Sunday, June 27, 2021

தயாதேவியா தயாளனா !!


ப்லவ வருஷம் எழுந்து ஸார்வரி உறங்கிற்று. 


பல பலவென ப்லவ வருஷம் நல்விடியலாகும் என எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்!


இன்னும் குறையவில்லையே இந்த கோவிட் பாதிப்பு.


அலைமேல் அலையாக அல்லவா பாதிக்கிறது. அசுரனைவிட மோசமாக!! இந்த தொற்று எப்படித் தோன்றியது, எப்படிப் பரவி விதவிதமான தாக்குதலையும், பாதிப்புகளையும் நமக்குக் கொடுத்துக் கொண்டு இந்தப்ரபஞ்சம் முழுதையும் தன் அதீனத்தில் வைத்துக் கொண்டுள்ளது என்பதை அந்த ஸர்வேஶ்வரன் மட்டுமே அறிவான். 


ஸார்வரிக்கு "இருட்டு" என அர்த்தமானாலும் ஆத்யாத்திமிக ஞானப்ரகாசத்தை பல சேதனர்களிடையே உண்டாக்கியதில் பெரும் பங்கு வகித்தது என்பதில் சந்தேகமில்லை.இந்த ப்லவ வருஷமும் இந்த ஞானவிகாஸத்தை தொடரச்செய்யும் என நம்புவோம்.


இத்தகைய ஞானவிகாஸம் தாயார்-எம்பெருமானின் கல்யாண குணங்களை ஓரளவு உணர்ந்து அனுபவிக்க உதவியுள்ளது. அதனால் அவர்களது கருணா கடாக்ஷத்தை ப்ரார்த்திப்பதைத் தவிர இத்தொற்றினுடைய பாதிப்பினின்று

நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவேறு  மார்க்கமில்லை. 


இந் நெருக்கடியிலிருந்து நம்மை மீட்க வல்லது பிராட்டியின் பரிவே என்கிறார் ஸ்வாமி தேஶிகன். பிராட்டியின் கடாக்ஷம் சக்தி மிக்கது.

ஆத்யாத்மிக, ஆதிபௌதிக, ஆதிதைவிகத்தால் ஏற்படும் தாபத்ரய அக்னியை அணைக்க வல்லது. பிறர் கஷ்டத்தைப்பார்த்து பரிதாபப்படுவது தயை இல்லை.


"பரதுக்க நிராகரண இச்சா தயா" - என்கிறார் ஸ்வாமி.


கண்களாலேயே தயையை வெளிப்படுத்துபவள் தாயார்.

குற்றம் பாராத வாத்ஸல்யம் தாயாருடையது. ஸ்நேஹபூர்வமான தாயாரின் கடாக்ஷம் அம்ருத ஸஞ்சீவினி போல வர்ஷிக்கும்.


தோஷமற்ற, பாகுபாடு பாராத தாயார் கடாக்ஷம், எம்பெருமான் மீது அனவரதமும் நிறைவதாலன்றோ அவன் பரப்ரும்ஹமாயுள்ளான்!!


सानुप्रासप्रकटित दयैः सान्द्रवात्सल्यदिग्धैः
अम्ब स्निग्धैरमृतलहरी लब्धसब्रह्मचर्यैः ।
घर्मे तापत्रयविरचिते गाढतप्तं क्षणं माम्
आकिञ्चन्यग्लपितमनघैः आर्द्रियेथाः कटाक्षैः ।।



அசோக வனத்தில் ஸீதாபிராட்டியிடம் தன் ஸ்வப்னத்தை விவரிக்கிறாள் த்ரிஜடை. அதில் ராமனின் ஜெயத்தையும் ராவணனின் வீழ்ச்சியும் சொல்லி, "இந்த ஸீதாபிராட்டி ஸாக்ஷாத் தாயாரே. நாம் இவளிடம் ஶரணாகதி செய்து அழிவிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வோம்" - என்றாள்.


அதனை ஏற்ற தாயார் தன்னைத்துன்புறுத்திய ராக்ஷஸிகள்

அனைவருக்கும் (unconditional rakshanam) அபயமளித்தாளல்லவா! அந்த தயை நம்மையும் ரக்ஷிக்கட்டும்.


"ஆரால் இவ்வையம் அடியளப்புண்டது

ஆரால் இலங்கை பொடிப்பொடியா வீழ்ந்தது

ஆரால் கல்மாரி காத்ததுதான்

ஆரால் ஆழிநீர் கடைந்திடப்பட்டது" 

எம்பெருமான் இத்தகைய ஸர்வ ஶக்தன் - கலியனின் சிறியதிருமடல் சொல்கிறது.


"புகழும் நல் ஒருவன் நீ !

பொருவில்சீர் பூமி நீ !

திகழும் தண் பரவை நீ !

தீ வாயு ஆகாசம் நீள் சுடர் இரண்டும்நீ!

குன்றங்களனைத்தும், மேவுசீர்மாரி, விளங்கு தாரகைகள் நீ!

நாவியல் கலைகள்நீ! ஞானநல்லாவிநீ !

அடியவர் வினைகெடுக்கும் நச்சுமாமருந்தம் நீ!

ஊனமில் சுவர்க்கம் நீ!

ஊனமில் மோக்கம் நீ!”

- என்று எம்பெருமானின் ஸர்வஞத்வத்தைப் பட்டியலிடுகிறார் நம்மாழ்வார். 


இத்தனை பெருமையுடைய 

"உன்னிடம் ஶரணாகதி செய்து கொண்ட முத்ரையுடன் உன் எதிரே நான் படும் இந்த அவஸ்தை அனுபவம் உனக்குப் பெருமை ஏற்படுத்தாது" 

- என்று  எம்பெருமானிடம் உரிமையுடன் முறையிடுகிறார் ஆளவந்தார்.


"அபூதபூர்வம் மம பாவிகிம்வா

ஸர்வம் ஸஹேமே ஸஹஜம்ஹி து:கம்

கிம்து த்வதக்ரே ஶரணாகதானாம் 

பராபவோநாத நதேனு ரூப:”

- என்பது ஸ்தோத்ர ரத்ன ஶ்லோகம்.


இன்னும் ஒருபடி மேலேபோய் நம் ஸ்வாமி தேஶிகன் நமக்காக

நம் கஷ்டங்களைப்போக்க வேண்டி தூப்புல் தீபப்ரகாஶப் பெருமானிடம் சவால் விட்டு உரிமையுடன்

"ஶரணாகதி தீபிகை" - என்ற க்ரந்தத்தில் ப்ரார்த்திக்கிறார்.



"ஸ்வாமீ தயா ஜலநிதிர் மதுர க்ஷமாவாந்

ஶீலாதி க:ஶ்ரித வஶ:ஶுசிரத்யுதார:

ஏதாநி ஹாது மநகோ ந கிலார்ஹஸித்வம்

விக்யாதி மந்தி பிருதாநி மயா ஸஹைவ" 

- என்கிறார்


எம்பெருமானுக்கு இதிகாச புராணங்கள் கொடுத்துள்ள

பிருதங்கள் எண்ணிலடங்கா. 


"உன் முன்நின்று ரக்ஷணம் செய்யும்படி கேட்கக்கூடத் தகுதியற்ற அபராத சக்ரவர்த்திநான். அகிஞ்சன ஸார்வ

பௌமனாகிய என்போன்றவர்களை அனுக்ரஹிப்பது உன் கல்யாண குணங்களுக்குப் பெருமை தருமேயன்றி குறைவு ஏற்படுத்தாது. அன்றி என்னை அனுக்ரஹிக்கவில்லையானால் என்னையும் இழந்து உன்பிருதங்களையும் இழக்க நேரிடும்" 


-என உரிமையுடன் நமக்காகப்பரிகிறார் ஸ்வாமி.


மேற்காட்டிய ஶ்லோகத்தில் எம்பெருமானின்  9 பிருதங்களின்

மகத்துவத்தைக் காட்டுகிறார்.


ஸ்வாமி - சேதந அசேதநங்கள் உமது ரக்ஷணத்தில் உள்ளன. ரக்ஷிக்காவிடில் உமது ஸ்வாமித்வத்துக்கு இழுக்கு!


தயா - பயன்கருதாமல் எம்கஷ்டங்களை நீக்குவதே உம் கருணைக்கு அழகு!


மதுர: - மிக இனியவன்நீ! விசாரப்படாதே என என்னை அரவணைக்கவேண்டாமா!


க்ஷமாவான் - பொறுமைசாலி என்று பெயர் பெற்ற நீ என் தவறுகளை பொறுக்கலாகாதா!


ஶீலாதி: - ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இறங்கி வந்து பழகும் குணம் நிறைந்த நீ என்னிடம் ஶீலமில்லாதிருப்பது ஏன்?


ஆஶ்ருத பரதந்த்ரன் - உன்னைஅண்டிநின்ற பஞ்சவர்க்கு தூது சென்றாய்.தேரோட்டினாய். அவற்றைஎல்லாம் செய்த உனக்கு என்னை ரக்ஷிப்பது பாரமா ?


ஸுத்தி: - உன்னையே நினைப்பவர்களை பரிஸுத்தனாக்குபவன் நீ. என்னையும் பரிஸுத்தனாக்கு.


அத்யுதாரன் - நீ பேரருளாளன். தரம் பாராது தாழாது எனக்கருள மாட்டாயா!


அநக: - தோஷமற்றவன் நீ. உன் திருவடியைப் பற்றிய யாரையம் நீ காப்பாற்றாது இருந்ததில்லை. நான் இதற்கு விதிவிலக்காக வேண்டாம்.


என ஸ்வாமி பெருமானின் குணக்கடல் கலங்காதிருக்க, ஆஶ்ருதர்களை ரக்ஷிக்க வேண்டுகிறார்.


தாயாரின் தயையும் எம்பெருமானின் தயாளகுணமும் நம் இருகண்கள் போன்று உயர்ந்தவை. இவ்வுலகுய்ய இப்போது நிலவும்  நெருக்கடி தீர அவர்களை ப்ரார்த்திப்பதைத்தவிற வழி ஏதும் உண்டோ!!!!


