Thursday, June 8, 2023

ந்யாஸ த்ரயீ - Part 9 - ந்யாஸ தஶகம்


ந்யாஸ தஶகம்

ஸ்வாமி தேஶிகன் பரம கருணையுடனே நம் பொருட்டு வ்யாஸமாயும், ஸம்க்ஷேபமாயும் பல க்ரந்தங்களை அருளிச் செய்கதுள்ளார். அவற்றுள் மிகச்சிறிய ஆனால் மிகப் பெரிய ஸாஸ்த்ரார்த்த்தை உள்ளடக்கிய உயரிய க்ரந்தம் ந்யாஸ தஶகம் என்ற ஸ்தோத்ர க்ரந்தம்.

முதல் ஐந்து ஶ்லோகங்கள் ஶரணாகதி அநுஸந்தானம் பற்றியும், அடுத்த ஐந்தில் கைங்கர்ய ஸம்ருத்தி ஏற்பட ப்ரார்த்தனையும் காட்டப்பட்டுள்ளது.

Shloka -1:
अहं मद्रक्षणभरो मद्रक्षणफलं तथा ।
न मम श्रीपतेरेवेत्यात्मानं निक्षिपेत् बुध: ।।1।।

ஞானமுள்ள மனிதன் ஆத்மாவை எம்பெருமானிடம் ஒப்படைக்க வேண்டும். நான் எம்பெருமானுக்குரியவன் என்ற மனோபாவமே ஆத்ம சமர்ப்பணம். ஸமர்ப்பித்த பின் அது நம்முடையதல்ல. நான் பெருமானுக்குரியவன் என்ற எண்ணமே அது. ஆத்மா, பரம், பலம் இம்மூன்றையும் பரமனிடம் ஒப்படைப்பதே மோக்ஷம்.


Shloka -2:
न्यस्याम्यकिंचन: श्रीमन्ननुकूलोऽन्यवर्जित: ।
विश्वासप्रार्थनापूर्वमात्मरक्षाभरं त्वयि ।।2।।

ஶ்ரிய: பதியிடம் 6 அங்கங்களுடன் கூடிய ஶரணாகதியை ஸ்வாமி அநுஸந்தானம் செய்கிறார். அனுகூல்ய ஸங்கல்பம், ப்ரதிகூல்ய வர்ஜனம், விஶ்வாஸம், கோப்த்ருத்வ வர்ணம், ஆகிஞ்சன்யம் என்ற அங்கங்களுடன் அங்கியான ஶரணாகதி அநுஸந்திக்கப்படுகிறது.
"உகக்கும் அவை உகந்து
உகவா அனைத்தும் ஒழித்து....."

என் அடைக்கலம் பத்து பாஸுரம் இதனைச் சொல்கிறது.

"உன்சரணே சரண் என்னும் துணிவு பூண்டேன்
மன்னிருளாய்‌ நின்ற நிலை எனக்குத் தீர்த்து
வானவர்தம் வாழ்ச்சிதர வரித்தேன் உன்னை
இன்னருளால் இனி எனக்கோர் பரம் ஏற்றாமல்
எம்பெருமான் அடைக்கலம் கொள் என்னை நீயே" 
என்கிறார் ஸ்வாமி அம்ருதா ஸ்வாதினியில்.


Shloka -3:
स्वामी स्वशेषं स्ववशं स्वभरत्वेन निर्भरम् ।
स्वदत्तस्वधिया 
स्वार्थं स्वस्मिन्नयस्यति मां स्वयम् ।।3।।

எம்பெருமான் தனக்குச் சேஷனாய், தனக்கு வஸப்பட்டவனாகிய என்னை, அவனைப்பற்றிய ஞானத்தை அவனேஅளித்து அவனை அடையும் பொறுப்பையும் அவனே செய்வித்துக்கொள்கிறான்.


Shloka -4:
श्रीमन्नभीष्टवरद त्वामस्मि शरणं गत: ।
ऐतद्देहावसाने मां त्वत्पादं प्रापय स्वयम् ।।4।।

ஹே வரதா! உன்னைச் சரணடைந்தவனாயிருக்கும் என்னை இச்சரீரம் விழும் காலத்தில் உன் திருவடியை அடையும்படி செய்வாயாக.


Shloka -5:
त्वच्छेषत्वे स्थिरधियं त्वत्प्राप्त्येकप्रयोजनम् ।
निषिद्धकाम्यरहितं कुरु मां नित्यकिंकरम् ।।5।।

உன் தாஸத்வத்தில் உறுதியும், உன்னை அநுபவிப்பதையே பலனாகவும் கொண்டு, அல்ப பலன் தருவனவும், நிஷித்தமானவையுமான செயல்களைச் செய்யாது உன் நித்ய கைங்கர்யத்தில் ஈடுபட அருள வேண்டும் என ப்ரார்த்திக்கிறார்.


Shloka -6:
देवीभूषणहेत्यादिजुष्टस्य भगवंस्तव ।
नित्यं निरपराधेषु कैंकर्येषु 
नियुङ्क्ष्व माम् ।।6।।

திருவாபரணங்களுடன் கூடிய தேவிமார்களும், உன் திருஆயுதங்களும் என்றும் உன்னை விட்டுப் பிரியாமல் கைங்கர்யம் செய்வதுபோல் எனக்கும் அபராதம் கலவாத கைங்கர்யத்தை நீ அருளவேண்டும்.


Shloka -7:
मां मदीयं च निखिलं चेतनाचेतनात्मकम् ।
स्व
कैङ्कर्योपकरणं वरद स्वीकुरु स्वयम् ।।7।।

பேரருளாளனே! அடியேனையும், அடியேனைச்சேர்ந்த சேதன, அசேதந வஸ்துக்களையும் உன் கைங்கர்யத்துக்குக் கருவியாக ஏற்க வேண்டும்.


Shloka -8:
त्वदेकरक्षस्य मम त्वमेव करुणाकर: ।
न प्रवर्तय पापानि प्रवृत्तानि 
निवर्तय ।।8।।

ஹே கருணாகரா! உன்னால் ரக்ஷிக்கப்பட வேண்டிய என்னைப் பாபங்கள் சேரா வண்ணம் செய்வதுடன் முன்பு செய்த பாபங்களையும் ஒழித்தருள வேணும்.


Shloka -9:
अकृत्यानां च करणं कृत्यानां वर्जनं च मे ।
क्षमस्व निखिलं देव प्रणतार्तिहर प्रभो ।।9।।
ஹே ப்ரணதார்த்திஹரா!இதுகாறும் செய்யத் தகாதவற்றைச் செய்த குற்றங்களையும், செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்ட குற்றங்களையும் பொறுத்தருள வேணும்‌.


Shloka -10:
श्री
मान्नियतपञ्चाङ्गं मद्रक्षणभरार्पणम् ।
अचीकरत्स्वयं स्वस्मिन्नतोऽहमिह निर्भर: ।।10।।
ஹே ப்ரபோ! ஐந்து அங்கங்களுடன் கூடிய ந்யாஶம் என்ற அனுஷ்டானத்தைச் செய்து என்னைக் காக்கும் பொறுப்பை உன்னிடம் ஸமர்ப்பித்து விட்டேன். ஆகவே அடியேன் பொறுப்பைத் துறந்த நிர்பரனாகவும், நிர்பயனாகவும் ஆகிவிட்டேன் என்கிறார் ஸ்வாமி.

🙏🙏🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌼🌼🌼🌺🌺🌺🌼🌼🙏🙏

Tuesday, April 18, 2023

ந்யாஸ த்ரயீ - Part 8 - ந்யாஸ திலகம்


Shloka -21:
अन्धोऽनन्धग्रहणवशगो याति रङ्गेश यद्वत् 
पङ्गुर्नौकाकुहरनिहितो नीयते नाविकेन । 
भुङ्क्ते भोगानविदितनृपः सेवकस्यार्भकादिः 
त्वत्सम्प्राप्तौ प्रभवति तथा देशिको मे दयाळुः ॥ २१॥

உதாரணங்களுடன் ஆசார்யநிஷ்டையின் சிறப்பை விளக்கும் ஶ்லோகம்.
  • ரங்கேஶா!அந்தோ---யத்வத்--- குருடன் கண்ணுள்ளவன் கைபிடித்து கடப்பது போல
  • பங்குர்---நாவிகேன----முடவன் ஓடக்காரன் துணையோடு அக்கரை சேர்வது போல
  • புங்தே-- ஸேவகஸ்யார்ப்பகாதி--- ராஜ ஸேவகர்களின் குழந்தை அரண்மனை போகங்களை அனுபவிக்குமாப்போல
  • த்வத்ஸம் ப்ராப்தௌ---தயாளு--- கருணை நிறைந்த ஆசார்யன் என்னை உன்னிடம் ஒப்படைக்கிறான்.
ஆக ஆசார்ய ஸம்பந்தம் மோக்ஷ பலனைத்தரும் என்பது உறுதி.
ராமானுஜர் ஸம்பந்தத்தாலே நான் உய்ந்து போவேன் என்கிறார் முதலியாண்டான்.
உவமைமைகள் மூலம் நன்மை விளைவிக்கச் செய்த இந்த ஶ்லோகம் ஸ்வாமியால் ரஹஸ்யத்ரய ஸாரத்திலும் உதாஹரிக்கப்பட்டுள்ளது.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka -22:
उक्त्या धनञ्जयविभीषणलक्ष्यया ते 
प्रत्याय्य लक्ष्मणमुनेर्भवता वितीर्णम् । 
श्रुत्वा वरं तदनुबन्धमदावलिप्ते 
नित्यं प्रसीद भगवन्मयि रङ्गनाथ ॥ २२॥

அரங்கன் ராமானுஜருக்குத் தந்த வரங்கள் இதில் பேசப்படுகின்றன. 

ப்ரபன்னனின் துர்பலம் ஆசார்ய பலத்தால் போக்கடிக்கப்படுகிறது.
  • ரங்கநாதா!உக்த்யா.....லக்ஷ்யயாதே---அர்ஜுனனையும்,விபீஷணனையும்
  • கலக்காமல் வைத்து நீ பேசிய நம்பிக்கை வார்த்தைகள்
  • ப்ரத்யாய்ய.....விதீர்ணம்----ராமானுஜர் செய்த ஶரணாகதிக்கு நீ தந்த வரங்களைக் கேட்டபின்
  • ஶ்ருத்வா...மதாவலிப்தே---என்னுள்ளே உன்மீது சாத்வீக அபிமானம் எழுந்தது.
  • நித்யம் ப்ரஸீத மயி பகவந்----நீ எனக்கு எப்போதும் அருள் புரிய வேண்டும் என்கிறார் ஸ்வாமி.
கத்யத்தால் ஶரணாகதி அனுஷ்டித்துக் காட்டினார் உடையவர். இந்த அனுஷ்டானத்தில் எழுந்த சந்தேகங்களை ந்யாஶதிலகத்தில் நிவர்த்திக்கிறார் ஸ்வாமி தேஶிகன்.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka -23:
सकृदपि विनतानां सर्वदे सर्वदेहिनि 
उपनिषदभिधेये भागधेये विधेये । 
विरमति न कदाचिन्मोहतो हा हतोऽहं 
विषमविषयचिन्तामेदुरा मे दुराशा ॥ २३॥

உலக சுகங்களில் ஈடுபட்டமைக்கு நிர்வேதப்படுவதை விளக்கும் ஶ்லோகம் இது. 

