அனுஷ்டிக்க சாஸ்த்ரம் அனுமதிக்காது. பக்தி யோகம் தைலதாரை போல இடையீடற்ற த்யானம் செய்யச்சொல்கிறது. க்ருத தாரை போல அல்ல. பஹிரங்க அங்கங்கள் உண்டு. ஶக்தனே இதனைச் செய்யமுடியும். ப்ரபத்தி அஶக்தனுக்கு. இது ஐந்து அங்கங்கள் கொண்ட க்ஷணகால அனுஷ்டானம். ஆக இரண்டின் ஸவரூபங்களும் இரு த்ருவங்களாய் நிலைப்படுகின்றன. திருக்குருகைக் காவலப்பன் பக்தியோகம் செய்து கண்ணனை சாக்ஷாத் கரித்தார். இந்த பக்தி யோகிகளுக்கு பக்தியும், ஞானமும் பிறவிதோறும் தொடரும். ஆனால் நாதமுனிகள், நம்மாழ்வார் கால விளம்பத்தைப் பொறுக்கவில்லை. த்யான ருசியுள்ளவர்களுக்கு விளம்பம் ஒரு பொருட்டல்ல. ஆக மேற்கூறிய நான்கு தகுதியுடையவர் பக்தியோகம் செய்வர். இவற்றில் எதுவுமில்லாதவர் ப்ரபத்திக்கு அதிகாரியாகிறார்.
- இப்படி வித்யாசமிருப்பினும் பலன் சமமானது. பரத்தில் இருவருக்கும் அனுபவம் ஒன்றே. பக்தி யோகனுக்கு இகத்தில் பகவதனுபவம் அதிகம். ஶரணாகதனுக்கு பகவதனுபவம் இங்கே குறைவு.
"நாள் இழவு (நஷ்டம்) அன்றி பொருள் இழவு இல்லை" என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
Shloka 6:
सानुक्रोशे समर्थे प्रपदनमृषिभिः स्मर्यतेऽभीष्टसिद्ध्यैः
लोकेऽप्येतत् प्रसिद्धं न च विमतिरिह प्रेख़्श्यते क्वाऽपि तन्त्रे ।
तस्मात् कैमुत्य सिद्धं भगवति तु भरन्यासविद्यानुभावम्
धर्मस्थेयाः च पूर्वे स्वकृतिषु बहुधा स्थापयांचक्रुरेवम् ॥ ६॥
ப்ரபத்தியின் பெருமையையும்,உயர்வையும் காட்டும் ஶ்லோகம் இது.
- கருணையும், சக்தியும் உடையவனிடம் ப்ரபத்தி செய்தால் பலன் கிடைக்கும் என வால்மீகி, வ்யாசர் போன்ற ரிஷிகள் தங்கள் ஸுக்திகளில் சொல்லி யுள்ளனர். லௌகீகமான கார்யம் நிறைவேற ஓரளவு சக்தியும், கருணையும் கொண்ட மனிதனை நம்புகிற நாம் ஸர்வ ஶக்தனாகிய எம்பெருமான் கட்டாயம் பலனளிப்பான் என நம்ப வேணும். லக்ஷ்மணன், பரதன், தண்டகாரண்ய ரிஷிகள், சுக்ரீவன், விபீஷணன், த்ரௌபதி, பாண்டவ ஶரணாதிகள் போன்றவை இதிகாச ப்ரசித்தமானவை.
- சக்தியுள்ளவனின் உதவியை கார்ய சித்திக்கு நாடுவது உலக நியதி. ஸாஸ்த்ரங்களும் இதனைத் தடுக்க வில்லை. பரீக்ஷித் நகர்சோதனையில் கலிபுருஷன் பசு ஒன்றை ஹிம்ஸிக்க அவனை வெட்டக்கை ஓங்க, கலி செய்த ஶரணாகதியை ஏற்று அபயம் அளித்து தன்நாட்டை விட்டு ஓடும் படி செய்ததாகவரலாறு. கீதோபதேசம் கேட்ட அர்ஜுனனின் பேரனுக்கே ஶரணாகதி செய்தவனிடம் கருணையிருக்கும்போது எம்பெருமான் விஷயத்தில் சந்தேகமே வேண்டாம்.