மேற்கூறிய ஶ்லோகங்களை தினம் அனுஸந்தித்து தற்போது ஏற்பட்டிருக்கும் பேரிடர் அகல நாம் ப்ரார்த்திப்போமாக.


The above write-up is the outcome of listening to Navalpakkam U.Ve. Sri Raamaachar Swami's Desika Stotra Nirvaaham in Vande Vedanta Desikam Series.


🌺🌺🌺🌺🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌷🌷🌷🌷


Saturday, April 17, 2021

ஶ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தின் ரஸங்கள்! - Concluding Part

         

27. மூலமந்த்ராதிகாரம்
28. த்வயாதிகாரம்
29. சரமஶ்லோகாதிகாரம்

********************************************************************************

நம் ஸம்ப்ரதாயத்தின் முக்ய ரஹஸ்ய மந்த்ரங்கள். நான்கு காதுகள் மட்டும் கேட்கும் மந்த்ரங்கள் இவை.

"ஆளும் அடைக்கலம் என்று எம்மை அம்புயத்தாள் கணவன் 
தாளிணைக்கீழ் சேர்த்து எமக்கும் அவைதந்த தகவுடையார்
மூளும் இருட்கள் விள்ள முயன்று ஓதிய மூன்றின் உள்ளம்  
நாளும் உகக்க இங்கே நமக்கு ஒருவிதி வாய்க்கின்றதே"--(அதி 7) 

வேதம் புராண இதிகாசங்கள் இவையனைத்தையும் உள்ளடக்கிய மந்த்ரம் திருமந்த்ரம். இதற்கு "வ்யாபக மந்த்ரம்" என்றும் பெயர். 

"துஞ்சும் போதும், துயர்வரினும் சொல்வீர்"--"மூன்றுமாத்திரை உள்வாங்கி"-- என்று ப்ரணவமின்றி ஆழ்வார்கள் திருமந்த்ரத்தைக் காட்டியுள்ளனர்.

இத்தகைய மந்த்ரத்தை ஆசார்யமுகமாய் உபதேசம் பெற்று மந்த்ர சீர்மையைப் புரிந்து சொல்ல வேணும்.

த்வயம்:  த்வயமந்த்ரத்தின் மேன்மையை ஶ்ரீபாஷ்யகாரர் பங்குனி உத்ரத்தன்று பிராட்டி பெருமாள் சேர்த்தியில் கத்யத்ரயம் ஸேவித்து  எல்லோருக்குமாக ஶரணாகதி அனுஷ்டித்துப்  போற்றி உணர்த்தினார்.

நம்மாழ்வார் திருவேங்கடமுடையான் திருவடியில் ஶரணாகதி அனுஷ்டித்தார்.  

"அகலகில்லேன் இறையுமென்று
அலர்மேல் மங்கை உறைமார்பா
(ஸ்வாமித்வம்)
நிகரில் புகழாய் உலகம் மூன்றுடையாய் (விபூதித்வம்)
என்னை ஆள்வானே (வாத்ஸல்யம்)
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே (அர்ச்சாவதாரம்)
புகலொன்றில்லா அடியேன் (அகிஞ்சனத்வம்)
நின்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே" (அடைக்கலம்)

 
"எனது சொத்தாகிய உங்களை என்னிடம் சேர்க்கும் ஆழ்வார் அமர்ந்துள்ள என் திருவடியைப்பற்ற அந்த ஆசார்யனாகிய ஆழ்வாரைப் பற்றுங்கள்" என்கிறான் எம்பெருமான்.மேற் சொன்ன பாசுரம் த்வய மநத்ரத்தின் விளக்கமே.
தேர்த்தட்டில்அமர்ந்த எம்பெருமான் நெஞ்சைத் தொட்டுக்காட்டிச் சொன்ன வார்த்தைகளே "சரமஶ்லோகம்".
"அஶக்தனாக செய்ய முடியாத கர்ம ஞான பக்தி யோகங்களை விடுத்து அந்த நிலையில் என்னை நிறுத்தி ப்ரபத்தி செய்து என் திருவடிகளைப்பற்றுகிறவர்களின் சகல பாபங்களையும் போக்கி மோக்ஷமளிக்கிறேன். கவலைப்படாதே"--- என்கிறான் எம்பெருமான்.

"உறவினர் இல்லாதவர்க்கு எந்த உறவைச்சொன்னால் பாபம் நேராதோ அந்த உறவாய் நானிருப்பேன்"--என்று துஷ்யந்தன் தன் ராஜ்ய ப்ரஜைகளுக்குப் பாதுகாப்பின் பொருட்டு சட்டம் செய்ததாய் வரலாறு.  

ஆக இந்த மூன்று மந்த்ரங்களின் சீர்மையை உணர்ந்து  ஸதாசார்யனை அணுகி ப்ரபத்தி செய்து  ஆத்மாவையும் அதை ரக்ஷிக்கும் பொறுப்பையும் எம்பெருமானிடம் ஸமர்ப்பித்து நிர்பரனாயும் நிர் பயனாயும்  இருப்போமாக. 

(For 27th Adhikaram)
"உயர்ந்தனன் காவலன் அல்லார்க்கு உரிமை துறந்து உயிராய்
மயர்ந்தமை தீர்ந்து மற்றோர் வழியின்றி அடைக்கலமாய்ப்
பயந்தவன் நாரணன் பாதங்கள் சேர்ந்து பழ அடியார்
நயந்த குற்றேவல் எல்லாம் நாடும் நன் மதி ஓதினமே"--(அதி 34)

 
(For 28th Adhikaram)
"ஓதும் இரண்டை இசைந்து அருளால் உதவும் திருமால்
பாதமிரண்டும் சரண்எனப்பற்றி நம் பங்கயத்தாள் 
நாதனை நண்ணி நலந்திகழ் நாட்டில் அடிமை எல்லாம்
கோதில் உணர்த்தியுடன் கொள்ளுமாறு குறித்தனமே"--(அதி 35).

(For 29th Adhikaram)
"குறிப்புடன்மேவும்தருமங்களின்றி அக்கோவலனார்
வெறித்துளவக்கழல் மெய் அரணென்று விரைந்தடைந்து
பிரித்த வினைத்திரள் பின்தொடரா வகை அப்பெரியோர்
மறிப்புடை மன்னருள் வாசகத்தால் மருளற்றனமே---(அதி 36) 


ஆத்மஞானமும், பணிவும், வைராக்யமும், வேதாந்தத்தில் முழுநம்பிக்கையும் நம்மை இந்த விஸிஷ்டாத்வைத ஸத்ஸம்ப்ரதாயத்தில்  ஈடுபடுத்தியுள்ளது.
ஶ்ரீமன்நாராயணனே நமக்குப் பறை தரும் பரதெய்வம் என்பதை உணர்ந்து ப்ரபத்தி அனுஷ்டித்து பரிபூர்ண ப்ரும்ஹானுபவம் பெறுவோமாக.!!!!.

******************************************************************************
30. ஆசார்ய க்ருத்யாதிகாரம் 
31.  சிஷ்ய க்ருத்யாதிகாரம் 
******************************************************************************

ஆசார்யனுக்கு ஸமமானவரும் அவரைவிட உயர்ந்தவரும் கிடையாது. ஆசார்யானது நாவில் ஹயக்ரீவன் நின்று "ஹல ஹல" சப்தம் செய்கிறான்.

ஸம்ஸாரத்தில் மூழ்கிய நம்மை தூக்கி வெளிக்கொணர சஸ்த்ரபாணியான எம்பெருமான் சாஸ்த்ரபாணியாகச்  செய்த அவதாரமே ஆசார்ய அவதாரம். இத்தகைய ஆசார்யனும் அவர் உபதேசம் கேட்கும் சிஷ்யனும் இந்த ஸத் ஸம்பிரதாயத்தின் அடிப்படை .

வசிஷ்டரும் விஶ்வாமித்திரரும் ஆசார்யனாயினர் ஸ்ரீ ராமனுக்கு. சாந்தீபனி யிடம் பயின்றவன் கீதாசார்யன். இத்தகைய ஆசார்யனுக்கும் சிஷ்யனுக்கும் இருக்கவேண்டிய லக்ஷணங்களை ஸ்வாமி இந்த இரு அதிகாரங்களில் விவரிக்கிறார். 

ஸத்வகுண க்ரந்தங்கள் என்ற "திரியை" ப்ரீதியுடன்  சிஷ்யனுக்கு (எண்ணைய்) கற்பித்து ஸம்ப்ரதாய "தீபச்சுடரை" ஏற்றி ப்ரகாசம் அடையச்செய்பவரே சிறந்த ஆசார்யன். 

திருப்பாற்கடல், ஸ்ரீ வைகுண்டம், சூர்யமண்டலம், இவை எம்பெருமான் உறையும் ஸ்தான விசேஷங்கள். இவற்றுள் மோக்ஷம் என்ற ஸ்ரீ வைகுண்டத்தை நாம் அடைய ஆசார்யன் செய்து வைப்பதே ப்ரபத்தி. இதனை செய்வதற்கு முன் ஆசார்யன் பல க்ரந்தங்களை செய்து ,கற்று அவற்றை சிஷ்யர்களுக்கும் கற்பித்து ,தானும் அனுஷ்டித்து காட்ட வேண்டும். 

"வருவது விசாரியாது இந்திரனுக்கு உபதேசித்து ஞானம் இழந்த ப்ரஹ்மாவின் நிலையை" ஆசார்யன் அடைய கூடாது. நல்ல விளை நிலத்திலிட்ட வித்து பல்கிப் பெருகுவது போல ஸத் சிஷ்யர்கள் ஆசார்யனுடைய புகழை நிலை நிறுத்தி ஸம்ப்ரதாய மேன்மைக்கு காரண கார்யர்களாய் இருப்பர். தகுதி இன்றி ,பக்தியும் விநயமும் இல்லாதவர்கள், தன்னை பண்டிதர்களாய் நினைப்பவர்கள் ஆகியோருக்கு செய்யும் உபதேசம் பயனற்றவையாகும் என்கிறார் தேசிகர்.

