Friday, September 23, 2022

Aacharya Vaibhavam!!




ஸ்ரீஆதிவண் ஶடகோபன் தொடங்கி இன்றளவும் ஸ்ரீ அஹோபில மட ஸ்ரீஸந்நிதி ஆஸ்தானத்தை அலங்கரித்து ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்தாபித்த விஸிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை செம்மையுடன் ப்ரவர்த்தி செய்துவரும் அழகிய சிங்கர்களின் தனியன்களையும் விவரணங்களையும் ஸ்ரீ புரிசை உ.வே க்ருஷ்ணமாச்சாரியார் அன்று ஓலையிலிட்டதை இன்று நம் ஸ்ரீ உ.வே ஏ.பி.என் ஸ்வாமி ஒலியிலிட்டுள்ளார். 
பரம க்ருபையுடன் இந்த நல்லாசானும் அவரது அந்தேவாஸியான ஸிஷ்யரும் நமக்காச்செய்தளித்துள்ள இவ் அரியஆசார்ய தனியன்களை ஸேவித்து அவர்களது ப்ருந்தாவனங்களைச் சென்று தெண்டனிட்டு அம்மாஹான்களின் க்ருபைக்குப் பாத்ரமாகி உய்வோமாக.

🌷🌷🌷🌹🌹🌹🌷🌷🌷🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌷🌷🌷🌹🌹🌹🌹

1. ஸ்ரீமதே ஸ்ரீஆதிவண் ஶடகோப யதீந்த்ர மஹாதேஶிகாய நம:
"ப்ரபத்யே நிரவத்யானாம் நிஷத்யாம் குணஸம்பதாம்
ஶரணம் பவபீதானாம் ஶடகோப முனீஶ்வரம்".

திரு அவதாரம் - புரட்டாசி கேட்டை
ஆஸ்தான ஸ்வீகாரம் செப் 1319.
ஆஸ்தான காலம் 59 வரு 11மா.
ப்ருந்தாவனம் -மேல்கோட்டை.

🌷🌷🌹🌹🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌹🌹🌷🌷

2. ஸ்ரீமதே ஸ்ரீவண்ஶடகோப ஸ்ரீமந்நாராயண யதீந்த்ர மஹா தேஶிகாய நம:
"ஸ்ரீஶடாரி யதீஶான பதபங்கஜ ஷட் பதம்
ஸ்ரீமந் நாராயண முனிம் ஶ்ரயே ஸ்ரீபாஷ்ய தேஶிகம்".


திரு அவதாரம் - ஆவணி கேட்டை.
ஆஸ்தான ஸ்வீகாரம் 1458.
ஆஸ்தான காலம் 14வரு 11மா.
ப்ருந்தாவனம் -மேல்கோட்டை.
(60 க்ரந்தங்கள் ஸாதித்துள்ளார்)

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

3. ஸ்ரீமதே ஸ்ரீவண்ஶடகோப ஸ்ரீபராங்குஶ யதீந்த்ர மஹாதேஶிகாய நம:
"ஸ்ரீமந்நாராயணமுனே: பதபங்கஜ ஷட் பதம்
பரார்த்ய குண ஸம்பந்நம் பராங்கு ஶம் பஜே".


திருஅவதாரம் - தை திருவோணம்.
ஆஸ்தான ஸ்வீகாரம் 1470
ஆஸ்தான காலம் 15வரு 10மா
ப்ருந்தாவனம்- ஸ்ரீமுஷ்ணம்

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

4. ஸ்ரீமதே ஸ்ரீவண்ஶடகோபஸ்ரீஸ்ரீநிவாஸ யதீந்த்ர மஹாதேஶிகாய நம:
"ஸ்ரீபராங்குஶ யோகீந்த்ர ஶரணாம்புஜ ஷட் பதம்
ஸ்ரீநிவாஸமுனிம் வந்தே ஸ்ரீபாஷ்யாம்ருத ஸாகரம்"


திருஅவதாரம் - மார்கழி சித்ரை
ஆஸ்தான ஸ்வீகாரம்1485
ஆஸ்தான காலம் 8வரு3மா
ப்ருந்தாவனம் -சிங்கிரி கோயில்.

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

5. ஸ்ரீமதே ஸ்ரீவண் ஶடகோபஸஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ர ஸ்ரீஶடகோப யதீந்த்ர மஹா தேஶிகாய நம:

"ஸ்ரீந்ருஸிம்ஹ தயாபாத்ரம் பரவாதி கஜாங்குஶம்
ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ராயம் ஶடகோபமுனிம் பஜே".


திரு அவதாரம் -கார்த்திகையில் கார்த்திகை.
ஆஸ்தான ஸ்வீகாரம்-1493
ஆஸ்தான காலம் - 5வரு 8மா
ப்ருந்தாவனம்- க்ருஷ்ணா நதிதீரம.

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

6. ஸ்ரீமதே ஸ்ரீவண்ஶடகோப ஸ்ரீபராங்குஶ யதீந்த்ர மஹாதேஶிகாய நம:

"ஸ்ரீமத் ஶடாரி முனிபாத ஸரோஜ ஹம்ஸம்
ஸ்ரீமத் பராங்குஶ தபோதன லப்த போதம்
ஸ்ரீந்ருஸிம்ஹ வரதார்ய தயா வலம்பம்
ஸ்ரீமத் பராங்குஶமுனிம் ப்ரணதோஸ்மி நித்யம்".


திரு அவதாரம் - தை பூரட்டாதி
ஆஸ்தான ஸ்வீகாரம் 1499
ஆஸ்தான காலம் - 11வரு 1 மா.
ப்ருந்தாவனம்-அஹோபிலம்.

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

7. ஸ்ரீமதே ஸ்ரீவண் ஶடகோப யதீந்த்ர மஹாதேஶிகாய நம:
"ஸ்ரீ பராங்குஶ யோகீந்த்ர சரணாம்புஜ ஶேகரம்
ஸமஸ்த ஶாஸ்த்ர பாரீணம் ஶடகோப முனிம் பஜே".


("ஶடலேகன லேகனானுகுண கவிதா துரந்த்ர கவிதார்க்கிக
கண்டீரவ:"--என்ற மிருகம் பெற்றவர். சிறந்த தார்க்கிகர். ஒரேசமயத்தில் 100 கவிதைகள் இயற்றும் வல்லமை பெற்றவர். வாஸந்திகா பரிணயம் எழுதியவர்.)

திரு அவதாரம்- வைகாசி விஶாகம்.
ஆஸ்தான ஸ்வீகாரம்-1522.
ஆஸ்தான காலம் - 9வரு 2மா.
ப்ருந்தாவனம்- ஸ்ரீரங்கம்

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼


8.ஸ்ரீமதே ஸ்ரீவண்ஶடகோப ஸ்ரீபராங்குஶ யதீந்த்ர மஹா தேஶிகாய நம:!!
"ஶடகோப யதிஶ்ரேஷ்ட பதபங்கஜ ஷட் பதம்
ஸர்வ ஶாஸ்த்ரார்த்த தத்வஞம் பராங்குஶமுனிம் பஜே".


திருஅவதாரம் -மார்கழி அஸ்வினி
ஆஸ்தான ஸ்வீகாரம்-1522.
ஆஸ்தான காலம்- 15வரு 9மா
ப்ருந்தாவனம்-ஸ்ரீரங்கம்.

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

9.ஸ்ரீமதே ஸ்ரீவண் ஶடகோப ஸ்ரீ நாராயண யதீந்த்ர மஹாதேஶிகாய நம:
"ஸ்ரீமன் ந்ருஸிம்ஹ வரத பராங்குஶ க்ருபாஶ்ரயம்
ஸ்ரீமந் நாராயண முனிம் வந்தே ஸ்ரீ பாஷ்ய தேஶிகம்"


திருஅவதாரம்- ஆனி திருவாதிரை.
ஆஸ்தான ஸ்வீகாரம்-1538.
ஆஸ்தான காலம்- 4வரு 6மா.
ப்ருந்தாவனம்-ஸ்ரீரங்கம்.

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

10. ஸ்ரீமதே ஸ்ரீவண் ஶடகோப ஸ்ரீஶடகோப யதீந்த்ர மஹா தேஶிகாய நம:
"வரதார்ய குரூத்தம்ஸ சரணாம்புஜ ஷட் பதம்.
ஶடகோப முனிம் வந்தே ஶடாரி ப்ரவணம் ஸதா"


திருஅவதாரம் - வைகாசி விஶாகம்
ஆஸ்தான ஸ்வீகாரம்-1542
ஆஸ்தானகாலம்- 17வரு
ப்ருந்தாவனம் - மேல்கோட்டை.

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

11.ஸ்ரீமதே ஸ்ரீவண்ஶடகோப ஸ்ரீ ஸ்ரீநிவாஸ யதீந்த்ர மஹாதேஶிகாய நம:
"ஸ்ரீபராங்குஶ ஶடாராதி பதாம்போஜைக தாரகம்
ஸ்ரீநிவாஸ முனிம் வந்தே மாத்ருஶாமபி தாரகம்".


திரு அவதாரம் - ஐப்பசி மூலம்.
ஆஸ்தான ஸ்வீகாரம்1559
ஆஸ்தான காலம்-38வரு9மா
ப்ருந்தாவனம்-ஸ்ரீரங்கம்.

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

12. ஸ்ரீமதே ஸ்ரீவண் ஶடகோப ஸ்ரீநாராயண யதீந்த்ர மஹா தேஶிகாய நம:
"ஸ்ரீமந்நாராயண யோகீந்த்ர ஸ்ரீநிவாஸ பதாஶ்ரயம்
ஸ்ரீமந் நாராயண முனிம் வந்தே வேதாந்த தேஶிகம்".


திருஅவதாரம் - புரட்டாசி உத்தரம்
ஆஸ்தான ஸ்வீகாரம் - 1598
ஆஸ்தான காலம்- 34வரு 5 மா
ப்ருந்தாவனம் - மேல்கோட்டை

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

13.ஸ்ரீமதே ஸ்ரீவண்ஶடகோப ஸ்ரீ வீர ராகவ யதீந்த்ர மஹா தேஶிகாய நம:
"ஸ்ரீமந் நாராயண முனே: பதபங்கஜ ஹம்ஸகம்
வீரராகவ யோகீந்த்ரம் வந்தே வர குணாகரம்"


திரு அவதாரம் - ஆனி உத்ராடம்.
ஆஸ்தான ஸ்வீகாரம் - 1632.
ஆஸ்தான காலம்- 44வரு 1மா.
ப்ருந்தாவனம் - ஸ்ரீரங்கம்.

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

14. ஸ்ரீமதே ஸ்ரீவண்ஶடகோப ஸ்ரீமந் நாராயண யதீந்த்ர மஹா தேஶிகாய நம:
" ஸ்ரீவீரராகவ முனே: வரிவஸ்யைக ஜீவனம்
ஸமாஶ்ரயேமஹி ஸ்ரீமந் நாராயண முனீஶ்வரம்".


திரு அவதாரம் - ஆடி உத்ராடம்.
ஆஸ்தான ஸ்வீகாரம்-1676.
ஆஸ்தான காலம்-9வரு10மா.
ப்ருந்தாவனம்-திருக்கண்டியூர்.

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

15. ஸ்ரீமதே ஸ்ரீவண்ஶடகோப ஸ்ரீகல்யாண வீரராகவ யதீந்த்ர மஹா தேஶிகாய நம:
"ஸ்ரீநாராயண யோகீந்த்ர பதாம் போஜைக ஜீவனம்
பஜே ஸ்ரீரங்க கல்யாண வீரராகவ யோகினே நம:"


திருஅவதாரம் - தை சித்ரை
ஆஸ்தான ஸ்வீகாரம் - 1686
ஆஸ்தான காலம் - 8 வரு 2 மா
ப்ருந்தாவனம் - காஞ்சி.

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

16.ஸ்ரீ மதே ஸ்ரீவண்ஶடகோப ஸ்ரீஶடகோப யதீந்த்ர மஹா தேஶிகாய நம:
"கல்யாண ராகவ முனே: க்ருபா பாத்ரம் தயாநிதிம்
ஸர்வ சாஸ்த்ர தத்வஞம் ஶடகோப புனிதம் பஜே"


திருஅவதாரம் - மார்கழி ம்ருகசீர்ஷம்.
ஆஸ்தான ஸ்வீகாரம்-1694
ஆஸ்தான காலம்-4,வரு.
ப்ருந்தாவனம் - திருக்குடந்தை.

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

17. ஸ்ரீமதே ஸ்ரீவண்ஶடகோப ஸ்ரீவீரராகவ வேதாந்த யதீந்த்ர மஹாதேஶிகாய நம:
"ஸ்ரீமந்நாராயண முநிம் ஸ்ரீஶடாரி யதாஶ்ரயம்
ஸ்ரீவீரராகவ முநிம் வந்தே வேதாந்த தேஶிகம்".


திரு அவதாரம் - புரட்டாசி சத்யம்.
ஆஸ்தான ஸ்வீகாரம்-1698.
ஆஸ்தான காலம்-35வரு7மா.
ப்ருந்தாவனம்-திருப்புட்குழி.
(இவர் 12 முறை ஸ்ரீபாஷ்யம், 15 முறை பகவத் விஷயம், 10 முறைகீதா பாஷ்யம், 10 முறை ரஹஸ்யத்ரய ஸாரம் ஸாதித்தவர்)

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

19. ஸ்ரீமதே ஸ்ரீவண்ஶடகோப ஸ்ரீ மந் நாராயண யதீந்த்ர மஹா தேஶிகாய நம:

"ஸ்ரீமந் நாராயணமுநே: பதபத்ம ஸமாஶ்ரயம்
ஸ்ரீநிவாஸ முநிம் வந்தே வேதாந்த த்வய தேஶிகம்".


திரு அவதாரம் - மாசி மகம்
ஆஸ்தான ஸ்வீகாரம்-1735.
ஆஸ்தான காலம்-10வரு7மா
ப்ருந்தாவனம்-புள்ளம்பூதங்குடி.
🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

20. ஸ்ரீமதே ஸ்ரீவண்ஶடகோப ஸ்ரீ வீரராகவ யதீந்த்ர மஹா தேஶிகாய நம:

"ஸ்ரீநிவாஸ முனிஶ்ரேஷ்டா: லப்த வேதாந்த ஸம்பதம்
ஸ்ரீவீரராகவமுனிம் கல்யாண குணமாஶ்ரயே".

திரு அவதாரம் - புரட்டாசி மூலம்
ஆஸ்தான ஸ்வீகாரம்-1746.
ஆஸ்தான காலம்-2 வரு 1மா.
ப்ருந்தாவனம் - வடதேசம்.

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

21. ஸ்ரீமதே ஸ்ரீவண் ஶடகோப ஸ்ரீ பராங்குஶ யதீந்த்ர மஹாதேஶிகாய நம:
"வேதாந்தோத்தர வீரராகவ முனே: நாராயண ஸ்ரீநிதி
ஸ்ரீமத் வீர ரகூத்வஹாக்ய யமிநாம் காருண்ய வீக்ஷாஸ்பதம்
விஞாதோபய வேத மௌளிஹ்ருதயம் வித்வத் ஶிரோ பூஷணம்
வந்தே யானுதினம் பராங்குஶமுனிம்வைராகய பத்யான் விதம்"


(தையார்அழகிய சிங்கர் எனப் பெயர் பெற்ற இவர் அருளிய ஆதிவண்ஶடகோப அடைக்கலப் பத்து இன்றும் ஸ்ரீ ஸந்நிதி ஸேவாகால வழக்கில் உள்ளது.)

திரு அவதாரம் - பங்குனி ஹஸ்தம்.
ஆஸ்தான ஸ்வீகாரம்-1748.
ஆஸ்தான காலம் 9வர9மா.
ப்ருந்தாவனம் - பாலமேடு.

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

22. ஸ்ரீமதே ஸ்ரீவண் ஶடகோப ஸ்ரீமந் நாராயண யதீந்த்ர மஹா தேஶிகாய நம:.
"வித்யாம் போதி பராங்குஶாக்ய முநிராட் அங்க்ருத்வயி ஸம்ஶ்ருதம்
த்ரய்யந்தாம்ருத வர்ஷிணம் தனுப்ருதாம் த்ராணாய ஜாதோதயம்
க்ஷோண்யாம் க்யாத ஸமஸ்த தந்த்ர குஶல வ்யாக்யா க்ருதாஶாலினம் 
ஸ்ரீ நாராயண யோகிவர்ய மநிஶம் காருண்ய பூர்ணம் பஜே".

திரு அவதாரம் - ஆடி ரோஹிணி
ஆஸ்தான ஸ்வீகாரம்-1758
ஆஸ்தான காலம் -7 மா
ப்ருந்தாவனம் - பாலமேடு

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

23. ஸ்ரீமதே ஸ்ரீவண்ஶடகோப ஸ்ரீவீரராகவ யதீந்த்ர மஹா தேஶிகாய நம:
"வீரராகவ வேதாந்த நாராயண பதாஶ்ரயம்
ஸ்ரீவீராகவ முனம் ஸம்ஶ்ரயே ஶ்ரித வத்ஸலம்."


திருஅவதாரம் - ஆனி உத்ரட்டாதி
ஆஸ்தான ஸ்வீகாரம்-1758
ஆஸ்தான காலம்-5வரு6மா
ப்ருந்தாவனம் - ஸ்ரீரங்கப்பட்ணம்.

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

24. ஸ்ரீ பராங்குஶ ராமானுஜ யதீந்த்ர மஹாதேஶிகாய நம:
"ஸ்ரீவீரராகவ முனிஶ்ருதி மௌளி ஸுரி
ஸ்ரீமத் பதாம்புஜ ஸமாஶ்ரய வந்த போதம்
ஸ்ரீவீராகவ முனீந்த்ர க்ருபா வலம்பம்
ஸ்ரீமத் பராங்குஶ யதீந்த்ர முனிம் பஜாம:"

திருஅவதாரம் - சித்ரை புனர்பூசம்
ஆஸ்தான ஸ்வீகாரம் - 1764.
ஆஸ்தானகாலம் - 12பரு 1மா
ப்ருந்தாவனம் - கோக்கராயன்
பேட்டை (ஸ்ரீரங்கம் அருகில்)

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

25.ஸ்ரீமதே ஸ்ரீவண் ஶடகோப ஸ்ரீ ஸ்ரீநிவாஸ யதீந்த்ர மஹாதேஶிகாய நம:
"ஸ்ரீநிவாஸ ரகுவர்ய பராங்குஶாதி ராமானுஜார்ய முனிபிர் குரு
ஸார்வ பௌமை:
ஸம்ப்ரோக்ஷிதம் கருணயா பரிபூர்ண போதம் ஸ்ரீஸ்ரீநிவாஸ யதிஶேகர மாஶ்ரயாம:"


திருஅவதாரம் - ஆடி ஸ்வாதி
ஆஸ்தானஸ்வீகாரம் - 1776.
ஆஸ்தானகாலம்- 35வரு 8மா
ப்ருந்தாவனம் - ந்ருஸிம்ஹபுரம்.
(புள்ளம்பூதங்குடி அருகில்)

"ஶாபானுக்ரஹ ஸ்வாமி" எனப்ரபாவமுள்ளவர்.
மந்த்ர வாதியை வென்று, பிக்ஷையில் விஷமிட்டவர்களை உணரச்செய்து ந்ருஸிம்ஹ அனுஷ்டுப் மந்த்ர பலத்தால் திருத்தியவர்.
ஸுரபுரம் ஸ்வாமியை வாதில் வென்று அவரே பல்லக்கில் சுமந்து அவரது திருமாளிகையில் ஆராதிதக்கப்பட்டு வெகுமானிக்கப்பட்டவர்.
வைனதேயாம்ஸமாய் அவதரித்த இந்த அழகியசிங்கரை ஸரபோஜி மன்னன் ஆராதித்து ஸ்ரீமடத்துக்கு நிலங்களை அளிக்க அழகிய சிங்கரும் ந்ருஸிம்ஹபுரம் என்ற அக்ரஹாரத்தை நிர்மாணித்து அங்கேயே ஸ்ரீ ந்ருஸிமஹாராதனம் செய்து திருநாட்டுக்கு எழுந்தருளினார். 
இவரது ஆஸ்தான காலத்தில் ஸ்ரீமடத்துக்கு நிறைந்த நிலங்கள்
சேர்ந்தன. மந்த்ர ஸித்தி பெற்ற இந்த அழகிய சிங்கரின் தனியன் நம் மனக்லேஸங்களைப் போக்கி இஷ்ட்ட பூர்த்தி செய்ய வல்லது.