- ஆக இந்த ஶரணாகதி என்ற ப்ரம்ஹ வித்தையை, தர்ம நிர்ணயம் செய்யும் ஆழ்வார் ஆசார்யர்கள்சொல்லிவைத்துள்ளனர். ஆக இந்த அனுஷ்டானம் பூர்வாசார்யர்கள் ஸ்தாபித்த பரம தர்மமாகும்.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
Shloka - 7
शास्त्रप्रमाण्यवेदी ननु विधिविषये निर्विशङ्कोऽधिकारी
विश्वासस्याङ्गभावे पुनरिह विदुषा किं महत्वं प्रसाध्यम् ।
मैवं घोरापराधैर्ः सपदि गुरुफले न्यासमात्रेण लभ्ये
शङ्का पार्ष्णि ग्रहार्हा शमयितुमुचिता हेतुभिस्तत्तदर्है ॥ ७॥
மஹா விஶ்வாஸத்தின் அவஶ்யத்தைச் சொல்கிறது இந்த ஶ்லோகம்.
முதல் இரு வரிகள் கேள்விகளாகின்றன. அதாவது சாஸ்த்ரங்களை நம்புகின்றவனாக இருப்பவன் அது விதிக்கும் காரியங்களைச்செய்யத் தயங்கமாட்டான் என்னும்போது
அவனுக்கு விஶ்வாஸம் இருக்கிறது என உணரலாம்.
அடுத்த இரு வரிகள் க்ஷணகால அனுஷ்டானமாகிய ப்ரபத்தி அளிக்கும் மிகப்பெரிய பலனில் சந்தேகம் ஏற்படக்கூடியதைத் தவிர்க்க ப்ரபன்னனுக்கு மஹாவிஶ்வாசம் எம்பெருமானிடம்
இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
ப்ரபத்தியின் முக்ய அங்கமாக இந்த மஹா விஶ்வாசம் உள்ளது.
இருகையையம் விட்டு க்கதறிய த்ரௌபதியையும், எல்லாம் விட்டு வந்த விபீஷணனையும் காப்பாற்றியது எம்பெருமானிடம் அவர்கள் கொண்ட மஹாவி ஶ்வாஸமே. மாபெரும் நம்பிக்கை என்பதால் இதனைத் தனியான அங்கமாய்ச் சொல்லியுள்ளது.
பாத்ரமறிந்து மோக்ஷபலனைத் தருவதில்லை எம்பெருமான். இப்போதாவது என்னைச் சரணடைந்தானே என்ற கருணையால் உந்தப்பட்டு எம்பெருமான் செய்யும் பரம அனுக்ரஹ
பலன். ஒரேஒருநாள் ஸீதாபிராட்டி ராக்ஷஸிகளிடம் பட்ட அவஸ்தையைப்பார்த்த ஹனுமன் அவர்களைக் கொல்ல
முற்படும்போது 10 மாதமாக தன்னை ஹிம்ஸித்த அவர்களுக்கு கருணை கூர்ந்து அபயமளிக்வில்லையா பிராட்டி! ஆனாலும் கோர பேரபராதங்கள் செய்த நமக்கு இந்த சிறிய க்ஷணகால ப்ரபத்தி மோக்ஷத்தை அளிக்குமா என்ற சந்தேகமானது செய்யவிடாமல் பின்னே இழுக்கும்.
ஒத்தாரும் மிக்காரும் இல்லாத ஸர்வஶக்தனான எம்பெருமான் தன் அபார கருணையாலே இதனைச் செய்கிறான். இந்த விஷயங்களை ஆசார்யன் மூலம் நன்கு தெளிதல் வேண்டும்.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
Shloka - 8
नेहाभिक्रान्ति नाशो न च विमतिरिह प्रत्यवायो भवेदिति
उक्तं कैमुत्य नीत्या प्रपदनविषये योजितं शास्त्रविद्भिः ।
तस्मात् क्षेत्रे तदर्ह सुविदितसमयैर्देशिकैः सम्यगुप्तं
मन्त्राख्यं मुक्तिबीजं परिणति वशतः कल्पते सत्फलाय ॥ ८॥
மந்த்ர ஜபமும்,நாமஸங்கீர்த்தனமும் ப்ரபத்தியின் மூலமே மோக்ஷம்தர வல்லவை என்பதனை இந்த ஶ்லோகம் வலியுறுத்துகிறது.
