Tuesday, May 26, 2020

இப்போதைக்கு அப்போதே சொல்லி வைத்தேன் - என்கின்றனர் ஆழ்வார்கள்!

இன்றைய சூழலில் எம்பெருமானை எளிதாய் தொழுது அவன் எழுந்தருளியுள்ள திவ்ய தேசங்களை  மனத்தால்  பயணித்து    வணங்கி  அருள் பெற்றுய்ய ஓர் எளிய முயற்சி.

பூசும் சாந்து என்னெஞ்சமே புனையும்.         
கண்ணி எனதுடைய வாசகம் செய்           
மாலையே வான்பட்டாடையும் அஃதே.        
தேசமான அணிகலனும் என் கைகூப்பு.       
செய்கையே  ஈசன் ஞாலம் உண்டுமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே
-
என்ற காரி மாறன் மறையொட்டி


குஷ்யதே யஸ்ய நகரே ரங்கயாத்ரா தினே தினே - என்ற குலசேகரன் கூற்றுப்படி மானசீக திவ்ய தேச யாத்திரை செல்லலாம் வாரீர்!!!!!!              
*********************************************************************************                   
  1. எய்ப்பென்னை வந்து நலியும்போதுஅங்கேதும் நானுன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கிப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்தரவணைப் பள்ளியானே
  2. கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்துபோய் சாளக்ராமம் அடை நெஞ்செ
  3. இமையோர்கள் பேர்களாயிரம் பரவிநின்றடி தொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே
  4. ஆயிர நாமம் சொல்லி வலங்கொள் தொண்டர் பாடியாடும் வதரி வணங்குதுமே
  5. நாதனே வந்துன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்
  6. கங்கை கங்கை எனற வாசகதாலே வசையில் கடுவினை களைந்திட கிற்கும் … கங்கையின் கரைமேல் கைதொழநின்ற கண்டமென்னும் கடிநகரே.    
  7. கண்ணனல்லாலில்லை கண்டீர்சரண் துநிற்கவந்து மண்ணின்பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
  8. மாணியுருவாய் உலகளந்த மாயனைக்காணில தலைமறியும் ஆணையால் நீரென்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின்
  9. சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும்  துவராபதிக்கென்னை உய்த்திடுமின்
  10. கற்பார் இராமனையல்லால்மற்றும்கறபரோ ஜப் புல்லெறும்பாதி ஒன்றிறியே நற்பால் அயோத்தியில் வாழும்சராசரம்முற்றவும் நற்பாலுக்குய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே
  11. அங்கண் ஞாலம்  அஞ்ச  அங்கோராளரியாய் அவுணன் பொங்க வாகம் வள்ளுகிரால்  போழ்ந்த புனிதன்உறை சிங்கவேள்குன்றம் அடை நெஞ்சே      
  12. வெள்ளியான் கரியான் மணிநிறவண்ணன் என்றெண்ணி நாள்தொறும் தெள்ளியார வணங்கும் மலை திருவேங்கடம்  அடை நெஞ்சமே
  13. முனிவன் மூர்த்தி மூவராகி வேதம் விரித்துரைத்த புனிதன்... எவ்வுள் கிடந்தானே
  14. வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர்கள் விழுங்கிய கோதிலின் கனியை...... திருவல்லிக்கேணி்க்கண்டேனே      
  15. நின்றானிருந்தான கிடந்தான் நடந்தாற்கிடமாமலையாவது நீர்மலையே