முதலிரண்டு வரிகளில் நம் ஹ்ருதயத்தில்,க்ருஹத்தில், கோயிலில் வேதங்களுக்கும் எட்டாத எம்பெருமான் ஸுலபனாக நமக்காக எழுந்தருளியிருப்பதையும் அதனை உணராமல் விஷம விஷய சிந்தையினால் காலத்தைப் போக்கிவிட்டோமே என நிர்வேதப்படும் விதத்தை அடுத்த இரு வரிகளில் காட்டுகிறார்.
  • ஸக்ருதபி.....ஸர்வதேஹிநி---
  • ஒருமுறை ஶரணாகதி செய்தவர்க்கே கேட்கும் பயன்களைத் தருகின்ற எம்பெருமான்
  • உபநிஷத்....விதேயே----உபநிஷத்துக்கள் கொண்டாடும் அவன் நாம் சொன்னவண்ணம் செய்ய இங்கே எழுந்தருளியுள்ளான் நம் பாக்யத்தாலே.
  • விஷம ....துராஶா---உலக ஆசைகளின்மேல் நாட்டம் ஒருகாலும் குறைவதில்லை.
  • விரமதி...ஹதோஹம்---இது என்ன கஷ்டம். என் அறியாமையால் பகவானளித்த ஞானத்தை மோஹம் வெல்கிறதே! என நாம் நிர்வேதப்படவேணும் என்கிறார் ஸ்வாமி.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka -24:
यावज्जीवं जगति नियतं देहयात्रा भवित्री 
त्यक्ताः सर्वे त्रिचतुरदिनग्लानभोगा नभोगाः । 
दत्ते रङ्गी निजमपि पदं देशिकादेशकाङ्क्षी 
किं ते चिन्ते परमभिमतं खिद्यसे यत् पुनस्त्व्म् ॥ २४॥

காலத்தை வீணாக்கி நிர்வேதப்படும் மனத்தைத் தேற்று முகமாய் உள்ள ஶ்லோகம் இது.
  • ஏ மனமே! யாவஜ்ஜீவம்....பவித்ரீ--இந்த ஜீவன் உள்ளவரை கர்மா தீனமான வாழ்க்கை நடக்கப்போகிறது.
  • த்யக்தா ...நபோக:---சொர்க்க பலன் அழியும் தன்மையானதா ல் விலக்கப்பட்டது.
  • தத்தே ரங்கீ...தேஶகாங்க்ஷி--- அரங்கன் ஆசார்ய ஸம்பந்தம் ஏற்படுத்தி மோக்ஷபலத்தையும் தந்துவிட்டான்.
  • கிம்தேசிந்தே....யத்புனஸ்த்வம்--- எதற்கு வருத்தம் வேறென்ன வேண்டும் என்பதாய்ச் சொல்லி சமாதானம் செய்கிறார்.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka -25:
अपि मुहुरपराधैरप्रकम्प्यानुकम्पे 
वहति महति योग क्षेम वृन्दं मुकुन्दे । 
मदकलुषमनीषावज्रलेपावलेपान् 
अणुगुणयितुमीहे न प्रभूनप्रभूतान् ॥ २५॥

நம் ஸ்வரூபத்தையும்,ஸ்திதியையும் புரிந்து கொண்டு அற்ப பலன்களுக்காக அற்ப மனிதர்களை அணுகவேண்டாம் என்கிறார் இந்த ஶ்லோகத்தில் ஸ்வாமி.

  • அபிமுஹு....அநுகம்பே---அடிக்கடி செய்யும் அபராதங்களைப் பொருட்படுத்தாமல் அசைக்கமுடியாத கருணையுடையவனாக உள்ளான்.
  • வஹதி மஹதி யோகக்ஷேம ப்ருந்தம் முகுந்தே---மிகப் பெரியோனாய் இம்மை மறுமைப் பயனைத் தரும் அரங்கத்தம்மான் யோகக்ஷேமங்களனைத்தும் அருள்கிறான்.
  • மதகலுஷ....லேபாவலேபாந்--- இப்படியான க்ருபை இருக்கும்போது தன் கலங்கிய புத்தியால் வஜ்ரப்பசைபோல் ஒட்டிக்கொண்டிருக்கும் செறுக்குடன் கூடிய
  • அநுகுணயிது....ப்ரபூதான்----அற்ப ப்ரபுக்களைச் சார்ந்து அவர்களது அநுகூலத்தைப் பெற விரும்பேன் என்கிறார் ஸ்வாமி.

ஸ்வாமி தேஶிகனின் பால்ய ஸ்நேகிதரின் விண்ணப்ப வ்ருத்தாந்தமும் அதனால் விளைந்ததே வைராக்ய பஞ்சகம்
என்ற ஸ்தோத்ர க்ரந்தம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
"ராஜமஹிஷி மடிப்பிச்சைப் புக்கால் ராஜாவுக்கு அவத்யம்" என்று ஸ்வாமி ரஹஸ்யத்ரய ஸாரத்தில் உதாஹரித்திருப்பதும் இங்கு பொருந்தும்.
தன்னுடைய நிச்சய நிலையையும், உறுதியையும் ஸ்வாமி இதில் தெரிவிக்கிறார்.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka -26:
मातर्भारति मुञ्च मानुषचटून्हे देह लब्धैरलं 
लुब्धद्वारदुरासिकापरिभवैस्तोषं जुषेथा मनः ।
वाचः सीमनि रङ्गधामनि महानन्दोन्नमद्भूमनि
स्वामिन्यात्मनि वेङ्गटेश्वरकवेः स्वेनार्पितोऽयं भरः ॥ २६॥

கரணத்ரய உபதேசமாக இந்த ஶ்லோகம் அமைந்துள்ளது.

  • மாதர் பாரதி...மானுஷசடூன்---வாக்கே! நீ மானிடர்களைப் புகழ்ந்து பேசுவதை விடு.
  • ஹேதேஹ லப்தைரலம்---தேஹமே! இதுகாறும் நீபெற்ற சுகம் போதும்.
  • லுப்த...மன:----ஹே மனமே!கருமிகளின் வீட்டு வாசலில் நின்று அவமான இழிநிலையினாலும் பெற்றவை போதும்.
  • வாச:மத்பூமனி---எல்லா வாசகங்களுக்கும் எல்லையாய் ஆனந்தத்தால் உயர்ந்த பெருமையுடைய அரங்கனிடம்
  • ஸ்வாமினி...பர:---இந்த வேங்கட கவியின் பொறுப்பு தன்னாலே ஸமர்ப்பிக்கப்பட்டது.
"உள்ளம் உரை செயல் உள்ள இம்மூன்றையும் உள்ளிக்கெடுத்து
இறையுள்ளில் ஒடுங்கே"
என்ற திருவாய்மொழியும் கரணத்ரயத்தின் செயல்பாட்டை விளக்குகிறது.
(எம்பெருமானைத் தவிர ஸ்வாமி தேஶிகனால் புகழ்ந்துரைக்கப்ட்ட இருவர் பெரிய திருவடியின் தாயார் வினதாவும், அரங்கனை மீட்டு ஆஸ்தானம் ஏற்றிய கோபண்ணாவும் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது)

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka -27:
दास्यं लास्यवताऽनुमत्य मनसा रङ्गेश्वर त्वत्पदे 
नित्यं किङ्करवाण्यहं न तु पुनः कुर्यां कदर्याश्रयाम् । 
मीलच्चक्षुषि वेल्लितभ्रुणि मुहुर्दत्तावमानाक्षरे 
भीमे कस्यचिदाढ्यकस्य वदने भिक्षाविलक्षां द्दशम् ॥ २७॥

எம்பெருமானிடம் கைங்கர்யம் ஶ்ரேஷ்டமானது. அற்பர்களைப் புகழ்ந்து யாசிப்பது நீசமானது என்பதைப் புரியவைக்கும் ஶ்லோகம்.

காடு செல்ல விடைபெறச் சென்ற ராமபிரான் கௌஸல்யா மாதாவிடம் போகத்தைப் பின்னே தள்ளி‌ தர்மத்தைப் பரிபாலனம் செய்வதன் முக்யத்தை எடுத்துரைத்தார். ஸ்வாமி தேஶிகனும் இதனையே அனுஷ்டித்தார். தாஸத்வம் ஏற்கனவே நம்மிடம் உள்ளது. அதனைப் புரிந்துகொண்டு ஏற்கவேண்டும் என்பதை "அனுபத்யம்" என்ற பதம் காட்டுகிறது. இது விதி என்பதை
"விதி நிர்மித மேததன்வயம் பகவன் பாலய மாத்மஜீவத:" என்று காட்டுகிறார் ஆளவந்தார். அல்பர்களைப் புகழ்வதால் நம் துக்கம், வ்யாதி, பாபம் எதுவும் போகாது. 
ஆனால், "மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்
தன்னாகவே கொண்டு 
சன்மம் செய்யாமையும் கொள்ளுமே" என்பதன் மூலம் எம்பெருமானை ஏற்றினால் பிறவாமை பெறலாம் என்கிறார் நம்மாழ்வார். எம்பெருமானைப் பாடி அவன் குளிர்ந்த கடாக்ஷத்தால் நம் சாபம் இழியும் என்கிறாள் ஆண்டாள்.

  • ஹே ரங்கேஶ்வரா! தாஸ்யம்...த்வத்பதே-----உன்திருவடியில் தாஸ்ய பாவத்துடன் சந்தோஷிக்கும் மனத்துடன்
  • நித்யம்...கதர்யாஶ்ரயம்---நித்யம் கைங்கர்யம் செய்வேன்.
  • மீலச்சக்ஷுஷி...த்தாவமாநாக்ஷரே---கண்மூடியநிலையில் புருவ நெறிப்பு டன் அவமான வார்த்தைகள் பேசுகின்ற
  • பீமே.... த்ருஶம்---பார்க்க பயங்கரமாயுள்ள செல்வர்களின் முகத்தைப் பார்த்து யாசிக்கும் இழி நிலையை அடைய மாட்டேன் என்று உறுதிபடக் கூறுகிறார் ஸ்வாமி.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka -28:
त्वय्येकाञ्चलिकिङ्करे तनुभृतां निर्व्याजसर्वंसहे 
कल्याणात्मनि रङ्गनाथ कमलाकान्ते मुकुन्दे स्थिते ।
स्वामिन्पाहि दयस्व देव कुशलिन्जीव प्रभो भावयेति 
आलापानवलेपिषु प्रलपितुं जिह्रेति जिह्वा मम ॥ २८॥

மூன்று கரணங்களையும் எம்பெருமான் விஷயத்தில் ஈடுபடச்செய்வதன் அவஶ்யத்தை விளக்கும் ஶ்லோகம்.