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

26. ஸ்ரீ ரங்கநாத யதி ஶேகர மஹாதேஶிகாய நம:
"ஸ்ரீ வீரராகவ யதீந்த்ர பராங்குஶாதி
ராமானுஜாய கமலாநிதி யோகி வர்யை:
ஸம்ப்ரேக்ஷிதம் கருணயா பரிபூர்ண போதம்
ஸ்ரீ ரங்கநாத யதிஶேகர மாஶ்ரயாம:".

திருஅவதாரம் - திருஆடிப் பூரம்.
ஆஸ்தான ஸ்வீகாரம் - 1811.
ஆஸ்தான காலம் - 17வரு 1மா
ப்ருந்தாவனம் - ந்ருஸிம்ஹ புரம்.
ஆண்டாள் அழகிய சிங்கர் என்றழைக்கப்படும் இவர் 25ம்பட்ட அழகிய சிங்கரின் திருக்குமாரர்.
ஆஹ்நிக க்ரந்தம் அருளிச்செய்தவர்.

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

27. ஸ்ரீவீரராகவ வேதாந்த யதீந்த்ர மஹாதேஶிகாய நம:
"ஸ்ரீநிவாஸ யதிஶேகர லப்த போதம்
ஸ்ரீ ரங்கநாத யதி துர்ய பதாப்ஜ ப்ருங்கம்
ஸ்ரீ வீர ராகவ முனி ஶ்ருதி மௌளி ஸூரிம்
ஸ்ரீநாத பக்தி பரிதாஶயமாஶ்ரயாம:".


திருஅவதாரம் - வைகாசி அவிட்டம்.
ஆஸ்தான ஸ்வீகாரம்-1829.
ஆஸ்தான காலம்- 2வரு 7மா.
ப்ருந்தாவனம்- கத்வால் (க்ருஷ்ணா நதி தீரம்)

(இந்த அழகிய சிங்கர் 26ம்பட்ட அழகியசிங்கரின் பூர்வாஶ்ரம திருக்குமாரர். 
28 க்ரந்தங்கள் அருளியுள்ளார். நீலகண்ட விஜய சம்பு என்ற க்ரந்தத்துக்குக் கண்டனமாக  'அருளிய வைகுண்ட விஜய சம்பு' என்ற க்ரந்தம் மிக ப்ரஸித்தமானது.

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

28. ஸ்ரீமதே ஸ்ரீவண் ஶடகோப ஸ்ரீரங்கநாத ஶடகோப யதீந்ந்ர மஹா தேஶிகாய நம:
"ஸ்ரீவாஸ ரங்கபதி வீர ரகூத்வஹாதி
வேதாந்த ஸம்யமிவரை: குரு ஸார்வ பௌமை:
ஸம்ப்ரேக்ஷிதம் கருணயா பரிபூர்ண போதம்
ஸ்ரீ ரங்கநாத ஶடகோபமுனிம் பஜாம:"

திருஅவதாரம் - ஆவணி மூலம்
ஆஸ்தான ஸ்வீகாரம் 1833
ஆஸ்தான காலம்- 3வரு 5மா
ப்ருந்தாவனம் - மதுராந்தகம்.

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

29. ஸ்ரீமதே ஸ்ரீவண்ஶடகோப ஸ்ரீபராங்குஶ யதீந்த்ர மஹாதேஶிகாய நம:

"வித்யாம்போதி பராங்குஶாக்ய யதிராட் ஸ்ரீவாஸ ரங்காதிப
ஸ்ரீமத்வீர ரகூத்வஹ ஶ்ருதி ஶிர யோகீஶ்வரை:அந்வஹம்
ரங்காதீஶ ஶடாரி ஸம்யமிவரை: ஸாலோகிதம் ஸாதரம்
வித்யாவாரிநிதிம் பராங்குஶ யதீந்த்ராக்யம் முனிம் பஜே"


திருஅவதாரம் - சித்திரையில் சித்திரை
ஆஸ்தானஸ்வீகாரம் - 1836
ஆஸ்தான காலம்- 1வரு 1மா
ப்ருந்தாவனம்- திருப்பாற்கடல் (காவேரிப்பாக்கம் பாலாற்றங்கரை)
லாலாபேட்டை வஜ்ரம் ஸ்வாமி என்றும், வ்யாகரணம் ஸ்வாமி என்றும் அழைக்கப்படுபவர்.

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

30. ஸ்ரீமதே ஸ்ரீவண்ஶடகோப ஸ்ரீ ஸ்ரீநிவாஸ யதீந்த்ர மஹாதேஶிகாய நம:

"ஸ்ரீ வாஸ ரங்கபதி வீர ரகூத்வஹாதி வேதாந்த தேஶிக பராங்குஶ
லக்ஷ்மணார்யை: ஸம்ப்ரேக்ஷிதம் கருணாய பரிபூர்ண போதம்
ஸ்ரீ ஸ்ரீநிவாஸ நிகமாந்த குரும் பஜாம:".


திரு அவதாரம் - மார்கழி விஶாகம்.
ஆஸ்தான ஸ்வீகாரம்-1837.
ஆஸ்தான காலம்- 5 வரு 6மா
ப்ருந்தாவனம்-ந்ருஸிம்ஹபுரம்.
இவர் அருளிய ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹ சுப்ரபாதம் இன்றும் ஸ்ரீஸந்நிதியில் ஸேவிக்கப்படுகிறது.

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

31. ஸ்ரீமதே ஸ்ரீவண்ஶடகோப ஸ்ரீமந் நாராயண யதீந்த்ர மஹாதேஶிகாய நம:
"ஸ்ரீ ரங்கநாத யதிவர்ய க்ருபாத்த போதம்
ஸ்ரீவாஸ வேத ஶிகரார்ய தயா வலம்பம்
வைராக்ய பக்தி முக ஸத்குண ஸாகரம்
ஸ்ரீநாராயண ஶ்ருதி ஶிரோ குருமாஶ்ரயாம:".


திருஅவதாரம் - கார்த்திகை மகம்
ஆஸ்தானஸ்வீகாரம்-1842
ஆஸ்தான காலம்- 4வரு 4மா
ப்ருந்தாவனம்-த்யாகராஜபுரம்(காவேரி தீரம்)

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

32. ஸ்ரீமதே ஸ்ரீவண்ஶடகோப ஸ்ரீவீரராகவ யதீந்த்ர மஹா தேஶிகாய நம:
"ஸ்ரீவாஸ ரங்கபதி வீர ரகூத்வஹாதி
வேதாந்த மாநிலயவேத ஶிரோ யதீந்த்ரை:
ஸம்ப்ரேக்ஷிதம் கருணயா பரிபூர்ண போதம்
ஸ்ரீவீராகவ யதீந்த்ர குரும் பஜாம:".


திரு அவதாரம்-சித்ரை பூரட்டாதி
ஆஸ்தான ஸ்வீகாரம்-1847
ஆஸ்தான காலம்-6வரு7மா.
ப்ருந்தாவனம் - திருவள்ளூர்.
இவர் தாத்தா ஸ்வாமி என்றழைக்கப் பட்டவர். ஆதனூர் அழகியசிங்கர் என்றும் ப்ரஸித்தி.

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

33. ஸ்ரீமதே ஸ்ரீவண் ஶடகோப ஸ்ரீஶடகோப யதீந்த்ர மஹா தேஶிகாய நம:

"ஸ்ரீரங்கநாத ஶடகோப யதீந்த்ர பாத பங்கேருஹ 
ப்ரவண சித்த முதார போதம்
ஸ்ரீவீர ராகவ யதீந்த்ர க்ருபாவலம்பம்
ஸ்ரீமஶ்ஶடாரி யதிஶேகர மாஶ்ரயாம:".


திருஅவதாரம் - புரட்டாசி விஶாகம்.
ஆஸ்தான ஸ்வீகாரம்-1853.
ஆஸ்தான காலம்-26 வரு.
ப்ருந்தாவனம் - திருவள்ளூர்.

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

34. ஸ்ரீமதே ஸ்ரீவண் ஶடகோப ஸ்ரீராமானுஜ யதீந்த்ர மஹாதேஶிகாய நம:

"ஸ்ரீமத் வீர ரகூத்வஹஶ்ருதி ஶிரோ ரங்கேஶ கார்யாத்மஜ
ஸ்ரீவாஸ ஶ்ருதி மௌளி யோகி ஶடஜித் யோகீஶ வீக்ஷாஸ்பதம்
விக்யாதம் ஶமதீத மாதி சுகுணை: ஆட்யம் உபஶ்சித்தமம்
வந்தே ஸ்ரீஶடகோப லக்ஷ்மணமுனிம் வைராக்ய வாராகரம்".


திருஅவதாரம்-கார்த்திகை உத்ராடம்.
ஆஸ்தான ஸ்வீகாரம்-1879.
ஆஸ்தான காலம்- 3வரு 1மா
ப்ருந்தாவனம்- திருவள்ளூர்.

அத்திப்பட்டு அழகிய சிங்கர் என்றும், ரிஷி ஸ்வாமி என்றும் இவர் அழைக்கப்பட்டார். இவர் அருளிய ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹன்
அடைக்கலப்பத்து ஸ்ரீ ஸந்நிதியில் ஸேவிக்கப்படுகிது.
திருவள்ளூர் எம்பெருமான் கட்டியம், எச்சரிக்கை இரண்டும் இவர் அருளிய தே.

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

35. ஸ்ரீமதே ஸ்ரீவண்ஶடகோப ஸ்ரீரங்கநாத யதீந்த்ர மஹாதேஶிகாய நம:

"ஸ்ரீமத் ஸ்ரீவீர ரக்வீட்ஶ்ருதி மகுட குரூத்தம்ஸ பாதாப்ஜ ப்ருங்கம்
ஸ்ரீமத் ஸ்ரீரங்கபூப்ருத் ஶடமதன குரோர் லப்த வேதாந்த யுக்மம்
ஸ்ரீமந் நாராயணாத்ய ஶ்ருதி ஶிகர ஶடாராதி ராமானுஜார்ய
ப்ரேக்ஷா பாத்ரம் 
ப‌ஜாமோ குருவரமனகம் ரங்கநாதம் யதீந்த்ரம்".

திரு அவதாரம் - வைகாசி கேட்டை.
ஆஸ்தான ஸ்வீகாரம்-1882.
ஆஸ்தான காலம்- 5வரு 10மா.
ப்ருந்தாவனம் - திருவள்ளூர்.
(களத்தூர் அழகிய சிங்கர் என்றழைக்கப்பட்டவர். பரம உதார குணம் உடையவர்)

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

36. ஸ்ரீமதே ஸ்ரீவண் ஶடகோப ஸ்ரீ ஸ்ரீநிவாஸ யதீந்த்ர மஹாதேஶிகாய நம:
"ஸ்ரீநாராயண வேத மௌளி யதிராட் பாதாரவிந்தாஶ்ரயம் க்யாத
ஸ்ரீ ஶடகோப தேஶிகமணே: லப்தாக மந்தாத்வயம்
ஸ்ரீமத் ரங்க துரீண யோகிசரண ந்யஸ்தாத்ம ரக்ஷாபரம் ஸேவே
ஸ்ரீநிதி யோகிவர்யமநகம் நிர்பாத போதோதயம்".

திருஅவதாரம் - ஆடி புஷ்யம்
ஆஸ்தான ஸ்வீகாரம்-1888
ஆஸ்தான காலம்-10வரு4மா.
ப்ருந்தாவனம் -பாதூர் (உளுந்தூர் பேட்டை அருகில்)

சின்ன பரதந்தூர் அழகியசிங்கர் என்றழைக்கப்பட்டவர். 33ம் பட்ட அழகிய சிங்கரின் பூர்வாஶ்ரம திருத்தம்பியார். இவர் திருநாடலங்கரித்த செய்திகளேட்ரு ஸ்ரீமுஷ்ணம் ஸ்வர்ணம் ஸ்வாமி "ஸ்ரீபாஷ்யம் போய்விட்டதே" எனக்கலங்கினாராம்.

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

37. ஸ்ரீமதே ஸ்ரீவண்ஶடகோப ஸ்ரீவீரராகவ யதீந்த்ர மஹாதேஶிகாய நம:

"அஸ்த்யத்ரை கோவிஸேஷாத்புத இதி ஶடஜில் லக்ஷமணாப்யாம்
முனிப்யாம் ஏகீ பூயோபிதாப்யாம் இவ நிருபதிகம் ப்ரேக்ஷிதம் ஸத்குருப்யாம்
வேதாந்த த்வந்த்வ மந்த்ர த்வய விவ்ருதி முகேஸிக்ஷிதம் க்ஷாந்தி முக்யை:
ஆட்யம் ஸ்ரீவீரரக்வீட் ஶடமதன குரும் ஸம்ய மீந்த்ரம் பஜாமி"


திருஅவதாரம் - தை புஷ்யம்.
ஆஸ்தான ஸ்வீகாரம்-1905.
ஆஸ்தானகாலம் - 3வரு 10மா
ப்ருந்தாவனம்- ந்ருஸிம்ஹ புரம்.
(பிள்ளைப் பாக்கம் அழகியசிங்கர் என்றழைக்கப்பட்டார். ஆஸ்தான ஸ்வீகராத்துக்கு முன்பே துரியாஶ்ரமம் ஏற்றவர்.)

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

38. ஸ்ரீமதே ஸ்ரீவண்ஶடகோப ஸ்ரீ ஸ்ரீநிவாஸ யதீந்த்ர மஹாதேஶிகாய நம:

"ஸ்ரீமச் சடாரி சடஜித் யதிதுர்ய வீர ரகுவீட் ஶடாரி யதி ஶேகர தேஶிகேந்த்ரை:
ஸம்ப்ரேக்ஷிதம் கருணயா பரிபூர்ண போதம் ஸ்ரீ ஸ்ரீநிவாஸ ஶடகோப முனிம் பஜாம:"


திருஅவதாரம் - தை திருவாதிரை.
ஆஸ்தான ஸ்வீகாரம் - 1905.
ஆஸ்தான காலம்- 3வரு 10மா
ப்ருந்தாவனம் - ந்ருஸிம்ஹ புரம்.

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

39. ஸ்ரீமதே ஸ்ரீவண்சடகோப ஸ்ரீ பராங்குஶ யதீந்த்ர மஹாதேஶிகாய நம:
"ஸ்ரீ வீர ராகவ யதீந்த்ர பதாப்ஜ ப்ருங்கம்
ஸ்ரீ மச்சடாரி யதிவர்ய க்ருபாத்த போதம்
ஸ்ரீ ஸ்ரீநிவாஸ சடசித் யதிதுர்ய வீக்ஷாபாத்ரம் பராங்குஶ யதீந்த்ர
குரும் பஜாம:"

திரு அவதாரம் - வைகாசி பரணி
ஆஸ்தான ஸ்வீகாரம்-1909
ஆஸ்தான காலம் -6 வரு.
ப்ருந்தாவனம் - ராஜமன்னார் கோயில்.

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

40. ஸ்ரீமதே ஸ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹ திவ்ய பாதுகா ஸேவக ஸ்ரீவண்ஶடகோப ஸ்ரீ ரங்கநாத ஶடகோப யதீந்த்ர மஹாதேஶிகாய நம :

"ஸ்ரீமச் சடாரி யதிஶேகர லப்தபோதம்
ஸ்ரீரங்கநாத யதி வர்ய க்ருபைக பாத்ரம்
ஸ்ரீமத் பராங்குஶ யதீந்த்ர தயா வலம்பம்
ஸ்ரீ ரங்கநாத ஶடகோப முனிம் பஜாம:"


திரு அவதாரம் - மார்கழி விஶாகம்.
ஆஸ்தான ஸ்வீகாரம்-1913
ஆஸ்தான காலம்-9வரு9மா.
ப்ருந்தாவனம் -துவரிமான் (மதுரை) 
இவர் காருக்குறிச்சி பெரிய அழகிய சிங்கர் என அழைக்கப் படுகிறார்.

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

41. ஸ்ரீமதே ஸ்ரீவண் ஶடகோப ஸ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹ ஶடகோப யதீந்த்ர மஹாதேஶிகாய நம:
"ஸ்ரீமச்சடாரி ஶடகோப யதீந்த்ர ரங்கீ கார்யாத்யமஜாத்ம முனிபி:
குருஸார்வ பௌமை:
ஸம்ப்ரேக்ஷிதம் கருணயா பரிபூர்ண போதம்
லக்ஷ்மீந்ருஸிம்ஹ ஶடகோப முனிம் பஜாம:"


திரு அவதாரம் - மார்கழி பூரட்டாதி
ஆஸ்தான ஸ்வீகாரம் -1923.
ஆஸ்தான காலம் -10வரு 10மா
ப்ருந்தாவனம்- ஸ்ரீரங்கம்.
இவர் காருக்குறிச்சி சின்ன அழகிய சிங்கர் என்றழைக்கப்படுகிறார்.

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

42. ஸ்ரீமதே ஸ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹ திவ்ய பாதுகா ஸேவக ஸ்ரீவண்ஶடகோப ஸ்ரீ ரங்கஶடகோப யதீந்த்ர மஹாதேஶிகாய நம:

"ஸ்ரீரங்கேஶ யதீந்துநா கருணயா ஸௌஸ்யாதி திப்ரேக்ஷிதம்
க்யாதஸ்ரீ ந்ருஸிம்ஹ காரிஜ முனே பாதாம்புஜேந்திந்திரம்
தாந்திக்ஷாந்தி தயாதிஶ்ஶுப குணை: பாந்தம் புஜாக்ரேஶரம்
ஸ்ரீமத் ரங்க ஶடாரியோகி ந்ருபதிம் ஶ்ரேயோநிதிம் ஶம்ஶ்ரயே".


திருஅவதாரம் - தை உத்ராடம்
ஆஸ்தான ஸ்வீகாரம் - 1929
ஆஸ்தான காலம் 23 வரு 11மா.
ப்ருந்தாவனம்‌- திருவள்ளூர்.

மிகப்ரஸித்தமாய் இஞ்சிமேட்டழகியசிங்கர் என்றழைக்கப்பட்டவர்.
ரஹஸ்யத்யஸாரத்துக்கு ஸாரபோதினி என்ற வ்யாக்யானமருளியவர். இவரது வைபவங்களை வைபவ ஸுதா என்ற க்ரந்தம் விவரிக்கிறது.

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

43. ஸ்ரீமதே ஸ்ரீவண்ஶடகோப ஸ்ரீ வீரராகவ ஶடகோப யதீந்த்ர மஹாதேஶிகாய நம:

"ஸ்ரீமத் ஸ்ரீரங்க ப்ருத்வீஶ்வர ஶடரிபுணா ஸம்யமீந்த்ரேண த்ருஷ்டம்
ந்யஸ்தாத்மானம் ந்ருஸிம்ஹ நரஹரி ஶடஜித் யோகினே ஸுத் ப்ரஸாதாத்
ப்ராஜ்ஞ ஸ்ரீரங்ககாரி ப்ரபவ யதி பதே: ப்ராப்த லக்ஷ்மீந்ருஸிம்ஹா-
ஸ்தானம் ஸேவே யதீந்த்ரம் ஶகல குணநிதிம் வீர ரக்வீட் ஶடாரிம்".

திரு அவதாரம் - கார்த்திகை பூராடம்.
ஆஸ்தான ஸ்வீகாரம்-1951.
ஆஸ்தான காலம்- 5வரு 10மா.
ப்ருந்தாவனம் - நைமிஶாரண்யம்.