  16. பாராயதுண்டுமிழ்ந்த பவளத்தூணை..... காரானையிடர் கடிந்த கற்பகத்தைக் கண்டது நான் கடல்மல்லைத்தலசயனத்தே
  17. அன்னமுமீனுமாமையுமரியுமாய எம்மாயனே அருளாய்....இடவெந்தை எந்தை பிரானே  
  18. முக்தி தரும் நகரேழில் முக்கியமாம் கச்சி தனில் அத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம் நான் புகுந்தேனே      
  19. வெஞ்சுடராழிம் சங்குமேந்தி வேதமுனோதுவர் நீதிவானத்து அஞ்சுடர் போன்றிவரார்கொலென்ன அட்டபுயகரத்தேன் என்றாரே         
  20. பாடகத்தெம் மைந்தனை
  21. ஊரகத்துள் அன்னவனை
  22. நீரகத்தாய்
  23. நிலாத்திங்கள் துண்டத்தாய் 
  24. உலகமேத்தும் காரகத்தாய் 
  25. கார்வானத்துள்ளாய் கள்வா         
  26. ஆதனூர் ஆண்டளக்கும் ஐயனை
  27. கரம்பனூர் உத்தமனை      
  28. பனிவரையினுச்சியாய் பவளவண்ணா
  29. வம்புலாஞ்சோலை மாமதிள் தஞ்சைமாமணிக்கோயிலே வணங்கி   நம்பிகாளுய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்
  30. விளக்கொளியை மரதகத்தை திருத்தண்காவில் கூப்பி  வணங்கினேனே
  31. நன்னீர் தலைச்சங்க நாள் மதியை         
  32. புட்குழி எம் போரேற்றை                               
  33. பல்லவன் மல்லையர்கோன் பணிந்த  பரமேஸ்வர விண்ணகரமதுவே            
  34. மஞ்சாடுவரையேழும் கடல்களேழும் வானகமும் மண்ணகமும் மற்றுமெல்லாம் எஞ்சாமல்  வயிற்றடக்கி ஆலின் இளந்தளிரில் கண்வளர்ந்த ஈசன் தன்னை ...திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே                        
  35. அண்டரும் வானத்தவரும் ஆயிர நாமங்களோடு திண்திறல் பாடவருவான் சித்திரக்கூடத்துள்ளானே                      
  36. ஒருகுறளாயிருநிலம் மூவடிமண்வேண்டி உலகனைத்தும் ஈரடியாலொடுக்கியதாடாளன் தாளணைவீர்.. காழிச்சீராம விண்ணகரிலே
  37. வந்துனதடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற்பின் வணங்கும்  என்சிந்தனைக்கினியாய் திருவாலியம்மானே                              
  38. நந்தாவிளக்கே அளத்தற்கரியாய் நரநாரணனை....நாங்கூர் மணிமாடக்கோயில் சென்று வணங்கு எனமனனே  
  39.  மாமறையோர் மாமலர்கள்தூவி அஞ்சலித்து அஙகு அரிசரண் என்றிறைஞ்சு மணி நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே
  40. சங்குமலி தண்டுமுதல் சக்கரம் முன்னேந்தும் தாமரைக்கண் நெடியபிரான் தானமருங்கோயில் வங்கமலி கடலுலகில் மலிவெய்துநாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே
  41. காரார்ந்த திருமேனிக் கண்ணனமர்ந்துறையுமிடம் சீரார்ந்த பொழில் நாங்கை திருத்தேவனார் தொகையே                                              ‌
  42. பல்லவம் திகழ் பூங்கடம்பேறி அக்காளியன் பண அரங்கில் ஒல்லைவந்துறப்பாய்ந்து அருநடம்செய்த உம்பர் கோன் உறைகோயில் வண்புருடோத்தமமே
  43. பிறப்பொடு மூப்பில்லவன் தன்னை பேதியா இன்பவெள்ளத்தை....   செம்பொன் செய் கோயிலினுள்ளே கண்டுகொண்டேனே                   ‌‌.     