  • ஹேரங்கநாதா! த்வய்யே...தநுப்ருதாம்--அடியார்கள் ஒருமுறை கைகூப்பி னாலே நீ அவர்களுக்கு அடிமை செய்யப் பாரிக்கின்றாய்.
  • நிர்வ்யாஜ...முகுந்தே ஸ்திதே--- நாங்கள் செய்யும் தவறுகளைப் பொறுப்பவனாய்,மங்களமான திருமேனியுடன், கலையின் நாயகனாயுள்ள நீ இஹ பர ஸுகங்களை அளிக்க வல்லவன்.
  • ஸ்வாமிந்...பாவயேதி---செறுக்குடைய ப்ரபுக்களிடம் சென்றுதம்மை காக்கும் கருணை வேண்டி, பொருளை யாசித்து, அவர்களை உயர்த்திப்புகழ்ந்து
  • ஆலாபா..மம--- பிதற்றுவதற்கு என் நாக்கு வெட்கமடைகிறது என்கிறார் ஸ்வாமி.

நம் கரணங்களுக்கு "பகவான்" என்பதே ஆகாரமாகவேண்டும். பகவதனுபவத்தில் ஈடுபடுவோர் இவ்வுலகில் குறைவாயிருப்பதை மனதில் கொண்டு"சொன்னால் விரோதம் இது "என்று பதிகம்
பாடுகிறார் நம்மாழ்வார்.
"நெடியானே!என்று கிடக்கும் என் நெஞ்சமே"!
"குறளாகிய வஞ்சனே!என்றும் எப்போதும் என் வாசகமே"!
"தாயவனே!என்று தடவும் என் கைகளே"!
"பாம்பேறி உறையானே!உன்னை மெய்கொள்ளக் காண விரும்பும் என் கண்களே"!
"புள்ளின் சிறகொலி பாவித்து திண்கொள்ளவோர்க்கும் கிடந்தென் செவிகளே"!
"நெடுஞ்சக்கரத்துன்னையே!
அவிவின்றிஆதரிக்கும் எனதாவியே"! --- என்று ஆழ்வார் தன் கரணங்களை எம்பெருமான் விஷயமாய் ஈடுபடப்பணிக்கிறார்.

இதனை "முடியானை இல்விடாய்த்த கரணங்களைப் பகவத் பரங்களாக்கி" என்கிறார் ஸ்வாமி தேஶிகன் ரஹஸ்யத்ரய ஸாரத்தில். முழுமையாக விவஸ்தையற்ற இந்த்ரியம் இந்த நாக்கு என்கிறது மஹாபாரதம். ஆனால் ஸ்வாமி தேஶிகன் தன் நாக்கு விவஸ்தை உள்ளது என்கிறார்.
"மாயமனிசரை என் சொல்ல வந்தேன் என்வாய்க்கொண்டே" என்கிறார் ஆழ்வார். மனிசரைக் கவிபாடும்
என் வாய் எனக்கு விதேயமாகுமா"--என்கிறார் பிள்ளான் . ஆக எல்லையற்ற கருணா மூர்த்தியான எம்பெருமான் இருக்கும்போது அல்பகால அல்ப தேச பலன்களைக் தரும் சிவ, ப்ரம்ஹனை ஏற்றிப் போற்றுவது அவஶ்யமன்று என்பது கருத்து.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka -29:
त्वयि सति रङ्गधुर्य शरणागतकामदुधे
निरुपधिकप्रवाहकरुणापरिणाहवति | 
परिमितदेशकालफलदान्फलदाकृतिकान्
कथमधिकुर्महे विधिशिवप्रमुखानमुखान् ॥ २९॥

அரங்கனையன்றி பிற தெய்வங்களை நாடாமை குறித்துச் சொல்லும் ஶ்லோகம்.

  • ரங்கராஜனே! நிருபதிக---கருணா பரிணாஹவதி---உனது கருணையாகிய வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
  • த்வயிஸதி.....காமதுகே----உன்னைச் சரணடைந்தவர்களுக்கு விரும்பியதைப் பொழிய நீ இருக்கின்றாய். அப்படி இருக்க
  • பரிமித...பலதாக்ருதிகான்---இடத்தாலும், காலத்தாலும் அற்பமான பலன்களைத் தருகின்ற
  • கதமதி...ப்ரமுகானமுகான்---ஶிவ, ப்ரும்ஹாதிகளை ஆஶ்ரயிக்கத் தேவையில்லை என்கிறார் ஸ்வாமி.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka -30:
ओमित्यभ्युपगम्य रङ्गनृपतेऽनन्योचितां शेषतां 
स्वातन्त्र्यादिमयीमपोह्य महतीमाद्यामविद्यास्थितिम् । नित्यासङ्ख्यविसीमभूतिगुणयोर्यायामनायासतः 
सेवासम्पदमिन्दिरेश युवयोरैकान्तिकात्यन्तिकीम् ॥ ३०॥

திவ்ய தம்பதிக்கே அடிமை செய்யப் பணிக்கிறார் இதில்.

பரம பதத்தில் நம் கைங்கர்யம் பகாவனுக்கு மட்டுமே உரித்தான ஐகாந்திகமானதும் ஒழிவில்லாத ஆத்யந்திகமானதுமாக அமைகிறது. எண்ணிலடங்காத விபூதியும், குணமும் நிறைந்த திவ்ய தம்பதிக்கே கைங்கர்யம் செய்ய வேண்டும்.
இந்த பலத்தை (palam)ஶரணாகதி அனுஷ்டானத்தாலே அநாயாஸமாகப் பெற்றேன் என்கிறார் "தாஸத்வத்தை உயிர் மூச்சாகக் கொண்ட ஸ்வாமி.

  • ரங்கபதே! ஓம்இத்யப்யுபகம்ய...ஸ்திதிம்--- வேறு ஒருவர்க்கும் அடிமை அல்லேன்.வெகு காலமாய் என்னுள்ளிருந்த ஸ்வதந்த்ரன் என்ற எண்ணத்தை ஒழித்தேன்.
  • நித்யாஸங்க்ய....ஆத்யந்திகீம்----எண்ணிலடங்கா செல்வ, குண நிதியுடைய உங்களிடம் எல்லையற்ற கைங்கர்ய செல்வத்தைக் கஷ்டமின்றிப் பெறுகிறேன். 
எக்காலத்திலும் எம்பெருமானுக்கே தாஸன் என்பதை "ஓம்" என்ற வேத பாஷையில் ஒப்புக்கொள்கிறேன் என்கிறார். இந்த தாஸத்வம் போகமாகி பகவத் கைங்கர்யத்தில் ஈடுபடுத்துவது எனக்குப் பிடித்திருக்கிறது. ஸ்வதந்த்ரன் என்ற நிலைநீங்கிதாஸத்வம் நிலைத்து கைங்கர்ய செல்வம் பெறவேண்டும் என்று ப்ரார்த்திக்கிறார் ஸ்வாமி.

🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka -31:
आचार्याद्रङ्गधुर्य द्वयसमधिगमे लब्धसत्तं तदात्वे 
विश्लिष्टाश्लिष्टपूर्वोत्तरदुरितभरं यापितारब्धदेहम् ।
नीतं त्वत्कैस्त्वया वा निरवधिकदयोद्भूतबोधादिरूपं
त्वद्भोगैकस्वभोगं दयितमनुचरं त्वत्कृते मां कुरुष्व ॥ ३१॥

பரமபதத்தில் நிரந்தர கைங்கர்யத்தை ப்ரார்த்திக்கிறார் ஸ்வாமி இந்த ஶ்லோகத்தில்‌.

இதில் முதல் இருவரிகளில் இதுவரை நடந்ததை "க்ருதஞையுடன் சொல்கிறார்.
அடுத்த இருவரிகளில் இனி
நடக்கப்போவதை "ப்ரார்த்தனையாக" வைக்கிறார். தத்வத்தை அறிந்து ஹிதத்தைச் செய்வதன் பயன் புருஷார்த்தத்தை அடைவதாகும்.

  • ஹேரங்கேஶா!ஆசார்யாத்...தாத்வே---ஆசார்யனை அடைந்து த்வயமந்த்ரம் பெற்ற உடனேயே
  • விஶ்லிஷ்ட...தேஹம்--- ஸஞ்சித பாபம் அழிந்து பின்செய்யும் பாபம் ஒட்டாமல் ஆகின்றது.
  • நீதம்...போதாதிரூபம்--- உனது எல்லையற்ற கருணையால் பரமதத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு ஞான விகாஸம்
  • பெற்றவனாகவும் ஆக்கி 
  • த்வத்போகைக...குருஷ்வ---உன்னை அனுபவித்தலையே போகமாகக்கொண்டு உனக்கு கைங்கர்யம் செய்வதே நிலைத்து பரஸ்பரப்ரீதி நிறையவேணுமாய் ப்ரார்த்திக்கிறேன் என்கிறார் ஸ்வாமி.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka -32:
विधानां रङ्गेशादधिगतवतो वेङ्गटकवेः 
स्फुरद्वर्णं वक्त्रे परिकलयतां न्यासतिलकम् । 
इहामुत्राप्येष प्रणतजनचिन्तामणिगिरिः 
स्वपर्यङ्के सेवां दिशति फणिपर्यङ्करसिकः ॥ ३२॥

இரு விபூதிகளிலும் கைங்கர்யத்தை ப்ரார்த்திக்கிறார் ஸ்வாமி.

அர்த்தம் தெரிந்து அனுஸந்திக்க வேண்டியது ஶாஸ்த்ரம். அர்த்தம் தெரியாமல் அனுஸந்தித்தாலும் பலன் தரவல்லது ஸ்தோத்ரம். இந்த ந்யாஸ திலகம் என்ற ஸ்தோத்ரம் அநுஸந்திப்பதன் பலனாவது ப்ரணவாகார விமானத்தின் கீழ் ஆதிஸேஷ அரவணை மேய மாயனாகிய அரங்கன் ஆஶ்ருதர்களைஅரவணைக்கும் ரஸிகனாக சிந்தாமணி போல அனைத்துப் பலனையும் அளிப்பதாம். ந்யாஸத்தைச் சொல்லிக் கொண்டு ந்யாசத்தைச் செய்து கொண்டு அவன் முன் நின்றால் அவன் வஶீகரிக்கப்படுகிறான்.
பரதஶரணாகதியாலே அயோத்தி நகரமே முக்தி அடைந்தாற்போல.