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

44. ஸ்ரீமதே ஸ்ரீவண்ஶடகோப ஸ்ரீ வேதாந்த தேஶிக யதீந்த்ர மஹா தேஶிகாய நம:

"ஸ்ரீரங்க நாத ஶடகோப யதீந்த்ர த்ருஷ்டம்
லக்ஷ்மீந்ருஸிம்ஹ ஶடஜித் கருணைக பாத்ரம்
ஸ்ரீரங்க வீர ரகுராட் ஶடகோப ஹ்ருத்யம்
ஸ்ரீவேதாந்த தேஶிக யதீந்த்ர மஹம் ப்ரபத்யே".

திருஅவதாரம் - ஆவணி ஹஸ்தம்.
ஆஸ்தான ஸ்வீகாரம்-1951
ஆஸ்தான காலம்-34 வரு 10மா.
ப்ருந்தாவனம் - ஸ்ரீரங்கம்.

ஸ்ரீரங்க ராஜகோபுர நிர்மாணம், திருப்பாவைக்கு ஸுபோதினி வ்யாக்யானம், லக்ஷ்மீந்ருஸிம்ஹ கராவலம்ப ஸ்தோத்ரம் ஆகியன இவரது ப்ரஸித்தியைப் பறைசாற்றும் முக்யங்களுள் முக்யமானவை.

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

45. ஸ்ரீமதே ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹ திவ்ய பாதுகா ஸேவக ஸ்ரீ வண் ஶடகோப ஸ்ரீ நாராயண யதீந்த்ர மஹாதேஶிகாய நம:

"ஸ்ரீமத்ரங்க ஶடாரி ஸம்யமிவரால் லப்தாந்தமாந்த த்வயம்.
ஸ்ரீமத்வீர ரகூத்வஹாக்ய ஶடஜித் பாதார விந்தாஶ்ரயம்
ஸ்ரீமத் வேத வதம்ஸ தேஶிகதயே : காருண்ய வீக்ஷாஸ்பதம்
ஸேவே ரங்க துரீண ஶாஸனவஶம் நாராயணம் யோகினம்".


திருஅவதாரம்- கார்த்திகை உத்ரட்டாதி
ஆஸ்த்தான ஸ்வீகாரம் - 1991
ஆஸ்தான காலம் 20 வரு 10மா
ப்ருந்தாவனம் - ஸ்ரீரங்கம்.

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன் உறையும் மண்டபத்தை பொன் மண்டபமாக்கிய தோடன்றி ஸ்ரீஸந்நிதியின் நிலையைப் பலவாறாக உயர்த்திய பெருமையும், அஸாத்ய பாண்டித்யம் கொண்டு பல க்ரந்தங்களை அருளிச்செய்து, பல திவ்ய தேச எம்பெருமான் கைங்கர்யங்களை ஏற்று நிறைவேற்றிய பெருமை மிக்க அழகிய சிங்கர் இவர்.

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

46. ஸ்ரீமதே ஸ்ரீவண் ஶடகோப ஸ்ரீ ரங்கநாத ஶடகோப யதீந்த்ர மஹா தேஶிகாய நம:
"வேதாந்ததேஶிக யதீந்த்ர கடாக்ஷலப்த
த்ரையந்த ஸாரமநவத்ய குணம் புதாக்ரயம்
நாராயாணக்ய யதிதுர்ய க்ருபா விஷிக்தம்
ஸ்ரீரங்கநாத யதிஶேகர மாஶ்ரயாம:".


திருஅவதாரம் - ஆனி மகம்.
ஆஸ்தான ஸ்வீகாரம் - 2009.

ருக்வேத கல்பகதரு ,வேத ரத்னம் என்றெல்லாம் புகழப்படும் நம் ப்ருக்ருதம்
அழகியசிங்கர் ஆஸ்தானம் ஏற்கும் நாள்வரை தவறாத அக்னிஹோத்ரியாயிருந்த பெருமையும், ஸ்ரீமாலோலனிடம் அஸஞ்சலமான பக்தியுடன் ஸித்தியும் கொண்டு நம்மையெல்லாம் வழிநடத்தும் நல்லாச்சார்யனாக நமக்கு வாய்க்கப் பெற்றது அம்மாலோலன் திருவருளாலே.
அழகியசிங்கர்கள் திருவடிகளே ஶரணம்.

🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

ஆசார்யன் திருநக்ஷத்ரம்  (Month-Wise)

🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🙏🙏🙏🙏

Sunday, September 11, 2022

ந்யாஸ த்ரயீ - Part 5 - Nyaasa Vimshati



Shloka - 16: 

आदेष्टुं स्वप्रपत्तिं तदनुगुणगुणाद्यन्वितं स्वं मुकुन्दो 
मामित्युक्त्वैकशब्दं वदति तदुचितं तत्र तात्पर्यमूह्यम् । 
तत्प्राप्य प्रापकैक्यं सकलफलदतां न्यासतोऽन्यानपेक्षाम् 
प्राधान्याद्यं च किञ्चित् प्रथयति स परं श्रीसखे मुक्त्युपाये ॥ १६॥

சரமஶ்லோகத்தின் முற்பகுதி அனுவாதம் (நம் நிலைமையை எடுத்துச் சொல்கிறது‌) பின்பகுதி (விதிக்கிறது) கட்டளையாகிறது..
"மாம் ஏகம்"--தேர்த்தட்டில் நிற்கும் கண்ணன் தன்நெஞ்சைத் தொட்டு "மாம்" என்கிறான். வாத்ஸல்யம், கருணை முதலிய எண்ணற்ற கல்யாண குணங்களையுடைய என் ஒருவனையே என்பதை "ஏகம்" என்ற பதம் சொல்கிறது.
பிராட்டியுடன் கூடிய எம்பெருமான் ஒருவனே உபாயமாகவும், உபேயமாகவும் ஆவதை இந்த "ஏகம்"- என்ற பதம் குறிக்கிறது. இதுவே ப்ராப்ய, ப்ராபக ஐக்யம். ப்ரபத்தியைச் செய்யும் சேதனன்
(வேறு உபாயங்கள் செய்யச் சக்தியற்ற) விஷயத்தில் தானே நின்று பலன் தருகிறான்.
எம்பெருமான் ஒருவனே மோக்ஷோபாயன் என்ற உணர்வு ப்ரபன்னனுக்கு அவஶ்யம்.
ப்ரபத்தி ஒரு வ்யாஜமாகி எம்பெருமானின் சீற்றத்தைத் தணித்து சேதனனுக்குப் பலன் தருகிறது. ஆக எம்பெருமான் ஒருவனே ஸித்தோபாயனாயிருந்து மோக்ஷம் தர வல்லவன்.
இதற்கான அதிகார ஸங்க்ரஹ பாசுரம்.
"சாதனமும் நற்பயனும் நானே ஆவன் 
சாதகனும் என் வசமாய் என்னைப் பற்றும்* 
சாதனமும் சரணநெறி அன்று உமக்கு
சாதனங்கள் இந்நிலைக்கு ஓர் இடையில் நில்லா*
வேதனைசேர் வேறங்கம் இதனில் வேண்டா
வேறு எல்லாம் நிற்கும் நிலை நானே நிற்பன்*
தூதனுமாம் நாதனுமாம் என்னைப் பற்றிச் சோகம் தீர்
என் உரைத்தான் சூழ்கின்றானே".
(அதி-ஸ 48)

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka - 17

स्वाभीष्टप्राप्तिहेतुः स्वयमिह पुरुषैः स्वीकृतः स्यादुपायः 
शास्त्रे लोके च सिद्धः स पुनरुभयथा सिद्धसाध्यप्रभेदात् । 
सिद्धोपायस्तु मुक्तौ निरवधिकदयः श्रीसखः सर्वशक्तिः 
साध्योपायस्तु भक्तिर्न्यसनमिति पृथक् तद्वशीकारसिद्ध्यै ॥ १७॥

உபாயம் என்றால் என்ன?அதன் வகைகள் என்ன?அதனை ஏன் செய்யவேண்டும் என்பதை இதில் விவரிக்கிறார் ஸ்வாமி.
இவ்வுலகில் சேதநன் ஒரு பலனை அடைய விரும்பிச் செய்யும் க்ரியைக்கு உபாயம் என்று பெயர்  இது ஸித்தோபாயம், ஸாத்யோபாயம் என இருவகைப்படும். நம்மால் செய்யப் பட வேண்டாத முன்பே உள்ள ஸாதனம் ஸித்தோபாயம்.
நாம் முயன்று செய்வது ஸாத்யோபாயம். உதாரணமாக மரத்தில் பழுத்திருக்கும் பழம் ஸித்தோபாயம்.அதனைச்சென்று பறித்துப் பயனடைதல் ஸாத்யோபாயம்.
கருணையும்,சக்தியுமுள்ள எம்பெருமானே ஸித்தோபாயம்.
அவனை அடைய சேதநன் செய்யும் ப்ரபத்தி ஸாத்யோபாயம்.
பக்தி யோகம்,ப்ரபத்தி என்ற இரண்டுமே ஸாத்யோபாயம்.
இவற்றுள் ஏதேனும் ஒன்றைச் செய்து  எம்பெருமானை வசப்படுத்திக் பெறுகின்ற பலனே மோக்ஷம்.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌼🌼🌺🌺🌺🌼🌼


Shloka -18
अत्यन्ताकिञ्चनोऽहं त्वदपचरणतः सन्निवृत्तोऽद्य नाथ 
त्वत्सेवैकान्तधीः स्यां त्वमसि शरणमित्यध्यवस्यामि गाढम् । 
त्वम् मे गोपायिता स्यास्त्वयि निहितभरओऽस्म्येवमित्यर्पितात्मा 
यस्मै स न्यस्तभारः सकृदथ तु सदा न प्रयस्येत् तदर्थम् ॥ १८॥

ஆறு அங்கங்களுடன் கூடிய  ப்ரபத்தியை ஒருமுறை செய்தபின் ப்ரபன்னன் செய்யவேண்டியது வேறொன்றுமில்லை என இதில் வலியுறுத்துகிறார் ஸ்வாமி.
ப்ரபத்திக்கான ப்ரயோக விதி இங்கு சொல்லப்படுகிறது.
  1. அடியேன் வேறு உபாயத்தைச் செய்யும் சக்தியற்றவன். இதுவே கார்ப்பண்யம் என்னும் அங்கம் .
  2. உன் திருவுள்ளம் உகக்காத செயலில்  ஈடுபடமாட்டேன்.(ப்ராதிகூல்ய வர்ஜனம்)
  3. உன் திருவுள்ளம் உகக்கும் கைங்கர்யத்தில்  ஈடுபடுவேன் (ஆநுகூல்ய ஸங்கல்பம்)
  4. நீயே என்னைக் காப்பாய் என்ற முழு நம்பிக்கையுடனுள்ளேன்.(மஹா விஶ்வாஸம்)
  5.  நீயே எனக்கு உபாயமாக இருந்து காக்கவேண்டும் (கோப்த்ருத்வ வரணம்)
இவ்விதமாக என் ஸ்வரூபத்தையும், அதனைக்காக்கும் பொறுப்பையும் உன்னிடம் ஒப்படைக்கிறேன் என்று ஒரு முறை செய்யும் ப்ரபத்திக்குப்பின் எக்காலத்திலும் இப்ரபன்னன் எம்முயற்சியும் செய்ய வேண்டாம்.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka - 19

त्यक्त्वोपायानपायानपि परमजहन्मध्यमां स्वार्हवृत्तिम् 
प्रायश्चित्तं च योग्यं विगतऋणततिर्द्वन्द्ववात्यां तितिक्षुः । 
भक्तिज्ञानादिवृद्धिं परिचरणगुणान् सत्समृद्धिं च युक्तां
नित्यं याचेदनन्यस्तदपि भगवतस्तस्य यद्वाऽऽप्तवर्गात् ॥ १९॥

ஶரணாகதி செய்து முடித்தபின் ஒருவனது அனுஷ்டானங்களை விவரிக்கும் ஶ்லோகம் இது.
ஶரணாகதிக்குப்பின் அதற்கேற்ப தன் வாழ்க்கைமுறையை அமைத்துக் கொள்ளுதல் அவஶ்யம்.

1 &2 த்யக்த்வோபாயானபாயாந்---
ப்ரபத்தி செய்து முடித்த ஒருவன் காம்ய பலன்களை அடைவதற்கான கார்யங்களைச் செய்யக்கூடாது. ஶரணாகதிக்கு எதிரான (அபாயம்) பாபமான கார்யங்களை விடவேண்டும். செய்யாதன செய்யோம் என ஆண்டாள் சொல்கிறாள். முக்யமாக பகவத் பாகவதாபசாரம் கூடாது.

3. மத்யமாம் ஸ்வார்ஹ வ்ருத்திம்---
நடுநிலையாகவுள்ள நிதயகர்மானுஷ்டங்களை ஶ்ரத்தையுடன் செய்யவேண்டும்.

4. ப்ராயச்சித்தம்ச அஜஹத்--
நம் மையும் மீறி ஏற்படும் தவறுகளுக்கு உரிய  ப்ராயச்சித்தம் செய்தல் வேண்டும்.

5. விகத ருண ததி ----
மனிதனுக்கு ஏற்படும் மூன்று கடன்களாகிய தேவ, ரிஷி, பிதுர் கடன்களை முறையே வேள்வி செய்தல், வேதம் கற்றல், விவாஹம் செய்து புத்ரபேறு பெறுதல் மூலமாகத் தீர்க்கலாம் என சாஸ்த்ரம் சொல்கிறது. ஆனால் ப்ரபத்தி செய்தவனுக்கு அவ்வுபாயமே 
இக்கடன்களை நீக்கி விடுகின்றது. ப்ரபத்தியின் பெருமையால் அவன் இக்கடன்களிலிருந்து விடுபடுகின்றான். இதனையே
"தேவாதீனாமய மந்ருணதாம் தேஹவத்வேபிவிந்தந்" என்ற தயாஶதக ஶ்லோகத்தில் (49) ஸ்வாமி காட்டுகிறார்.

6. த்வந்த்வ வாத்யாம் திதுக்ஷு: ---
ஸுக துக்கங்களாகிய சுழற்காற்றை சகித்துக் கொள்பவனாயிருக்கவேணும். கைங்கர்யத்துக்கு ஸுகத்தையும்,ப்ராரப்தம் கழிய துக்கத்தையும் கருவியாகக் கொள்ள வேண்டும்.

7. பக்தி ஞானாதி வ்ருத்திம்----
பக்தி, ஞானம், வைராக்யம் வளர வேணும் என்ற எம்பெருமானிடம் ப்ரார்த்திக்கவேண்டும். "பகவன் பக்திமபி ப்ரயச்சமே" என்கிறார் ஆளவந்தார்.

8. பரிசரண குணான் ஸத்ஸம்ருத்திம்ச யுக்தாம்---
சாதுக்களின் சேர்க்கையையும், கைங்கர்யத் துக்கான சாதனங்களின் செழிப்பையும்  தரும்படி எம்பெருமானிடம்/ஆசார்யனிடம் ப்ரார்த்திக்கவேணும்.
ஆக இந்த ஸ்தோத்ரமே  பாராயணத்துக்கு உரியதாயினும், பரிபாலனம் செய்ய உதவும் வகையில் உயர்ந்தாயுள்ளது.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka - 20

आज्ञा कैङ्कर्यवृत्तिष्वनघ गुरुजनप्रक्रिया नेमिवृत्तिः 
स्वार्हानुज्ञातसेवा विधिषु च शकने यावदिष्तं प्रवृत्तः । 
कर्मप्रारब्धकार्यं प्रपदनमहिमध्वस्तशेषं द्विरूपं 
भुक्त्वा स्वाभीष्टकाले विशति भगवतः पादमूलं प्रपन्नः ॥ २०॥
 
ப்ரபன்னன் அவன் விரும்பிய காலத்தில் மோக்ஷம் பெறுவதை இந்த ஶ்லோகம் சொல்கிறது.
உபாயங்களை உபாயமாகச் செய்யாமல் பகவத் ப்ரீத்யர்த்தமாக ஸங்கல்பித்துக்கொண்டு செய்யும்போது பலனும் அவனுக்கே ஸங்கல்பமாகும் வைபவமுண்டு என்கிறார் ஸ்வாமி  தேஶிகன். இதற்கு ஸாத்விக த்யாகம் என்றும் பெயர். 

ப்ரபன்னன் செய்யும் கைங்கர்யம் ஆக்ஞா கைங்கர்யம் அநுக்ஞா கைங்கர்யம் என இருவகைப்படும். ஆக்ஞா கைங்கர்யம் எம்பெருமானிட்ட கட்டளையாக அவனுகப்புக்கு குற்றமற்ற நம் ஆசார்யர்கள் அனுஷ்டித்தபடி வண்டிச் சக்ரமுருளும் வகையில் செய்யவேண்டும். "ஆக்ஞா கைங்கர்ய வ்ருத்திஷூ அநக குருஜன ப்ரக்ரியா நேமி வ்ருத்தி:"
என்கிறார் (ஸ்நானம், சந்த்யாவந்தனம், ஆராதனம், தர்ப்பணம் முதலியன இதிலடங்கும்)

அனுக்ஞா கைங்கர்யம் எம்பெருமானின் கட்டளையல்ல. அவன் அனுமதித்து ஏற்கும் கைங்கர்யம்.
நம்மால் முடிந்ததை விரும்பி ஏற்றுக் செய்யலாம் (புஷ்பம் தொடுத்தல், கோயிலில் கோலமிடுதல், ப்ரதக்ஷிணம் செய்தல் முதலியன இதில் அடங்கும்.)
சேதனனுக்கு ஸஞ்சிதம், ப்ராரப்தம் என இரு கர்மாக்களுண்டு.
பல ஜன்மாக்களாகச் சேர்க்கப்பட்ட பாபக் குவியல்கள்
ஸஞ்சித பாபம்.
அவற்றுள் பலன்கொடுக்க ஆரம்பித்துள்ளது ப்ராரப்த பாபம்.
சேதனன் ஶரணாகதி செய்தவுடன் ஸஞ்சித பாபம் அழிகின்றன. ப்ராரப்த கர்மா இந்த தேகம் விழும் வரை அனுபவித்து முடியும். ஆக புண்ய பாபங்கள் முற்றிலும் கழிந்தவனாய் அவன் விரும்பிய காலத்தில் மோக்ஷம் பெறுகிறான்.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka - 21

श्रुत्या स्मृत्यादिभिश्च स्वयमिह भगवद्वाक्यवर्गैश्च सिद्धां
स्वातन्त्र्ये पारतन्त्र्येऽप्यनितरगतिभिः सद्भिरास्थीयमानाम् ।
वेदान्ताचार्य इत्थं विविधगुरुजनग्रन्थसंवादवत्या
विंशत्या न्यासविद्यां व्यवृणुत सुधियां श्रेयसे वेङ्कटेशः ॥ २१॥

இஹ, பர சுகங்களை அளிக்கவல்லது இந்த ந்யாஸ விம்ஶதி என்ற ஸ்தோத்ரம் என்கிறார் ஸ்வாமி.
வேதத்தாலும் (ஶ்ருத்ய), ஸ்ம்ருதி (ஸ்ம்ருதி ஆதிபி:ச) யாலும், எம்பெருமான் வாக்காலும் (ஸ்வயம் பகவத் வாக்ய வர்க்கை:ச) ந்யாஸத்தின் பெருமை பேசப்பட்டுள்ளது. இவை மிக ஶ்ரேஷ்டமான ப்ரமாணங்கள்.

