Saturday, May 23, 2020

என்கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நீக்கமற நிறைந்த திருவேங்கடவன்!!

 Abhideyaka Abhishekam - Wikipedia
 
  • அகல்யா சாபம் தீர்த்த திருவடி.                       
  • அம்புயத்தோன் அயோத்தி மன்னர்க்கு  அளித்த திருவடி.
  • அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த திருவடி.
  • அம்பரீஷன் அலவலைமை தவிர்த்த திருவடி.
  • உத்தரையின் சிறுவனை உய்யக்கொண்ட திருவடி
  • அழைக்க வந்த அக்ரூரர்க்கு அடைக்கலம் தந்த திருவடி
  • உத்தவர் உகக்க உகந்தளித்த திருவடி  
  • ப்ரஹ்லாத பக்திக்கு வித்தான திருவடி
  • பக்த சபரிக்கு முக்தி தந்த திருவடி         
  • கஜேந்த்ரன் கதறலுக்கு கனிநத திருவடி.    
  • பாஞசாலியின் கூக்குரலுக்கு கூறை கூட்டிய திருவடி
  • அஞ்சப் பணத்தின்மேல் நடம் பயின்ற திருவடி
  • ஐவர்க்குத் தூதாய் நடந்த திருவடி.                    
  • விபீஷண சரணாகதியை ஏற்ற திருவடி.    
  • ஜடாயுவை வைகுந்தம் ஏற்றிய திருவடி.           
  • எத்திசையும் உழன்றோடி இளைத்து விழுந்த காக்கைக்கும் மோக்ஷம் அளித்த திருவடி
  • ஒன்றுக்கு மற்றொன்றே இணையான திருவடி 
  • இரண்டையும் இணைத்தாலும்  இணையில்லாத திருவடி
                             
அன்றலர்ந்த தாமரையென சிவந்த திருவடி அழகும்!
  • ராமனாய் நெடுங்கானம் நடந்ததுவும்  கண்ணனாய் காலிகள் மேய்த்து உய்த்துஇளைத்ததுவும ஆன நீண்ட திருக்காலழகும்
  • வெண்ணெயுண்டு உரலிடையாப்பண்டு மருதமிறத் தவழ்ந்த முழந்தாளழகும்
  • மன்மதனின் தோட்டத்தில் விளைந்த வாழைமரங்களை ஒத்தனவையும் பீதாம்பரம் சாற்றப் பட் டதுமான திரண்ட தொடையழகும்.
  • கண்ணிநுண் சிறுத்தாம்பிநனால் கட்டுண்ணப் பண்ணிய தடம் பதிந்ததும் பொ ன்அரைஞாணும் கிண்கிணியும் சிலம்பும் இடையழகும்                         
  • தாமரைமேல் அயனவனைப் படைத்த கொப்பூழ் அழகும்.
  • ஊழிக்காலத்தில் உலகனைத்தையும் உள்ளடக்கி உவந்து  உ மிழ்ந்த உதரத்தழகும்.     
  • ஸ்ரீவத்ஸ கௌஸ்துப முத்தாரங்களோடு மகர கண்டிகையும், வைஜயந்தி வனமாலாதிகளோடு மதுவார் தண்ணந்துழாய் நடுவே அகலகில்லேன் இறையுமென்று திருமகளும் மண்மகளும் உறைகின்ற திரு மார்பழகும்
  • மல்லாண்ட திண்தோளழகும்.                
  • ஒண்சுடராழியும் சங்கமும் உறையும் பின்னங் கையழகும்
  • "ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ "எனப் பாங்காய் பணிக்கும் வலது வரத ஹஸ்த அழகும்
  • "உனது ஸம்ஸார பந்தங்களை முழந்தாள் அளவுக்குக் குறைப்பேன் "என அளவிட்டுக் காட்டும் இடக்கர அழகும்             
  • ஸுக்ரீவமும் திருப்பவளச் செவ்வாயழகும்
  • நவ சம்பக நாஸி அழகும்
  • வைரக்கடிப்பிட்ட கர்ணபத்ர அழகும்
  • பரிதி மதி நயன அழகும்
  • வில்லையொத்த புருவ அழகும்.  
  • கஸ்தூரி வாஸனாதிகளோடு பரந்த நெற்றியின் நடுவே ஆச்ரிதர்கள் உய்ய உயர்தணிந்த ஊர்த்வ புண்ட்ர அழகும்
  • பொன்மணி முத்தின் பவளமும் வைர வைடூர்ய கோமேதக மாணிக்யாதி மரகதங்கள் பதித்த க்ரீடத்துள்ளே "குப்யச் சோளீ வசன குடிலை:  குந்தளை: ஸ்லிஷ்ட மூலே "என்னுமாப்போலே சுருண்டு இருண்டு நீண்ட கூந்தலழகும்.                                     

🌺🌺என்றென்றும் என் கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நீங்காது  நிலைக்க வேண்டும்  கோவிந்தா🙏🙏

No comments:

Post a Comment