பக்தி யோகத்தையும், ப்ரபத்தியையும் ஶாஸ்த்ரங்கள் ஒத்துக்கொண்டுள்ளன. இவை இரண்டும் முடியாதபோது மந்த்ர, நாம கீர்த்தனங்கள் செய்ய வேதம் அனுமதிக்கிறது. தன்வசமின்றி
"ஹரி" என்ற நாமத்தை ஒருவன் சொன்னால் பாபம் விலகும். காட்டில் ம்ருகங்களிடையே அகப்பட்ட ஒருவன் சிம்ஹ கர்ஜனை கேட்ட மாத்ரத்தில் அவற்றினிடமிருந்து தப்பி
விடுபடுவது போல "ஹரி" ஸப்தம் கேட்டால் / சொன்னால் போதும். பாபங்கள் விலகும் என்கிறது சாஸ்த்ரம்.
இன்றைய கால கட்டத்தில் பக்தி யோகம் செய்வதற்கான ஞானம், ஶக்தி நமக்கு கிடையாது. ப்ரபத்திக்கும் முக்ய தேவை "மஹாவிஶ்வாஸம்".
ஸர்வ ஶக்தனும், பரமகாருணிகனுமாகிய எம்பெருமான் என்றும் இதற்கு அடிமையானவன். தான் பெண் என்பதையும், தன்நிலை மையையும், தன்னைச்சுற்றியிருந்த பெரியோர்களையும் தள்ளி
வைத்தது த்ரௌபதியின் மஹாவிஶ்வாஸம். இத்துணை கடினமாகப் பெறும் மஹாவிஶ்வாசத்தைவிட மந்த்ர ஜபம் ஸுலபம். ஆனால் இது ஸாக்ஷாத்தாக பலனைத் தராது.
பகவான் கீதையில் மோக்ஷம் பெற கர்ம, ஞான, பக்தி யோகம் செய்பவன் பாதியில் விட்டானே யாகிலும் பாபமாகாது. பலன்தராமல் போகாது. ஜன்ம வாசனை தொடரச்செய்து பலனளிக்கும். வீண்போகாது என்கிறான். ஆக ப்ரபத்தி விஷயத்திலும் இதேபோன்ற பெருமை இருப்பதை ஸாஸ்த்ரங்கள் கூறுவதைப் பெரியோர்கள் ஸ்தாபிக்கின்றனர்.
உழவுத்தொழிலில் தேர்ந்த உழவன் நல்ல விளைநிலத்தில், தேர்ந்த விதையிட்டு வளர்த்த மரம் நல்ல பழங்களைத் தரும். விதை நேராகப்பழமாகாது. ஆனால்விதை பரிணாமத்தால்
பழமாகிறது.
அதுபோல தேர்ந்த ஆசார்யன் ஸத் ஸிஷ்யனுக்குச் செய்யும் மந்த்ரோபதேசம் அவனுக்கு ஶ்ரத்தை உண்டாக்கிய மஹாவிஶ்வாஸத்தால் மோக்ஷ பலனைப் பெறச்செய்யும். ஆக
மந்த்ரத்தைத் தானே உச்சாடனம் செய்து மோக்ஷம் பெற இயலாது என்று உணர வேண்டும்.
- இஹ அபிக்ராந்தி நாஶந-- கர்ம யோகத்தில் தொடக்கம் வீணாவதில்லை.
- இஹ விதி ப்ரத்யயாயச நபவேத் --- கர்மயோகம் நடுவில் தடைப்பட்டாலும் பாபம் ஏற்படாது.