ஸ்வதந்த்ரமான நிலையிலும் (ஸ்வாதந்த்ர்யே) அங்கமான நிலையிலும் (பாரதந்த்ர்யே அபி) அகிஞ்சனர்களாகிய பெரியோர்களால் அனுஷ்டிக்கப்பட்டு வந்துள்ளது இந்த ப்ரபத்தி வித்யை. ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமத்திலும் ந்யாஸம் விவரிக்கப்பட்டுள்ளது.
வேதாந்தாசார்யன் என முடிசூடிய ஸ்வாமி தேஶிகன்
பூர்வாசார்யர்கள் ப்ரபத்தி பற்றி
சொல்லிய விஷயங்களைத் தழுவிய இந்த
ந்யாஸ விம்ஶதி என்ற ஸ்தோத்ரத்தை நமக்காக அருளியுள்ளார்.
(உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே --நம்மாழ்வார் ) 
(த்வத்பாத மூலம் ஶரணம் ப்ரபத்யே--ஆளவந்தார்)
(அஶரண்ய ஶரண்யாம் அனன்ய ஶரண: - பாஷ்யகாரர்)


🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka - 22

संसारावर्तवेगप्रशमनशुभदृग्देशिक प्रेक्षितोऽहं
संत्यक्तोऽन्यैर् उपायैरनुचितचरितेष्वद्य शान्ताभिसन्धिः ।
निःशङ्कस्तत्वदृष्ट्या निरवधिकदयं प्रार्थ्य संरक्षकं त्वां
न्यस्य त्वत्पादपद्मे वरद निजभरं निर्भरो निर्भयोऽस्मि ॥ २२॥

ப்ரபன்னன் அனுஸந்திக்க வேண்டிய முறையை ஸ்வாமி அனுஸந்தானம் செய்து காட்டும் ஶ்லோகம் இது.
ஹே பேரருளாளப் பெருமானே!
இந்த ஸம்சாரம் என்ற நீர்சுழலின் வேகத்தைத் தடுக்கவல்ல (ஸம்ஸார வர்த்தக வேக ப்ரஶமன)
ஆசார்யனின் நல்ல கடாக்ஷத்தைப் பெற்றவனாக (ஶுப த்ருக் தேசிக ப்ரேக்ஷித:)
பிற உபாயங்களிலிருந்து விடுபட்ட வனாக (அந்யை: உபாயை: ஸந்த்யக்த:)
தகாத செயல்களில் ஈடுபடாத வனாக (அனுசித சரிதேஷு ஶாந்தாபிஶந்தி:)
பூர்ண விஶ்வாஸத்துடன் தத்வ ஞானத்தால் சந்தேகமின்றி (தத்வ த்ருஷ்ட்யா நிஶ்ஶங்க)
எல்லையற்ற கருணைக்கடலான உன்னை உபாயமாக ப்ரார்த்தித்து
(நிரவதிக தயம் த்வாம் ஸம்ரக்ஷகம் ப்ரார்த்தய)
உன் திருவடித் தாமரையில் என்பரத்தை ஒப்படைத்துவிட்டு
பொறுப்பும் பயமும் நீங்கியவனாக இருக்கிறேன் என்கிறார் ஸ்வாமி.
(த்வத் பாத பத்மே வரத நிஜபரம் நிர்பரோ நிர்பயோஸ்மி)
மேற்கூறிய விஷயங்களை மோக்ஷத்தை விரும்பும் சேதனர்களாகிய நாம் அநுஸந்தானம் செய்ய வேண்டும் என்பது ஸ்வாமி தேஶிகன் திருவுள்ளம்.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
                               🙏🙏(Nyaasa VimShati Concluded)🙏🙏



Friday, September 9, 2022

ந்யாஸ த்ரயீ - Part 4 - Nyaasa Vimshati


Shloka - 11

यत्किञ्चिद्रक्षणीयं तदवन निपुणे न्यस्यतोऽकिञ्चनस्य 
प्रस्पष्टं लोकदृष्ट्याऽप्यवगमित इह प्रार्थनादङ्गयोगः । 
तस्मात् कर्माङ्गकत्वं व्यपनयति परापेक्षणाभाववादः 
साङ्गे त्वष्टाङ्गयोगव्यवहृति नयतः षड्विधत्वोपचारः ॥ ११॥


ப்ரபத்திக்கு அங்கங்களுடைமை பற்றி விளக்கும் ஶ்லோகம் இது.
சாதாரண லௌகீக பலன்களைப்பெறவே பல ப்ரார்த்தனைகளை முன்வைக்கும்போது மிக உயர்ந்த மோக்ஷ பலனைத் தர வல்ல ப்ரபத்திக்கு அங்கங்கள் அவஶ்யம் என்கிறார் ஸ்வாமி.
பக்தியோகத்துக்கு ஶரணாகதி அங்கமாயிருக்கும் என்று கீதாபாஷ்யத்தில் சொல்கிறார் உடையவர் .த்யானம் நல்ல விதமாய் நடைபெற ஶரணாகதி அங்கமாகிறது இது "அங்க ஶரணாகதி" எனப்படும். சகல பலன்களையும் தரவல்லது ஶரணாகதி என்கிறார் உடையவர் கத்யத்ரயத்தில். வேதம், இதிகாச புராணங்கள், ப்ரும்ஹ சூத்ரம், பகவத்கீதை ஆகியவற்றுள் சொல்லப்பட்டுள்ள தர்மமே ஶரணாகதி.
இதற்கு 6 அங்கங்கள் உள்ளன என்று ஆகம க்ரந்தங்கள் கூறுகின்றன.
1. ஆனுகூல்ய ஸங்கல்பம்.
2. ப்ராதிகூல்ய வர்ஜனம்.
3. மஹாவிஸ்வாஸம்.
4. கோப்த்ருத்வவர்ணம் (கதியில்லாத்தன்மை)
5. கார்பண்யம் (எம்பெருமானே ரக்ஷகன்என வரித்தல்)

இந்த ஐந்தையும் உறுப்பாகக் கொண்டு ஆத்மாவை ஸமர்ப்பித்தால் அது "அங்கி"யாகிறது. த்ரிஜடை, விபீஷண ஶரணாகதிகள் இந்த ஆறு அங்கங்களுடன் கூடிய பூர்ண ஶரணாகதி என்கிறார் ஸ்வாமி.
அங்கங்கள் பற்றி எழும்3சந்தேகங்களுக்கு ஸ்வாமி ஸமாதானம் சொல்கிறார்.

1. ஶரணாகதிக்கு அங்கங்கள் தேவையா? ஆத்மாவை ஒப்படைக்கும் பர ஸமர்ப்பணத்திற்கு அங்கங்கள் அவஶ்யம்.
2. ஶரணாகதிக்கு அங்கங்கள் தேவையில்லை என்கிறார்களே?

ஸாஸ்த்ர ரீதியாகவும் ப்ரபத்திக்கு அங்கங்கள் தேவை. இவை இருவகைப்படும். அந்தரங்கம்என்பது உள்ளிருந்து செய்யும் உபகாரம் பஹிரங்கம் என்பது யக்ஞம், தானம், தபஸ் ஆகியன. இவை வெளிஅங்கங்கள் இத்தகைய வெளி அங்கங்கள் பக்தியோகத்துக்கு உள்ளவை. ப்ரபத்திக்கு அந்தரங்கம் மட்டுமே.
ஆத்மா, அதன் ரக்ஷணம், அதன் பலன் மூன்றையும் ஒப்படைத்தல் அங்கியாகிறது.இதனையே ஆறு விதம் கொண்ட ஶரணாகதி என்று ஆசார்யர்கள் விளக்கியுள்ளனர்.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼


Shloka 12:

पञ्चाप्यङ्गान्यभिज्ञाः प्रणिजगुरविनाभाव भाञ्चि प्रपत्तेः 
कैश्चित् संभावितत्वं यदिह निगदितं तत् प्रपत्त्युत्तरं स्यात् । 
अङ्गेष्वङ्गित्ववादः फलकथनमिह द्वित्रिमात्रोक्तयश्च 
प्राशस्त्यं तत्र तत्र प्रणिदधति ततः सर्ववाक्यैककण्ठ्यम् ॥ १२॥

அங்கங்கள்,அங்கி இவற்றில் ஏற்படும் சந்தேகங்களும் அவற்றின் தீர்வும் இதிலடங்கும்.
முதல் சந்தேகம் - எல்லா அங்கங்களுடன் ப்ரபத்தி அனுஷ்ட்டிக்கவேண்டுமா அல்லது சிலதை விடலாமா?என்பது.
கட்டாயம் ப்ரபத்தி ஆறுஅங்கங்களுடன் அனுஷ்ட்டிக்க வேணும் என ஆசார்யர்கள் சொல்லியுள்ளனர்.

இரண்டாம் சந்தேகம் - எல்லா அங்கங்களும் ஸம்பவிக்குமா?என்பது. ப்ரபத்தி சமயத்தில் எல்லாம் ஸம்பவிக்கலாம் அல்லது அதன்பிறகும் ஸம்பவிக்கலாம்.
அங்கங்களின் நிறை /குறை ப்ரபத்தியின் பலனை பாதிக்காது ஆனால் நம் ஸ்வரூபத்துக்கேற்ப இவைகளை கைகொள்ளுதல் அவஶ்யம்.

மூன்றாம் சந்தேகம் - அங்கங்களையே அங்கியாகச் சொல்வதன் தாத்பர்யம் என்ன?"விஸ்வாஸ:ஶரணாகதி"-- என்கிறார் பாஷ்யகாரர். "ப்ரார்த்தனா ஶரணாகதி" --போன்ற வசனங்கள் அந்த அங்கங்களின் முக்யத்வத்தையும், பெருமையையும் தெரிவிக்கும் பொருட்டு ஏற்பட்டவை."கருடோத்ஸவமே ப்ரும்ஹோத்ஸவம்"--என்பது
போல ப்ராதன்யத்தை வலியுறுத்தவே இந்த வசனங்கள்.ஆக ஐந்து அங்கங்களுடன் செய்யும்போதுதான் ப்ரபத்தியாகிய அங்கி நிறைவேறுகிறது என ப்ரபத்தி ஶாஸ்த்ரம் நன்கறிந்த பெரியோர்கள் நிர்ணயித்துள்ளனர்.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼


Shloka - 13:

रक्षोपेक्षा स्वसाह्य प्रणयवति भरन्यास आज्ञादि दक्षे 
दृष्टा नाऽत्र प्रपत्ति व्यवहृतिरिह तन्मेलने लक्षणं स्यात् । 
गेहागत्यदि मात्रे निपततु शरणागत्यभिख्योपचारात् 
यद्वानेकार्थभावाद्भवति च विविधः पालनीयत्वहेतुः ॥ १३॥


ப்ரபத்தியின் லக்ஷணத்தை ஆராய்ந்து தெளிவுபடுத்தும் ஶ்லோகம் இது.
விளையாட்டு ப்ராயத்திலிருக்கும் பாலகன் உபநயனம் ஆனபின்
காயத்ரி மந்த்ரோபதேஸம், சந்த்யாவந்தனம் முதலான அனுஷ்டானங்களால் தேஜஸ்வியாகிறான். இதேபோல ஸமாஶ்ரயேணம், பரந்யாஸம் என்னும் அனுஷ்டானங்களும்
மிகுந்த கவுரவம் உடையன. இந்த அனுஷ்டானங்கள் எம்பெருமானுக்கு தாஸன் என்ற உணர்வை ஏற்படுத்தக் கூடியவை. 

ஜன்மாந்த்ர ஸுஹ்ருதத்தினால் ஆசார்ய ஸம்பந்தம் ஏற்பட்டு இந்த அனுஷ்டானங்கள் ப்ராப்தமாகின்றன. இது சாதாரண நிகழ்வல்ல என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். ஒருவன் தன் ஆத்மாவையும் அதனைக் காப்பாற்றும் பொறுப்பையும் எம்பெருமானிடம் ஒப்படைப்பதே ஶரணாகதி என்பதாகும்.ஆத்மாவைக் காப்பாற்றுதல் என்பதற்கு அடுத்த ஜென்மம் ஏற்படாதவாறு முடிவு
செய்தல் என்று அர்த்தம்.
இதில் ப்ரார்த்தனை+ஆத்மரக்ஷணம் இரண்டும் அடங்கும். இவை தனித்தனியே ஶரணாகதியாகாது. பரஸ்பர உபகாரம்தானே நட்பின் லக்ஷணம். பொறுப்பை நாம் முழுதுமாய் விடவேண்டும்.
"இருகையும் விட்டேனோ த்ரௌபதியைப்போல"-- என்ற த்ரௌபதி ஶரணாகதி வேறு கதியில்லாத, கைமுதலில்லாத ஶரணாகதி. ப்ரார்த்தனையை முன்னிட்டுச் செய்வது.
"ஶரணம்"- என்றால் உபாயம், ரக்ஷகன், வீடு என்று பொருள். 
"ஆகதி"- என்றால் வருதல்,அடைதல் என்று பொருள்.
அர்ச்சையில் எம்பெருமான் எழுந்தருளியுள்ள கோயிலுக்குச் செல்வதே பரந்யாசம் என்று சொல்வது உபசாரவழக்காகும்.
"பத்தாஞ்சலி புடம்"--அஞ்சலியுடன் வந்தவனை ரக்ஷிக்க வேணும்.
"தீனம்" --தளர்ச்சியுடன் வந்தவனை ரக்ஷிக்க வேணும்.
"யாசந்தம்" --மிடுக்குடன் வந்து ப்ரார்த்திப்பவனையும் ரக்ஷிப்பேன்.
"ஶரணாகதம்" --என்னிடத்துக்கு வந்தவனை ரக்ஷிப்பேன்.
"நஹன் யாது ஸ்யாது ஶத்ரும் பரந்தம்"-- அழிக்கும் குணமுள்ள
ஶத்ருவாயினும் காப்பேன் - என்று வால்மீகி ராமபிரானின் திருவுள்ளத்தைக் காட்டுகிறார்.இதனை உதாரணங்களுடன் ஸ்வாமி தேஶிகன் அபயப்ரதான ஸாரத்தில் விஸ்தரித்துள்ளார்.
ஆக எப்படிப்பட்ட ஶரணாகதிக்கும் ரக்ஷணம்உண்டு. எத்திசையும் உழன்றோடிய காகம் ராமன் திருவடி அடைந்ததும், பெண்புறாவைப்பிடித்த வேடன் ஆண்புறா இருந்த மரத்தை அடைந்ததும் முழுமையான ஶரணாகதியாகாவிடினும் காப்பவனின் இடத்தை அடைந்ததே ஶரணாகதியாகிறது. இதை உபசார வழக்கமாகக் கொள்ளலாம். 
மோக்ஷத்துக்கான ஶரணாகதி என்பதுஶாஸ்த்ர ரீதியாக ப்ரார்த்தித்து ஆத்மரக்ஷணப் பொறுப்பை எம்பெருமானிடம்ஸமர்ப்பித்தலே ஆகும்.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka - 14:

आत्मात्मीयस्वरूपन्यसनमनुगतं यावदर्थं मुमुख़्शोः 
तत्वज्ञानात्मकं तत् प्रथममथ विधेः स्यादुपाये समेतम् । 
कैङ्कर्याख्ये पुमर्थेऽप्यनुषजति तदप्यर्थना हेतुभावात् 
स्वाभीष्टानन्यसाध्यावधिरिह तु भरन्यासभागोऽङ्गिभूतः ॥ १४॥

ஸேஷத்வ ஞானம் எல்லா நிலைகளிலும் தொடரவேண்டிய தின் அவ ஶ்யத்தை இந்த ஶ்லோகம் விளக்குகிறது.
ஒருவன் ப்ரபத்திக்கு முன்பும், ப்ரபத்தி அனுஷ்டிக்கும்போதும்,
ப்ரபத்திக்குப் பின்னும் எம்பெருமானுக்கு ஸேஷன் என்ற ஞானத்துடனிருக்க வேணும். இந்த ஞானம் மனதில் தோன்றும் ஒரு சிந்தனை.
ஆத்மஸ்வரூபம்+ஆத்மீயம் (தன்னைச் சேர்ந்த எல்லாவற்றையும்) எம்பெருமானுக்கு உடைமையாக்கி ஒப்படைப்பதை "யானும் நீயே என்னுடைமையும் நீயே" என்கிறார் நம்மாழ்வார்.
தாஸன் என்று நினைப்பது முதல்நிலை. இந்த ஞானத்துடன்
ஆத்மாவை ஒப்படைக்கவேண்டும். இந்த தத்வ ஞானம் வந்த காலத்திலும், உபாய அனுஷ்டான காலத்திலும், பல (phala) அனுபவ காலத்திலும் ஆத்மா எம்பெருமானுக்கு தாஸன் என்ற எண்ணத்துடன் கைங்கர்யத்தை ப்ரார்த்திக்க வேணும். உபாய காலத்தில் மட்டுமே பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். இதுவே பரந்யாஸம்.
"அஸேஷஸேஷதைகரதிரூப" என்று கத்யத்தில் இதனை உடையவர் குறிப்பிடுகிறார். இதுவே அங்கியான பரந்யாஸம் எனப்படுகிறது.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka - 15:

न्यसादेशेषु धर्मत्यजनवचनतोऽकिञ्चनाधिक्रियोक्ता 
कार्पण्यम् वाऽङ्गमुक्तं भजनवदितरापेक्षणं वाऽप्यपोढम् । 
दुःसाधेच्छोद्यमौ वा क्वचिदुपशमितवन्यसंमेलने वा 
ब्रह्मास्त्रन्याय उक्तस्तदिह न विहतो धर्म आज्ञादि सिद्धः ॥ १५॥

எல்லாவற்றையும் செய்யவல்ல எம்பெருமானிடம் ஆத்ம ரக்ஷணமப் பொறுப்பை ஒப்படைக்கும் ஒருவனிடம் எல்லா தர்மங்களையும் விட்டுவிடும்படி சரமஶ்லோகம் கூறுவதன்
விளக்கமே இந்த ஶ்லோகம்.
"ஸர்வ தர்மான் பரித்யஜ்ய" - என்ற வசனம் 6 விதமான அர்த்தங்களை அளிக்கிறது என்கிறார் ஸ்வாமி. 
முதல் அர்த்தம்- அகிஞ்சனாதிக்ரியோக்தா-- கர்ம, ஞான, பக்தி யோக தர்மங்களைச் செய்ய முடியாத அகிஞ்சனன்.

2ம் அர்த்தம் - கார்பண்யம் வாங்கமுக்தம்--கைமுதலில்லாத் தன்மையை அநுஸந்தித்துக் கொண்டு எம்பெருமானின் கருணையை ப்ரார்த்திப்பது.

3ம் அர்த்தம் - பஜனவத-- பக்தியோகத்துக்குள்ள தானம்,தபஸ்போன்ற வெளி அங் கங்கள் ப்ரபத்திக்கு வேண்டாம்.

4ம் அர்த்தம் -துஸ்ஸாத் இச்சாத்-- செய்யமுடியாத பக்தியோகத்தைச் செய்யமுற்படும் ஆசையை விடவேண்டும்

5ம் அர்த்தம் - உத்யமௌ--செய்ய முடியாத பக்தியோகத்தைசெய்யும் ப்ரயத்னத்தையும் அடியோடு விட்டுவிடவேணும்.

6ம் அர்த்தம் - ப்ரஹ்மாஸ்த்ர ந்யாய உக்த---ப்ரபத்திசெய்யும்போது அதில் நம்பிக்கை குறைந்து வேறு உபாயத்தை நாடினால் ப்ரஹமாஸ்த்ரத்துக்கு வேறு அஸ்த்ரப்ரயோகம் ஒவ்வாதது போல ப்ரபத்தியும் செயலிழக்கும்.