  • ரங்கனே!விதானம்...வேங்கடகவே----உன்நியமனத்தை அறிந்தவேங்கடகவியின் வாயில்
  • ஸ்புரத்வர்ணம்...ந்யாஸதிலகம்---தோன்றிய இந்த ந்யாஸதிலகம் என்ற ஸ்தோத்ரத்தை அநுஸந்திப்போர்க்கு
  • இஹாமுத்ராப்யேஷ.. சிந்தாமணி கிரி:-----சிந்தாமணிமலையாக இம்மையிலும், மறுமையிலும் தன்னிடம் கைங்கர்யத்தை
  • ஸ்வபர்யங்கே....ரஸிக:----ஆதிஸேஷ பர்யங்கத்தில் அணைந்த ரஸிகனாய் அருள்கிறான்.
  • ஆக ந்யாஸம் என்ற திலகமணிந்து செல்லும் நம்மால் வஶீகரிக்கப்பட்ட அரங்கன் நமக்கு மோக்ஷம் அளிப்பது திண்ணம்.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼



Wednesday, February 22, 2023

ந்யாஸ த்ரயீ - Part 7 - ந்யாஸ திலகம்


Shloka -11:

त्वय्याचार्यैविनिहितभरास्तावका रङ्गनाथ त्वत्कैङ्गर्यप्रवणमनसस्त्वद्गुणास्वादमत्ताः । 
त्वय्येकस्मिन्नपि विजहतो मुक्तवत्साधनत्वं 
त्वच्छेषत्वस्वरसरसिकाः सूरयो मे स्वदन्ताम् ॥ ११॥

ப்ரபந்நர்கள் தன் உள்ளத்துக்கு இனியவர்களானவர்கள் என்பதை ஸ்வாமி இந்த ஶ்லோகத்தில் குறிப்பிடுகிறார்.

அவர்களின் பெருமைகளைப்பேசுகிறார்.
  1. ரங்கா !ப்ரபந்நர்கள் தம் பரத்தை ஆசார்யனிடம் ஒப்படைத்து விடுகின்றனர்.
  2. "அளிய நம் பயல்" என்று நீ சொல்வதற்கேற்ப உன் அன்புக்கு இலக்காகின்றனர் அவர்கள்.
  3. உன் கைங்கர்யங்களில் ஈடுபடுகின்றனர்.
  4. எப்போதும் பகவத் குணானுபவம் செய்து ஸந்தோஷிக்கின்றனர்.
  5. இதற்கெல்லாம் ஆசார்யமுகேன கிடைத்த உபாயமே காரணம்.(அரண்மனை வேலைக்காரனின் குழந்தை அரண்மனை வஸ்துக்களை அனுபவிப்பது போல) சேதனன் ஸம்ஸாரக்கடலைக்கடக்க உபாய மான ஓடமாயிருந்த எம்பெருமான், அந்த சேதனன் ஶரணாகதனாகிய பின் உபேயமாகிறான்.
  6. ஆகப்ரபன்னர்கள் பகவத் குணானுபவமும், கைங்கர்யமும் செய்து கொண்டு ரங்கனை அனுபவித்துக் கொண்டு ஸ்ரீவைகுண்டத்தில் நித்யசூரிகள்போல "பூலோக சூரிகளாய்" மகிழ்கின்றனர்.
நாதமுனிகள், பிள்ளான் போல இந்த ப்ரபந்நர்களும் இயல்பாகவே தாஸத்வத்தை உணர்ந்தவர்களாயிருப்பதால் அவர்களைத் தான் மிக ரஸிப்பதாய் ஸ்வாமி குறிப்பிடுகிறார். (அக்ரித்ரிம த்வத்
சரணாரவிந்தே ப்ரேமப்ரஹர்ஷா மதிமாத்ம வந்தம்
--ஸ்தோத்ர ரத்னம்- ஆளவந்தார்)

  • த்வ்ய்யாசார்யைர்..தாவகா-- ஆசார்யர்களால் உன்னிடம் பொறுப்பை ஸமர்ப்பித்து உன் அன்புக்குப் பாத்ரமானவர்களாய்
  • த்வத்கைங்கர்ய...மத்தா:---உன் கைங்கர்யத்தில் ஈடுபடும் மனத்தராய், உன்குணானுபவத்தால், பெருமை கொண்டவராய்
  • த்வய்யே...ஸாதநத்வம்---முக்தி பெற்றவர்போல உன்னிடத்தில் உபாயம் என்ற எண்ணத்தை விடுபவராக
  • தவச்சேஷத்வ...ஸ்வதந்தாம்---- உனக்கு அடியவராயிருந்து ஸந்தோஷிப்பவர்களே எனக்கு ருசிக்கவேணும்.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka -12:

कल्पस्तोमेऽप्यपास्तत्वदितरगतयोऽशक्तिधीभक्तीभूम्ना रङ्गेश प्रातिकूल्यक्षरणपरिणमन्निर्विघातानुकूल्याः । 
त्रातारं त्वामभेद्याच्छरणवरणतो नाथ निर्विघ्नयन्तः 
त्वन्निक्षिप्तात्मरक्षां प्रति रभसजुषः स्वप्रवृत्तिं त्यजन्ति ॥ १२॥

ஶரணாகதியின் அங்கங்களைப் பற்றிய ஶ்லோகம் இது.

"உகக்கும்அவை உகந்து உகவா அனைத்தும் ஒழிந்து......அடைக்கலமாயடைந்தேனே"-- என்ற அடைக்கலப்பத்து பாசுரத்தின் விளக்கமே இந்த ஶ்லோகம்.

அங்கங்களின் ப்ராதான்யத்தைச்சொல்லி ஒரு அங்கியை விஸேஷமாய்ச் சொல்கிறது.
முதல் வரியின் மூலம் எத்தனை கல்பகோடி வருஷங்களானாலும்
எம்பெருமானைத் தவிர உபாய மில்லை என்ற "கார்பண்யம்" என்ற அங்கம் சொல்லப்படுகிறது.
அதிலேயே அஶக்தி, பக்தி இன்மை, ஞானமின்மை ஆகிய
தகுதியின் மையும் (குருடன், முடவன்போல) காட்டுகிறார். ஆக கர்ம ஞான பக்தி யோகம் செய்ய இயலாமையே ப்ரபத்திக்குத் தகுதியாகிறது.

இரண்டாம் வரியில் எம்பெருமானுக்கு ப்ரதிகூலமானவற்றைத் தவிர்ப்பதால் ஆநுகூல்யம் வளர்வதைக் காட்டுகிறார்.
அவனையே சரணாக வரித்து ப்ரார்த்திக்கும்போது அவன் அதனை மீறமாட்டான் என்ற நம்பிக்கையை மூன்றாம் வரியில் காட்டுகிறார்.
ரக்ஷகனான எம்பெருமானையே உபாயமாக்கி இந்த ஶரணாகதி என்ற உபாயம் எதிர்ப்படும் தடையை நீக்குகிறது.
இவ்விதம் ஆத்ம ரக்ஷணப் பொறுப்பை ஒப்படைத்தவர்கள் பலனை எதிர்பார்த்து பரபரப்புடனிருப்பர்.
"ஸ்வப்ருவ்ருத்திம் த்யஜந்தி".
ஆக பொறுப்பை அவன் ஏற்றபின் ப்ரபன்னன் ஏதும் செய்ய வேண்டாம். அங்கங்களை அனுஸந்தானம் செய்து கொண்டு யதா ஶக்தி ந்யாயத்துடன் நடந்தால் போதும் என்பது கருத்து.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka -13:

त्यक्तोपायव्यपायांस्तदुभयकरणे सत्रपान्सानुतापान् 
भूयोऽपि त्वत्प्रपत्त्या प्रशमितकलुषान्हन्त सर्वंसहस्त्वम् । 
रङ्गिन् न्यासान्तरङ्गाखिलजनहिततागोचरत्वन्निदेश- प्रीतिप्राप्तस्ववर्णाश्रमशुभचरितान्पासि धन्याननन्यान् ॥ १३॥

ப்ரபந்நர்கள் ஶாஸ்த்ரத்தை மீறாதிருத்தலையும், அதன் பயனையும் இந்த ஶ்லோகம் சொல்கிறது.

ஹே ரங்கா! ப்ரபந்நர்கள் உன்னைச்சரணடைந்தபின் காம்ய கார்யங்களிலும், பாபகார்யங்களிலும் ஈடுபட மாட்டார்கள். (த்யக்த உபாய வ்யபாயான்)
வைராக்யக் குறைவினால் இது நேர்ந்தாலும் அதற்காக வெட்கப்பட்டு நிர்வேதமடைவர். மறுபடி உன்னிடம் ப்ராயச்சித்த ப்ரபத்தியும் செய்வர். (ஸத்ரபான் ஸாநுதாபான் பூய: அபி த்வம் ப்ரபத்யா)

அகில ஜன ஹிதனான எம்பெருமான் தன் எல்லையற்ற பொறுமையினால்(ஸர்வம் ஸஹஸ்த்வம்) இத்தகைய ப்ரபந்நர்களைக் காக்கின்றான்.
உன் ஶரணாகத ரக்ஷணம் என்ன ஆஶ்சர்யமாயள்ளது. (ஹந்த!)
ஆக நீயிட்ட கட்டளையை ஏற்று வர்ணாஶ்ரம தர்மங்களை அனுஷ்டித்து, பிற தெய்வங்களையும், மற்ற பலனையும் நாடாதிருக்கும் ப்ரபந்நர்கள் பாக்ய சாலிகள் /தந்யர்கள். (ஸ்வ வர்ணாஶ்ரம ஸுபசரிதான் அநந்யான்)
அறியாமை நிலையிலுள்ள குழந்தை போல எம்பெருமான் செய்யும் ஹிதம் நமக்குப் புரியாது.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka -14:

शोकास्पदांशमथनः श्रयतां भवाब्धौ 
रागास्पदांशसहजं न रुणत्सि दुःखम् । 
नो चेदमी जगति रङ्गधुरीण भूयः 
क्षोदिष्ठभोगरसिकास्तव न स्मरेयुः ॥ १४॥

ப்ரபந்நரும் துன்பமடையக் காரணம் என்ன என்பதற்கான
விளக்கம் இதில் தருகிறார் ஸ்வாமி.