- இதி உக்தம் --- என கீதை சொல்கிறது.
- ப்ரபதன விஷயே சாஸ்த்ர வித்பி:யோஜிதம் --- ப்ரபத்தி விஷயத்திலும் இதேபோல் ஸாஸ்த்ரமறிந்த பெரியோர்களால் பொருத்திப் பேசப்பட்டுள்ளது.
- தஸ்மாததர்ஹே --- ஆக அந்த உபதேசத்துக்கேற்ப
- க்ஷேத்ரே ஸுவிதித ஸமயே ---- சேதனனாகிய நிலத்தில் விதைக்கும் காலத்தை நன்கறிந்த
- தேஶிகைஸம்யகுப்தம்---- ஆசார்யர்களால் நன்கு விதைக்கப்பட்ட
- மந்த்ராக்யம் முக்திபீஜம் --- ப்ரபத்தி மந்த்ரமாகிய மோக்ஷ விதை
- பரிணதி வஶத:--- பக்குவமடைந்து
- கல்பதேஸத்பலாய-- மோக்ஷமாகிய சிறந்த பலனைத்தர வல்லதாகிறது.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
Shloka - 9
अहिर्बुध्न्योप्यन्ववादीदगणि दिविषदामुत्तमं गुह्यमेतत् ।
साक्षान्मोक्षाय चासौ श्रुत इह तु मुधा बाध शङ्का गुणाढ्ये
तन्निष्टो ह्यन्यनिष्ठान् प्रभुरतिशयितुं कोटिकोट्यंशतोऽपि ॥ ९॥
விளக்குகிறது.
- ந்யாஸம் அதிரிக்தமான தபஸ். இதற்குச் சமமானஅனுஷ்டானம் ஏதுமில்லை. ஒருவன் செய்த ஶரணாகதி பல யாகங்கள் செய்ததற்கு ச்சமம்.
- சமித் ஸ்தானத்தில் நம: என்ற சொல்லை வைத்துச் செய்வதாக அர்த்தம். ந்யாஸம் அனுஷ்டித்த கர்த்தா நல்லயாகங்கள் (அஶ்வமேதம், வாஜபேயம் போன்ற யாகங்கள்) செய்ததற்கு ச்சமம். இதையே "ஸ்வத்வர:" என்ற சொல் குறிக்கிறது. "செய்த வேள்வியர்" என்கிறார் ஆழ்வார்.
- அஹிர்புத்ஞ ஸம்ஹிதையில் சிவன் ந்யாஸத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். சக்ரத்தாழ்வார் பெருமையைப் பேசுகிறார்.
- தேவர்களுக்கு மிக உயர்ந்த ரஹஸ்யம்இது. இந்த ஶரணாகதி நமக்கும் கிடைத்துள்ளது. இதுவே அல்ப பலனிலிருந்து மிகப்பெரிய பலனாகிய மோக்ஷம் வரை உபாயமாகிறது என வேதம் சொல்கிறது.
ஔதார்ய காருண்ய குணவிஸேஷத்தால் மோக்ஷம் உறுதியாகிறது.
கூரத்தாழ்வான் ஸ்ரீவைகுண்டஸ்தவத்தில் சொல்வதுபோல் இத்தனை உயர்ந்த மோக்ஷத்தைக் கொடுத்த பின்பும் கொடுத்தது போதாது என எண்ணுபவன் எம்பெருமான்.
ஆக மற்றைய கர்ம ஞான பக்தி யோகத்தை செய்பவரைவிட கோடி கோடி மடங்கு உயர்ந்தவன் ப்ரபன்னன். இவ்விஷயத்தை ஸ்வாமி தேஶிகன் தன் தேவநாயக பஞ்சாஸத் ஸ்தோத்ரத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.