ஆக மேற்சொன்ன 6அர்த்தங்களையும் மனதிலிருத்தி ப்ரபத்திக்கு முன்னும் பின்னும் செய்யவேண்டிய ஆக்ஞா, அனுக்ஞா கைங்கர்யங்களைச் செய்தல் வேண்டும். 
இதற்கான அதிகாரஸங்க்ரஹ பாசுரம் - 

"மூண்டாலும் அரியதனில் முயல் வேண்டா
முன்னம் அதில் ஆசைதனை விடுகை திண்மை*
வேண்டாது சரணநெறி வேறோர் கூட்டு*
வேண்டில் அயன் அத்திரம் போல் வெள்கி நிற்கும்*
நீண்டாகும் நிறை மதியோர் நெறியில் கூடா*
நின் தனிமை துணையாக எந்தன் பாதம் பூண்டால்*
உன் பிழைகள் எல்லாம் பொறுப்பன் என்ற புண்ணியனார்
புகழனைத்தும் புகழுவோமே" 
(அதிகார ஸங் 47)

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
                                                                                                            (to be cont.d)

Tuesday, August 23, 2022

ந்யாஸ த்ரயீ - Part 3 -Nyaasa Vimshati



Shloka 5:

मोक्षोपायार्हतैवं भवति भवभृतां कस्यचित् क्वाऽपि काले
तद्वद् भक्तिप्रपत्त्योरधिकृति नियमस्तादृशा स्यान्नियत्या ।
शक्ताशक्तादि तत्तत्पुरुषविषयतः स्थाप्यते तद्व्यवस्था
यच्चाहुस्तद्विकल्पः सम इति कतिचित् तत् फलस्याविशेषात् ॥ ५॥

இதுவரை ஆசார்யன் அளித்த உபதேசத்தால் நல்ல ஞானமடைந்த சிஷ்யனுக்கு பக்தி, ப்ரபத்தி என்ற இரு உபாயங்களின் தன்மைகளை ஆசார்யன் எடுத்துக்கூறுகிறார் இதில்.
ஶ்ரீவைஷ்ணவன் செய்ய வேண்டிய முக்யமான கார்யம்
ஶரணாகதி. அடுத்த ஜன்மம் இல்லை என்ற கதி. மோக்ஷோபாயம் அனுஷ்டிக்கும் தகுதி இந்த உபதேசம் மூலம் கிடைக்கிறது. இத்தகுதி எல்லார்க்கும் கிடைப்பதில்லை.கர்ம பலனே இதற்கு மூல காரணம்.ஞானம், சக்தி, சாஸ்த்ர அனுமதி இருந்தால் இத்தகுதி பூர்த்தி யாகும். பக்தியோகம் செய்வதற்கான ஞானமும் சக்தியும் நமக்கில்லை. அது கடின உபாயம். ஶரணாகதி சுலபமானது. 
மற்ற விவஸ்தைகள் தேவைப்படாமையே இதன் சிறப்பு. ஆனால் அடையப் போகும் பலன் இரண்டுக்கும் சமம்.
  1. ஸம்ஸாரிகளுள் யாரோ ஒருவர்க்கு மட்டுமே மோக்ஷோபாயம் அனுஷ்டிக்கும் தகுதி கிடைக்கும்.
  2. பக்தி/ப்ரபத்தி என்ற இரண்டு அனுஷ்டானங்களால்தான் மோக்ஷம் பெற முடியும். இதில் ஞானம்,சக்தி,சாஸ்த்ர அனுமதி,விளம்ப ஸஹிப்பு (மோக்ஷம் பெற ஏற்படும் கால தாமதம்) இவற்றுடன் செய்வது பக்தியோகம். பாபங்கள் (ஸஞ்சித, ப்ராரப்த) முற்றிலும் ஒழிந்தபின்பே மோக்ஷம் சித்திக்கும். அஞ்ஞாத ஸுஹ்ருதத்தால் நிகழ்வது ஶரணாகதி. இந்த பிறவி முடிவில் மோக்ஷம் கிடைக்கும்
  3. இந்த இரு அனுஷ்டானங்களும் குரு, லகு விகல்பமுடையதாயிருப்பதால் லகு உபாயத்தையே எல்லாரும் செய்வர். ஆனால் பலன் இரண்டுக்கும் சமம்.ஒருவர் இந்த இரண்டையும் அனுஷ்டிக்க சாஸ்த்ரம் அனுமதிக்காது. பக்தி யோகம் தைலதாரை போல இடையீடற்ற த்யானம் செய்யச்சொல்கிறது. க்ருத தாரை போல அல்ல. பஹிரங்க அங்கங்கள் உண்டு. ஶக்தனே இதனைச் செய்யமுடியும். ப்ரபத்தி அஶக்தனுக்கு. இது ஐந்து அங்கங்கள் கொண்ட க்ஷணகால அனுஷ்டானம். ஆக இரண்டின் ஸவரூபங்களும் இரு த்ருவங்களாய் நிலைப்படுகின்றன. திருக்குருகைக் காவலப்பன் பக்தியோகம் செய்து கண்ணனை சாக்ஷாத் கரித்தார். இந்த பக்தி யோகிகளுக்கு பக்தியும், ஞானமும் பிறவிதோறும் தொடரும். ஆனால் நாதமுனிகள், நம்மாழ்வார் கால விளம்பத்தைப் பொறுக்கவில்லை. த்யான ருசியுள்ளவர்களுக்கு விளம்பம் ஒரு பொருட்டல்ல. ஆக மேற்கூறிய நான்கு தகுதியுடையவர் பக்தியோகம் செய்வர். இவற்றில் எதுவுமில்லாதவர் ப்ரபத்திக்கு அதிகாரியாகிறார்.
  4. இப்படி வித்யாசமிருப்பினும் பலன் சமமானது. பரத்தில் இருவருக்கும் அனுபவம் ஒன்றே. பக்தி யோகனுக்கு இகத்தில் பகவதனுபவம் அதிகம். ஶரணாகதனுக்கு பகவதனுபவம் இங்கே குறைவு.
"நாள் இழவு (நஷ்டம்) அன்றி பொருள் இழவு இல்லை" என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼
🌼


Shloka 6:

सानुक्रोशे समर्थे प्रपदनमृषिभिः स्मर्यतेऽभीष्टसिद्ध्यैः 
लोकेऽप्येतत् प्रसिद्धं न च विमतिरिह प्रेख़्श्यते क्वाऽपि तन्त्रे । 
तस्मात् कैमुत्य सिद्धं भगवति तु भरन्यासविद्यानुभावम् 
धर्मस्थेयाः च पूर्वे स्वकृतिषु बहुधा स्थापयांचक्रुरेवम् ॥ ६॥

ப்ரபத்தியின் பெருமையையும்,உயர்வையும் காட்டும் ஶ்லோகம் இது.
  1. கருணையும், சக்தியும் உடையவனிடம் ப்ரபத்தி செய்தால் பலன் கிடைக்கும் என வால்மீகி, வ்யாசர் போன்ற ரிஷிகள் தங்கள் ஸுக்திகளில் சொல்லி யுள்ளனர். லௌகீகமான கார்யம் நிறைவேற ஓரளவு சக்தியும், கருணையும் கொண்ட மனிதனை நம்புகிற நாம் ஸர்வ ஶக்தனாகிய எம்பெருமான் கட்டாயம் பலனளிப்பான் என நம்ப வேணும். லக்ஷ்மணன், பரதன், தண்டகாரண்ய ரிஷிகள், சுக்ரீவன், விபீஷணன், த்ரௌபதி, பாண்டவ ஶரணாதிகள் போன்றவை இதிகாச ப்ரசித்தமானவை.
  2. சக்தியுள்ளவனின் உதவியை கார்ய சித்திக்கு நாடுவது உலக நியதி. ஸாஸ்த்ரங்களும் இதனைத் தடுக்க வில்லை. பரீக்ஷித் நகர்சோதனையில் கலிபுருஷன் பசு ஒன்றை ஹிம்ஸிக்க அவனை வெட்டக்கை ஓங்க, கலி செய்த ஶரணாகதியை ஏற்று அபயம் அளித்து தன்நாட்டை விட்டு ஓடும் படி செய்ததாகவரலாறு. கீதோபதேசம் கேட்ட அர்ஜுனனின் பேரனுக்கே ஶரணாகதி செய்தவனிடம் கருணையிருக்கும்போது எம்பெருமான் விஷயத்தில் சந்தேகமே வேண்டாம்.
  3. ஆக இந்த ஶரணாகதி என்ற ப்ரம்ஹ வித்தையை, தர்ம நிர்ணயம் செய்யும் ஆழ்வார் ஆசார்யர்கள்சொல்லிவைத்துள்ளனர். ஆக இந்த அனுஷ்டானம் பூர்வாசார்யர்கள் ஸ்தாபித்த பரம தர்மமாகும்.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼


Shloka  - 7

शास्त्रप्रमाण्यवेदी ननु विधिविषये निर्विशङ्कोऽधिकारी 
विश्वासस्याङ्गभावे पुनरिह विदुषा किं महत्वं प्रसाध्यम् । 
मैवं घोरापराधैर्ः सपदि गुरुफले न्यासमात्रेण लभ्ये 

शङ्का पार्ष्णि ग्रहार्हा शमयितुमुचिता हेतुभिस्तत्तदर्है ॥ ७॥

மஹா விஶ்வாஸத்தின் அவஶ்யத்தைச் சொல்கிறது இந்த ஶ்லோகம்.
முதல் இரு வரிகள் கேள்விகளாகின்றன. அதாவது சாஸ்த்ரங்களை நம்புகின்றவனாக இருப்பவன் அது விதிக்கும் காரியங்களைச்செய்யத் தயங்கமாட்டான் என்னும்போது
அவனுக்கு விஶ்வாஸம் இருக்கிறது என உணரலாம்.
அடுத்த இரு வரிகள் க்ஷணகால அனுஷ்டானமாகிய ப்ரபத்தி அளிக்கும் மிகப்பெரிய பலனில் சந்தேகம் ஏற்படக்கூடியதைத் தவிர்க்க ப்ரபன்னனுக்கு மஹாவிஶ்வாசம் எம்பெருமானிடம்
இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
ப்ரபத்தியின் முக்ய அங்கமாக இந்த மஹா விஶ்வாசம் உள்ளது.

இருகையையம் விட்டு க்கதறிய த்ரௌபதியையும், எல்லாம் விட்டு வந்த விபீஷணனையும் காப்பாற்றியது எம்பெருமானிடம் அவர்கள் கொண்ட மஹாவி ஶ்வாஸமே. மாபெரும் நம்பிக்கை என்பதால் இதனைத் தனியான அங்கமாய்ச் சொல்லியுள்ளது.
பாத்ரமறிந்து மோக்ஷபலனைத் தருவதில்லை எம்பெருமான். இப்போதாவது என்னைச் சரணடைந்தானே என்ற கருணையால் உந்தப்பட்டு எம்பெருமான் செய்யும் பரம அனுக்ரஹ
பலன். ஒரேஒருநாள் ஸீதாபிராட்டி ராக்ஷஸிகளிடம் பட்ட அவஸ்தையைப்பார்த்த ஹனுமன் அவர்களைக் கொல்ல
முற்படும்போது 10 மாதமாக தன்னை ஹிம்ஸித்த அவர்களுக்கு கருணை கூர்ந்து அபயமளிக்வில்லையா பிராட்டி! ஆனாலும் கோர பேரபராதங்கள் செய்த நமக்கு இந்த சிறிய க்ஷணகால ப்ரபத்தி மோக்ஷத்தை அளிக்குமா என்ற சந்தேகமானது செய்யவிடாமல் பின்னே இழுக்கும்.
ஒத்தாரும் மிக்காரும் இல்லாத ஸர்வஶக்தனான எம்பெருமான் தன் அபார கருணையாலே இதனைச் செய்கிறான். இந்த விஷயங்களை ஆசார்யன் மூலம் நன்கு தெளிதல் வேண்டும்.


🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka - 8


नेहाभिक्रान्ति नाशो न च विमतिरिह प्रत्यवायो भवेदिति 
उक्तं कैमुत्य नीत्या प्रपदनविषये योजितं शास्त्रविद्भिः । 
तस्मात् क्षेत्रे तदर्ह सुविदितसमयैर्देशिकैः सम्यगुप्तं 
मन्त्राख्यं मुक्तिबीजं परिणति वशतः कल्पते सत्फलाय ॥ ८॥


மந்த்ர ஜபமும்,நாமஸங்கீர்த்தனமும் ப்ரபத்தியின் மூலமே மோக்ஷம்தர வல்லவை என்பதனை இந்த ஶ்லோகம் வலியுறுத்துகிறது.


பக்தி யோகத்தையும், ப்ரபத்தியையும் ஶாஸ்த்ரங்கள் ஒத்துக்கொண்டுள்ளன. இவை இரண்டும் முடியாதபோது மந்த்ர, நாம கீர்த்தனங்கள் செய்ய வேதம் அனுமதிக்கிறது. தன்வசமின்றி
"ஹரி" என்ற நாமத்தை ஒருவன் சொன்னால் பாபம் விலகும். காட்டில் ம்ருகங்களிடையே அகப்பட்ட ஒருவன் சிம்ஹ கர்ஜனை கேட்ட மாத்ரத்தில் அவற்றினிடமிருந்து தப்பி
விடுபடுவது போல "ஹரி" ஸப்தம் கேட்டால் / சொன்னால் போதும். பாபங்கள் விலகும் என்கிறது சாஸ்த்ரம்.
இன்றைய கால கட்டத்தில் பக்தி யோகம் செய்வதற்கான ஞானம், ஶக்தி நமக்கு கிடையாது. ப்ரபத்திக்கும் முக்ய தேவை "மஹாவிஶ்வாஸம்"
ஸர்வ ஶக்தனும், பரமகாருணிகனுமாகிய எம்பெருமான் என்றும் இதற்கு அடிமையானவன். தான் பெண் என்பதையும், தன்நிலை மையையும், தன்னைச்சுற்றியிருந்த பெரியோர்களையும் தள்ளி
வைத்தது த்ரௌபதியின் மஹாவிஶ்வாஸம். இத்துணை கடினமாகப் பெறும் மஹாவிஶ்வாசத்தைவிட மந்த்ர ஜபம் ஸுலபம். ஆனால் இது ஸாக்ஷாத்தாக பலனைத் தராது.

பகவான் கீதையில் மோக்ஷம் பெற கர்ம, ஞான, பக்தி யோகம் செய்பவன் பாதியில் விட்டானே யாகிலும் பாபமாகாது. பலன்தராமல் போகாது. ஜன்ம வாசனை தொடரச்செய்து பலனளிக்கும். வீண்போகாது என்கிறான். ஆக ப்ரபத்தி விஷயத்திலும் இதேபோன்ற பெருமை இருப்பதை ஸாஸ்த்ரங்கள் கூறுவதைப் பெரியோர்கள் ஸ்தாபிக்கின்றனர்.
உழவுத்தொழிலில் தேர்ந்த உழவன் நல்ல விளைநிலத்தில், தேர்ந்த விதையிட்டு வளர்த்த மரம் நல்ல பழங்களைத் தரும். விதை நேராகப்பழமாகாது. ஆனால்விதை பரிணாமத்தால்
பழமாகிறது.
அதுபோல தேர்ந்த ஆசார்யன் ஸத் ஸிஷ்யனுக்குச் செய்யும் மந்த்ரோபதேசம் அவனுக்கு ஶ்ரத்தை உண்டாக்கிய மஹாவிஶ்வாஸத்தால் மோக்ஷ பலனைப் பெறச்செய்யும். ஆக
மந்த்ரத்தைத் தானே உச்சாடனம் செய்து மோக்ஷம் பெற இயலாது என்று உணர வேண்டும்.
  • இஹ அபிக்ராந்தி நாஶந-- கர்ம யோகத்தில் தொடக்கம் வீணாவதில்லை.
  • இஹ விதி ப்ரத்யயாயச நபவேத் --- கர்மயோகம் நடுவில் தடைப்பட்டாலும் பாபம் ஏற்படாது.
  • இதி உக்தம் --- என கீதை சொல்கிறது.
  • ப்ரபதன விஷயே சாஸ்த்ர வித்பி:யோஜிதம் --- ப்ரபத்தி விஷயத்திலும்  இதேபோல் ஸாஸ்த்ரமறிந்த பெரியோர்களால் பொருத்திப் பேசப்பட்டுள்ளது.
  • தஸ்மாததர்ஹே --- ஆக அந்த உபதேசத்துக்கேற்ப
  • க்ஷேத்ரே ஸுவிதித ஸமயே ---- சேதனனாகிய நிலத்தில் விதைக்கும் காலத்தை நன்கறிந்த 
  • தேஶிகைஸம்யகுப்தம்---- ஆசார்யர்களால் நன்கு விதைக்கப்பட்ட
  • மந்த்ராக்யம் முக்திபீஜம் --- ப்ரபத்தி மந்த்ரமாகிய மோக்ஷ விதை
  • பரிணதி வஶத:--- பக்குவமடைந்து
  • கல்பதேஸத்பலாய-- மோக்ஷமாகிய சிறந்த பலனைத்தர வல்லதாகிறது.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka - 9

न्यासः प्रोक्तोऽतिरिक्तं तप इति कथितः स्वध्वरश्चास्य कर्ता 
अहिर्बुध्न्योप्यन्ववादीदगणि दिविषदामुत्तमं गुह्यमेतत् । 
साक्षान्मोक्षाय चासौ श्रुत इह तु मुधा बाध शङ्का गुणाढ्ये 
तन्निष्टो ह्यन्यनिष्ठान् प्रभुरतिशयितुं कोटिकोट्यंशतोऽपि ॥ ९॥

ப்ரபத்தி மோக்ஷத்துக்கு நேர்க் காரணமாவதை இந்த ஶ்லோகம்
விளக்குகிறது.
  1. ந்யாஸம் அதிரிக்தமான தபஸ். இதற்குச் சமமானஅனுஷ்டானம் ஏதுமில்லை. ஒருவன் செய்த ஶரணாகதி பல யாகங்கள் செய்ததற்கு ச்சமம்.
  2. சமித் ஸ்தானத்தில் நம: என்ற சொல்லை வைத்துச் செய்வதாக அர்த்தம். ந்யாஸம் அனுஷ்டித்த கர்த்தா நல்லயாகங்கள் (அஶ்வமேதம், வாஜபேயம் போன்ற யாகங்கள்) செய்ததற்கு ச்சமம். இதையே "ஸ்வத்வர:" என்ற சொல் குறிக்கிறது. "செய்த வேள்வியர்" என்கிறார் ஆழ்வார்.
  3. அஹிர்புத்ஞ ஸம்ஹிதையில் சிவன் ந்யாஸத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். சக்ரத்தாழ்வார் பெருமையைப் பேசுகிறார்.
  4. தேவர்களுக்கு மிக உயர்ந்த ரஹஸ்யம்இது. இந்த ஶரணாகதி நமக்கும் கிடைத்துள்ளது. இதுவே அல்ப பலனிலிருந்து மிகப்பெரிய பலனாகிய மோக்ஷம் வரை உபாயமாகிறது என வேதம் சொல்கிறது.
"முமுக்ஷு:ஶரணம் ப்ரபத்யே" என்பது வேதமந்த்ரம். ந்யாஸம் சாக்ஷாத் மோக்ஷோபாயம். பரம்பரையானதல்ல. கர்ம யோகம் செய்தால் மோக்ஷம் ஸாக்ஷாத்தாகக் கிடைக்காது. ஞான, பக்தியோகம் செய்தபின்பே மோக்ஷம். ஆனால் ஶரணாகதி செய்த ஒருவனுக்கு எம்பெருமானின் அபரிமிதமான
ஔதார்ய காருண்ய குணவிஸேஷத்தால் மோக்ஷம் உறுதியாகிறது. 