இந்த நிலைக்கு "கணிகாலங்காரம் ஆக்குதல்", "விலைச்சாந்தாக்குதல்", "அம்பலத்தில் அவல் பொரியாக்குதல்", "குரங்கு கையில் பூமாலை ஆக்குதல்" -என்ற உதாரணங்களை காட்டுகிறார் ஸ்வாமி.

ப்ரஹ்மவித்தை அறிந்த ஆசார்யன் ஸத் பாத்ர சிஷ்யன் கிடைக்காவிடில் அந்த வித்தையைத் தன்னுடனேயே முடித்துக்கொள்வது உசிதம் என்கிறார். ஒழுக்கமற்றவர்க்குச் செய்யும் உபதேசம் பயனற்றுப் போவதுடன் அதன் பவித்ரத்தையும் இழக்கிறது. 

எப்படியெனில்  - "நாய்த்தோல் பையில் பால் வைக்குமாபோலே"

"ஸ்மஸான அக்னியை ஹோமத்துக்கு கொணருமாப்போலே" என்ற உதாரணங்களால் காட்டுகின்றார்.

சிஷ்ய லக்ஷணத்தையும் விளக்கும் ஸ்வாமி ,ஸம்ப்ரதாயத்தை அறிய முயலும் சிஷ்யனுக்கு பொறுமை, ஆசார்ய ப்ரதி  பக்தி, அவரிடம் அசைக்க முடியாத நம்பிக்கை இம்மூன்றும் மிக அவசியம் என்கிறார்.

மீண்டும் மீண்டும் சென்று கேட்டல், கற்றவைகளை மனதில் அசைபோட்டுக்கொண்டிருத்தல், தன் சுய கௌரவத்தை ஆசார்யன் முன் காண்பிக்காமை ஆகியனவும் சிஷ்ய லக்ஷணங்களாகும். ஆசார்யன் கற்பிப்பதை சிந்தாமல் சிதறாமல் மனதில் தேக்க வேண்டும். சிஷ்ய லக்ஷணமாக "सद्बुद्धिः साधु सेवि समुचित चरितः शुश्रूषुः प्रणिपतप्रश्नः शास्त्र विश्वास शाली"  என்பதாக ந்யாஸ விம்ஶதியில் ஸ்வாமி சாதித்துள்ளார்.

இத்தகைய உயர்ந்த ஸம்ப்ரதாயத்தை பற்றிய ஞானத்தை நமக்களிக்கும் ஆசார்யனை போற்றி உகப்பதை தவிர நாம் எந்த ப்ரதியுபகாரமும் செய்ய முடியாது. ஞான விளக்கேற்றி இருளனைத்தும் மாற்றிய ஆசார்யனுக்கு என்ன கைம்மாறு செய்வதென அந்த எம்பெருமானே திகைக்கிறான்!!

(For 30th Adhikaram)
"மறுளற்ற தேசிகர் வானுகப்பாலிந்த வையமெல்லாம் இருளற்று  
இறைவன் இணையடி பூண்டிட எண்ணுதலால் 
தெருளுற்ற செந்தொழில் செல்வம் பெருகி சிறந்தவர்பால் 
அருளுற்ற சிந்தையினால் அழியா விளக்கு ஏற்றினரே"  - (அதி 37)


(For 31st  Adhikaram)
"ஏற்றி மனத்து எழில் ஞானவிலக்கை இருளனைத்தும் 
மாற்றினவர்க்கு ஒரு கைம்மாறு மாயனும் காண இல்லான் 
போற்றி உகப்பதும் புந்தியில் கொள்வதும் பொங்கு புகழ் 
சாற்றி வளர்ப்பதும் சற்றல்லவோ முன்னம் பெற்றதற்கே" (அதி 38)

*******************************************************************************
32. நிகமனாதிகாரம்
*******************************************************************************

ஸம்ப்ரதாயத்திற்கே ஓர் விலை மதிக்க முடியாத ரத்ன மாலையாக நம் ஆசார்ய ஸார்வபௌமன் ஸ்ரீமத் வேதாந்த தேசிகன் அருளிச்செய்துள்ளதே இந்த ரஹஸ்யத்ரய ஸாரம்  என்ற உன்னத க்ரந்தம்." ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம்"  

இந்த நிகமனஅதிகாரத்தில் ஸ்வாமி இதுவரை சாதித்துள்ள விஷயங்கள் அனைத்தையும் தொகுத்து தம் ஆசார்யர்களின் இஷ்டத்தை பூர்த்தி செய்த த்ருப்தியை வெளிப்படுத்துகிறார்.

ஒன்று முதல் 22 வரையிலான அதிகாரங்கள் அர்தானுஶாஸனம் எனப்படும். ப்ரபத்தி சாஸ்த்ர மேன்மையை இவை கூறுகின்றன. 

23-24  - அதிகாரங்களும் "ஸ்திரீ கரண பாகம்" எனப்படும். இவை ப்ரபத்தியை தெளிவாக நிலைப்படுத்தும் அதிகாரங்கள். 

25-26 - ப்ரபத்தியின் மேன்மையையும் அதை ரக்ஷணம் செய்யும் விதமும் கூறும் அதிகாரம்.

27-29 - "பதவாக்ய யோஜனாதிகாரம்". அஷ்டாக்ஷரம், த்வயம், சரம ஸ்லோகம் ஆகிய மூன்றின்  உயர்வைக் கூறுபவை. 

30-31- ஆசார்ய சிஷ்ய லக்ஷணங்களின் விவரணம்.

32 - நிகமனம்  என்ற க்ரந்த முடிவுரை.

நாம் கற்கும் கல்வி சுமையாக இருக்க கூடாது. வேதாந்தத்தை விட சிறந்த கல்வி இல்லை. ஸ்ரீமன் நாராயணனை விட பரதேவதை இல்லை. ஸ்ரீ வைஷ்ணவர்களை விட புண்யமானவர்கள் இல்லை. பாகவதர்கள் வசிக்கும் இடங்களை விட திவ்ய தேசங்கள் இல்லை. 

ஸத் புத்தி ஸாத்வீகம் இவற்றைத் தருபவரே ஸதாசார்யன். உத்தவர் மைத்ரேயரைத் தேடி வருவதையும், நாரதர் வால்மீகியை நாடி வருவதையும் போல. மேற்சொன்ன எல்லாவற்றாலும் நமக்கு கிடைக்க போகும் பெரும் பலனே மோக்ஷ சாம்ராஜ்யம் 

ஸ்வாமி தேசிகனை விட உயர்ந்த ஆசார்யன் இல்லை. அவரது சிஷ்யர்களை விட சிறந்த பக்தர்கள் இல்லை. அவரது ஸ்ரீ ஸூக்திகளை விட சிறந்த க்ரந்தங்கள் இல்லை. அவரது ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம் என்ற இந்த க்ரந்தம் ஸ்ரீ பாஷ்யகாரரின் ஆறு கட்டளைகளையும் பூர்த்தி செய்கிறது.

மஹாபாரதத்துள் ராமாயணம் அடங்குவது போல ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்துள் இதிகாஸ, புராண, ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகள், பகவத் கீதை, பூர்வாசார்ய க்ரந்தங்கள் அனைத்தும் அடங்குகின்றன.ஆக இதை அறிந்தவன் எல்லாம் தெளிந்தவன் ஆகின்றான்.

வேதம் கூறும் அனைத்தும் உண்மை என்ற திட நம்பிக்கையுடன் தெளிந்த மனத்துடன் சந்தேகங்களை அகற்றி அற்ப பலன்களை ஒதுக்கி நிலையான மோக்ஷ பலத்தை அடைய பரம க்ருபையுடன் நம் ஸ்வாமி தேசிகன் அளித்துள்ள இந்த க்ரந்தத்தை நாம் ஸதாசார்யன் மூலம்  க்ரஹிப்போமாக!!!

"இந்த கிரந்தத்தை வெள்ளைப்பரிமுக தேசிகர் என் முன்னே தோன்றி என் உள்ளத்தில் எழுதி வைத்தார்" அதனையே நான் ஓலையில் இட்டேன் என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.

ஸ்வாமி தேஶிகன் தம் க்ருதஞையை இப்பாசுரம் மூலம் தெரிவிக்கிறார். 

"எட்டும் இரண்டும் அறியாத எம்மை இவைஅறிவித்து
எட்ட ஒண்ணாத இடம் தரும் எங்கள் அம்மாதவனார்
முட்டவினைத்திரள் மாள முயன்றிடும் அஞ்சல் என்றார்
கட்டெழில் வாசகத்தால் கலங்கா நிலை பெற்றனமே"---(அதி 54)


🙏🙏🌸🌸🌸🌸🌸🌻🌻🌻🌻🌻🌷🌷🌷🌷🌷🌻🌻🌻🌻🌻🌸🌸🌸🌸🌸🙏🙏



Wednesday, April 14, 2021

ஶ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தின் ரஸங்கள்! - Part 5


22. பரிபூர்ண ப்ரும்ஹானந்தாதிகாரம்
******************************************************************************

பரமபதத்தில் பரமபுருஷனை பரிபூர்ணமாய் அனுபவிக்ககும் விதத்தை விவரிக்கும் அதிகாரம் இது.

எம்பெருமானால் வரவேற்கப்பட்ட முக்த ஜீவன் எம்பெருமானுக்கும் பிராட்டிக்கும் ஏற்ற கைங்கர்யங்களை செய்யத்துவங்கி அந்தமில் பேரின்பமடைகின்றான். இதற்கே பரிபூர்ண ப்ரும்ஹானந்தம் என்று பெயர். இவன் திரும்ப இந்த ஸம்ஸார மண்டலத்துக்கு வருவதில்லை.எம் பெருமானுக்கு ஈடான ஞானமும் போகமும் முக்த ஜீவன் பெறுகிறான்.