"நிஷ்கிஞ்சநத்வ தநிநா விபுதேஶயேந
ந்யஸ்த ஸ்வரக்ஷண பரஸ் தவ பாத பத்மே
நாநாவித ப்ரதித யோக விசேஷ தந்யா:
நார்ஹந்தி தஸ்ய ஶதகோடி தமாம்ஶ கக்ஷ்யாம்" (47)
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
Shloka - 10
नानाशब्दादिभेदादिति तु कथयता सूत्रकारेण सम्यक्
ஆக மற்றைய கர்ம ஞான பக்தி யோகத்தை செய்பவரைவிட கோடி கோடி மடங்கு உயர்ந்தவன் ப்ரபன்னன். இவ்விஷயத்தை ஸ்வாமி தேஶிகன் தன் தேவநாயக பஞ்சாஸத் ஸ்தோத்ரத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.
"நிஷ்கிஞ்சநத்வ தநிநா விபுதேஶயேந
ந்யஸ்த ஸ்வரக்ஷண பரஸ் தவ பாத பத்மே
நாநாவித ப்ரதித யோக விசேஷ தந்யா:
நார்ஹந்தி தஸ்ய ஶதகோடி தமாம்ஶ கக்ஷ்யாம்" (47)
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
Shloka - 10
नानाशब्दादिभेदादिति तु कथयता सूत्रकारेण सम्यक्
न्यासोपासे विभक्ते यजनहवनवच्छब्दभेदादभाक्तात् ।
आख्या रूपादिभेदः श्रुत इतरसमः किञ्च भिन्नोऽधिकारः
शीघ्रप्राप्त्यादिभिः स्याज्जगुरिति च मधूपासनादौ व्यवस्थाम् ॥ १०॥
ப்ரபத்தி தனிப்பட்ட உபாயமாவதைப் பற்றி க்கூறும் ஶ்லோகம் இது. இது ஸ்ரீபாஷ்ய விஷயமான ஶ்லோகம். ஞான ஶப்தாதி பேதாதி கரணத்திலிருந்து ஸ்வாமி விஷயங்களைக் காட்டியுள்ளார்.
எம்பெருமானார் அருளிய ஸ்ரீபாஷ்யம், கீதா பாஷ்யம் இரண்டிலும் பக்தியோகமே ப்ராதான்யமாய்ப் பேசப்படுகின்றன. ந்யாஸம் பற்றிய விவரணமில்லையே என்ற உறுத்தல் இருந்தது. ஆனால் சூத்ரகாரராகிய வ்யாசர் இதற்குச் சமாதானம் சொல்கிறார்
"நாநா ஶப்தாதி பேதாத்" என்பது சூத்ரம். வேதத்தில் யாகம், ஹோமம், தானம் இவை பற்றிய விவரங்கள் சொல்லப்பட்டுள்ளது.
எம்பெருமானார் அருளிய ஸ்ரீபாஷ்யம், கீதா பாஷ்யம் இரண்டிலும் பக்தியோகமே ப்ராதான்யமாய்ப் பேசப்படுகின்றன. ந்யாஸம் பற்றிய விவரணமில்லையே என்ற உறுத்தல் இருந்தது. ஆனால் சூத்ரகாரராகிய வ்யாசர் இதற்குச் சமாதானம் சொல்கிறார்
"நாநா ஶப்தாதி பேதாத்" என்பது சூத்ரம். வேதத்தில் யாகம், ஹோமம், தானம் இவை பற்றிய விவரங்கள் சொல்லப்பட்டுள்ளது.
உதாரணமாக அஶ்வமேதம், ஸோமயாகம் என்றால் ஒவ்வொன்றுக்கும் தனி தேவதை, ரூபம், த்ரவ்யம் உள்ளன. ஹோமம் என்றால் அந்த தேவதைக்கு அக்னி மூலம் நெய் ஆஹூதி செய்ய வேண்டும். எனதல்ல என்ற எண்ணத்துடன் பிறருக்கு ஸமர்ப்பணம் செய்வதில் தானம் பூர்த்தியாகும்.
ஆக இவை ஒவ்வொன்றுக்கும் அந்த வினையைச் (அனுஷ்டானத்தை)
செய்யும் போது ஶப்தங்கள் வேறுபடுகின்றன. 'யஜேத்' என்பது யாகத்துக்கும், 'ஜுஹ்யாத்' என்பது ஹோமத்துக்கும், 'தத்யாத்' என்பது தானத்துக்கும் ஶப்தங்களாகின்றன. ஶப்தத்தையிட்டு பலன் கிடைக்கிறது.