கூரத்தாழ்வான் ஸ்ரீவைகுண்டஸ்தவத்தில் சொல்வதுபோல் இத்தனை உயர்ந்த மோக்ஷத்தைக் கொடுத்த பின்பும் கொடுத்தது போதாது என எண்ணுபவன் எம்பெருமான்.
ஆக மற்றைய கர்ம ஞான பக்தி யோகத்தை செய்பவரைவிட கோடி கோடி மடங்கு உயர்ந்தவன் ப்ரபன்னன். இவ்விஷயத்தை ஸ்வாமி தேஶிகன் தன் தேவநாயக பஞ்சாஸத் ஸ்தோத்ரத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.
"நிஷ்கிஞ்சநத்வ தநிநா விபுதேஶயேந
ந்யஸ்த ஸ்வரக்ஷண பரஸ் தவ பாத பத்மே
நாநாவித ப்ரதித யோக விசேஷ தந்யா:
நார்ஹந்தி தஸ்ய ஶதகோடி தமாம்ஶ கக்ஷ்யாம்" (47)


🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼

Shloka - 10

नानाशब्दादिभेदादिति तु कथयता सूत्रकारेण सम्यक् 
न्यासोपासे विभक्ते यजनहवनवच्छब्दभेदादभाक्तात् । 
आख्या रूपादिभेदः श्रुत इतरसमः किञ्च भिन्नोऽधिकारः 
शीघ्रप्राप्त्यादिभिः स्याज्जगुरिति च मधूपासनादौ व्यवस्थाम् ॥ १०॥

ப்ரபத்தி தனிப்பட்ட உபாயமாவதைப் பற்றி க்கூறும் ஶ்லோகம் இது. இது ஸ்ரீபாஷ்ய விஷயமான ஶ்லோகம். ஞான ஶப்தாதி பேதாதி கரணத்திலிருந்து ஸ்வாமி விஷயங்களைக் காட்டியுள்ளார்.
எம்பெருமானார் அருளிய ஸ்ரீபாஷ்யம், கீதா பாஷ்யம் இரண்டிலும் பக்தியோகமே ப்ராதான்யமாய்ப் பேசப்படுகின்றன. ந்யாஸம் பற்றிய விவரணமில்லையே என்ற உறுத்தல் இருந்தது. ஆனால் சூத்ரகாரராகிய வ்யாசர் இதற்குச் சமாதானம் சொல்கிறார்
"நாநா ஶப்தாதி பேதாத்" என்பது சூத்ரம். வேதத்தில் யாகம், ஹோமம், தானம் இவை பற்றிய விவரங்கள் சொல்லப்பட்டுள்ளது. 

உதாரணமாக அஶ்வமேதம், ஸோமயாகம் என்றால் ஒவ்வொன்றுக்கும் தனி தேவதை, ரூபம், த்ரவ்யம் உள்ளன. ஹோமம் என்றால் அந்த தேவதைக்கு அக்னி மூலம் நெய் ஆஹூதி செய்ய வேண்டும். எனதல்ல என்ற எண்ணத்துடன் பிறருக்கு ஸமர்ப்பணம் செய்வதில் தானம் பூர்த்தியாகும்.
ஆக இவை ஒவ்வொன்றுக்கும் அந்த வினையைச் (அனுஷ்டானத்தை)
செய்யும் போது ஶப்தங்கள் வேறுபடுகின்றன. 'யஜேத்' என்பது யாகத்துக்கும், 'ஜுஹ்யாத்' என்பது ஹோமத்துக்கும், 'தத்யாத்' என்பது தானத்துக்கும் ஶப்தங்களாகின்றன. ஶப்தத்தையிட்டு பலன் கிடைக்கிறது.
ஸந்த்யாவந்தனம் என்பது அர்க்யம், காயத்ரி, உபஸ்தானம் அடங்கிய ஒரே அனுஷ்டானம். அதேபோல திருவாராதனம் என்பது மந்த்ராசனம், திருமஞ்சனம், அலங்காரம், ஸமர்ப்பணம், நிவேதனம் அடங்கிய ஒரே அனுஷ்டானம்.பக்தி யோகம் செய்பவன் 32 ப்ரும்ஹ வித்தையில் ஏதாவது ஒன்றைப் பற்றி த்யானம் செய்யலாம். 

மதுவித்யா, சாண்டில்ய வித்யா, தகரவித்யா என்பன போன்ற 32 வித்யைகளில் 32 வதாக "ந்யாஸவித்யை" சொல்லப்படுகிறது. மேற்சொன்ன வித்யைகளில் ரூபம், குணம் வேறுபட்டாலும் ஶப்தவேறுபாடில்லை. உபாஸனம் (த்யானம்/வேதனம்) தான் செய்யவேண்டும். ஶரணாகதியில் "ஓமித் யாத்மீய உஞ்சீத்" என விதிக்கிற ஶப்தம் வித்யாசமாயுள்ளது. யாகத்தில் ஞான பாகமும், ஹோமத்தில் அனுஷ்டானமும் முக்யமாவது போல் "எனதல்ல" என்ற த்யாகம் எண்ணம் வந்தால்தான் தானம் பூர்த்தியாகும். இந்த ந்யாஸவித்யைக்கு காருண்ய குணவானாகிய பகவான்ரூபமாயிருந்து கோரின காலத்தில் பலனைத்தருகிறான். 

பக்தியோகம் செய்யமுடியாமையே இதற்கு முக்ய தகுதி. 15 விதமான அதிகாரி (தகுதி) பேதம் ந்யாஸத்துக்குச் சொல்லப்பட்டுள்ளது. மதுவித்யை செய்பவன் சூர்யனை உபாஸித்து தேவலோகத்தில் அஷ்ட வஸுக்களில் ஒருவராக 10யுகங்களிருந்து பின் மோக்ஷமடைவான் என்று சொல்லப்படுகிறது. தகர வித்யா நிஷ்டனுக்கு இதைவிட சீக்ர மோக்ஷம் என்கிறது.
ஆக ந்யாஸம் -- உபாஸனம் இரண்டும் வேறு. இரண்டுக்கும் ஸப்தம் 'ரூபம், பலன், தகுதி வேறானவை.

கீதாபாஷ்யத்தில் பக்திக்கு ப்ரபத்தி ஒரு அங்கம் என்று குறிப்பிட்டாலும், ப்ரபத்தி ஸ்வதந்த்ரமாக மோக்ஷம் தரவல்லது. ஸ்ரீபாஷ்யகாரர் கத்யத்தில் ப்ரபத்தி மோக்ஷத்துக்கு நேர்க்காரணமாகும் என்று வெளிப்படையாகவே விளக்கியுள்ளார்.

🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
                                                            (to be cont.d)
                          

Monday, May 30, 2022

ஸ்ரீ பாஷ்ய ஸாரம்!!









1. அவதாரிகை

"ஆரணநூல் வழிச்செவ்வை அளித்திடும் ஐதுகர்க்கு ஓர்
வாரணமாய் அவர்வாதக் கதலிகள் மாய்த்த பிரான்
ஏரணிகீர்த்தி ராமானுச முனி இன்னுரை சேர்
சீரணி சிந்தையினோம் சிந்தியோம் இனித்தீவினையே"

- (அதிகார ஸங்க்ரஹம் 4)

என்று ஸ்வாமி தேஶிகன் எதிராசர் பெருமையைப் பறை சாற்றுகிறார்.
தேசமெலாம் உகந்திடவே பெரும்பூதூரில் சித்திரையில் ஆதிரைநாள் வந்து தோன்றிய எம்பெருமானார் நம் விஸிஷ்டாத்வைத தர்ஶன ஸ்தாபகர். "பகவத் ராமானுஜ தர்ஶனம்" என்று இதனை திருக்கோட்டியூர் நம்பி கொண்டாடுகிறார். நம் குரு பரம்பரா வைபவங்களுள் மிக முக்யமானது உடையவர் அருளிய ஸ்ரீ பாஷ்யம். உலகில் எத்தனையோ பாஷ்யங்களிருப்பினும் ஸ்ரீ என்ற அடைமொழியுடன் கூடியது இது மட்டுமே. ஸரஸ்வதி தேவியே அங்கீகரித்து அருளிய பெயர் இந்த க்ரந்தத்துக்கும் அதனை அருளிச்செய்தவர்க்கும்.
இத்தகைய சிறப்புமிக்க ஸ்ரீபாஷ்யம், கற்க நியமங்கள் ஏராளம் இருப்பினும் அதன் ஸாரத்தை எல்லோரும் அறியலாம் என்பது ஸ்வாமி தேஶிகன் திருவுள்ளம்.
உபநிஷத் வார்த்தைகளுக்கு விசாரம் செய்யும் வகையில்
வ்யாஸர் சூத்ரங்களைச் (சுருக்கமான வாக்கியங்கள்) செய்தார். உபநிஷத் என்ற பாற்கடலில் கடைந்தெடுத்த அமுதமே இந்த சூத்ரங்கள். பகவத் விஷயம் பகவத் கீதை இவற்றைப் போல இதனையும் உபதேசிக்க வேணும் என்பது வ்யாசரின் உத்தேஸ்யம். இவரது சிஷ்யரான போதாயனர், “போதாயன சூத்ர வ்ருத்தி” என்ற க்ரந்தத்தைச் செய்தார். மகாபாரதத்தைவிடப் பெரியது இது. இதனைப்படித்து விட்டு வ்யாசர் திருவுள்ளத்தையொட்டி பாஷ்யம் செய்ய நினைத்தார் ராமானுஜர். காஷ்மீரத்தில் ஸரஸ்வதி பீடத்தில் இருந்த ஒரே சுவடியை அங்கு சென்று படித்து எழுத முடியாத நிலை. எண்ணம் ஈடேறாது பரமபதித்த ஆளவந்தாரின் மடங்கிய மூன்று விரல்களும் ராமானுஜரின் ப்ரதிஞையால் விரிந்தன. மூன்று விஷயங்களுள் ஒன்று ப்ரும்ஹ சூத்ரத்துக்கு பாஷ்யம் செய்வது. ஆளவந்தார் திருவுள்ளத்தை ராமானுஜரைக் கொண்டு நிறைவேற்ற அரங்கன் ஸங்கல்பித்தான். ஆக மொழியைக் கடக்கும் பெரும்புகழானாகிய தன் சிஷ்யன் கூரத்தாழ்வானுடன் காஷ்மீரம் சென்று அங்கு ஆழ்வான் மனதில் ஏற்றிக்கொண்ட சூத்ரங்களை ராமானுஜர் வியாக்யானம் செய்ய அதனைப் பட்டோலைப்படுத்தினார் ஆழ்வான். இதனைத் திரும்ப காஷ்மீரம் சென்று ஸரஸ்வதி பீடத்தில் வைத்து அங்கீகாரம் பெற வேண்டுமாகையால் ஆங்கே ஸரஸ்வதிதேவி தன் ஸிரஸில் ஏற்று ஸ்ரீபாஷ்யம் என்று பெயரிட ராமானுஜரும் ஸ்ரீபாஷ்யகாரர்
ஆனார். ஸ்ரீ என்ற வேதத்துடன் பொருந்தியிருப்பது இந்த ஸ்ரீபாஷ்யம். வித்யாமூர்த்திகளாகிய வ்யாசர், தக்ஷிணாமூர்த்தி, ஸரஸ்வதி ஆகியோர்க்கு ஆராத்ய தெய்வமாகிய ஹயக்ரீவமூர்த்தியையும் அளித்தாள் தேவி. ஆக நம் சம்ப்ரதாயத்துடன் எம்பெருமானும் கூடவே வருகிறான். ஸம்ரதாய வ்ருத்திக்கு 74 ஸிம்ஹாஸநாதிபதிகளை நியமித்தார் ராமானுஜர். தன் ஞானபுத்ரரான திருக்குருகைப் பிரான்பிள்ளான், முதலியாண்டான், நடாதூராழ்வான், கிடாம்பி ஆச்சான் ஆகிய நால்வரும் நேரடியாக பாஷ்யகாரரிடம் ஸ்ரீபாஷ்யம் கேட்டவர்கள். பிள்ளானின் சிஷ்யன் எங்களாழ்வான், அவரது சிஷ்யன் நடாதூரம்மாள், தொடர்ந்து அப்புள்ளார், இவரிடம் ஸ்வாமி தேஶிகன் என பரம்பரையாகிற்று.
ரங்கநாதனால் பிறப்பிக்கப்பட்ட ஸ்ரீபாஷ்யம் பேரருளானால் வளர்க்கப் பட்டது. பெற்றதாய் ராமானுஜன் வளர்த்த தாய் தேஶிகன். ஆக ஆளவந்தார் நினைத்ததை காரேய் கருணை ராமானுஜர் செய்தார் .செயல்படுத்தி மக்களிடையே ஞானம், பக்தி, அனுபவம் ஏற்படுத்தியவர் ஸ்வாமி தேஶிகன்.

2 - பரப்ரஹ்மம்

ஸ்ரீபாஷ்யம் என்ற க்ரந்தம் அருளியவர் ஸ்ரீபாஷ்யகாரர். இப்படி பெயரமைவது வெகுஶ்ரேஷ்டம்.
"பவமரு பரிகிந்ந-........நாடிந்தமான: (யதிராஜ ஸப்ததி 30) இன்ப நாடியைத் தட்டினால் மிகுந்த இன்பம் விளைவது போல எம்பெருமானின் ரஹஸ்யங்களைக்காட்டி நமக்கு பேரானந்தத்தைத் தர வல்லது இந்த எம்பெருமானாரின் ஸ்ரீபாஷ்யம் என்கிறார் ஸ்வாமி தேஶிகன். 4 அத்யாயங்களளுள் 16 பாதங்களை அடக்கியது. இத்தனையிலும் மொத்தமாகப் காட்டப்படும் விஷயம் "பரப்ரஹ்மம்".
முதலிரண்டு அத்யாயங்கள் ஆதிகாரணன் ஸ்ரீமன்நாராயணனே என்பதை உறுதிபட ஸ்தாபிக்கிறது. 
3ம் அத்யாயம் உபாயத்வத்தையும்
4ம் அத்யாயம் பலாத்யாயமாயும் அமைகின்றன. இந்த 4 அத்யாயங்களின் மையக்கருத்தை பெரியாழ்வாரின் இத்திருமொழி தெளிவாய்த் தெரிவிக்கிறது.
"அண்டக்குலத்துக்கதிபதியாகி"--(ப்ரபஞ்ச ஸ்ருஷ்டி "அசுரர்இராக்கதரை...இருடீகேசன்தன்னை"--(தடையற்ற பெருமை)
"தொண்டக்குலத்துள்ளீர்"---(உபாயம்)
பண்டைக்குலத்தைத் தவிர்ந்து"---(ஸம்ஸாரம் தவிர்க்கும் பலம்)
"பூவளரும் திருமாது புணர்ந்த நம் புண்ணியானார்
தாவளமான தனித்தவம் சேர்ந்து தமருடனே
நாவளரும் பெரு நான்மறை ஓதிய கீதமெலாம்
பாவளரும் தமிழ் ப்பல்லாண்டிசையுடன் பாடுவமே" (பரமபத சோபானம் 18) என்கிறார் ஸ்வாமி.
வேதம் சொல்லும் பரப்ரஹ்மம் நம்மாழ்வார் குறிப்பிடும் "உயர்வற உயர்நலம் உடையவன்". உலகங்களைப்டைத்து , அதில் வ்யாபித்து எண்ணற்ற கல்யாண குணகணங்களைக் கொண்டவனாகையால் உயர்ந்தவன் எம்பெருமான். ஜீவர்களுக்கு மோக்ஷஸ்தானமளிப்பதால் உயர்த்துபவன். நம்மாழ்வார் குறிப்பிடும் "உயர்வற உயர்நலமுடையவனும்", "ஒத்தார்மிக்காரை இலையாய மாமாமயனும்" "பகம்"என்ற 6 குணங்களையுடையனுமாகிய எம்பெருமானே ஶ்ருஷ்டி,ஸ்திதி, லய காரணனாவான். ஸத்ய, ஞான,
அனந்த ஆனந்த ஸ்வரூபனாகிய எம்பெருமானை தேச, கால, வஸ்துக்களால் வரையறுக்க முடியாது என்பதை "நந்தா விளக்கே அளத்தற்கரியாய்" என திருவாய்மொழியும்,
"நந்துதலில்லா நல்விளக்காகி
அந்தமில் அமுத ஆழியாய் நிற்றி"
என மும்மணிக்கோவை யும்
முழக்கமிடுகின்றன.
இப்படி பட்ட எம்பெருமானைத்
தெரிந்து கொள்ள ஸாஸ்த்ரம் ஒன்றே உபகாரமாயிருக்கும்.

எங்கும் கண்டிராத ப்ரஹ்மத்தை அனுமானிக்க முடியாது.
வேதமும் நாராயணனும் பிரிக்க முடியாத பதி பத்நீ பிணைப்பை
ஒத்தவை.வேதம் பத்நீ.நாரயணன் நினைப்பதை வேதம் சொல்லும்.
ஆக வேதமாகிய பத்நீக்கு அதீனமான பதி நாராயணன்.
இத்தகைய வேதத்துக்கு ராமானுஜர் செய்த அலங்காரமே ஸ்ரீபாஷ்யம்

."ப்ரமாணம் லக்ஷ்மண முனி: ப்ரதி க்ருண்ணாது மாமகம்
ப்ரஸாதாயதி யத்ஸூக்தி: ஸ்வாதீன பதிகாம் ஶ்ருதிம்"----
(யதிராஜ ஸப்ததி)
வேதத்தின் மூலம் எம்பெருமானை புருஷார்த்தமாக அனுபவிக்க வேணும் குழந்தையிடமிருந்து அம்மாவுக்கும் அம்மாவுடனிருக்கும் குழந்தைக்கும் கிடைக்கும்ஆனந்தம் போன்றது
ஜீவனுக்கும் எம்பெருமானுக்குமிடையே கிடைக்கும் ஆனந்தம்.உலகில் உள்ள வஸ்துக்களனைத்திலிருந்து விலக்ஷணமானவன் எம்பெருமான்.உவமைகூற
முடியாத ஞான, ஶக்தி, பல, வீர்ய, ஐஸ்வர்ய , தேஜஸ் உடையவன்.
"கோணைபெரிதுடைத்து எம் பெம்மானைக்கூறுதலே" (2-6-10)
என்கிறார் நம்மாழ்வார். ஜகச்சக்ஷு எனப்படும் சூர்யனுக்கும் சிறிய விளக்கின்ஒளிக்கும் உள்ளவித்யாசம் போன்றும் , புழுவுக்கும் மனுஷ்யனுக்கமுள்ளதுபோன்றும், மனுஷ்யனுக்கும் தேவர்களுக்குமுள்ள வித்யாசம்போன்றும்
எல்லா வஸ்துக்களிலிருந்தும் வேறுபட்டு மேம்பட்டு விளங்குபவனே எம்பெருமான்.