ஜகத்காரணத்வம், (ஶ்ருஷ்டி) மோக்ஷ ப்ராதாத்வம், (மோக்ஷமளித்தல்) ஸர்வ ஆதாரத்வம், ஸர்வ நியந்த்ருத்வம், ஸர்வ ஸேஷித்வம் ஆகியன எம்பெருமானுக்கே உள்ள அசாதாரண தர்மங்கள். 

ஆதேயத்வம், விதேயத்வம், சேஷத்வம் ஆகியன முக்த ஜீவனுக்கான அசாதாரண தர்மங்கள். இப்படியாக முக்த ஜீவன் பரிபூர்ண ப்ரும்ஹானந்தத்தைப் பெற்று பிறவா நிலை அடைகிறான்.

பிறப்பு-ஸ்திதி-இறப்பு இம்மூன்றும் ஒருஜீவனுக்கு உண்டானநிலை. இவற்றுள் பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை.நம் கவனம் முழுதும் நிலையில்லாத ஸ்திதியிலேயே உள்ளது. பரம க்ருபையுடன் எம்பெருமான் இப்பிறவி நோயைத் தீர்க்க ஶரணாகதி ஶாஸ்த்ரத்தை அளித்து காக்கிறான். 

7 பிறவி சூர்யோபாஸனை, 7 பிறவி ருத்ரோபாஸனை, 7 பிறவி வாஸுதேவோபாஸனை என்று ஒவ்வொன்றினிடமும் பல்லாயிரக்கணக்கான பிறவிகளைக்கடந்து இப்பிறவி கிடைக்கப்பெற்றுள்ளோம். இதில் தேக ஸுத்திக்கு சக்கரப்பொறிஒற்றலும், ஆத்மஸுத்திக்கு ப்ரபத்தியும் ஸாதனமாக்கியள்ளான் அவனை அடைய.இவற்றை அனுஷ்டித்த ஜீவனை பெருமானும் பிராட்டியும் போட்டி போட்டுக்கொண்டு பரிகின்றனர்.

"ஏறி எழில்பதம் எல்லா உயிர்க்கும் இதமுகக்கும் 
நாறுதுழாய்முடி நாதனைநண்ணி அடிமையில்
கூறு கவர்ந்த குருக்கள் குழாங்கள் குரை கழற்கீழ்
மாறுதலின்றிமகிழ்ந்தெழும்போகத்து மன்னுவமே"---(அதி 29)

********************************************************************************
23. ஸித்தோபாய ஸோதனாதிகாரம்
********************************************************************************

ஸித்தோபாயமான எம்பெருமானைப்பற்றிய ஸந்தேகங்களுக்குப் பரிஹாரம் கூறி  உண்மையை விளக்கும் அதிகாரம் இது. இதுவரையிலான 22 அதிகாரங்களின் ஸாரமாகிறது இந்த அதிகாரம்.

எம்பெருமானால் கடாக்ஷிக்கப்படும் ஜீவன் ஆசார்யமுகத்தால் தத்வ த்ரயத்தை அறிந்து ,நிஷ்டை உடையவனாகி ப்ரபத்தி செய்யத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டு ஆறு அங்கங்களுடன் கூடிய ஶரணாகதியைச் செய்து ,நிஷ்பன்ன க்ருத்யனாகி தேவதாந்த்ரம் ,பாகவதாபசாரம் தவிர்த்து ,தன்நிஷ்டைக்குத் தகுந்த பகவத் ,பாகவத கைங்கர்யங்களைச் ஶாஸ்த்ரீய நியமப்படி செய்து, திவ்ய தேசவாஸம் செய்து தேகாவஸான காலத்தில் இந்த ஸ்தூல ஶரீரத்தை விட்டு எம்பெருமானை அடைந்து  பரிபூர்ண ப்ரும்ஹானந்தம் அடைகிறான் . 

இந்த அதிகாரம் ப்ரபன்னனின் மனத்திண்மையைப் பலப்படுத்துவதாய் அமைந்துள்ளது.எம்பெருமான் தன்னைப் பெறுவதற்குத் தானே ஸித்தமியிரருக்கும் கருணை உள்ளவன். ஆக 1.அவனைப்பற்றிய தெளிவு2.செயல் நன்றாகத் திருத்திப் பணிகொள்ளும் ஆசார்ய ஸம்பந்தம், ஆசார்யனிடமிருந்து பெறும்  ஶாஸ்த்ர ஞானம். ஆகிய மூன்றும் எம்பெருமான் நம்மீது கொண்டுள்ள நிக்ரஹ ஸங்கல்பத்தை மாற்ற வல்லவை.

  1. ஆத்மாபஹாரம் செய்யாமை
  2. நாஸ்திகவாதிகளிடமிருந்து நெடுந்தூரம் விலகல்
  3. ப்ரபத்தியை ஒத்திவைத்துக் காலம் தாழ்த்தாமை

இவற்றில் உறுதி கொண்டு லக்ஷ்மீவிஸிஷ்டனாகிய எம்பெருமானை அடைய ப்ரயத்னம் செய்தல் வேண்டும்.

கால விரயத்தினால் ஏற்படும் நஷ்டத்தை ஸ்வாமி கீழ் வரும் உதாரணத்தால் விளக்குகிறார்.

"மதுஅருந்த தாமரையிலமர்ந்த வண்டு இரவாகியும் வெளியேறாமல் காலம்தாழ்த்தியதால் பூ மூடிக்கொள்ள  காலை யில் வண்டுறங்கும் மலரை யானை பறித்து உண்டாற்போல"--என்கிறார்.

ஆக இந்நிலையில்லா ஸ்திதியில் நிலையான ப்ரும்ஹானுபவம் தரவல்ல ஶரணாகதியைக் காலம் கடத்தாமல் செய்வது  மிக அவசியம்."

"மன்னும் அனைத்தும் உறவாய் மருள் மாற்று அருளாழியுமாய்த்
தன் நினைவால் அனைத்தும் தரித்தோங்கும் தனி இறையாய்
இன்னமுதத்தமுதால் இரங்கும் திருநாரணனே
மன்னி அவன்சரண் மற்றோர் பற்றின்றி வரிப்பவர்க்கே"---(அதி 30)

*****************************************************************************
24. ஸாத்யோபாய ஸோதனாதிகாரம்

******************************************************************************

23, 24 - அதிகாரங்களிரண்டும் ஸ்திரீகரணாதிகாரம் எனப்படும். பந்தல்கால் நடும்போது அதனைப்பலப்படுத்துவதுபோல இந்த இரு அதிகாரங்களிலும் ஸ்வாமி தேஶிகன்  ப்ரபன்னனின் மனத்தைப் பலப்படுத்துகிறார்.

"பருத்தி படாத பன்னிரண்டும் பட்டு" என்பது போலவும் "பஹூனாம் ஜன்மநாமந்தே"-என்பது போவவும் எத்தனையோஆயிரம் பிறவிகளாகிய படு குழிகளைக் கடந்துவர இத்தேகம் பட்ட பாட்டைச் சொல்லி மாளாது!!

விஷம் போன்றது இந்த ஸம்ஸாரம். அந்த விஷத்தை முறிக்க வல்ல சிறந்த மருந்து ஶரணாகதி என்ற ஸாத்யோபாயம். இந்த்ரியஆரோக்யம்,யவௌனம் ஐஶ்வர்யம் ஆகியவை நம்மைத்தடுமாறச்செய்யும்‌.

எம்பெருமான் பெயரை அவனுறையும் ஊரில் சொல்லித் தப்பிக்கவேணும். பகவத், பாகவதாபசாரத்திலிருந்து விடுபட வேணும்.

ராஜா செய்து கொடுத்த சௌகர்யங்களால் கிடைத்த நிறைந்த மகசூலை ஒரு விவசாயி ராஜாவிடம் ஸமர்ப்பிக்கும்போது ராஜா எவ்வளவு ஸந்தோஷமடைவானோ அத்தனை ஸந்தோஷம் அடைவான் எம்பெருமான்  ப்ரபன்னனுடைய ஆத்ம ஸமர்ப்பணத்தால்‌.

ஸித்தோபாயனாகிய எம்பெருமான் ஸாத்யோபாயமாகிய பயிரை ரக்ஷிக்க காவல் காக்கின்றான்.

மோக்ஷம் பெற ஶரணாகதி தவிர வேறு உபாயமில்லை என்ற திடசித்தமும் நமபிக்கையும் நாம் பெறுவதுடன் நம்மைச்  சேரந்தவர்க்கும் எடுத்துச் சொல்லி 

ப்ரபத்தி அனுஷ்டிக்கும்படிச் செய்வதே நம் சாதனையாயிருக்க வேணும்..

"வரிக்கின்றனன் பரன் யாவரை என்னும் மறையதனில்
விரிக்கின்றதும் குறி ஒன்றால் வினையரை ஆதலில்நாம்
உரைக்கின்ற நன்னெறி ஓரும்‌ படிகளில் ஒர்ந்து
உலகம் தரிக்கின்ற தாரகனார் தகவால் தரிக்கின்றனமே"(அதி 31)

*****************************************************************************
25. ப்ரபாவ வ்யவஸ்தாதிகாரம்

26. ப்ரபாவ ரக்ஷாதிகாரம்

******************************************************************************

சிறிதும் மிகையோ, குறைப்போ இன்றி ப்ரபத்தி ஶாஸ்த்ரத்தின் மேன்மையையும் அதன் பரபாவத்தை ரக்ஷிக்க மேற்கொள்ளவேண்டிய முறைகளையும் இவ்வதிகாரங்கள் விளக்குகின்றன.

வேத ஸாஸ்த்ரத்திலிருந்து சிறிதும் விலகாத இந்த ப்ரபத்தி ஶாஸ்த்ரம் மிக உயர்ந்தது.மறைந்துள்ள புதையலைக்காட்டிக் கொடுக்கும் "மை" போல ஸம்ப்ரதாய மேன்மையை நன்கறிந்த ஆசார்யர்களின் உபதேசத்தாலன்றி நமக்குள் உறையும் எம்பெருமானை நாம் அறிய முடியாது.