ஸம்ஸாரிகளுக்கும், ப்ரபந்நர்களுக்கும் சுக துக்கானுபவத்தில் வேறுபாடில்லாவிடினும் ப்ரபந்நர்களுக்கு புனர்ஜன்ம் இல்லாமல் செய்கிறான் எம்பெருமான் தன் அளவற்ற கருணையாலே.(ஶோகாஸ்பதம்ஸ மதந)

ஹே ரங்கதுரீஶா!இத்தகைய பேருபகாரம் செய்யும் நீ, அவர்களது ஆசையினால் நேரும் துன்பத்தை தடுப்பதில்லை. (ராகாஸ்பதாம்ஸ ஸஹஜம் நருணத்ஸி து:க்கம்)

நீ இப்படி ப்ரபந்நநர்களின் துக்கத்தைத் தடுத்திருந்தால் (நோ சேதமீ ஜகதி)

அவர்கள் அற்ப போகங்களில் ஈடுபட்டு உன்னை நினையாமல் மறந்தே விடுவர்!! (க்ஷோதிஷ்ட போக ரஸிகாஸ் தவ ந ஸ்மரேயு:)

ஆக துன்பங்களையும் கலந்து கொடுத்து அவனை நினைக்கப் பண்ணி உலகப்பற்றிலிருந்து விடுவிக்கும் உபகாரமே இது என்கிறார் ஸ்வாமி.
இதயத்துடிப்பில் சற்றே கோளாறு ஏற்பட்ட க்ஷணத்தில் கோவிந்தனை நினைக்கும் நாம் அந்த இதயத்தை இத்தனை காலம் நன்கு இயக்கிவைத்தபோது நினைப்பதில்லை. அழுக்குக் குட்டையில் ஊறி‌மகிழும் எருமையின் ரஸனை நமக்கு ஒவ்வாது. பகவத் ரஸனையுடையவர்களாயிருக்கவேணும் நாம். குந்தி தேவி கஷ்டத்தை
ப்ரார்த்தித்தது இதனடிப்படையிலையே!
நாம் கஷ்டத்தை ப்ரார்த்திக்காவிடினும், வரும் கஷ்டங்களை எம்பெருமான் ஸ்மரணத்தாலே எதிர்கொண்டு மீளலாம் என்பதே கருத்து.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka -15:

हेतुवैधे विमर्शे भजनवदितरत् किं त्वनुष्टानकाले 
वेद्यत्वद्रूपभेदो विविध इह स तूपायान्यनपेक्षा । रङ्गिन्प्रारब्धभङ्गात्फलमधिकमनावृत्तिरुक्तेष्टिवन्स्यात् 
नाना शब्दादिभेदात्प्रपदनभजने सूचिते सूत्रकारैः ॥ १५॥

பக்தியும், ப்ரபத்தியும் தனித்தனி உபாயமாவதை விளக்கும் ஶ்லோகம் இது.

மிக கஷ்டப்பட்டு ச்செய்யும் உபாயம் பக்தி யோகம். அநாயாஸமாய் செய்யும் உபாயம் ஶரணாகதி. இரண்டுக்கும் வித்யாசம் பெரிதாயிருப்பினும் எப்படி இரண்டும் சமமாகும் என்பதற்கு இதில் பதில்தருகிறார். ஸமாஶ்ரயேணம், திருமண் தரித்தல், அர்ச்சா மூர்த்தி பற்றிய விளக்கங்கள் வேதத்திலில்லை. ஆனால் ஆகமத்தில் உள்ளன. பாஞ்சராத்ர ஆகமப்ரமாணம் என்ற க்ரந்தம் ஆளவந்தாருடையது. 

ஸ்வாமி தேஶிகன் பாஞ்சராத்ர ரக்ஷா, நிக்ஷேப ரக்ஷா முதலிய 5 ரக்ஷா க்ரந்தங்கள் ஸாதித்துள்ளார். வஞ்சபரசமயம் மாய்க்க வந்த ஸ்வாமி உடையவர் உபதேசித்த சித்தாந்தத்தைக் காப்பாற்றிக் கொடுத்தார். வேதத்தில் சொன்னவற்றை மீமாம்ஸா ரீதியில் ஆராய்ந்து நிரூபித்துள்ளார். வேத்தில் கூறியுள்ள த்யானம், யாகம் முதலானவற்றை விளக்கும் ஸாஸ்த்ரமே ஜைமினி மகரிஷி
செய்த மீமாம்ஸா சாஸ்த்ரம்.
பல சாகைகளில் வேதம் சொல்லும் ஒரே விஷயத்துக்கு
தேவதை, விதி, பெயர், பலன் ஒன்றாகவே இருக்கும். 
உதாரணம்-புருஷ ஸுக்த்தம்.
பக்தியோகம், ஶரணாகதி இரண்டும் தனியான உபாயங்களானாலும்
மோக்ஷத்துக்கு நேர் சாதனங்களாகும். ஆனால் கீழ்க்காணும் வேறுபாடுகள் உள்ளன.
  1. பலன் - பக்தியோகம் பலன் தரத்துவங்கிய பாபம் தவிர மற்ற பாபங்களைப் போக்கவல்லது. ப்ரபத்தி பலன்கொடுக்கத் துவங்கிய பாபத்தையும் நாம் கேட்டுக்கொண்டதற்கேற்ப போக்கி விடுகிறது.
  2. தேவதை -பக்தியோகத்தில் வித்தைகளுக்கேற்ப தேவதைகளும்,  உபாஸிக்கும் குணங்களும் வேறுபடும். ஆனால் ப்ரபத்தியோ எம்பெருமானையே உபாயமாய்க்கொள்கிறது.
  3. விதி - பக்தியோகத்தை விதிக்கும் உபநிஷத்வாக்யம் உபாஸித்தல், த்யானம் என்ற பொருள் தருகிறது. ப்ரபத்திக்கு ஶரணடைதல் என்ற பொருள் தருகிறது.
  4. முறை - பக்தியோகம் ஆயுள் முடியும் வரை செய்து அடுத்தடுத்த பிறவியிலும் தொடரும் தன்மையது. ப்ரபத்தி ஒரே ஒருமுறை அனுஷ்டிக்க வேண்டியது.
ஆக இந்த நான்கு விதத்தில் வேறுபடும் இவ்விரு உபாயங்களை வ்யாஸர் "நாநா ஶப்தாதி பேதாத்" என்று சூத்ரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  • ஹேதுர்.....இதரத்--- வேதத்தை ஆராய்ந்து பார்த்தால் பக்தி யோகம் போல ப்ரபத்தியும் மோக்ஷ சாதனமாகும்.
  • கிம்.......அநபேக்ஷா---- பக்தியோகன் பலகுணங்களை உபாஸிக்க ப்ரபந்நன் அவனையே உபாய மாய் கொள்கிறான்.
  • ப்ராரப்தபங்காத்…...இஷ்டிவத்ஸ்யாத் -- திரும்பத் திரும்ப பல ஆவ்ருத்தி செய்வதே பக்தி யோகம். ஆனால் ப்ரபத்திஒரே ஒரு முறை அனுஷ்டிக்க வேண்டியது. சில அனுஷ்டானங்களை ஜீவிக்கும் வரை செய்யச்சொல்கிறது ஸாஸ்த்ரம். 
ரங்கன் செய்த பரம உபகாரம் இந்த ஶரணாகதி. ஏனெனில் ஶரணாகதனுக்கு அடுத்த ஜன்மம் இல்லை.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka -16:

भक्तौ रङ्गपते यथा खलु पशुच्छागादिवत्वेदन- ध्यानोपासनदर्शनादिवचसामिच्छन्त्यभिन्नार्थताम् । व्यक्त्यैक्याच्छरणागतिप्रपदनत्यागात्मनिक्षेपण- 
न्यासाद्येषु तथैव तन्त्रनिपुणैः पर्यायता स्मर्यते ॥ १६॥

ப்ரபத்தி அனுஷ்டானத்துக்குள்ள வேறு பெயர்களின் விளக்கமாய் இந்த ஶ்லோகம் அமைந்துள்ளது.

ஶரணாகதி, ப்ரபத்தி, த்யானம், ஆத்மந்யாஸம், நிக்ஷேபம்,
பரன்யாசம் ஆகிய அனைத்தும் ஒரே அனுஷ்டானத்தைக்குறிக்கும் பல பெயர்களாக வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஸந்த்யா, உபாஸனம், வந்தனம் ஆகியன ஒரே அனுஷ்டானத்தின் பல பெயர்களாய் வேதம் குறிப்பது போல. ஸத், ஆத்மா, ப்ரம்ஹ என்பன நாராயணன் என்ற விசேஷப்பெயரைக் குறிக்கும் பலபெயர்களாகின்றன. வேதம், த்யானம், தர்சனம், ப்ரம்ஹவித், உபாஸனம் ஆகியன பக்தி யோகத்துக்குரிய பல பெயர்கள்.

  • ரங்கபதே! பசுச்சாகா......அபிந்நார்த்ததாம்-- வேள்வியில் பசு, சாதம் முதலிய சொற்கள் போல அறிதல், த்யானம், உபாஸனம், காணுதல் போன்ற சொற்களுக்கு ஒரே அர்த்தம் கிடைக்கிறது.
  • ஶரணாகதி.....பர்யாயதா---- அதேபோல ஶரணாகதிஎன்ற சொல் ப்ரபதநம், த்யாகம், ஆத்ம ஸமர்ப்பணம், பரந்யாசம் என்ற பல பெயர்களால் குறிக்கப்படுகிறது.
ஆக மீமாம்ஸா ஸாஸ்த்ரமும் வேதாந்தமும் நெருங்கிய சம்பந்தம் உள்ளவை என அந்த நிபுணர்களால் சொல்லப்படுகிறது.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka -17:

विश्वासायासभूम्नोर्न्यसनभजनयोर्गौरवे को विशेषः 
तत्सद्भावेऽपि धर्मान्तर इव घटते कर्तृभेदाद्विकल्पः । 
तद्भेदो रङ्गशायिन्ननितरगतिताद्युत्थशोकातिरेकात् 
सद्विद्यादौ विकल्पस्त्वभिमतिभिदया तेन तत्रैकराश्यम् ॥ १७॥

பக்திக்கும், ப்ரபத்திக்கும் உள்ள வேற்றுமையை விளக்கும் ஶ்லோகம் இது.

ஶரணாகதி ஸாஸ்த்ரத்தைப் புரிந்துகொண்டு சிந்திப்பது,,பேசுவது, அனுஷ்டிப்பது எல்லாமே தர்மம். ஞானமும் ஶக்தியும் உள்ளவர்கள் பக்தி யோகம் செய்ய அதிகாரிகள். த்யானம் செய்ய அஶக்தர்கள் ப்ரபத்திக்கு அதிகாரிகள். பக்தியோகத்துக்கு ஆயாசமதிகம்.(கடினமானது) ப்ரபத்திக்கு விஶ்வாஸம் அதிகம். ஆனால் அடையப் போகும் அபரிமித ஆனந்த பலன் கடின உபாயமான பக்தியோகத்துக்கும், லகு உபாயமான ப்ரபத்திக்கும் துல்யம். இது அதிகார பேத ரீதியில் பகவத் கருணையால் ஏற்படுகிறது. ப்ரபன்னன் மஹாவிஶ்வாஸத்தில் குறைவு ஏற்படாது பார்த்துக்கொள்ள வேண்டும். ஸர்வஞனிடம் உயர்ந்த விஶ்வாஸம் வேண்டும் "கலம் எள்ளுக்கட்டுப் போய் கலம் எண்ணெயான கதைபோல"
விஶ்வாஸத்தின் சீர்மை ஆயாஸத்தை விட அதிகம்.
பக்தி நிஷ்டனுக்கு வர்ணத்தடை உண்டு. காலவிளம்
த்தை பொறுத்துக்கொள்வான். பக்தியோகம் செய்யமுடியாத சோகமுள்ளவன் ப்ரபத்திக்கு அதிகாரியாகிறான். ஆக 31வித்யைகளும் ஒரு ராசியாகவும்
ஶரணாகதி ஒரு ராசியாகவும் காட்டப்பட்டுள்ளது.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka -18:

ध्रृवमधिकृतिभेदाद्कर्मवत्रङ्गशायिन् 
फलति फलमनेकं त्वत्पदे भक्तिरेका । 
शरणवरणवाणी सर्वहेतुस्तथाऽसौ 
कृपणभजननिष्ठा बुद्धिदौर्बल्यकाष्ठा ॥ १८॥

ப்ரபத்தி எல்லாம் பலன்களையும் அளிக்க வல்லது என்பது இதில் காட்டப்பட்டுள்ளது.