3- காரண வாக்யங்கள்
எம்பெருமானை அறிய பொருத்தமான ஸாஸ்த்ரம் வேதம் ஒன்றே. வேதமும் பகவானும் பிரிக்கக் கூடாதவை. வேத்தின் பூர்வ பாகம் அனுஷ்டானம் பற்றியும் பல தேவதைகளை க்குறித்த யாக யக்ஞங்கள் பற்றியது. உத்தரபாகமாகிய பின்பகுதி தேவதைகளுக்குள் அந்தர்யாமியாயிருந்துபலனளிக்கும் எம்பெருமானைப் பற்றிப் பேசுகிறது.
"வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர் விழுங்கும் கோதிலின் கனியை"-- என்கிறார் கலியன். 
பிற தேவதைகள் எம்பெருமானுக்கு அங்கமாயுள்ளனர். க்ருஷ்ணன் திருவடியில் அர்ஜுனன் அர்ச்சித்த புஷ்பங்களை சிவன் திருமுடியால் ஏற்றான் என்பது வரலாறு. ஆகஜீவர்களாகிய நாம் எம்பெருமானின் தாஸர்கள்.
ஆனால் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்பது அபேத ஶ்ருதி. இதை "அத்வைதம்" என்பர்.
இந்த இரண்டும் வேறானது என்பது பேத ஶ்ருதி. இதை "த்வைதம்" என்பர். இவ்விரண்டுக்கும் நடுவே உள்ளது கடகஶ்ருதி.
ராமானுஜர் இந்த இரண்டையும் எடுத்துக்கொண்டு ப்ரஹ்மம் தனியாக இல்லை எல்லா வஸ்துக்களிலும் சேர்ந்துள்ளது என்றார். ப்ரபஞ்சத்துடன் கூடியவன் பகவான் என்று சமன்வயப்படுத்தியவர் பாஷ்யகாரர். ஜீவாத்மாவேறு பரமாத்மா வேறு ஆனால் அந்தஜீவனுள் அந்தர்யாமியாக உள்ளான் எம்பெருமான்.
"க்ஷரந்த்யம்ருதமக்ஷரம் யதிபுரந்நரஸ்யோக்தய:
சிரந்தந ஸரஸ்வதீ சிகுர பந்த ஸைரந்த்ரிகா:"---(யதிராஜ ஸப் 36)


வேதமாதாவுக்கு உபநிஷத் சிரோபாகமாயுள்ளது. குத்ருஷ்டிகள் சொன்ன தவறான வேதார்த்தங்களாகிய சிக்கல்களை நீக்கி அழகான மூன்று கால் பின்னலாகிய சிகையலங்காரத்தை ராமானுஜர் தன்விஸிஷ்டாத்வைத சித்தாந்த ஸ்தாபகத்தாலே செய்தார் என்று ஸ்வாமி கூறுகிறார. இத்தகைய பாஷ்யம் அமுதம் போன்றது. ஸகுண ஸ்ருதி , நிர்குண ஸ்ருதி என்றும் வேதம் சொல்கிறது. எண்ணற்ற கல்யாண குணங்கள் எம்பெருமானுக்கு. அதே சமயம் எந்த ஹேய குணங்களும் (பசி, தாகம், மூப்பு, சோகம்) இல்லாதவன். என்பதே நிர்குணஸ்ருதியின் அர்த்தம். இப்டிக்கான வேதார்த்தங்கள் ஸ்ரீபாஷ்யம் தந்ததால் "நாட்டிய நீச சமயங்கள் மாய்ந்தன நாரணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது.".
"காரணவாக்யங்கள்" என்பற்றை வேதம் காட்டுகிறது. ஜகத்காரணன் யார் என்ற சர்சைக்கான விளக்கம் இது.
ஸத் (நிலையாயிருப்பவன்) ஆகாசம் (சுற்றிலும் ப்ரகாசிப்பவன்) ஆத்மா (உள்ளிருந்து ஆள்பவன்) ப்ராண வாயு (மூச்சுக்காற்று) இவை எல்லாமாயுமிருப்பவன் எம்பெருமானே.
"ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா அன்று
நான்முகன் தன்னொடு தேவருலகோடு உயிர் படைத்தான்"
(திருவாய் 4-10-1)


ப்ரளயகாலத்தில் அவன் ஒருவனாலேயே உருவாக்கப்பட்டது இப்ரபஞ்சமும் வஸ்துக்களும். ஆக உலகைப்படைத்தவன் நாராயணன். மற்றவர்கள் அவனால் படைக்கப்பட்டவர்கள்
சிவன்,சம்பூ, ப்ரஹ்மா, இந்த்ரன் என்ற ஸப்தங்கள் எல்லாம் எம்பெருமானையே குறிப்பிடுகிறது என்பதை உபநிஷத் வாக்யத்தைக்கொண்டு ஆராய்ந்து சொல்லலாம்.
"முனியே நான்முகனே முக்கணப்பா"--என்கிறார் நம்மாழ்வார்.
"சாமான்ய புத்தி ஜனகாச்ச"...(.வரதராஜ பஞ்சாஸத் 15)
இந்த ப்ரபஞ்சத்தைப்படைக்க உபாதானகாரணமும், நிமித்த காரணமுமாயிருப்பவன் நாராயணனே. 
"தானே உலகெலாம் தானே படைத்திடந்து தானே உண்டுமிழ்ந்து தானே ஆள்வானே" என்கிறார் நம்மாழ்வார்.
எல்லாவற்றுள்ளும் அந்தர்யாமியாயிருந்து உண்டாக்கி ரக்ஷிக்கிறான். ஆக இத்தகைய வேத வாக்யங்களை ஒன்றாகச் சேர்த்து வேதத்தையும் பகவானையும் இணைத்தவர் ஸ்ரீபாஷ்யகாரர்.


4- தர்க்க வாதங்கள்
நம்மால் ஊகித்து, அனுமானித்து அறியமுடியாததைச் சொல்வது வேதம். பகவானுடன் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும்
தெரிவிப்பது வேதம். நாம் படித்து அறிய வேண்டிய க்ரந்தங்கள் அநேகம். ஆனால் அவற்றையெல்லாம் படித்து அறிந்து கொள்ள மனுஷ்யனின் ஆயுள் போதாது. தடைகளும் குறுக்கிடும். அதனால் முனிவர்கள் நீண்ட க்ரந்தங்களை ஶ்லோக ரூபமாய் அளித்துள்ளனர். புராணங்கள் பகவத் ஸ்வரூபத்தையையும், ஸ்ம்ருதிகள் அனுஷ்டானத்தையும் சொல்கின்றன. தர்க்கத்தின் உதவியுடன் தான் வேதத்தைப் புரிந்து கொள்ளமுடியும் என்பதை ஸ்தாபித்தவர் நம் கவிதார்க்கிக ஸிம்ஹம். ஆழ்வார் ஸுக்திகளும்
வேதத்தை அறிய பேருதவியாயுள்ளன.
"செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதி
தெளியாத மறைநிலங்ன்ள் தெளிகின்றோமே" --என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.
"இந்த ப்ரபஞ்சத்தின் ஶ்ருஷ்டி கர்த்தா ஸ்ரீமன்நாராயணனே. இதனை ஏற்காதவன் வைதிகனே அல்லன்" தன் ஸ்தோத்ர ரத்னத்தில் "ஸ்வாபாவிகா நவதிகாதிஶ யேஸித்ருத்வம் நாராயணத்வயி நம்ருஷ்யஸி வைதிக:க:" என்பதாகச் சொல்கிறார் ஆளவந்தார்.
ப்ரபஞ்சம் புதியது அல்ல. 

முன்பே உள்ள வஸ்துக்களை மாற்றிப் போட்டுக் கிடைக்கும் புதுஉருவமே என்பது பரிணாம வாதம். தங்கம் பலவித ஆபரணமாகி அதற்கு நாம ரூபமளித்தல்போல. ஆகாசத்துக்கு மேல் ப்ருக்ருதி. அதன் ஒரு பகுதியில் ஸ்பர்சம் ஏற்பட்டு அக்னி, வாயு, ஜலம், பூமியாக உண்டாகிறது. ஒரு வஸ்து இன்னொன்றாக பரிணாமம் அடையும்போது அதனுள் பெருமான் அந்தர்யாமியாக உள்ளான். ப்ருக்ருதிக்குள்ளே இருக்கும் எம்பெரூமான் ப்ரபஞ்சத்துக்குள்ளே வருகிறான்.
"திரியும் காற்றோடு அகல்விசும்பு
திணிந்த மண் கிடந்த கடல்
எரியும் தீயோடிரு சுடர் தெய்வம்
மற்றும் மற்றும் முற்றுமாய்" (தி
ரு.மொழி3-6-5)

இல்லாததை ஶ்ருஷ்டிப்பதில்லை. அவனுக்கே உள்ள அகடித கடனா ஸங்கல்ப சாமர்த்யத்தால் காரண /கார்ய வஸ்துக்களுக்குள் ஸுக்ஷ்மமாயுள்ளான். இதனை மறுத்து வேதத்துக்குப் புறம்பான அர்த்தம் சொல்லும் பௌத்த ஜைன மதங்களைக் கண்டித்து
வேதத்தின் உண்மைநிலையை ஸ்தாபித்தார் பாஷ்யகாரர்.
"பார்த்தான் அறுசமயங்கள்பதைப்ப இப்பார்முழுதும் போர்த்தான் புகழ்கொண்டு புன்மையினேனிடைத்தான் புகுந்து தீர்த்தான்"--என்கிறது ராமானுசநூற்றந்தாதி 52)

"கபர்தி மத கர்தமம் கபில கல்பனா வாகுராம்
துரத்யமமதீத்ய தத் த்ருஹிண தந்த்ர யந்த்ரோதரம்
குத்ருஷ்டி குஹனா முகே நிபதத: பரப்ரம்ஹண:
கரக்ரஹ விசக்ஷணோ ஜயதி லக்ஷ்மணோயம் முனி": 
(யதிராஜ ஸப் 38)
சைவச்சேற்றினின்றும், கபில வாத வலையினின்றும், கண்ட யோகா யந்த்ர சிக்கலினின்றும், மாயாவாதிகளின் பொய்ப்ரசாரத்தினின்றும் ப்ரஹ்மத்தைக் காப்பாற்றி அதன் பெருமைகளை நிலைநாட்டி கைதூக்கி நிறுத்தியவர் பாஷ்யகாரர். எம்பெருமானின் திருமேனி, ஸ்வரூப, குணம், விபவம், எல்லாவற்றையும் உண்மையென ஸ்தாபித்து ப்ரஹ்மத்தின் பெருமைகளை உலகுக்குக்காட்டி ப்ரஹ்மத்தைக் காத்தவர் எம்பெருமானார்.


5 - உலகப்படைப்பு
வேதம், ஶ்ருதி, ஸுத்ரம் இவற்றைத் தவறான அர்த்தங்களுடன் ப்ரசாரம் செய்ததால் அவைகளுக்கு ஏற்பட்ட ஜ்வரத்தைப் போக்கியவர் ராமானுஜர். வேதார்த்தங்களை ஸ்தாபித்த வ்யாஸரைப் பரிஹஸித்து, பாகவதம் உபதேசித்த ஶூகரைக் கேலிசெய்து, போதாயனரை வாதாயனராக்கிய குத்ருஷ்டிகளிடமிருந்து அவர்களைக் காப்பாற்றியவர் பாஷ்யகாரர். ப்ரும்ஹ ஸூத்ரத்தின் 2ம் அத்யாயத்தின் பின்பகுதியில் ஸ்ருஷ்டியின் விளக்கமுள்ளது.
"அசிதவிஷ்டான் ப்ரளயே ஜந்தூனவலோக்ய ஜாதநிர்வேதா
கரணகளேபர யோகம் விதரஸி வ்ருஷ ஶைலநாதகருணேத்வம்"

(தயாஶதகம் 17) - என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.

இத்தகைய ஶ்ருஷ்டி அவனுக்காகவும், நமக்காகவும்
செய்துள்ளான். பலவிதமான, ஆச்சர்யமான 26 தத்வங்களைப் வைத்துள்ளான் எம்பெருமான்.
ப்ரக்ருதி, மஹத், அஹங்காரம் மூன்றும் ஆதியில் (3+) உண்டானவை. இவைகளைப்பற்றி நமக்கு எதுவும் தெரியாது.
  • அஹங்காரத்தின் ஒரு பகுதியிலிருந்து ஐந்து (5+) 
  • ஞானேந்த்ரியங்கள் (கண், காது, மூக்கு, நாக்கு, தோல்), 
  • ஐந்து (5+) கர்மேந்த்ரியங்கள் (கை, கால், வாய், மலமூத்ர விஸர்ஜன உறுப்புகள்), 
  • மனஸ் (+1) உண்டாயின. 
  • அஹங்காரத்தின் மற்றொரு பக்கத்திலிருந்து பஞ்சபூதங்கள் உண்டாயின. 
  • ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், ப்ருத்வி ஆகியன (5+) பஞ்ச பூதங்ள் தோன்றுவதற்கு நடுவே 5 தன்மாத்ரங்கள் தோன்றுகின்றன. இவை ஒன்றிலிருந்து மற்றது மாறிவருகின்றன. இதனையே "மானாங்கார மனங்களே" என்கிறார் ஆழ்வார். 
  • 25 வது தத்வம் ஜீவன்.
  • எம்பெருமான் 26 வது தத்வம். 
இந்த 25 தத்வங்களுக்குள்ளும் அந்தர்யாமியாக இருந்து ஆள்பவன். அதுவே அவனுக்கு 26 வது திருநாமம் ஆண்டவன் என்பது. இதுவே “ஶ்ருஷ்டிக்ரியா” என்பதாகும்.

இந்த்ரியம் என்பது ஶரீரத்தின் பாகமன்று. உறுப்பு செய்வதை உணர்வதாகிற ஞானத்தை அளிக்கவல்லது இந்த்ரியம். கண் பார்ப்பதை இன்னது என்ற ஞானத்தைக் தருவதே இந்த்ரியம்.
இதை ஶ்ருஷ்டித்தவன் ரிஷிகேசனாகிறான். (இந்த்ரியங்களை அளித்து ஆள்பவன்)
"நாற்ற தோற்ற சுவை ஒலி உறலாகிநின்ற" என்கிறார் ஆழ்வார். இந்த பஞ்சேந்த்ரியங்களுள் இந்த்ரியங்களை நடத்தும் ப்ராண வாயு மிக முக்யம் அதுவே ஶ்ரேஷ்ட ‘ப்ராணன் எனப்படும்’.
"பூநிலாய ஐந்துமாய்புனற்கண் நின்ற நான்குமாய்
தீநிலாயமூன்றுமாய் சிறந்தகாலிரண்டுமாய் மீநிலாயதொன்றுமாகி வேறுவேறு தன்மையாய் நீநிலாய வண்ண நின்னை 
யார் நினைக்க வல்வரே"-- திருமழிசையாழ்வாரின் திருச்சந்தவிருத்தப் பாசுரம் இது.

இந்த 24 தத்வங்களைக் கொண்டு செய்யும் ஶ்ருஷ்டி ‘ஸமஷ்டி ஶ்ருஷ்டி’ எனப்படும். சேதனத்தை அசேனத்துடன் சேர்ப்பது ‘வ்யஷ்டி ஶ்ருஷ்டி’. தாயாரின் கர்பத்தில் ஜீவனைச் சேர்க்கிறான். ஆகாசத்தின் நீல நிறம், ஜ்வாலையில் பல நிறங்கள் எல்லாம் பஞ்சபூதங்களின் பஞ்சீகரணம் என்ற கலப்படத்தாலே உண்டாகின்றன. சத்தாகிய பஞ்ச பூதத்திலிருந்து கலப்பட பஞ்சபூதம் சேர்ந்து அண்டம் உண்டாகிறது.
அதுபோல் பல அண்டங்கள் தோன்றுகின்றன. அந்த அண்டத்துள் க்ஷீராப்தியில் சயனித்துள்ள எம்பெருமானின் நாபிகமலத்திலிருந்து ப்ரும்ஹா தோன்றி வேதோபதேசம் பெற்று அவனுள் அந்தர்யாமியாயிருந்து எம்பெருமானே ஶ்ருஷ்டி கார்யங்களைச் செய்கிறான். ஆக இந்த ஜகத் ஶ்ருஷ்டிக்கு உபாதான -நிமித்த காரணம் ஸ்ரீமன் நாராயணனே.


6. ஜீவாத்மா
ஸம்ஸாரத் தளையிலிருந்து விடுபட ஆசார்ய ஸ்ரீஸுக்திகளே உதவும். ஸ்ரீபாஷ்யத்தின் 2ம்அத்யாயம் ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தையும் அதன் செயல்பாட்டையும் பற்றியது.
"நான்" என்பதன் அர்த்தம் என்ன? அது பொதுவானதல்ல - "புஸ்தகம்" என்ற சொல்லைப் போல். நான் என்பதன் உடைமையாகிய தன்னைப்பற்றிய அறிவு தனக்கே வந்தால் அதுவே நான். புஸ்தகத்தின் ஞானம் அதற்கு வராது. அதனால் அது நான் ஆகாது. இந்த ஆத்மாவகிய நான் ஶரீரத்திலிருந்து வேறுபட்டது. இந்த ஶரீரம் இந்த்ரியங்களுக்குரியவன் ஆத்மா. அவற்றிலிருந்து வேறுபட்டது. இது பெரும்பாலும் ஹ்ருதயத்துக்குள்ளிருக்கும். மிகஸுக்ஷ்ம ஸ்வரூபமுடைய ஆத்மா தேஜஸ்ஸின் ஒரு பொறியளவானது. ஞானஸ்வரூபி. தானே தன்னிருப்பைத் தெரிந்து வைத்துக்கொண்டுள்ளது. பஞ்சபூதத்தாலானதல்ல. உற்பத்தி/நாசமற்ற நித்யமானது. அடுத்தடுத்த ஶரீரத்தைச் சென்றடையக் கூடியது. 

இதனை "ஆத்மயாத்ரை" என்பர். ஆத்மா ஞானமுள்ளவன் (ஞாதா) கார்யம் செய்பவன் (கர்த்தா) அனுபவிப்பவன் (போக்தா) ஆத்மா பராதீனன் - எம்பெருமானுக்கு கட்டுப்பட்டவன். ஸ்வதந்த்ரனல்லன். ஜீவாத்மா, ஶரீரம், இந்த்ரியங்கள், ப்ராண வாயு, எம்பெருமான் க்ருபை ஆகிய 5ம் சேர்ந்தால்தான் ஒரு கார்யம் நடக்கும். (கண் இமைப்பது, மூச்சு விடுவது உள்பட). 

தனது ஞானத்தால் நல்லதையும் கெடுதலையும் தேர்ந்தெடுக்கும் சிறிய ஸ்வதந்த்ரம் ஜீவனுக்கு உள்ளது. செய்யத்தக்கவையால் நன்மையையும் அல்லாதவையால் தீமையையும் அடைகிறான். இதனைத் தேர்ந்தெடுப்பவன் ஜீவாத்மா தான் பகவானல்ல.
ஜீவாத்மாவுக்கு பல நிலைகளுள்ளன. ஸம்ஸார நிலையில் கர்த்தா போக்தாவாய் அனுபவிக்கிறான் விழிப்பு நிலையில். ஸ்வப்னம் தூக்க நிலை மற்றொன்று. 6 இந்த்ரியங்களும் ஓய்வு நிலையில் இருப்பது தூக்கம். இது எம்பெருமான் அளித்த வரப்ரசாதம். இச்சமயத்தில் உமிழ்நீர் சுரப்பதில்லை. ஆனால் ரத்த, ப்ராண வாயு ஓட்டம் நடக்கிறது. மறுநாள் காலை அதே ஞானத்துடன், புத்துணர்ச்சியுடன் எழுகிறோம்.
இதில் மனஸ் மட்டும் விழித்திருக்கும் நிலை "ஸ்வப்னம்". அதிகமான பயம், மகிழ்ச்சி, துக்கம் இவற்றின் வெளிப்பாடுதான் ஸ்வப்னம். இதனை எம்பெருமானே செய்கிறான். இது ஒரு விசித்ர அனுபவம். புண்ய பாப பலனால் ஏற்படும் அனுபவமாகிய இதனை ஒரு லகு சிக்ஷையாகச்செய்கிறான் எம்பெருமான்.
ஜீவன் ஶரீரத்திலிருந்து வெளியேறும்போது ஸுக்ஷ்ம பஞ்சபூதங்களும் உடன் செல்லும். சுக துக்க அனுபவத்துக்குப் பின் மறுபடி பிறக்கும். மேகமாகி, மழையாகி, பயிராகி, அன்னமாகி, புருஷ ஆகாரமாகி, ஸ்த்ரீ கர்பத்தில் சேர்ந்து பிறக்கிறான். 

ஶரீரம் இந்த்ரியங்களுடனிருந்தால்தான் ஞானமிருக்கும். இத்தகைய நிலைகளால் கர்ம பலன் படி பகவான் வழி நடத்துகிறான். ஞானத்துக்கு விரோதியாக அவித்யா போனால் மோக்ஷம். புண்ய பாபத்தை விடுவதே மோக்ஷம். இதற்கு நமக்கு வைராக்யம் வரணும். இனிய ரஸத்துடன் கூடிய பழத்தையும் நல்ல சுகந்தத்துடன் கூடிய புஷ்பத்தையும் எம்பெருமானுக்கு ஸமர்ப்பிப்பதுபோல ஞானத்துடன் கூடிய நம்மை (ஜீவனை) அவனிடம் ஸமர்ப்பிக்க வேணும். அவர்தானே ஶ்ருஷ்டிகர்த்தா!


7. பரமாத்மா
உயர்ந்த நிலையிலுள்ள பகவான் சேஷீ. நாம் சேஷன். ஆத்மா என்றால் வ்யாபித்திருப்பவர் எனப்பொருள். ஶரீரத்தை ஆள்பவர் என்றும் பொருள். இது இரண்டுமே பகவானுக்கு மட்டுமே பொருந்தும். எல்லா சேதன அசேதன வஸ்துக்களின் உள்ளும், புறமும் வ்யாபித்திருப்பவன் பரமாத்மா. அவன் ஆளும் ஶரீரம் இந்த ப்ரபஞ்சம் முழுதும் என வேதம் ஸ்பஷ்டமாய்க் கூறுகிறது.
புண்ய பாபத்துக்குட்பட்டே ஶரீரம் அமையும். இவை இல்லாத போது
பரமாத்வுக்கு ஶரீரம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பாஷ்யகாரர் சொல்லும் பதில். (ப்ருகதாரண்ய உபநிஷத் படி) ப்ரபஞ்சமே ஶரீரம் எனச் சொல்லும் வேதம் நம்மைப் போல கை, கால் என்ற இந்த்ரியங்கள், சுக துக்கங்கள் உள்ள ஶரீரமன்று. 