இப்படி அறிந்த எம்பெருமானுக்கு கடமை என்றில்லாது  ப்ரேமையுடன் கைங்கர்யம் செய்தல் வேணும்.

"ஓட்டத்துக்கு அப்பம் தின்பார் போல" (அப்பத்தை சுவைத்து ரஸித்துச் சாப்பிடாது அடைத்து விழுங்கும் பந்தயக்காரன்போல)

ப்ரேமையில்லாத கைங்கர்யத்தில் எம்பெருமானுக்கு உகப்பிருக்காது. அவரவர் வர்ணாஶ்ரம தர்மத்துக்கேற்ப வரையறைக்குட்பட்ட வாழ்க்கை முறைகளை அனுஷ்டிக்க வேணும்."விதுரநீதி"படைத்த விதுரன் சிறந்த ஞானி. ஆனால் தன் வர்ணாஸஶ்ரம தர்மம் கருதி தன் ஞான சக்தியால் ஸனத்ஸுஜாதரரை ப்ரார்த்தித்து அவர்மூலம்  ப்ரும்ஹ வித்தையை த்ருதராஷ்டிரனுக்கு உபதேசிக்கச் செய்தார்.

இதுவே மஹாபாரதத்தில் "ஸனத் ஸுஜாதீயம்" என்றழைக்கப்படுகிறது. நம்மாழ்வார் வேதத்தைச் சொல்ல வில்லை. வேதத்தின் பொருளைத்தான் சொல்கிறார் திருவாய்மொழி மூலம்.

சரீரத்தில் ஆசைவைத்து ஆத்மாவை இழக்கக்கூடாது. சுற்றியுள்ள பந்தத்தால் பகவதனுபவத்தை இழந்துவிடக்கூடாது. அந்தணர்/அந்தியர் பேதமின்றி எம்பெருமான் மோக்ஷமளிக்கிறான்.

ப்ரபத்தி என்னும் மேன்மைமிக்க கடலின் ஒரு திவிலையைக்கூட  நம்மால் வர்ணிக்க முடியாது ஆக இதன் மகத்துவத்தை நாம் ஓங்கி உரைக்க வேணும்.

"தகவால்தரிக்கின்றதன்னடியார்களைத்தன் திறத்தில்
மிக ஆதரம் செய்யும் மெய்யருள் வித்தகன் மெய்யுரையின்
அகவா யறிந்தவர் ஆரண நீதி நெறி குலைதல்
உகவாரென எங்கள் தேசிகர் உண்மை உரைத்தனரே" (அதி 32)

"உண்மை உரைக்கும்மறைகளில் ஓங்கிய உத்தமனார்
வண்மைஅளப்பரிதாதலின் வந்து கழல் பணிவார்
தண்மை கிடக்கத் தரமளவென்ற வியப்பிலராம்
உண்மை உரைத்தனர்ஓரம்தவிர உயர்ந்தனரே" (அதி 33)

***************************************************************to be contd.*******

Thursday, April 8, 2021

ஶ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தின் ரஸங்கள் - Part 4

                       Ammal and Swami Desikan: - Kudanthai en Kovalan

 16. புருஷார்த்த காஷ்டாதிகாரம்

*****************************************************************************

"பகவத் கைங்கர்யம்" புருஷார்த்தம் என்பதாகும் இதன் எல்லை நிலமே "பாகவத கைங்கர்யம்" என்பதைக்காட்டும் அதிகாரம் இது.
பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருப்பவர்களே பாகவதர்கள்.
(ததீயர்) எனப்படுவர். இவர்கள் ராஜகுமாரர்கள் போன்றவர்கள். ப்ரபன்னன் இவர்களைக்கொண்டாடினால் ராஜாவாகிய எம்பெருமான் மிக ஸந்தோஷப்படுவான்.
பகவான் ஸேஷி. அவனே எஜமானன். பாகவதர்களும் ஆசார்யர்களும் ஸேஷபூதர்கள். இவர்களை ஆராதிப்பது பகவானை ஆராதிப்பதற்கு ஈடாகும். ஆக பாகவத ஸேஷம் பகவத் ஸேஷத்வத்துக்குத் துல்யம் (சமம்)
ராவணன் போன்றது நம் மனம். பிறரை வருத்தாமல் நாமும் வருந்தாமல் இருக்க பழக வேணும். ஆசார்ய அறிவுரைகளும் க்ரந்தங்களும்  தளரா மனம் தந்து நம்மைத் தெளிவிக்கும்.

பத்னியின் கைங்கர்யத்தால் மகிழும் பர்த்தாவைப்போல, தம் குழந்தைக்கு அமுதூட்டி மகிழும் தாயைப்போல அர்ச்சையில் எழுந்தருளியுள்ள எம்பெருமானுக்குச் செய்யும்   கைங்கர்யத்தால் ப்ரபன்னன் ஸந்தோஷிக்க வேணும்.

மாதா பிதா செய்யும்  பாபம் மக்களையும், சிஷ்யனின் பாபம் ஆசார்யனையும் சேருமாப்போல பாகவத தோஷம் ப்ரபன்னனைச்சேரும். ஸம்ப்ரதாயத்தின் சீர்மையை ஆசார்யனின் காலக்ஷேபங்கள் மூலம் அறிந்து எம்பெருமான் கைங்கர்யத்தில் ஊற்றம் பெறவேணும். இந்த பகவதநுபவத்தை பாகவதநுபவம் வரை கொண்டு சேர்க்க வேணும்.
"த்த்" என்ற பகவானை  உணர்ந்தவன் "ததீயன்". விஷ்ணு ஆராதனமே உயர்ந்தது. அதைவிட உயர்ந்தது ததீயாராதனம்.
ராஜாவின் முன் ராஜகுமாரனை உதாஸீனம் செய்தால் ராஜாவுக்குக் கோபம் வருமாப்போல "பாகவதாபசாரம் பகவானுக்குக் கோபமுண்டாக்கும். என்பக்தனை உணர்ந்தவரே உயர்குலத்தவர்"-- என்கிறான் பகவான். ஆக பகவத் கைங்கர்யத்தின் எல்லை நிலமாக பாகவத கைங்கர்யம் உள்ளது. இதுவே புருஷார்த்தத்துக்கும் எல்லை. 
 
"வேதமறிந்த பகவர் வியக்க விளங்கிய சீர்
நாதன்வகுத்த நயம் பெருநாம் அவன் நல்லடியார்க்கு
ஆதரமிக்க அடிமை இசைந்து அழியா மறைநூல்
நீதி நிறுத்த நிலை குலையா வகை நின்றனமே" (அதி 23).
 
 
*******************************************************************************
17. ஶாஸ்த்ரீய நியமனாதிகாரம்
*******************************************************************************
ஶாஸ்த்ரத்தில் சொல்லியுள்ளபடி ப்ரபன்னன் செய்ய வேண்டிய பகவத்
பாகவத கைங்கர்யங்களைச் சொல்கிறது இவ்வதிகாரம்.
அஞ்ஞானத்தை வளர்க்கும்  இவ்வுலகில் சாஸ்த்ரம் தான் கைவிளக்கு. அதனைத்தழுவியே ப்ரபன்னனின் கைங்கர்யம் அமைய வேணும். 

ஶ்ரீபாஷ்யகாரரின் அறிவுரையால் இதனைத்தெளியலாம். ப்ரபன்னன் 
இச்சரீரம் அழியும்வரை செய்ய வேண்டிய கைங்கர்யங்கள் 
ஐந்து.
  1. ஶ்ரீபாஷ்யத்தைஸேவித்து பிறர்க்கு உபதேசித்தல்.
  2. அதற்குத் தகுதி இல்லையேல் ஆழ்வார் ஸுக்திகளை அத்யயநம் செய்து பிறருக்கு உபதேசித்தல்.
  3. அது முடியாவிடில் திவ்ய தேசங்களில் எம்பெருமானுக்கு சந்தனம் மாலை ஸமர்ப்பிக்கும் கைங்கர்யம் செய்தல்.
  4. இதுவும் முடியவில்லை எனில் த்வயத்தை அநுஸந்தானம் செய்திருத்தல்
  5. இதுவும் முடியாவிடில் ஒரு ஶ்ரீவைஷ்ணவனைஅண்டி அவன் நிழலில் ஒதுங்குதல். 
 
ஶ்ரீபாஷ்யகாரர் கூறிய இவற்றுள் ஏதேனும் ஒன்றையாவது செய்தல் வேண்டும்.
ப்ரபன்னன் ஶாஸ்த்ரத்தை மீறாமல் நடந்து எம்பெருமான் உகப்பை பெற முயலவேணும். 
ஆக்ஞா கைங்கரயம்--(ஸந்த்யாவந்தனம் முதலியன) இதனைச்செய்யாவிடில் பகவானின் நிக்ரஹம் ஏற்படும். 
அநுக்ஞா கைங்கரயம் --(சந்தன,புஷ்ப கைங்கர்யம்) இதனால் பலனுண்டு. செய்யாவிடில் பாபமில்லை.
 