ஶரணாகதி எல்லாப்பலனையும் அளிக்கவல்லது என்று புரிந்துகொள்ள மிகக் கடினமான விஷயமாகும். ஆக இதில் சந்தேகம் வருவது ஸஹஜம். திருவாய் மொழி ஸேவிப்பதும், பாதுகையையைத் தலையில் தரிப்பததும் காலக்ரமேண மோக்ஷத்தில் மூட்டி விடும். ஸ்வாமி ஶரணாகதியின் பெருமையை ந்யாஸ தஶகத்தில் உபதேசித்து , சமாதானங்களை ந்யாஸ திலகத்தில் விளக்கி, சந்தேகங்களை தர்க்க ரீதியில் நிக்ஷேப ரக்ஷா மூலம் நிவர்த்திக்கிறார்.
  • எப்படி யாகாதிகள் கோரின பலனை அளிக்கின்றதோ, அதேபோல் ஶரணாகதியும் கோரின மோக்ஷ பலனைத்தரவல்லது. (ஶரணவரண வாணீ ஸர்வ ஹேது:. )
  • இதனைத் தெளியாது ஞான, ஶக்தியற்ற சேதனன் ப்ரபத்தியில் நம்பிக்கை குறைவால் பக்தியோகதக் கைகொள்வது அவனது அறியாமையின் உச்ச நிலையே ஆகும். (க்ருபண பஜனநிஷ்ட்டா புத்தி தௌர்பல்ய காஷ்ட்டா)
ஆக பக்தியோகம் செய்யத் தகுதியற்றவன் எல்லாம் பலன்களையும் அளிக்க வல்ல ப்ரபத்தியைச் செய்வதே சரியானதாகும்.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka -19:

कर्तव्यं सकृदेव हन्त कलुषं सर्वं ततो नश्यति 
ब्रह्मेशादिसुदुर्लभं पदमपि प्राप्यं मया द्रागिति । विश्वासप्रतिबन्धिचिन्तनमिदं पर्यस्यति न्यस्यतां 
रङ्गाधीश रमापतित्वसुभगं नारायणत्वं तव ॥ १९॥

ப்ரபத்தியில் வரும் சந்தேகங்களும் நிவர்த்திகளும்
இதில் விவரிக்கப் பட்டுள்ளன.


  • கர்த்தவ்யம்--- பிராட்டியை புருஷாகாரமாய்க் கொண்டு செய்யவேண்டிய உபாயம் ஶரணாகதி.
  • ஸக்ருதேவ--- இதனை ஒரே ஒருமுறை செய்தல் வேண்டும்.
  • ஹந்த கலுஷம்ஸர்வம் ததோ
  • நஶ்யதி---- என்ன ஆச்சர்யம்!செய்த க்ஷணத்தில் ஸஞ்சித பாபங்களனைத்தும் அழிந்து போகின்றன.
  • ப்ரம்ஹேஸாதி ஸுதுர்லபம் பதமபி மயா த்ராகிதி---- ப்ரம்ஹா சிவன் அடையமுடியாது மோக்ஷ ஸ்தானம் விரைவில் ப்ரபன்னனுக்குக் கிடைக்கிறது.
  • ரமாபதித்வ ஸுபகம் நாராயணத்வம் தவ--- இது எங்கனே ஸாத்யம் எனில் ரமாபதியாகிய நாராயணன் இந்த ப்ரபத்தியின் முக்ய அங்கமான மஹாவிஸ்வாசத்தில் ஏற்படும் தடைகளை அழிப்பதால்.
ப்ரபன்னன் நாராயண ஶப்த மஹிமையைப் புரிந்து உணரவேண்டும். "தரம்பாராதே கொடுக்குமே" என்பதாலும் "சடைமுடியன் சதுர்முகன்என்று---- இணையடிகள் அடைந்தேனே" என்ற அடைக்கலப் பத்து பாசுரத்தாலும் இதனை ஸ்வாமி விளக்குகிறார்.
எம்பெருமானின் அளவற்ற நிர்ஹேதுக க்ருபையினாலும், ஸ்வாதந்த்ரியத்தாலும், ஸர்வேஶ்வரனாகையாலே இந்த பரம புருஷார்த்தத்தை ப்ரபன்னனுக்கு கால விளம்பமின்றி உடனே தருகிறான் (த்ராகிதி)

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka -20:

धीकर्मभक्तिरहितस्य कदाऽप्यशक्त्या 
रङ्गेश भावकलुषप्रणतिद्वयोक्तेः । 
मन्ये बलं प्रबलदुष्कृतशालिनो मे 
त्वन्मूलदेशिककटाक्षनिपातमाद्यम् ॥ २०॥

ஆசார்ய கடாக்ஷத்தின் சிறப்பைப் சொல்லும் ஶ்லோகம் இது.

  • ரங்கேஶா! தீகர்ம-------ஶக்த்யா----கர்ம ஞான பக்தி யோகம் செய்யும் ‌ ஶக்தி எனக்கு எப்போதுமில்லை.
  • பாவகலுஷ---த்வயோக்தே---மனக்களங்கத்துடன் கூடிய த்வய உச்சாடனம் செய்கின்ற
  • மன்யே பலம்-----மே--  ப்ரபலமான பாபஶாலியான எனக்கு
  • த்வன்மூல----நிபாத மாத்யம்---  உன்மூலம் கிடைத்த ஆசார்ய கடாக்ஷமே முக்யமாய் அமைந்தது.

யத்ரிச்சா ஸுஹ்ருதமாய் எம்பெருமான் கருணையால் ஆசார்யனை க்காட்டித்தர அவரது கடாக்ஷமே பற்றுக் கோடாயிருந்து மோக்ஷம் வரை அழைத்துச் செல்கிறது.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
(to be continued...)

Monday, February 13, 2023

ந்யாஸ த்ரயீ - Part 6 - ந்யாஸ திலகம்

ந்யாஸ திலகம்

திருமலையப்பன் க்ருபையால் திரு அவதாரம் செய்து பேரருளாளனால் வளர்க்கப்பட்டு திருவரங்கநாதனால் போஷிக்கப்ட்டவர் நம் ஸ்வாமி தேஶிகன். ப்ரதம ஆசார்யனாகிய நம்பெருமாளாலே "வேதாந்தாசார்யன்" என்று பிருதமளிக்கப்பட்டவர். தாம் உருவாக்கிய உபநிஷத் அர்த்தங்களை ப்ரசாரம் செய்ய தக்க பாத்ரமாகத் தேர்ந்தெடுத்த ஸ்வாமி தேஶிகனிடம் தன் பிருதத்தை அளித்துகந்த அரங்கன் இனிவரும் தலைமுறைக்கு அவரையே அவதார புருஷனாக்கினார். வ்யாஸரை "வேதாசார்யன்" என்றழைத்து புராணங்களை உருவாக்கச் செய்ததுபோல வேதாந்த சாஸ்த்ரங்களை அருளச் செய்ய
எம்பெருமான், ஸ்வாமி தேஶிகனை நியமித்தார். பகவத்
ராமானுஜர், ஸ்வாமி தேஶிகன் போன்றோர்களை வளர்த்து நம் ஸம்ப்ரதாயத்தை நிலைப்படுத்திய க்ஷேத்ரம் ஸ்ரீரங்கம். அரங்கன் செய்த லீலைகள் மூலம் விளைந்த ஸ்தோத்ரமே "ந்யாஸ திலகம்". ஸ்ரீபாஷ்யம், ஸ்தோத்ர ரத்னம் ஆகிவற்றுள் அடங்கிய விஷயச் சுருக்கமாக இது அமைந்துள்ளது. 
வரதனைப் போற்றுவது ந்யாஸதஶகம். 
முழுதும் ஶாஸ்த்ரார்த்தமானது ந்யாஸ விம்ஶதி. 
தன்விஷயமாய் ந்யாஸதிலகத்தை உகந்தான் அரங்கன்.

'திலகம்' என்பது வேதத்தில் சொல்லப்பட்ட ஒரு வஶீகரண 'த்ரவ்யம்'. அரங்கனே நம்மை வஶீகரிக்க ஒரு கஸ்தூரி திலகம் சாற்றிக்கொண்டுள்ளான்.
கஸ்தூரி ரங்கனாகிய இவன் தன் பக்தர்களும் இந்த ஸ்தோத்ர திலகத்தால் தன்னை வஶீகரிக்க இந்த ந்யாஸ திலகத்தை எழுதும்படி தன் திருவுள்ளத்தைத் தெரிவித்தான். இத்திலகமிட்டு வருவோர்க்குத் தன் பர்யங்கத்தில் பங்களிக்கிறான் இந்த அரங்கன் என்பது திண்ணம்.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka -1:

गुरुभ्यस्तद्गुरुभ्यश्च नमोवाकमधीमहे । 
वृणीमहे च तत्राद्यौ दम्पती जगतां पती ॥ १॥

குருபரம்பரைக்கு வந்தனம்.
ஆசார்யனை முன்னிட்டுக்கொண்டு செய்வதே ஶரணாகதி.அந்த ஆசார்யனை ஆசார்ய பரம்பரையை நம: என்ற சொல்லால் வேதாத்யேனம் செய்வது போல் பலமுறை சேவிக்க வேண்டும்.ஆசார்ய தனியனைஸேவிப்பது தர்மம். இச்செயல்ஞானத்தைத் தருவதுடன் மோக்ஷம் வரை கொண்டு சேர்க்கும். இத்தனியனை மறக்கலாகாது. உலகுக்கெல்லாம்
ஆதி குருவாயும், தாய் தந்தையராயுமுள்ள ஸ்ரீய:பதியை ஸேவிக்கிறேன் என்கிறார் ஸ்வாமி.
குருப்யஶ்ச...அதீமஹே- நம் ஆசார்யர்களையும், அவரது ஆசார்யர்களையும் வணங்குகிறோம்.
வ்ருணீமஹே....ஜகதாம்பதி- அந்த ஆசார்ய பரம்பரையில் முதல்வர்களாயும், உலகுக்கே தாய் தந்தையராயும் உள்ள திவ்ய தம்பதியை உபாயமாயும், பலனாயும் வரிக்கிறோம்.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka -2:

प्रायः प्रपदने पुंसां पौनःपुन्यं निवारयन् । 
हस्तः श्रीरङ्गभर्तुर्मामव्यादभय मुद्रितः ॥ २॥

திருவரங்கனின் அபய முத்ரையின் அர்த்தம் சொல்லப்படுகிறது.

