மாருதம் வீசும் மாலைப் பொழுது.மெல்லிய நாதஸ்வர ஒலியில் வஸந்தா ராகம் இழைகிறது கோயிலில் இருந்து.செவிக்கு இனிமையாயிருப்பினும் மனம் கனக்கிறது!!தோட்டத்திலிருந்த துளஸியும் கற்பூரவல்லியும் காற்றில் அசைந்து மிதந்த சுகந்தம் நாசிக்கு எட்டுகிறது.உடனே புத்தியில் ஒரு பொறி தட்டுகிறது.என்ன அது?
அன்று ராம ராவண யுத்தத்தில் மறித்த வானரங்களை ஹனூமன் கொணர்ந்த சஞ்சீவி பர்வத மூலிகையின் ஸுகந்தமே உயிர்ப்பித்ததாம்.இது நடந்தது த்ரேதா யுகத்தில்! இந்தக் கலியில் இது ஸாத்யமா?இன்றைய உலகளாவிய கொடுநோய் தீர அருமருந்து ஒன்று எங்கே கடைக்கும் என்று கலங்குகிறது மனம்!பளிச் என்று ஓர் உபாயம் கிடைத்தது!
இன்று பங்குனி உத்திரம் அல்லவா?ஏகாந்தமாய் நம்பெருமாளும் ரங்க லக்ஷ்மியும் சேர்த்தியில் கத்யத்ரய மண்டபத்தில் எழுந்தருளியுள்ள கண்கொள்ளா காட்சி உள்ளத்திரையில் விரிந்தது!பயணித்தது மனம் ஆராத அருளமுதம் பொதிந்த கோயில் நோக்கி....
கண்களாற திவ்யதம்பதியைச் சேவித்து வைத்த விண்ணப்பத்திற்கு விடையும் கிடைத்தது ஆங்கே..
என்ன விடை அது?
என்ன விடை அது?
🌺🌺ஆழ்வார்களும் ஆசார்யர்களும் ஆய்ந்துரைத்த ஸ்ரீஸூக்திகளை துஞ்சும்போதும் துயர்வரினும் ஓதுவதே சாலச் சிறந்த மருந்தாம் இக்கலியில்!!அமைதியாகியது மனம்.பூரண நம்பிக்கையுடன்ஆரம்பித்தது நாம பாராயணத்தை!இனிஏது குறை நமக்கு.எல்லாம் நிறைவே!!!!
🌺🌺அச்சுதாநந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத் நஸ்யந்தி ஸகலா ரோகாஹா ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம். The chanting of Achyutha, Ananthaa and Govinda nama itself would ward off all the rogas.
🌺🌺கனக ருசிரா காவ்யா க்யாதா சனைஸ்சரணோசிதா ஸ்ரித குரு புதா பாஸ்வத்ரூபா த்விஜாதிப ஸேவிதா விஹித விபவா நித்யம் விஷ்ணோ பதே மணிபாதுகே த்வமஸி மஹதீ விஷ்வேஷாம் நஸ்சுபா க்ரஹ மண்டலி.
Worship the Ranganatha Paduka which governs the entire Navagraha. That will alleviate all the doshas caused by them.
🌺🌺வ்யாமோஹ ப்ரதஸமௌஷதம் முனிமனோ வ்ருத்தி ப்ரவ்ருத்யௌஷதம் தைத்யேந்த்ரார்த்தி கரௌஷதம் த்ரிஜகதாம் ஸஞ்சீவநைகௌஷதம் பக்தாத்யந்த ஹிதௌஷதம் பவபய ப்ரத்வம்ஸ நை கௌஷதம் ஸ்ரேயப்ராரப்த்தி கரௌஷதம் பிபமன: ஸ்ரீ க்ருஷண திவ்யௌஷதம்
In Mukundamala - Kulasekara Aazhwar addresses the mind to have "the krishna nama bhanam" which would revive the entire universe and it is the divine medicine for us.
🌺🌺தம்ஷ்ட்ரா காந்த்யா கடாரே கபட கிடிதனோ கைடபாரே ரதஸ்தாத.
ஊர்த்வம் ஹாஸேன வித்தே நரஹரி வபுஷோ மண்டலே வாஸவீயே ப்ராக்ப்ரத்யக் ஸாந்த்ய ஸாந்த்ரச் சவிபர பரிதே வ்யோம்னி வித்யோத மான: தைதேயோத் பாத ஸம்ஸீ ரவிரிவ ரஹயத்அஸ்த்ர ராஜோருஜம் வ:
In Sudharsana Shatakam verse 92, the Sudharsana moorthy is blessed with the grace of Varaha baghavan from the lower part and that of Narasimha on the top.
Let this glorified Chakrattaazhvan with all charged energy destroy all the evils
🌺🌺ஹே கோபலக!ஹே க்ருபாஜலநிதே!ஹே ஸிந்து கன்யாபதே!
ஹே கம்ஸாந்தகா!ஹேகஜேந்த்ர கருணா பாரீண!
ஹே மாதவா!ஹே ராமானுஜா!
ஹே ஜகத்ரயகுரோ! ஹே புண்டரீகாக்ஷ!மாம் ஹே கோபீஜனநாத! பாலய பரம் ஜானாமி ந த்வாம் விநா.
This is from Mukundamala - Hey Gopala, you are the personification of karuna. I do not know anyone other than you to protect me!
🌺🌺கெடுமிடராய வெல்லாம் கேசவா என்ன நாளும் கொடுமை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார் விடமுடை அரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும் தடமுடை வயல் அனந்த புர நகர் புகுதும் இன்றே (திருவாய்மொழி10_1)
🌺🌺மாதவன் என்றென்று ஓத வல்லீரேல் தீதொன்றும் அடையா ஏதங்கள் சாராவே. (திருவாய்மொழி10-5)
🌺🌺 நல்குரவும் செல்வும்..நரகும் சுவர்க்கமுமாய் வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய் பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானே !செல்வம் மல்குடித் திருவிண்ணகர் கண்டேனே
(திருவாய்மொழி 6-3-1)
🌺🌺முனியே நான்முகனே முக்கணப்பா!என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக் கண் கருமாணிக்கமே என்கள்வா ! தனியேன் ஆருயிரே! என்தலைமிசையாய் வந்திட்டு இனி உன்னப் போகலொடட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே!(திருவாய்மொழி10-10-1)
🙏🌼🌹🌻🌻🌹🌼 🌼🌹🌻🌻🌹🌼 🌼🌹🌻🌻🌹🌼 🌼🌹🌻🌻🌹🌼 🌼🌹🌻🌻🌹🌼🙏
Excellent
ReplyDelete