"நின்றனர் அன்புடை வானோர் நிலையில் நிலமளந்தான்
நன்றிது தீயிதென்று நடத்திய நான்மறையால்
இன்று நமக்கு இரவாதலில் இம்மதியின் நிலவே
அன்றி அடிக்கடி ஆரிருள் தீர்க்க அடியளதே" (அதி 24)
 
 
****************************************************************************
18. அபராத பரிஹாராதிகாரம்
****************************************************************************
ப்ரபத்திக்குப்பின்  ப்ரபன்னன் செய்யும் பாபங்களைப் போக்கிக்கொள்ளும்
வழிகளைக் கூறும் அதிகாரம் இது.
ஆசார்ய க்ருபையால் மட்டுமே ஶாஸ்த்ரார்த்தங்களைத் தெரிந்து கொள்ள முடியும். ஶாஸ்த்ரங்களை உணர்ந்து அதன் போக்கில் நாம் அவற்றைபுரிந்து கொள்ளவேணும்.
நம் புரிதலுக்கேற்ப அவை மாறாது. ப்ரபன்னன் எம்பெருமான் கட்டளைகளை ஏற்று நடக்கவேணும்.
ப்ரபத்திக்குப்பின் பாபம் செய்யாதிருக்க வேணுமே என்ற பயம் ஞாயமனதே.
ப்ரபத்திக்குப்பின் தெரியாமல் செய்தபாபம் ஒட்டாது. புத்தி பூர்வமாய் செய்த பாபங்களுக்கு வருந்தி ப்ராயச்சித்தம் செய்ய வேண்டும். இதனைச் செய்யாதவர்கள் பகவானளிக்கும் சிறு தண்டனைகளை அனுபவிக்கிறார்கள். விபரீத அனுஷ்டானங்களில் ஈடுபடாதிருக்க வேணும். ப்ராயச்சித்த ப்ரபத்திக்கு "புனப்ரபாதானம்" என்று பெயர். இதனால் அனுஷ்டித்த ப்ரபத்திக்கு எந்தக் குறையும் ஏற்படாது.
தேகாத்ம ப்ரமை, ஸ்வாத்ம ஸ்வதந்த்ரம், பாகவதாபசாரம் ஆகிய புத்திபூர்வ பாபங்களை ப்ரபன்னன் இந்த தேஹாவஸானம் வரை எக்காரணத்தாலும் செய்யக்கூடாது.
 
ஆறறிவு படைத்த மனிதனால் தத்துவங்களை அறிந்து தவறுகளையும் பாபங்களையும் தவிர்க்க முடியும். அதற்கு திடமான வைராக்யமும் அப்யாசமும் தேவை.
இதனால் மோக்ஷம் தாமதிக்குமே தவிர இல்லாமல் போகாது. பெருமான் செய்த ஸங்கல்பம் பொய்க்காது. சிக்ஷித்து நம் பாபங்களைத் தொலைக்க வைப்பான்.
த்ரிஜடை சொல் கேளாத ராக்ஷஸிகளுக்கு ஹனுமானால் ப்ராணபயம் ஏற்பட்டு பிராட்டி க்ருபையால் விலகினாற்போல சிக்ஷை அளித்து நம்மை தடுத்தாட்கொள்வான் எம்பெருமான்.
 
"உளதான வல்வினைக்கு உள்ளம் வெருவி உலகளந்த
வளர் தாமரை இணை வன்சரணாக வரித்தவர்தம்
களைதான் என எழும் கன்மம் துறப்பார் துறந்திடிலும்.
இளைதாநிலைசெக எங்கள் பிரான் அருள் தேன் எழுமே" (அதி 25)
 
******************************************************************************
19. ஸ்தானவிஸேஷாதிகாரம்
******************************************************************************
ப்ரபன்னன் வஸிக்கத்தக்க இடங்களைப்பற்றிக் கூறும்  அதிகாரம் இது.
எம்பெருமானின் திருவடிஸேவையுடன் திருவாராதனம்
முதலியவற்றாலும்,காலக்ஷேபங்களாலும் பக்தி ப்ரவாகம்நிறைந்த ஸ்தலங்கள் வைகுந்தத்துக்குச் சமானமாகிறதாம்.
"கருந்தடமுகில் வண்ணனைக் கடைக்கொண்டு கைதொழும் பக்தர்கள் இருந்த ஊரில் இருக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார் கொலோ" (4-4-7) பெரியாழ்வர் திருமொழி என்பதற்கிணங்க திவ்யதேசங்கள் ப்ரபன்னன்  வாழச்சிறந்தவை. சாது ஜனங்கள் நிறைந்ததுவும் ஆசார்யர்கள் வழிபட்டதாயுமுள்ள இடங்கள் நாம் சென்று வாழத்தகுந்தவை என்கிறது
மகாபாரதம்.
எங்கு மன ஶாந்தி கிடைத்து, ஹ்ருதய கமலத்துள் எழுந்தருளியுள்ள எம்பெருமானை ஆராதிக்க முடிகிறதோ அதுவே காஞ்சி, திருப்பதி, நைமிசாரண்யம் எனலாம். இதனை விளக்க ஸ்வாமி உதாகரிக்கும் கதை இது.
 
காலவர் என்பவர் கருடனின் மாமா.
விஶ்வாமித்ரரின் சீடர். குரு தக்ஷிணையாக ஒரு காதுமட்டும் பச்சையாக இருக்கும் 1000 குதிரைகளைக் கேட்க கருடன் அவருடன் வருணலோகம் செல்லும் வழியில் சமுத்ரத்தின் நடுவே உள்ள தீவில் இளைப்பாற நேர்தந்தது. சாண்டிலீ என்ற வேட்டுவச்சேரியில் தன் ஆசாரம் குறையாமல் வாழ்ந்து வந்த அவளது உபஸரிப்பில் திளைத்து எழ முயன்ற கருடன் சர்வசக்தியும் ஒடுங்க இறக்கைகளும் உதிர்ந்தன. காரணம் அறியாது விழித்த கருடனிடம் "பாகவதாபசாரம்" தான் இந்நிலைக்குக் காரணம் ஏனக் காலவர் கூறினார். "இந்த சிறந்த தபஸ்வினி  இவ்வேட்டுவச்சேரியில் வசிக்கும் நிர்பந்தம் ஏன்" என்ற நினைப்பே பாகவதாபசாரமாகியது. என்றறிந்து கருடன் தபஸ்வினியிடம் மன்னிப்பு கேட்க இழந்த சக்தியும் இறக்கைகளும் மீண்டும் பெற்றான் கருடன். பாகவதாபசார தீவ்ரத்தை விளக்கும் கதை இது. ஆக இந்ரியங்களை அடக்கிய ப்ரபன்னனுக்கு எந்த இடமும்திவ்ய தேசமாகும்.
"ஆராத அருளமுதம் பொதிந்த கோயில்"--
"கண்ணன் அடி இணை எமக்குக்காட்டும் வெற்பு" (அதி42,43)

"தேனார்கமலத் திருமகள் நாதன் திகழ்ந்துறையும்
வாநாடுகந்தவர் வையத்--திருப்பிடம்
வன்தருமக் கானார் இமயமும் கங்கையும் காவிரியும் கடலும்
நானா நகரமும் நாகமும் கூடிய நன்னிலமே"--(அதி 26)
 
*********************************************************************************
20. நிர்யாணாதிகாரம்
*********************************************************************************
இந்த ஶரீரத்திலிருந்து ஜீவன் வெளியேறும் முறையை விவரிக்கும் அதிகாரம் இது.
தேச, கால, நியம, சூழ்நிலை ஆகிய தடைகளைக் கடந்தது ப்ரபத்தி. இது மற்றைய உபாயங்களால் அடைய முடியாத பலன்களைத்தரவல்லது.
ஒரே ஒருமுறைதான் இதனை அனுஷ்டிக்க முடியும்.
"கடற்கரையை நினை. கடற்கரையில் ராமபிரான் சொன்ன வார்த்தையை நினை"-- என்கிறார் பராஸரபட்டர். 
ஒருவன் என்று ப்ரபத்தி அனுஷ்டிக்கிறானோ அதுவே அவனுக்கும் எம்பெருமானுக்கும் நடக்கும் ஆத்ம விவாஹ தினம்.
ப்ரபத்தியே ஶக்தி மிக்கது. அதைப் பலப்படுத்த வேறேதும் தேவையில்லை. இதற்கு "ப்ரும்ஹாஸ்த்ர ந்யாயம்" என்று பெயர். ப்ரும்ஹாஸ்த்ரம் ஒருமுறைதான் ப்ரயோகிக்க முடியும். 2ம் முறை ப்ரயோகித்தால் பயன்தராது. இந்த்ரஜித் தொடுத்த ப்ரும்ஹாஸ்த்ரத்தால் கட்டுண்ட ஹனுமனை ராக்ஷஸர்கள் கயிற்றால் கட்டியதால் ப்ரும்ஹாஸ்த்ரம் பலன் தராது போயிற்று. அதேபோல ப்ரபத்தி பிற சம்பந்தத்தை ஏற்காது.
நாம் நம்மை பக்தனாக உணர வேணும். 
ப்ரபத்தி பலிதமாக ப்ரபன்னனுக்குத்தடையாக உள்ளவை.
  1. அகங்கார மமகாரம்
  2. பாகவதாபசாரம்
  3. தேவதாந்தரம்
  4. புத்தி துர்லபம்(குறைவு)
இவற்றைத்தவிர்க்க பகவான் செய்யும் உபகாரங்கள் பல.
ஸதாசார்ய ஸத்ஸங்கத்தை ஏற்படுத்தி, ப்ரபன்னனின் மகாவிஶ்வாஸத்தைக்கூட்டி, சிறு சிக்ஷைகளை அளித்து அவனை மோக்ஷத்துக்குத் தயார்படுத்துகிறான் எம்பெருமான்.
"அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள் தன் அருள் நினைந்தே அழும் குழவி"--போலவும்
"த்வயி ரக்ஷதி ரக்ஷகை: கிமன்யை: த்வயி  சாரக்ஷதி ரக்ஷகை: கிமன்யை:"---என்பதையும் உணர்ந்த ப்ரபன்னனை பெருமான் கைவிடான்.
சிறையிருந்த ராஜகுமாரனை விலங்கறுத்து அரண்மனை அழைத்துச்செல்லும் ராஜனைப்போல ப்ரபன்னனின் ஜீவனை  மூர்தன்யநாடி வழியே வெளிக்கொணர்ந்து  சூக்ஷ்மஶரீரமளித்து அர்ச்சிராதி மார்க்கம் வழியே அழைத்துச் செல்ல ஸித்தமாயுள்ளான்.
 