  44. சிலம்பினிடைச் சிறுபரல்போல்பெரியமேரு திருக்குளம்பில் கணகணப்பத் திருவாகாரம் குலுங்க நிலமடந்தைதனையிடந்து புல்கிக் கோட்டிடை வைத்தருளிய எங்கோமானுறையுமூர்... திருத்தெற்றியம்பலமே‌‌
  45. மூவரில் எங்கள் மூர்த்தி இவனென முனிவரோடுதேவர் வந்திறைஞ்சும்  நாங்கூர் திருமணிக் கூடத்தானே              
  46. மல்லரையட்டுமாளக் கஞ்சனைமலைந்தே கொன்று பல்லரசு அவிந்துவீழப்பாரதப்போர் முடித்தாய் காவளந்தண்பாடியாய் களைகணீயே
  47. கல்லால் கடலை அணைகட்டி உகந்தாய் நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர்.    செல்வா திருவெள்ளகுளத்துறைவானே
  48. ஞாலமுற்றும் உண்டுமிழ்ந்தநாதனென்று பாலின்நல்லமென்மொழியாள் பார்த்தன் பள்ளிபாடுவாளே
  49. நும்மைத்தொழுதோம் நும்மைப்பணிசெய்திருக்கும் நும்மடியோம் இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே
  50. பாரினைஉண்டு பாரினைஉமிழ்ந்து பாரதம் கையெறிந்து ஒருகால் தேரினைஊர்ந்து தேரினைத்துரந்த செங்கண்மாலசென்றுறை கோயில் திருவெள்ளியங்குடியதுவே  
  51. அறிவதறியான் அனைததுலகுமுடையான என்னையாளுடையானுறை கோயில் புள்ளம்பூதங்குடிதானே
  52. பிள்ளையுருவாய்த் தயிருண்டு எனன்னுள் புகுந்த ஒருவரூர்...கூடலூரே
  53. முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலகமேத்தும் கண்டியூர்  
  54. வசையில் நான்மறைகெடுத்த அம்மலர்  அயற்கருளி முன்பரிமுகமாய் இசைகொள வேதநூல் என்றிவை பயந்தவனே.. திருவெள்ளறை நின்றானே
  55. பொய்யிலன் மெய்யன்.. தன்தாளடைவரேல் அடிமையாக்கும் தென் திருப்பேரானே    
  56. நாகததணை பேரன்பில் நாகததணைப் பாற்கடல் கிடக்கும் ஆதிநெடுமால் அணைப்பார் கருததனாவான் 
  57. கோழியும் கூடலும் கோயில்கொண்டகோவலரே ஒப்பார்   குன்றமன்னபாழியந்தோளும் ஓர் நான்குடையார் பண்டிவர்தம்மையும் கண்டறியோம்....அச்சோ ஒருவர் அழகியவா (உறையூர்)
  58. கோழியும் கூடலும் (Thirukkoodal)
  59. தாய் செறவுளைந்து தயிருண்டுகுடமாடு தடமார்வர் தகைசேர் நாதனுறைகின்ற நகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே    
  60. கூற்றமும் சாரா கொடுவினையும சாரா தீமாற்றமுமசாரா வகையறிந்தேன் ஆற்றங்கரைகிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரை கிடக்கும்  உள்ளத்தெனக்கு (கபிஸ்தலம்)
  61. என்னப்பன் ...பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய் மின்னப்பொன்மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்  தன்னொப்பாரில்லப்பன் தந்தனன் தனதாள் நிழலே  
  62. கறவாமடநாகு தன் கன்று உள்ளினார் போல் மறவாது அடிதயேன் உன்னையே அழைக்கின்றேன் நறுவார் பொழில் சூழ் நறையூர் நின்றநம்பியே                               
  63. சந்தப்பூ மலர்ச்சோலைத் தண்சேறை எம்பெருமான் தாளை நாளும் சிந்திப்பார்க்கு என்னுள்ளம் தேனூறி எப்போதும் தித்திக்குமே 
  64. தந்தைகாலில் பெருவிலங்கு தாளவிழ நள்ளிருட்கண் வந்த எந்தை பெருமானார்  மருவி நின்றவூர்...  அழுந்தூரே
  65. திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து அருமாகடலமுதே உனதடியே சரணாமே                                                    
  66. பத்தராவியை நித்திலத்தொத்தனை அமுதம் பொதியின் சுவை கரும்பினைக் கனியைச் சென்று நான் கண்ணமங்கையுள் கண்டுகொண்டோனே                                
  67. தேமருவு பொழில்புடைசூழ திருக்கண்ணபுரத்துறையும் வாமனனை நாமருவி இவைபாட வினையாய நண்ணாவே                                                
  68. மிக்கானைக் கடிகைத் தடங்குன்றின்மிசையிருந்த அக்காரக்கனியை அடைந்துய்ந்து போனேனே                                                   
  69. வங்கமாமுந்நீர் வரிநிறப்பெரிய வாளரவினணை மேவி சங்கமாரங்கைத் தடமலருந்திச் சாமமேனிஎன் தலைவன்... திருக்கண்ணங்குடியுள் நின்றானே      
  70. ஆதியை நாகைஅழகியாரை இன்னிசையால்பாடவல்லார் மன்னவராயுலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ்வெய்துவரே******.             