கத்யத்ரயம், ஸ்தோத்ர ரத்னம் போல, தான் செய்த ஶரணாகதியை ஸ்தோத்ரமாய் அருளியுள்ளார் ஸ்வாமி. நாம் செய்த ஶரணாகதிக்குப் பதில் சொல்லுமாப்போல அரங்கன் தன் அபயமுத்ரையைக்காட்டி மோக்ஷமளிப்பதாய்ச் சொல்கிறான். அபயஹஸ்தம்,
பாதுகையுடன் கூடிய திருவடி இரண்டும் ஶ்ரேஷ்டம்.பரதமுனிவரின் நாட்யஸாஸ்த்ர முத்ரைபோல பாஞ்சராத்ர ஸாஸ்த்ர ஆகமப்படி நம் அஞ்சலிமுத்ரைக்குப் பெருமாளின் அபய முத்ரை பதிலாகிறது.மற்றொரு பதில் "போதும்" என்பதாகும். அதாவது ஒருமுறை செய்த ஶரணாகதி போதும் திரும்பத் திரும்ப செய்ய வேண்டாம் என்பதாகும்.
இந்த தாத்பர்யம் "த்வதா ஶ்ருதானாம்........த்வதீய கம்பீர மனோனு ஸாரிண:" (ஸ்தோத்ரரத்னம் 20)
"உமதடிகள் அடைகின்றேன் என்று ஒருகால்உரைத்தவரை.......அடியிணைகளடைந்தேனே" (அடைக்கலப்பத்து) மூலம் காட்டப்படுகிறது.

திரும்பத் திரும்ப ப்ரபத்திசெய்து 
சேதனனின் ஸேஷத்வ ஸ்வரூபம், எம்பெருமானின் ஔதார்யகுணம், ப்ரபத்தியின் ப்ரபாவம் இவற்றுக்குக் குறைவு ஏற்படுத்தக் கூடாது என்ற விளக்கம் ஸ்வாமியின் திருக்குமாரரின் வ்யாக்யானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ப்ராய: ப்ரபநே..நிவாரயன்--- சேதனர்கள் பலமுறை ப்ரபத்தி
செய்தலை மறுப்பதாய் உள்ள
ஹஸ்தே...அபயமுத்ரிதா---அரங்கனின் அபயஹஸ்தம் அடியேனைக் காக்கவேணும்.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka 3:

अनादेर्निःसीम्नो दुरितजलधेर्यन्निरूपमं 
विदुः प्रायश्चित्तं यदुरघुधुरीणाशयविदः । 
तदारम्भे तस्या गिरमवदधानेन मनसा 
प्रपद्ये तामेकां श्रियमखिलनाथस्य महिषीम् ॥ ३॥

பிராட்டியின் புருஷாகாரம் பற்றியது.

அநாதியாக நாம் தொடரும் இந்த ஸம்ஸாரம் நீங்கச் செய்ய வேண்டிய ப்ராயச்சித்தம் ப்ரபத்தி. இந்த அனுஷ்டானத்தின் முதற்படியாக தாயாரின் திருக்கல்யாண குணங்களை எண்ணி அவளிடம் ஶரணடைய வேணும். யதுகுல திலகனான கண்ணன் தன்னையே ஶரணடையும்படி கட்டளையிட்டுச்சொன்னான்.ரகுகுலதிலகனான ராமன் தன்னை ஶரணடைந்தோரைக் கைவிடேன் என்றான்.ஸீதாபிராட்டியின் கடாக்ஷத்தால் ஸுக்ரீவனுக்கு ராமஸஹ்யம் கிடைத்து ஶரணாகதிபலித்தது ஆனால் வாலிக்கு தாயார் கடாக்ஷம் கிடைக்கவில்லை. மோக்ஷார்த்த ப்ரபத்திக்குத் தாயாரின் புருஷாகாரம் முக்யம்.
  • அநாதேர்...நிருபமம்---அநாதிகாலமாக இந்த ஸம்ஸாரக்கடலைக் கடக்க ஒப்பற்ற
  • விது:ப்ராயச்சித்தம்...வித:----ப்ராயச்சித்தமாக ராமனும் க்ருஷ்ணனும் சொன்னதாக அறிகின்றார்களோ
  • ததாரம்பே...மனஸா---அந்த ப்ரபத்தியைச்செய்ய ஆரம்பிக்கும்போது பிராட்டியின் புருஷாகாரத்தை உள்ளத்தே நினைத்து
  • ப்ரபத்யே...மஹிஷீ----ஸரவேஶ்வரனின் பட்டமஹிஷியான பெரியபிராட்டியை ஶரணடைகிறேன்.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka 4:

महेन्द्राग्नाविष्णुप्रभृतिषु महत्त्वप्रभृतिवत् 
प्रपत्तव्ये तत्त्वे परिणमितवैशिष्ट्यविभवाम् । 
अधृष्यत्वं धूत्वा कमितुरभिगम्यत्वजननीं 
श्रियं शीतापाङ्गामहमशरणो यामि शरणम् ॥ ४॥

தாயார் புருஷாகாரமாயும் உபாயமாயும் இருத்தல்.

தாயார் எம்பெருமானிடம் சேதனர்கள் அணுக உபகரிக்கிறாள். உபாயம், உபேயம், புருஷாகாரம் என்ற மூன்று ஆகாரங்களையும் செய்யும் தாயாரை "ஆகாரத்ரய ஸம்பந்நாம் அரவிந்த நிவாஸினீம்" என்று கொண்டாடுகிறார் ஆளவந்தார்.
பெருமாளும் தாயாருமாகச் சேர்ந்துள்ள நிலையில் அவர்களை ஏகோபாயமாய்க்கொண்டு ப்ரபத்தி செய்கிறேன் என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.
இந்நிலையை விளக்க இரு உதாரணங்கள் தருகிறார். மஹேந்த்ரனைக் குறித்த யாகத்தில் மஹத்வ குணத்துடன் கூடிய இந்த்ரனுக்கு யாகம். 
அதேபோல் அக்னி- விஷ்ணு யாகத்தில் இருவருக்கும் சேர்த்தே ஹவிஸ் அளிக்கப்படுகிறது. தாயார் அத்ருஷ்யத்தைப் போக்கி (not approachable) அபிகம்யத்தை (approachable)அளிக்கிறாள் .
ஆக தன் குளிர்ந்த கடாக்ஷத்தால் எம்பெருமானை அணுகச் சுலபனாக்கி இருவரின் ஸங்கல்பத்தால் மோக்ஷத்தைத் தருகிறார்கள். "எம்பெருமானைச் சொன்ன இடமெல்லாம் பிராட்டியையும் சொல்லியாயிற்று" என்று பாஷ்யகாரரும் குறிப்பிட்டுள்ளார்.

  • மஹேந்த்ராக்னா...ப்ரப்ருதிவது--- பெருமை மிக்க இந்த்ரன், அக்னி விஷ்ணு ஆகியோருக்கு சேர்த்தே ஹவிஸ் அளிக்கப்படுகிறது.
  • ப்ரபத்தவ்யே...விபவாம்--ப்ரபத்திக்கு இலக்கான எம்பெருமானுடன் எப்போதும் கூடியிருப்பவள் பிராட்டி
  • அத்ருஷ்யத்வம்..ஜனனீம்---அணுக முடியாத எம்பெருமானை அணுகும் படி செய்பவளும்
  • ஶ்ரியம்...ஶரணம்---குளிர்ந்த கடாக்ஷமும் உடைய பெரிய பிராட்டியை புகலற்ற நான் பற்றுகின்றேன்.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka 5:

स्वतःसिद्ध श्रीमानमितगुणभूमा करुणया 
विधाय ब्रह्मादीन्वितरति निजादेशमपि यः । 
प्रपत्त्या साक्षाद्वा भजन शिरसा वाऽपि सुलभं 
मुमुक्षुर्देवेशं तमहमधिगच्छामि शरणम् ॥ ५॥

எம்பெருமானைச் சரணடைதல்.

ப்ரும்ஹா முதலானவர்களை ஶ்ருஷ்டித்தவன் எம்பெருமான். ஆனால் அவன் யாராலும் உண்டாக்கப்படாதவன். நித்யமானவன் ஞானமளிப்பவன். எண்ணற்ற கல்யாண குணங்களை யுடையவன். ஸர்வ காரணத்தவன்.
திவ்ய மங்கள விக்ரஹத்துடன் கூடிய அவன் திருவடியில் மோக்ஷவிரும்பியாகிய நான் ஶரணடைகின்றேன் என்கிறார் ஸ்வாமி.
  • ஸ்வதஸ்ஸித்த...கருணயா--- யாராலும் உண்டாக்கப்படாதவனும், எல்லையில்லா கல்யாண குணங்கள் உள்ளவனும், என்றும் பிராட்டியை பிரியாதவனுமாகிய எம்பெருமான் தன் கருணையால்.
  • விதாய...நிஜதேஶாமபிய:---- பிரமன் முதலானோர்களைப் படைத்து தன்கட்டளையால் வேதத்தையும் உபதேசிக்கிறான்.
  • ப்ரபத்யா...ஸுலபம்---பக்தி /ப்ரபத்தி என்ற இருஉபாயங்களால் அடையக்கூடிய வனாக உள்ளான்.
  • முமுக்ஷு...ஶரணம்---அத்தகைய எம்பெருமானை மோக்ஷம் பெற விரும்பும் நான் அடைக்கலமாக அடைகிறேன்.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka 6:

वृन्दानि यः स्ववशयन्व्रजसुन्दरीणाम् 
वृन्दावनान्तरभुवां सुलभो बभूव । 
श्रीमानशेषजनसङ्ग्रहणाय शेते 
रङ्गे भुजङ्गशयने स महाभुजङ्गः ॥ ६॥

கண்ணனே அரங்கனாய் எழுந்தருளியிருத்தல்.

எம்பெருமானின் ஸௌலப்யம், ஸௌஸீல்யம், வாத்ஸல்யம் ஆகிய குணங்களுள் ஸௌலப்யம் மிகப்ரகாசித்தது க்ருஷ்ணாவதாரத்தில்தான். ஆயர்களுடன் தோளொடு தோளிட்டதும், ஆயர்சிறுமியருடன் திருக்குரவை கோத்ததும் அவனது ஸௌலப்யத்தினாலேயே .
பரத்வம்மறைக்கப்பட்டது. அறிவொன்றில்லா ஆய்க்குலத்தைத் தன் ஸௌஸீல்யத்தால் ஆகர்ஷித்தான். 
ப்ருந்தா+வனம் - நெருஞ்சிமுள் காட்டைத் தன் திருவடி ஸ்பர்ஸத்தால் துளஸீ வனமாக்கினான். 
ப்ருந்த+அவனம் - கோபகோபியர் கூட்டங்களை ரக்ஷித்தான். "தோன்றக்கண் காணவந்து" என்கிறார் ஆழ்வார்.
"பரத்வம் தெரிந்து கெட்டானைக்காட்டிலும் (நரதமர்) ஸௌலப்யம் அறிந்து அணுகிய இடைச்சிகள் சிறந்தவர்கள்".