"நன்னிலமாம் அது நற்கலமாம் அது நன்னிமித்தம் என்னலுமாம் அது
யாதானுமாம் அங்கடியவர்க்கு மின்னிலை 
மேனி விடும் பயணத்து விலக்கு இலதோர் 
நன்னிலையாம் நடுநாடி வழிக்கு நடைபெறவே" (அதி 27)
 
*****************************************************************************
21. கதி விஶேஷாதிகாரம்
*****************************************************************************
பரமபதம் செல்லும் ப்ரபன்னனின் ஜீவயாத்ரையின் விளக்கமே இவ்வதிகாரம்.
கருணாமூர்த்தியான எம்பெருமான் ஶரணாகதியின் மூலம் ப்ரபன்னனைத் தன்னிடம் அழைத்துக் கொண்டு ரக்ஷிக்கிறான் ஒரு ஶ்ரீ வைஷ்ணவனைச் சார்ந்ததால் பசு, யானை, வௌவால் இவற்றுக்கும் ப்ரபத்தி கிடைத்ததை அறிகிறோம்.
எம்பெருமான் ஸர்வக்ஞன். ஸர்வ ஶக்தன். பரமகாருணிகன். ஆனாலும் ஶரணாகதி மூலமே அவனை அடையமுடியும். 
ஸுகரமான வராஹம் ஸுகரமான சுலப ஶரணாகதி வழியைக்காட்டி மகத்தான பெரும் பலனாகிய மோக்ஷத்தை அளிக்கிறான். ஸௌபரீ போன்ற பெரிய தபஸ்விகளே இந்த ஸம்ஸார பந்தத்தில் வீழ்ந்து "பழுதே போக்கினர் பல காலங்கள்".
இந்த ஶரீரத்திலிருந்து ஜீவனை எம்பெருமான் ப்ரும்ஹநாடிக்குள் 
புகச்செய்து அதன் பயணத்தை அர்ச்சிராதி மார்க்கத்தை நோக்கி அமைத்துக் கொடுக்கிறான். இந்த ஒளிப்பாதையில் செல்லும் ஜீவனுக்கு
அக்னி, சுக்லபக்ஷ, உத்ராயண தேவதைகள், ஸம்வத்ஸர, வாயு, ஆதித்யன்,சந்த்ரன், வருணன், இந்த்ரன், ப்ரஜாபதி ஆகிய தேவதைகள் அந்தந்த இடங்களில்  உபசாரங்கள் செய்கின்றனர். 
இவ்வாறு ஜீவன் விரஜா நதியை அடைந்து நீராடி ஸூக்ஷ்ம ஶரீரம் விடுத்து அப்ராக்ருத ஶரீரம் பெற்று ஶ்ரீவைகுண்டம் புகத் தயாராகின்றான். ஆங்கே முக்தர், நித்யஸூரிகள் அளிக்கும் ப்ரும்ஹாலங்கார மரியாதைகளைப் பெறுகிறான்.
ஆங்கே புகும் முக்தாத்மா எம்பெருமான் அமர்ந்துள்ள மணிமண்டபத்தை அடைந்து அவனது திருவடித் தாமரைகளில் பணிந்து 
பற்றுகிறான் .முக்தாத்மாவாகிய  இவனுக்கு மோக்ஷானுபவமளித்து
கைங்கர்ய ஸாம்ராஜயத்தில் பரிபூர்ண ப்ரும்ஹானந்தம் அனுபவிக்கச் செய்கிறான் அவன் திருவடிநிழலில்.

 "நடைபெற அங்கிப்பகல் ஒளிநாள் உத்தராயணம் ஆண்டு
 இடைவருகாற்று இரவி இரவின் பதி மின் வருணன்
 குடையுடைவானவர்கோன் பிரஜாபதி என்று இவரால்
 இடையிடை போகங்கள் எய்தி எழிற்பதம் ஏறுவரே"---(அதி 28)
 
*************************************************************to be contd.********

Friday, April 2, 2021

ஶ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தின் ரஸங்கள் - Part 3

                    

 11. பரிகர விபாகாதிகாரம்

***************************************************************************
(ப்ரபத்தியின் அங்கங்களை விளக்கும் அதிகாரம்)
ப்ரபத்திக்கு 5 அங்கங்கள் உள்ளன-
1. அனுகூல்ய ஸங்கல்பம் --எம்பெருமான்திருவுள்ளம் உஹக்கும் கார்யங்களை மட்டுமே செய்தல்.
2. ப்ராதிகூல்ய வர்ஜனம்  --எம்பெருமான் திருவுள்ளம் உகக்காத செயல்களை விடுதல்
3. மஹாவிஶ்வாஸம் --ப்ரபன்னனைக் காக்கும் சக்தி எம்பெருமான் ஒருவனுக்கே உண்டு என்ற திடநம்பிக்கை.
4. ‌கார்ப்பண்யம் --பரம புருஷார்த்தமாகிய  மோக்ஷத்தை தன்னாலேயே அடையமுடியாது என்பதை முழுதுமாய் உணர்தல்
5. கோப்த்ருத்வ வர்ணம் --ப்ரபன்னின் ரக்ஷகனாக எம்பெருமானை வரித்து ப்ரார்த்தித்தல்
 
இந்த 5 அங்கங்களையும் ப்ரபன்னன் ப்ரபத்தி செய்யும்போது கொஞ்சமும் குறையாமல் அனுஷ்டிக்க வேணும்.
த்ரிஜடை ஸீதாபிராட்டியிடமும், விபீஷணன் ராமபிரானிடமும்  மஹாவிஶ்வாஸத்துடன் ப்ரபத்தி அனுஷ்டித்தார்கள்.
 
அறிவித்தனர்அன்பர்ஐயம் பறையும் உபாயமில்லாத்
துறவித்துணியில் துணையாம் பரனை வரிக்கும் வகை
உறவு இத்தனையின்றி ஒத்தாரென நின்ற உம்பரை நாம்
பிறவித்துயரா செகுப்பீர் என்றிரக்கும் பிழையறவே (அதி 18)
 
 
**************************************************************************
12. ஸாங்கப்ரபாதானாதிகாரம்
**************************************************************************
ப்ரபன்னன் ப்ரபத்திசெய்யும் போது கடைபிடிக்கவேண்டிய அங்கிகளின் முக்யத்துவத்தை விளக்கும் அதிகாரம் இது. 
ப்ரபன்னன் 4 வித த்யாகங்களும் செய்ய வேணும். ஆசார்யனை முன்னிட்டுக்கொண்டு இவற்றை ப்ரபன்னன் செய்ய வேணும்‌. த்வய மந்த்ரம் ஸாதனமாகிறது. இவற்றுடன் ப்ரபன்னன் ஸ்வரூப, பல, ஆத்ம ஸமர்ப்பணம் செய்கிறான். இவற்றுள் பர ஸமர்ப்பணம் (ஆத்ம) மிக முக்யமாகிறது.
5 அங்கங்களுடன் ப்ரபத்தி செய்யும் ப்ரபன்னன் கைகொள்ளவேண்டிய படிகள் -
  • அனுஷ்டான ஸங்கல்பம்,
  • ஸாத்விக த்யாகம்,
  • குருபரம்பரா த்யானம்,
  • தாயார் திருவடிகளில் புருஷகார ப்ரபத்தி, 
  • த்வய மந்த்ர உச்சாடணம் ஆகியவை‌

1. க்ருத்ருத்வ த்யாகம்  ------எம்பெருமானின் கருணையே  ப்ரபத்திக்குக் காரணம்.
2. மமதா த்யாகம்  -------பலனை எதிர்பார்த்து இதனை அனுஷ்டிக்கவில்லை என்ற ஞானம்.
3. பலத்யாகம்  ----ப்ரபத்தியின் பலன் முழுதுமாய் எம்பெருமானுடையது என்று புரிதல்.
4. பலபலோ த்யாகம்  ---எம்பெருமான் ஒருவனே அடையத்தக்க பலன்.
 
குழந்தையின் ஆரோகயத்துக்கு தாய் பத்யம் இருக்குமாப்போல நமக்காக ஆசார்யன் ப்ரபத்தி செய்யும் போது நாம் பாபம் செய்யாதிருக்கவேணும். அரண்மனையில் திருடிய நகையை அரசனிடம் திருப்பித்தரும் திருடன் போல நம்பரத்தை  நாமும் உரியவனிடம் சேர்க்க முயல வேணும். இதனால் நாமும் எம்பெருமானும் ஸந்தோஷிக்கலாம்.
"மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்" உபாய அனுஷ்டானம் செய்யும் வரை ஸோகம் இருக்கவேணும்‌ செய்தபின் ஸோகம் தவிர்க்க வேணும்.