  71. எள்கி நெஞ்சே நினைத்திங்கிருந்தென்   தொழுதும் எழு வள்ளல் மாயன் மணிவண்ணனெம்மான்மருவுமிடம் புல்லாணியே.                           
  72. தீநீர்வண்ண மாமலர்கொண்டு.  விரையேந்தி தூநீர் பரவித் தொழுமின்  எழுமின் தொண்டீர்காள் மாநீர் வண்ணர் மருவியுறையுமிடம் திருக்குறுங்குடியே
  73. மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணா மறுபிறவி தீரத் திருத்தி நின் கோயில் கடைப்புகப்பெய் திருமாலிருஞ்சோலை எந்தாய்                                     
  74. தாளதாமரைத் தடமணிவயல்சூழ் திருமோகூர்.......காள மேகத்தையன்றி மற்றொன்றிலம் கதியே
  75. எங்கள் எம்மிறை எம்பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்தடியவர்தங்கள் தம்மனத்துப்பிரியாதருள் புரிவான் திருக்கோட்டியூரானே                            
  76. என்னையாளுடை ஈசனை எம்பிரான்தன்னை யாம்சென்று காண்டும் தண்காவிலே      
  77. திருத்தண்கால் ஊரானை                                      
  78. என் உடலையுள் புகுந்து உள்ளம் உருக்கியுண் விடலையைச் சென்று காண்டும் திருமெய்யத்துள்ளே                 
  79. ஆராஅமுதே அடியேன் உடலம் நினபால்அன்பாயே....சீரார் செந்நெல் கவரிவீசும் செழுநீர் திருக்குடந்தை ஏரார்கோலம் திகழக் கிடந்தாய் கண்டேனெம்மானே                             
  80. வருவார் செல்வார் வண் பரிசாரத்திருந்த என் திருவாழ்மாரபர்க்கு என்திறம் சொல்வார் செய்வதென்
  81. மென்னடையன்னம் பரந்து விளையாடும் வில்லிப்புத்தூர் உறைவான்தன் பொன்னடிகாண்பதோராசையால் என்பொருகயற கண்ணிணை துஞ்சா                                 
  82. குன்றம் போல் மணிமாட நீடு  திருக்குருகூரதனுள் நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம்நாடுதிரே          
  83. திங்கள்சேர் மணிமாட நீடு சிரிவரமங்கல நகருறை சங்குசக்கரத்தாய் தமியேனுக்கருளாயே                                 
  84. தேனார்சோலைகள சூழ் திருவல்லவாழ் உறையும் கோனாரை அடியேன் அடிகூடுவது என்றுகொலோ                    
  85. அடிகள் கைதொழுது அலர்மேலசையும்அன்னங்காள்விடிவை சங்கொலிக்கும் திருவண்வண்டூர் உறையும்  கண்ணன் நெடுமாலைக் கண்டுகொள்மினோ                                 
  86. திருக்குறளப்பன அமர்ந்துறையும்..... மதிள் திருவாறன்விளை மாகந்தநீர்கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழக்கூடுங்கொலோ 
  87. எங்கள்செல்சார்வு யாமுடையமுதம் இமையவரப்பன் என்னப்பன்... ... திருச்செங்குன்றூர் திருச்சிற்றாறங்கமர்கின்ற ஆதியானல்லால் யாவர் மற்றென்னமர்துணையே