யுகாந்த்ரமாக எத்தனையோ கூட்டங்களை ஸ்வஸமாக்கிய புஜங்கனாகிய எம்பெருமான் மஹாபுஜங்கத்தில் பள்ளிகொண்டுள்ளான், "ஸம்ஸாரக்கிழங்கெடுத்தாரல்லது
எழுந்திரேன்", என்ற பராஸரர் கூற்றுப்படி. எல்லோரையும் வஸீகரிக்கும்படி ஓர் ஸம்ப்ரதாய சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளான் இத் திருவரங்கத்தப்பன்.
  • ப்ருந்தானி...ஸுந்தரீணம், ப்ருந்தாவனாந்தர...பபூவ--- ப்ருந்தாவனத்தில் அழகிய கோபிமார்களைத் தன்வஸமாக்கி எளியனானான்.
  • ஸ்ரீ மான்...ஶேதே, ரங்கே...மஹாபுஜங்க:---அந்த கண்ணனே மக்களை நல்வழிப்படுத்த இந்த அரங்கத்தில் ஆதிசேஷனில் பள்ளி கொண்டுள்ளான்.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka 7:

रङ्गास्तीर्णभुजङ्गपुङ्गववपुःपर्यङ्कवर्यं गतौ 
सर्गस्थित्यवसानकेलिरसिकौ तौ दम्पती नः पती । 
नाभीपङ्कजशायिनः श्रुतिसुखैरन्योन्यबद्धस्मितौ 
डिम्भस्याम्बुजसम्भवस्य वचनैरोन्तत्सदित्यादिभिः ॥ ७॥

எம்பெருமானின் பரத்துவத்தைப் சொல்வது.

திருவரங்கத்தில் பரந்த ஆதிஸேஷ பர்யங்கத்தில் அமர்ந்து ஸ்ருஷ்ட்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் என்னும் லீலாவினோதங்களைச்
செய்து ரஸிக்கும் திவ்ய தம்பதியரைச் சரணடைகிறார் ஸ்வாமி. எம்பெருமானின் நாபீகமலத்தில் கிடக்கும் ப்ரும்ஹா வாகிய தன் குழந்தையின் "ஓம் தத் ஸத்" என்ற வசனத்தைக் கேட்டுப் புன்னகைத்து ரஸிக்கும் நீரே எனக்கும் ஸ்வாமி என்கிறார்.
  • ரங்காஸ்தீர்ண...கதௌ---திருவரங்கத்தில் ஆதிஸேஷ பர்யங்கத்தில் ஸயனித்தபடி
  • ஸர்க்க..பதீ--ஶ்ருஷ்டி ,ஸ்திதி, லயம் ஆகியவற்றைச் செய்து ரஸிப்பவரும்
  • நாபீபங்கஜ...ஸ்மிதௌ, டிம்பஸ்யாம்புஜ...ஸதித்யாதிபி: ---நாபீகமலத்தில் அமர்ந்துள்ள ப்ரும்ஹாவாகிய தன்குழந்தையின் "ஓம் தத் ஸத்" என்ற இனிய சொற்களைக் கேட்டு புன் சிரிப்புடன்ஆனந்திக்கும் அந்த திவ்ய தம்பதியரே நம் தலைவராவார்.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka 8:

घनकरुणारसौघभरितां परितापहरां 
नयनमहश्छटां मयि तरङ्गय रङ्गपते । 
दुरितहुताशनस्फुरितदुर्दमदुःख मषी- 
मलिनितविश्वसौधदुरपह्नववर्णसुधाम् ॥ ८॥

அரங்கனின் கடாக்ஷத்தை ப்ரார்த்தித்தல்.

ஸ்வாமித்வமும், ஸௌஸீல்யமும் ஒன்றை மற்றொன்று சார்ந்திருக்க வேணும். ஸ்வாமித்வம் மிக்க கௌரவமானது. ஸௌஸீல்யம் சுலபத்வமுடையது. உன் பரத்வம் தான் என்னைக்கடைத்தேற்றும் ஆனால் அதற்கு உன் எல்லையற்ற கருணை (ஸௌஸீல்யம்) துணைநிற்க வேணும்.
இதுகாறும் நான்செய்த அனந்தமான பாபங்களை அனுபவித்தோ,
ப்ராயச்சித்தத்தாலோ போக்க முடியாது. இந்த லோகமாகிய பவனத்தில் அக்னியின் புகையால் படிந்த அழுக்கும் புகையும் போக்கவல்லது கார்மேகம் வர்ஷிக்கும் மழையால் மட்டுமே. அதுபோல இந்தஸம்ஸாரத்தில் உழன்று நான் செய்த பாபங்களை உன் கடாக்ஷம் ஒன்றே போக்கி தூய்மை படுத்தும் வர்ண ஸுதா (வண்ணப்பூச்சு) வாக இருக்கட்டும் என்கிறார்.
இதனையே "போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்" என்கிறாள் ஆண்டாள்.
  • கந கருணா....பரிதாபஹராம்--- உனது கருணா ப்ரவாகம் துன்பங்களைப் போக்குவதாக உள்ளது.
  • துரித ஹுதாஶன...துக்க மஷீ--- பாவங்களாகிய தீயால் தோன்றிய புகையால் மாச டைந்த உலகமாகிய மாடத்தை
  • மலிநித...வர்ணஸுதாம்--- உனது கருணா கடாக்ஷம் என்ற வர்ணப்பூச்சால் மட்டுமே சரிசெய்ய முடியும். அந்த கருணை என்மீதும் விழவேண்டும்.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka 9:

दुर्मोचोद्भटकर्मकोटिनिबिडोऽप्यादेशवश्यः कृतः 
बाह्मैर्नैव विमोहितोऽस्मि कुद्दशां पक्षैर्न विक्षोभितः । 
यो माहानसिको महान्यतिपतेर्नीतश्च तत्पौत्रजान् 
आचार्यानिति रङ्गधुर्य मयि ते स्वल्पावशिष्टो भरः ॥ ९॥

இதுவரை அரங்கன் செய்த உதவிகளின் பட்டியல்.

மொய்த்த வல்வினையுள் நின்ற என்னை எத்தனையோ ஜென்மங்களைத் தாண்டச் செய்து இம்மனிதப்பிறவி தந்தாய் அஞாத ஸுஹ்ருதத்தாலே.
இப்பிறவியில் நாஸ்திக மயக்கம் ஏற்பட்டு பிற மதங்களினால் மோஹிக்காது காப்பாற்றினாய்.
குத்ருஷ்ட்டி பக்ஷத்தால் கலக்கம் வராமல் தடுத்தாட்கொண்டாய். அனைத்துக்கும் மேலாக எதிராஜரின் மடைப்பள்ளி ஆச்சானின் பௌத்ரனின் புத்ரனாகிய அப்புள்ளார் என்ற ஆசார்ய சம்பத்தத்தை எனக்களித்து ஶரணாகதி செய்யவைத்த ரங்கபதே! இத்தனை பாடுபட்டு இதுவரை கொண்டு நிறுத்திய பின் மோக்ஷமளிப்பது உனக்கு சுலபமே என்று கார்பண்யத்தை முன்னிட்டுக்கொண்டு சொல்கிறார் ஸ்வாமி.

  • துர்மோச்சோத்பட...க்ருத:----தீர்க்கமுடியாத எண்ணற்ற கர்ம வினைகளால் பீடித்திருந்தாலும் உன் கட்டளைக்குப் பணிந்திருந்தேன்.
  • பாஹ்யைர்....விக்ஷோபித:----வேதத்துக்கு மாறான மதங்களால் கவரப்டாதவனாயும், குத்ருஷ்டிகளினால் பாதிக்கப்படாதவனாயுமிருந்தேன்.
  • யோமாநாஹஸிகோ...பௌத்ரஜான்----- ஸ்ரீராமானுஜருக்கு மடப்பள்ளி கைங்கர்யம் செய்தவரின் கொள்ளுப்பேரனாகிய
  • ஆசார்யா....பர---அப்புள்ளார் என்ற ஆசார்யனிடம் சேர்க்கப்பட்டதால் என்விஷயத்தில் உன் பொறுப்பு சிறிதே உள்ளது.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka 10:

आर्तेष्वाशुफला तदन्यविषयेऽप्युच्छिन्नदेहान्तरा 
वह्न्यादेरनपेक्षणात्तनुभृतां सत्यादिवद्व्यापिनी । 
श्रीरङ्गेश्वर यावदात्मनियतत्वत्पारतन्त्रयोचिता 
त्वय्येव त्वदुपायधीरपिहितस्वोपायभावाऽस्तु मे ॥ १०॥

அதற்கே யுள்ள விஸேஷத்தால் ப்ரபத்தியே மோக்ஷ உபாயமாய் அமையவேணும் என்கிறார் ஸ்வாமி தேஶிகன் இந்த ஶ்லோகத்தில்.

ப்ரபத்தி எல்லா காலத்துக்கும் பொருந்திய ப்ரபாவம் நிறைந்த அனுஷ்டானமாகும். பகவானை அடைய அவனே உபாயம் என்பதே இப்ரபத்தியின் பெருமை. இது மோக்ஷத்துக்கு ஓர் வ்யாஜமாயிருந்துகொண்டு உபாயத் தன்மையை மறைத்து வைத்துள்ளது. இதனுள்ளடங்கிய ப்ரபாவங்களாவன.
  1. ஆர்த்தேஷு ஆஶுபலா --ஆர்த்தர்களுக்கு உடனே பலன் தர வல்லது.
  2. ததன்ய....தேஹாந்தர---வைராக்யம் குறைந்த த்ருப்தர்களுக்கு அடுத்தபிறவி இல்லாது செய்கிறது.
  3. வஹ்ந்யதேரனபேக்ஷணாத்---பக்தியோகத்துக்கு அங்கமாய்ச் செய்வது போல் யாகம்,தானம் முதலியனசெய்ய வேண்டாம்.
  4. ஸத்யாதி வத் வ்யாபிநீம்---அந்தணர் முதல் அந்தியர் வரையுள்ள யாரும் இதை அனுஷ்டிக்கலாம்.

"ஸத்யம் வத" என்று வேதம் சொல்லும் பொது தர்மம் போல இதுவும் வேதமே சொல்லும் பொதுதர்மம். பக்தி யோகம் வைதிக தர்மம்.
ஆக ரங்கனே! உனக்கு பரதந்த்ரன் என்று சொல்லும்
எனக்கு இந்த ஶரணாகதி ஏற்றது என்கிறார் ஸ்வாமி.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
 (to be continued...)