ஆக இவை ஒவ்வொன்றுக்கும் அந்த வினையைச் (அனுஷ்டானத்தை)
செய்யும் போது ஶப்தங்கள் வேறுபடுகின்றன. 'யஜேத்' என்பது யாகத்துக்கும், 'ஜுஹ்யாத்' என்பது ஹோமத்துக்கும், 'தத்யாத்' என்பது தானத்துக்கும் ஶப்தங்களாகின்றன. ஶப்தத்தையிட்டு பலன் கிடைக்கிறது.
ஸந்த்யாவந்தனம் என்பது அர்க்யம், காயத்ரி, உபஸ்தானம் அடங்கிய ஒரே அனுஷ்டானம். அதேபோல திருவாராதனம் என்பது மந்த்ராசனம், திருமஞ்சனம், அலங்காரம், ஸமர்ப்பணம், நிவேதனம் அடங்கிய ஒரே அனுஷ்டானம்.பக்தி யோகம் செய்பவன் 32 ப்ரும்ஹ வித்தையில் ஏதாவது ஒன்றைப் பற்றி த்யானம் செய்யலாம்.
மதுவித்யா, சாண்டில்ய வித்யா, தகரவித்யா என்பன போன்ற 32 வித்யைகளில் 32 வதாக "ந்யாஸவித்யை" சொல்லப்படுகிறது. மேற்சொன்ன வித்யைகளில் ரூபம், குணம் வேறுபட்டாலும் ஶப்தவேறுபாடில்லை. உபாஸனம் (த்யானம்/வேதனம்) தான் செய்யவேண்டும். ஶரணாகதியில் "ஓமித் யாத்மீய உஞ்சீத்" என விதிக்கிற ஶப்தம் வித்யாசமாயுள்ளது. யாகத்தில் ஞான பாகமும், ஹோமத்தில் அனுஷ்டானமும் முக்யமாவது போல் "எனதல்ல" என்ற த்யாகம் எண்ணம் வந்தால்தான் தானம் பூர்த்தியாகும். இந்த ந்யாஸவித்யைக்கு காருண்ய குணவானாகிய பகவான்ரூபமாயிருந்து கோரின காலத்தில் பலனைத்தருகிறான்.
பக்தியோகம் செய்யமுடியாமையே இதற்கு முக்ய தகுதி. 15 விதமான அதிகாரி (தகுதி) பேதம் ந்யாஸத்துக்குச் சொல்லப்பட்டுள்ளது. மதுவித்யை செய்பவன் சூர்யனை உபாஸித்து தேவலோகத்தில் அஷ்ட வஸுக்களில் ஒருவராக 10யுகங்களிருந்து பின் மோக்ஷமடைவான் என்று சொல்லப்படுகிறது. தகர வித்யா நிஷ்டனுக்கு இதைவிட சீக்ர மோக்ஷம் என்கிறது.
ஆக ந்யாஸம் -- உபாஸனம் இரண்டும் வேறு. இரண்டுக்கும் ஸப்தம் 'ரூபம், பலன், தகுதி வேறானவை.
ஆக ந்யாஸம் -- உபாஸனம் இரண்டும் வேறு. இரண்டுக்கும் ஸப்தம் 'ரூபம், பலன், தகுதி வேறானவை.
கீதாபாஷ்யத்தில் பக்திக்கு ப்ரபத்தி ஒரு அங்கம் என்று குறிப்பிட்டாலும், ப்ரபத்தி ஸ்வதந்த்ரமாக மோக்ஷம் தரவல்லது. ஸ்ரீபாஷ்யகாரர் கத்யத்தில் ப்ரபத்தி மோக்ஷத்துக்கு நேர்க்காரணமாகும் என்று வெளிப்படையாகவே விளக்கியுள்ளார்.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
(to be cont.d)
No comments:
Post a Comment