  88. எல்லியும் காலையும் தன்னை நினைந்தெழ நல்லருள் நமக்கே செய்வான்  அல்லியந் தண்ணந்துழாய் அப்பனூர் செல்வர்கள் வாழும் திருக்கடித்தானமே                         
  89. தென்திசைத் திலதம்புரை குட்டநாட்டுத்திருப்புலியூர் நின்றமாயப்பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே
  90. திருவருள் செய்பவன் போல என்னுள்புகுந்து உருவமும் ஆருயிரும் உடனே உண்டான் திருவளர்சோலைத் தென்காட்கரை என்னப்பன் கருவளர்மேனி என்கண்ணன் கள்வங்களே
  91. செங்கால மடநாராய் திருமூழிக்களத்துறையும் ஊகொங்கார் பூந்துழாய்முடி  எங்குடக்கூத்தர்க்கு என்தூதாய் செல்வாயா
  92. வெஃகாவில் உன்னிய யோகத்துறக்கத்தை
  93. அரங்கம் மெய் கச்சிபேர் (திருப்பேர்) மல்லை என்று மண்டினார்.         
  94. காரகத்தாய்
  95. கார்வானத்துள்ளாய் கள்வா.
  96. நின்றவூர் நின்ற நித்திலத்தொத்தினை         
  97. வையமேழும் உண்டு ஆலிலை வைகிய மாயனை அடியார்க்கு மெய்யனாகிய தெய்வநாயகன் திகழ்தரு திருவயிந்திரபுரமே.
  98. தேவாசுரம் பெற்றவனே திருமாலே நாவாயுறைகின்ற என்நாரணநம்பீ
  99. கெடுமிடராயவெல்லாம் கேசவாயென்ன நாளும் கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார் விடமுடையரவில் பள்ளி விரும்புவான் சுரும்பலற்றும் தடமுடைவயல் அனந்தபுரநகர் புகுதுமின்றே
  100. இருள்தரு மாஞாலத்து இனிப்பிறவி யான் வேண்டேன் மருளொழி நீ மடநெஞ்சே வாட்டாற்றானடிவணங்கே
  101. தருதுயரம் தடாயேல் நின்சரணல்லால் சரணில்லை விரை குழுவு மலர் பொழில் சூழ் வித்துவக்கோட்டம்மா
  102. துவளில் மாமணிமாடமோங்கு தொலைவில்லிமங்கலம் தொழுமவளை நீரினிஅன்னைமீர் உமக்காசையில்லை விடுமினோ
  103. புளிங்குடிக்கிடந்து
  104. வரகுணமங்கை யிருந்து
  105. வைகுந்தத்துள் நின்று என்னை  ஆள்வானே
  106. மாடக்கொடிமதிள் தென்குளந்தை வண்குடபால் நின்ற மாயக் கூத்தன் ஆடல் பறவையுயர்த்த வெல்போர் ஆழிவலவனைஆதரித்தே
  107. கொடியார்மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும் மடியாதின்னே நீதுயில் மேவி மகிழ்ந்ததுதான்
  108. அரவத்தமளியினோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப் பாவையுந்தானும் அகம்படிவந்துபுகுநது பரவைத்திரை பலமோதப் பள்ளி கொள்கின்ற பிரானை பரவுகின்றான் விஷ்ணுசித்தன் பண்டன்று பட்டினங்காவற் பொருட்டே
 வங்கக் கடல் கடைந்த மாதவா கேசவா நாராயணா கோவிந்தா விஷ்ணவே மதுசூதனா திரிவிக்ரமா வாமனா ஸ்ரீதரா ரிஷீகேசா பத்மநாபா தாமோதரா என்று  பரமபதநாதனை திவ்ய தேசந்தொறும் சென்று சென்றிறைஞ்சி இன்புறுவோமாக!!!

🙏🙏🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🙏🙏