ஸகலப்ரபஞ்சமும் பகவானால் ஆளப்படுகிறது. அவற்றுக்கு சேஷியாக, தரிப்பவனாயுள்ளான். அதனாலேயே அவன் பரமாத்மா என்றும் அந்தர்யாமி (உள்ளேயிருந்து நியமனம் செய்பவன்) என்றும் சொல்லப்படுகிறான். ஸ்வரூபம், ஸ்திதி, பரவ்ருத்தி ஆகிய மூன்றும் பகவானுக்கு அதீனம்.
(கடவுள் என தமிழில் கூறுவதும் பொருந்தும்) ப்ராண வாயு, ஆகாசம் ஆகியன ஶரீரத்துள்ளே இருப்பினும் நியமிக்காது. 

(எஜமானன் வேலைக்காரனுக்கு கட்டளை இடுவான், அவனுள்ளே புகுந்து செயல்பட முடியாது) ஆனால் வஸ்துவின் உள்ளேயும் வெளியிலும் வ்யாபித்து நியமிப்பவர் பரமாத்மா ஒருவனே. ஆக எது சேஷமாயும், ஆளப்படுவதாயும், தரிக்கப்படுவதாயும் உள்ளதோ அது ஶரீரம். சேஷியாயும், ஆள்பவனாயும், தரிப்பவனாயும் உள்ளவனே பரமாத்மா.
எல்லா தேவதைகள், ஆத்மாக்கள் ப்ரஹ்மா விஷ்ணு சிவன் எல்லாம் ஒன்று என்றும், சமம் என்றும், இதற்கு மேலான ப்ரஹ்மம் ஒன்று உண்டு என்ற வாதங்களிருந்தன. இவற்றை நிரஸனம் செய்து வேதவாக்யங்கள் மூலமும் ஆழ்வார் ஸ்ரீஸுக்த்திகள் மூலமும்
பாஷ்யகாரர் பரமாத்மா என்பவன் நாராயணனே என்று ஸ்தாபித்தார்.
"பாராயது உண்டுமிழ்ந்த பவளத்தூணை"(பெரிய திருமொழி)

"ஞாலத்தூடே நடந்து நின்றும் கிடந்திருந்தும்
சாலப்பலநாள் உகந்தோறுயிர்கள் காப்பானே" 
(திருவாய்மொழி 6-9-3)

இத்தகைய பரமாத்மா ஞானானந்த ஸ்வரூபன். ஞானம் அனுகூலமாயிருப்பதுவே ஆனந்தம். ஆக ஞானத்தால் பெறுவதுவே மோக்ஷானந்தம். அதுவே நிரவதிக ஆனந்தம். மனம் வாக்கு காயத்துக்கு அப்பாற்பட்டது. இத்தகைய ஆனந்த ஸ்வரூபன் அனந்தமான கல்யாண குணங்கள், ஆஶ்சர்யமான விபூதி, திருமேனி கொண்டவன். சூர்யமண்டலத்தின் நடுவே ஸ்வர்ண மயமான திருமேனியுனிருப்பதாய் வேதம் சொல்கிறது. அவதாரங்களால் அவன் பெருமை இன்னும் கூடியது.
இவைதவிர அவனுக்கே உள்ள தனிப்பட்ட பெருமைகள் உள்ளன.

  1. பிராட்டியினால் வந்த பெருமை"ஶ்ரிய:பதி" என்பது.
  2. தனிக்கடலே தனிச்சுடரே தனிஉலகே என்று கொண்டு ப்ரளயத்துக்குட்படாத பரமபதநாதன் என்பது.
  3. ஸதா நித்யசூரிகள் சூழ வீற்றிருப்பவன்.
  4. வேதங்கள் ஸதா கோஷித்துக்கொண்டிருக்கும் வைபவன்.
வ்யாசர் இப்பரமாத்மாவை "உபயலிங்கம்" என்கிறார். அதாவது இவன் இரட்டைஅடையாளம் கொண்டவன் என்று பொருள். அவை சகல கல்யாண குணங்களை உடையவன் என்பதும், தோஷங்கள் எதுவும் துளியும் ஒட்டாதவன் என்பதுமாகும். (தாமரை இலை தண்ணீர் போல.) மரம் ஒன்றில் இரு பறவைகள் வசிக்கும்போது ஒன்று ஸம்ஸார பந்தத்தில் உழலும் ஜீவன் மற்றொன்று எதிலும் சம்பந்தப் படாமல் அதனை வழி நடத்தும் பரமாத்மா. இத்தகைய பரமாத்மாவையே உபாயமாகப் பற்றிக்கொண்டு அவனை நாமடைய வேணும்.


8. ப்ரஹ்ம வித்தைகள்
ஸ்ரீபாஷ்யகாரர் தத்வ விஷயங்களைமிக அழகாய் வரிசைப்படுத்தியுள்ளார். 3ம் அத்யாயம் உபாய அத்யாயம், 4ம் அத்யாயம் பலாத்யாயம். ஸித்த விஷயத்தை முன்பாதியும் ஸாத்யவிஷயத்தை பின்பாதியும் சொல்கிறது. வணங்கி ஸேவித்து பாராயணம் செய்யவேண்டிய க்ரந்தம் ஸ்ரீபாஷ்யம்.
இக்ரந்தம் "அ"வில் ஆரம்பித்து "ம"வில் முடிகிறது நடுவில் "உ". இதுவே ப்ரணவ தத்வம்.

ப்ரணவாகார விமானத்தின் கீழ் ஆதிஸேஷ ஸயனத்திலிருப்பவன் ரங்கநாதன். எம்பெருமானுக்கே சேஷனாயிருப்பவன். லீலாரசம் அனுபவிக்கும் எம்பெருமான் சேஷி. சேஷத்வம் என்பதே ஆனந்தம். அதுவே ஜீவனின் ஸ்வரூபம். இதற்கு அனுகூலமாய்
கைங்கர்யம் செய்கிறோம். புண்யபாபத்தை ஒழித்துவிட்டால் ஆத்மா எம்பெருமானுடன் கூடியிருந்து குளிரலாம். 
அதுவே "ஸ்வரூப ப்ராப்தம்".
"அல்பாஸ்திரை ரஸுகரை ரஸுகாவஸானை"--ஶரணாகதி தீபிகை.

அல்பமான ஸந்தோஷங்களை விட்டு உன்னை அடைவிக்க உன்னால் தான் முடியும் என்கிறார் ஸ்வாமி. இதற்கு த்யானயோகம் ஒரு உபாயம். எப்படி எதனை நினைத்து த்யானம் செய்ய வேணும் என்பதைச் சொல்வதே "ப்ரஹ்ம வித்யா" 32 ப்ரஹ்ம வித்தைகள் உள்ளன.

ஒவ்வொன்றுக்கும் பகவத் குணங்கள் த்யானிக்க விஸ்தாரமாகச் சொல்லப்பட்டுள்ளது. ப்ரும்ஹகுண அனுஸந்தானத்துக்கு மிக உகந்தவை இவை. கதைரூபமாய் எப்படி த்யானிக்க வேணும் என்று சொல்கிறது. இந்த ப்ரஹ்மத்தை "பூ:பாதௌயஸ்யநாபிர்......."என்கிறது ஸஹஸ்ரநாமம்.

ஆக ஒரு வித்தையை எடுத்துக்கொண்டு ஒரு குணத்தைத் த்யானம் செய்யலாம். "வசீ" என்பது ஒரு குணம். தன்வசத்தில் வைத்திருப்பவன். பக்தர்களுக்கு வசப்பட்டன் எம்பெருமான்
‘அனன்யா தீன........’ என்ற தயாஶதக ஶ்லோகம் அவன் பக்தி பராதீனனாயிருப்தைக் காட்டுகிறது.

இந்த ப்ரஹ்ம வித்தைகளில் 32ம் வித்தையே ஶரணாகதி என்னும் "ந்யாஸ வித்யா". பாஞ்சராத்ர ஆகமத்திலுள்ள த்வயமந்த்ர அனுஸந்தானத்தை ஒட்டி ராமானுஜர் காட்டித் தந்த கண்ணன் திருவடி. அவன் கருணையால் நாம் பெறும் பலன் ஶரணாகதி.


9. த்யான முறைகள்
"உபவீதிநமூர்த்வ புண்ட்ரவந்தம் த்ரிஜகத் புண்ய பலம் த்ரிதண்ட
ஹஸ்தம் 
ஶரணாகத ஸார்த்தவாஹமீடே ஶிகயா ஶேகரிணம் பதீம் யதீநாம்"— (யதிராஜ ஸப்ததி)

ஶரணாகதி செய்தவர்களின் சமூகத்தை வழிநடத்தும் யதிபதியாகிய ராமானுஜரை வணங்குகிறேன் என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.

ஸ்ரீபாஷ்யத்தில் ஆங்காங்கே ஶரணாகதி பற்றி சொல்லப் படுகிறது. ராமானுஜர் ஶரணாகதியைத் தான் அனுஷ்டித்துக்காட்டி நம்மையும் அனுஷ்டிக்கச் சொன்னார்.
த்யானம் என்பது ஒரு யோகம். த்யானம் என்பதற்கு நிரந்தர சிந்தனை என்று அர்த்தம். இதுவும் ஒரு பகவதாராதனம். அனுஷ்டான க்ரந்தமாகிய பாஞ்சராத்ர ரக்ஷையில் த்யானத்தின் முக்யத்தை ஸ்வாமி சொல்லியுள்ளார். நித்யகர்மானுஷ்டானத்துள் ஒன்றாக இதனைச் செய்வது நல்லது.
இந்த த்யானம் தைலதாரை போலமையணும். நடுவில் தடை ஏற்பட்டால் பயம்/நஷ்டம். ஸித்தியானால் அபயம்/மோக்ஷம். ப்ரீதியுடன் செய்தால் எம்பெருமான் பலமடங்கு ப்ரீதியுடன் பக்தர்களிடம் நெருங்குவான். முதலாழ்வார்களை நெருக்கினாற்போல.
‘தம்மையுகப்பாரை தாமுகப்பான்’ (நாச்சியார் திருமொழி).

த்யானம் செய்ய 4 படிகள் உள்ளன.
  1. ஶ்ரவணம் (ஆசார்யனை அணுகி எம்பெருமானின் குணங்கள், அனுஷ்டானம் முதலியன கேட்டறிதல்)
  2. மனனம் - கேட்பவைகளை யுக்திகளைக் கொண்டு நினைத்துப் பார்த்தல்.
  3. த்யானம் - பக்தியுடன் எம்பெருமானை நினைத்தல்.
  4. தர்ஶனம் - இவைமூன்றின் பயனாக எம்பெருமானை ஸாக்ஷாத்கரித்தல்.
"எங்கும் பக்கம் நோக்கினான் என் பைந்தாமரை கண்ணனையே"--என்று திருக்குருகைக் காவலப்பன் த்யான யோகத்தால் கண்ணனயே காண, அவனும் பக்தனையே பார்த்து ஸந்தோஷிக்கிறான்.
இத்தகைய பக்தியோகம் குருகைக்காவலப்பனுடன் முடிந்தது. நம்மைப்போன்ற ஶரணாகதர்களுக்கு ஸ்ரீபாஷ்யம் முதலான க்ரந்த காலக்ஷேபங்கள் கேட்பதே ஶ்ரவணம். கேட்பவைகளை நினைப்பதே மனனம். எம்பெருமானின் குணானுபவம் த்யானம். அர்ச்சாமூர்த்திகளை ஸேவிப்பதே தரிசனம் .

யோகம் என்றால் ஒட்டுதல் /சேர்த்தல் என்று அர்த்தம். ஆக இந்த அனுஷ்டானம் ஆத்மாவை பகவானுடன் சேர்க்கிறது. பீஷ்மர் விதுரர் ஆகியோர் பக்தி யோகம் செய்தவர்கள். இதற்கு உள், வெளி அங்கங்கள் உண்டு. தானம், யாகம், தபஸ் போன்றவை வெளி அங்கங்கள் பக்தியோகத்திற்கு.
ஶரணாகதிக்கு வெளி அங்கங்களில்லை. பக்தியோகத்துக்கு அந்திம ஸ்ம்ருதி வரை முடிவில்லை. ஆனால் ஶரணாகதியை க்ஷணகாலத்தில் அனுஷ்டித்து சேதனன் க்ருத க்ருத்யனாகிறான். இதுவே அவனை ப்ரஹ்மத்துடன் சேர்க்கும் யாகம் போன்றது.


10. மோக்ஷமடைதல்
எல்லோரும் உஜ்ஜீவிக்க வழிகாட்டியவர் ராமானுஜர். இந்த பாரத தேசம் செய்த புண்யத்தின் பலனே அவரது திருஅவதாரம். 1000 வருடங்களாக ஞானமும் மோக்ஷமும் அருளிய ராமானுஜரை "முக்தி தரும் யதிராசர்" என்கிறார் ஸ்வாமி தேஶிகன். ஸ்ரீபாஷ்யத்தின் 4ம் அத்யாயத்தில் மோக்ஷம் பற்றி விஸ்தரிக்கிறார். 
இதில் 4 விஷயங்கள் உள்ளன.

1. புண்ய பாபத்தை விடுவது எப்படி? 
கர்ம வசத்தால் அநாதி காலமாய் அநந்தமாய் சேர்ந்தவையே புண்ய பாபங்கள். நாம் செய்யும் நற்செயல்களால் ப்ரீதி அடைந்த பகவானின் அனுக்ரஹ ஸங்கல்பத்தால் வருவது புண்யம். தீயசெயல்களால் அத்ருப்தி அடைந்து நிக்ரஹ ஸங்கலபத்தால் வருவது பாபம். இரண்டுமே அனுபவித்துத் தீர்க்கப்பட வேண்டியவை. இதுவரை எடுத்த ஜென்மங்களில் சேர்ந்த பாவக் குவியல்கள் சஞ்சிதம் எனப்படும். ஶரணாகதி செய்தவுடன் இப்பாபம் முடிந்துவிடும். ப்ராரப்தம் இப்பிறவி வரை அனுபவித்துக் தீர்க்கணும்.ஶரணாகதி செய்தபின்.தெரியாமல் செய்த பாபம் ஒட்டாது. தெரிந்து செய்யும் பாபம் லகு தண்டனையினால் தீரும். இதில் பாகவதாபசாரம் முற்றிலும் தவிர்க்கப் பட வேண்டியது. மோக்ஷத்துக்குத் தடையாயிருப்பது இந்த பாப புண்யமே. தங்கச்சங்கிலியால் கட்டப்பட்ட காராக்ருஹமே இந்த நம் ஸம்ஸாரபந்தம்.
"காராக்ருஹே கனக ஶ்ருங்கலயாபி பந்த:" என்கிறார் ஸ்வாமி தேஶிகன் (வரதராஜ பஞ்சாஷத்).

2. ஶரீரத்திலிருந்து ஜீவன் எப்படி வெளியேறுகிறது?
ஹ்ருதயத்துள் ஒரு பொறியளவேயுள்ள ஜீவன் இந்த்ரியங்கள், பஞ்சபூதங்கள், மனஸ், பரமாத்மாவுடன் ஸுஷும்னா நாடி வழியே வெளியேறுகிறது.

3. அர்ச்சிராதி கதி என்பது என்ன?
இப்படி வெளியேறும் ஆத்மா அக்னி, வாயு, சூர்யன், மின்னல் என்ற லோகங்களைத்தாண்டி, ஆதிவாஹிகர்கள் அளிக்கும் விசேஷ உபசாரங்களை ஏற்று விரஜா நதியை அடைகிறது. விரஜையில் நீராடிய ஜீவன் ப்ராக்ருத ஶரீரம் விட்டு அப்ராக்ருத ஶரீரம் பெற்று அமானவன் என்ற வித்யுத் புருஷன் துணைகொண்டு ஸ்ரீவைகுண்டம் சேர்கிறான்.

4. ஸ்ரீவைகுண்டம்.
அப்ராக்ருத நதியாகிய விரஜையில் ஸ்நானம் செய்து ஸங்கல்பத்தால் அதைக் கடக்கிறான் ஜீவன். அங்கு சந்திரன் கேட்கும் கேள்வி "நீ யார்" என்பது. "தாயாரின் கர்ப வாசத்திலிருந்து பிறக்கச் செய்து, ஞானமளித்து, ஶரணாகதி செய்யவைத்து, என்னை இங்கே கொண்டு சேர்த்தவன், ஆத்மாவுக்குள் ஆத்மாவாயிருக்கும் எம்பெருமானே நான்" என்கிறது ஜீவன். இதனைக் கேட்டுச் சந்திரன் கைக்கூப்பி அனுப்ப ஸ்ரீவைகுண்ட வாயிலில் சேர்ப்பிக்கிறான் அமானவன். அப்ராக்ருத ஶரீரம் பெற்ற இந்த ஜீவனை அப்ஸரஸுக்கள் அலங்கரிக்கின்றனர். நுழைந்ததும் ஜீவன் ‘அரம்' என்ற 'குளம், 'முஹுர்த்தர்' என்ற காவல் தெய்வம் 'தில்யம்' என்ற மரம் ,'விரஜா' என்ற நதி, 'லாலஜ்யம்' என்ற மாநிலம்  'அபராஜிதா' என்ற நகர், த்வார பாலகர்கள் ஆகியவைகளைத் தாண்டி திருமாமணி மண்டபம் சேர்கிறான் . ஆங்கே 'விஸக்ஷணம் ' என்ற பீடத்தில் 'அமிதௌஜஸ்' என்ற மெத்தையில் ஸ்ரீபூதேவி ஸஹிதமாய் வீற்றிருக்கும் பரமபத நாதனைக்கண்டு அவன் திருவடியைப் பற்றி ஏற, பெருமான் அவனைக் குழந்தையைத் தூக்கும் தாயாரின் வாத்ஸல்யத்துடன் தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டு , ’நீயார்' எனக் கேட்க "ஸ்வாமி !தேவரீர் தான் நான்" என்கிற ஜீவனை ப்ரீதியுடன் கொண்டாடுகிறார்.
"ஸத்யம், ஞானம், அனந்தம், ப்ரஹ்மம் தான் நீர். 

அந்த நீர்தான் நான்" என்று சொல்லிக் கொண்டு தன்னை வந்தடைந்த ஜீவனைக்கண்டு எம்பெருமான் ஸந்தோஷிக்க, ஜீவனும் இனி ஸம்சார பந்தமற்று எம்பெருமானின் பரிபூர்ண கல்யாணகுணங்கள், விபூதி, திருமேனிகளை அனுபவிக்கிறான். ‘இனி இவனைத் திரும்ப அனுப்ப மாட்டேன்’ என்கிறான் கண்ணன் கீதையில். "ஏற்றிவைத்து ஏணி வாங்கி" என்கிறார் பெரியாழ்வார்.
இத்தகைய மகத்வம் வாய்ந்த தத்வங்களடங்கிய ப்ரும்ஹசூத்ரத்தை விவரித்து பாஷ்யம் அருளிய ஸ்ரீபாஷ்யகாரரின் திருவடிகளைச்
பற்றி உய்வோமாக.

This has been written based on “Sri Bhashya Saaram”, a 10-day Upanyasam series by Navalpakkam Dr. Sri U. Ve. Vasudevachariar Swami, during GSPK’s Sri BhashyaKaarar ThiruNakshatra Utsavam, July 2022.

Please check the link below for the English translation of this article

https://vadaanyashri.blogspot.com/2022/11/sri-bhaashya-saaram-essence-of-sri.html



🙏🙏🙏🌸🌸🌸🌻🌻🌻🌸🌸🌸🌸🌻🌻🌻🌻
🌸🌸🌸🌻🌻🌻🙏🙏🙏