அறவே பரமென்று அடைக்கலம் வைத்தனர் அன்று நம்மை
பெறவே கருதிப் பெரும் தகவுற்ற பிரான் அடிக்கீழ்
உறவேய் இவனுயிர் காக்கின்ற ஓருயிர் உண்மையை நீ
மறவேல் என நம் மறைமுடி சூடிய மன்னவரே" ---(அதி 19)

 
******************************************************************************
13. க்ருத க்ருத்யாதிகாரம்
******************************************************************************
ப்ரபத்தி அனுஷ்டித்தபின் சேதனன் மனநிலையையும் அனுஷ்டானங்களையும் விவரிக்கும் அதிகாரம் இது.
தன் ஆத்ம ரக்ஷணத்தை எம்பெருமானிடம் ஒப்படைத்தபின் வேறெந்த பாதுகாப்பையும் சேதனன் நாட வேண்டாம்.
ப்ரபத்தி அனுஷ்டித்த சேதனன் தன் நித்ய நைமித்திக கர்மாக்கள், பகவத் பாகவத , ஆசார்ய கைங்கர்யங்களைச்செய்தல் வேண்டும். 
பயத்தையும், சந்தேகத்தையும் விட்டு பாபங்களைச்செய்யாதிருக்க வேண்டும். ப்ரபத்திக்கு முன்னிருந்த நிலையில் நிர்வேதம் கொண்டு, ப்ரபத்திக்குப்பின் ஒரு நிறைவை அடைகிறான். "பொறுப்புத் துறப்பே" ஶரணாகதி. ஆசார்யன் மூலம் எம்பெருமான் திருவடிகளில் ஆத்மாவை அடைவித்த நிலை இது. தன் பொறுப்புக்களிலிருந்து விடுபட்டு சேதனன் "க்ருத க்ருத்யனாகின்றான்".
பரன்யாஸம் அனுஷ்டித்த க்ருதக்ருத்யன் ஸம்ஸாரத்தைக் கடக்க எம்பெருமான் திருவடிகளைப் பற்றியுள்ளான். எம்பெருமானின் ஸங்கல்பமாகிய சூர்யோதயம் சேதனனை ஸம்ஸாரம் என்ற இருட்டிலிருந்து வெளியேற்றுகிறது.
பரன்யாசத்ததுக்குப்பின் வாய்க்கும்போதெல்லாம் ஆசார்யனை அணுகி  பகவத்விஷயங்களை க்ரஹிக்கவேணும். 
"போரடிக்கும் மாடு வாய்க்குப்போட்ட பூட்டின் வழியே வைக்கோலை உண்ணுமாப்போல" படகு நீரில் மிதக்கும் வஸ்து. நீர் அதனுள் புகுந்தால் அதன் நிலை என்னவாகும்!
அதுபோல சுக துக்கங்களைத்தள்ளிவைத்து வாழப்பழகி ஆசார்ய உபதேசங்களால் தெளிய வேணும்.
"மாஸுச:" என்ற எம்பெருமான் வாக்கில் மஹாவிஸ்வாஸம் கொட்டு வேறு உபாயத்தை நாடாது யாருக்கும் இனி ப்ரபன்னன் கடன் பட்டவனல்ல என்பதை உணரவேணும். இதுவரை பல பிறவிகளில் சேர்த்த பாவங்கள்  ப்ரபத்தியில் அழிகிறது. வரப்போகும் பாபம் ஒட்டாது. ப்ராரப்தம் அனுபவித்து இப்பிறவியில் முடியும் இதனையே ஆண்டாள் "போயபிழையும், புகுதருவான், நன்றனவும் தீயினில் தூசாகும் "--என எளிமையாய் ச்சொல்கிறாள்.

"மன்னவர் விண்ணவர் வானோர் இறை ஒன்றும் வான் கருத்தோர்
அன்னவர் வேள்விஅனைத்தும்முடித்தனர் அன்புடையார்க்கு
என்ன வரம் தர என்ற நம் அத்திகிரி த்திருமால்
முன்னம் வருந்தி அடைக்கலம் கொண்ட நம் முக்கியரே" (அதி20)

************************************************************************
14. ஸ்வநிஷ்ட அபிஞானாதிகாரம்
************************************************************************
ப்ரபத்திக்குப்பின் ப்ரபன்னனிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் பற்றி  விவரிக்கும் அதிகாரம் இது.
ப்ரபத்தியின் அடிப்படை நியதிகளைத் தெரிந்து ப்ரபத்தி செய்த  சேதனனின் மனத்தளவிலும் நடவடிக்கைகளிலும் ஏற்படும் படிப்படியான முதிர்ச்சி முன்னேற்ற நிலைகளை ஸ்வாமி கூறுகிறார்.
ப்ரபத்தி ஸாஸ்த்ர ஞானமும், அதனை அடையும் மனோபாவமும் அனுஷ்டான க்ரமமும் இதிலடங்கும்.
தன்னைப்பற்றிய இந்த ஸ்வரூப நிஷ்டை நிலையை அடைந்த சேதனன் கீழ்வரும் லக்ஷணங்களைக்கொண்டவனாயிருப்பான்.

1. பிறரின் எதிர்மறைப்பேச்சுக்களால் பாதிப்படையாமை.
2. தன் பாபங்களை/குற்றங்களைச்சுட்டும் போது நன்றியுடன் ஏற்றல்‌
3. தவறுகள்/பாபங்கள் குறைவதில் ஸந்தோஷமடைதல்

உபாய நிஷ்டை செய்தவரின் லக்ஷணம்:
1. மரணத்தைக்கண்டு பயப்படாது அதனை ஓர் அதிதியைப்போல ஏற்றல்.
2. எம்பெருமான் ஒருவனே அடைக்கலம் என்பதில் உறுதி.
3. எந்த இக்கட்டிலும் பெருமான் ஒருவனே காப்பவன் என்ற ஞானம் மிகுதல்.
4. ப்ரபத்திக்குப்பின் வேறு உபாயத்தை நாடாமை.
5. நல்லதும் தீயதும் அவன் ஸங்கல்பம் என நம்புதல்

பல நிஷ்டையின் லக்ஷணங்கள்:
1. ப்ரபன்னன் தன் ஜீவதசையில் கிடைக்கும் போகங்களை அனுபவித்தல்
2. பகவத் கைங்கர்யத்தில் ருசியை அபிவிருத்தி செய்தல்.
3. பகவதநுபவம் பெற ஆர்வமடைதல்.

"முக்கிய மந்திரம் காட்டிய மூன்றில் நிலை உடையார்
தக்கவை அன்றித் தகாதவை ஒன்றும் தமக்கிசையார்
இக்கருமங்கள் எமக்கு உள எனும் இலக்கணத்தால்
மிக்க உணர்த்தியர் மேதினி மேவிய விண்ணவரே."(அதி21)


*******************************************************************************
15. உத்தர க்ருத்யாதி காரம்
*******************************************************************************
ப்ரபத்தி செய்துமுடித்த சேதனன் தன் ஜீவதசை முடியும்வரை கடைபிடிக்கவேண்டிய விதிகளை இந்த அதிகாரம் விவரிக்கிறது.
இந்த்ரியங்களை அடக்குதல், அவற்றை பகவத் ஸாஸ்த்ரங்களை அறிவதில் திருப்புதல், பாகவதாபசாரம் படாதிருத்தல், பரமைகாந்திகளுடன் ஸத்ஸங்கம் செய்தல்.
ஆகியவற்றைக்கடைபிடிப்பதால் ப்ரபன்னன் எம்பெருமானின் கட்டளைகளை மீறாமல் ஒரு ஆஸ்திக ப்ரபன்னனாக, உதாரண புருஷனாக விளங்குவான்.
இதுவரை தனக்கு தகுதி இல்லாமலிருந்ததை நினைந்து ஒதுங்காமல் எம்பெருமானின் எல்லையற்ற கருணையால் தான் ஶரணாகதி செய்யமுடிந்திருக்கும் தகுதியை நினைந்து அவனது ஆக்ஞா, அனுஞா கைங்கர்யங்களை விடாது செய்யவேணும்.
ஸாத்விக ஆகாரத்தை உட்கொண்டு இந்த்ரியங்களை வசப்படுத்தித் தகாத விஷயங்களில் ஈடுபடாமல் கட்டுப்படுத்த வேண்டும். 
ப்ரபன்னன் வாழவேண்டிய வழிமுறைகளை ஆசார்யர்களை  அண்டி அறியவேணும். கேள்வி கேட்பதை விடுத்து அடுத்து செய்ய வேண்டிய கைங்கர்யங்களைப்பற்றி சிந்திக்கவேணும்.
"சீர்கலந்த சொல் நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ்துயரை என்நினைந்து போக்குவரோ இன்று"---என ஆழ்வார் ஸாதிப்பதுபோல பகவத் சிந்தனை மிக முக்யம். எம்பெருமானின் திருக்கல்யாணகுணங்கள், அவன் அடியார்க்கு வசப்பட்டிருக்கும் தன்மை
இவற்றை அறிந்து அனுபவிக்கப் பழகவேணும்.

"உனக்கு எந்த இடம் சௌகர்யமாயுள்ளதோ அங்கே பர்ணசாலையை அமை"--என்றபோது கட்டளை இடாது இவ்வாறு சொல்வது  வருத்தமளிக்கிறது என்கிறார் ராமனிடம் இளையபெருமாள். ப்ரபன்னின் கைங்கர்ய ஆசை இப்படி இருக்க வேணும். தேத்தாங்கொட்டையால் கலங்கிய நீர் தெளியுமாப்போல ஆசார்யர்களின் உபதேசங்களால் ப்ரபன்னனின் மனம் தெளிவடையவேணும்.
இதைப்போல பாகவத கைங்கர்யமும் செய்தல் வேண்டும். அவர்களின் அருட்பார்வைக்கு இலக்காக வேணும். மேடு பள்ளங்களைத்தவிர்த்து சாலையில் நடந்து முன்னேறுவது போல ப்ரபத்திக்குப்பின் உள்ள ஜீவதசையை மிகுந்த கவனத்துடன் கடக்கவேண்டும்.

"விண்ணவர் வேண்டி விலக்கின்றி மேவும் அடிமை
எல்லாம் மண்ணுலகத்தில் மகிழ்ந்தடைகின்றனர்
வண்துவரைக் கண்ணன் அடைக்கலம் கொள்ளக்கடன்கள் கழற்றிய
நம் பண்ணமரும் தமிழ் வேதமறிந்த பகவர்களே" (அதி22)

**********************************************************to be contd.************

Friday, March 26, 2021

ஶ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தின் ரஸங்கள் - Part 2

                The Vice President, Venkaiah Naidu released a postage stamp to commemorate  the 750th birth anniversary of Sri Vedanta Desikan in New Delhi.
 
 
6. பரதேவதா பாரமார்த்திக அதிகாரம்
***************************************************************************
நம் வாழ்க்கை முறையைச் செப்பனிட்டு இக‌ பர சுகங்களை அளிக்க வல்லது நம்ஸம்ப்ரதாயம்.
கல்யாணம் முடிந்த கையோடு தன் மனைவியைக்கொல்ல வந்த கம்ஸனுடன் தன் தந்தை வஸுதேவர் நடத்திய ஸம்பாஷணையை நினைவுகூர்ந்து இக்கட்டான நிலையைச் சமாளிக்கும் வழியை அர்ச்சுனனுக்கு உபதேசிக்கிறான் க்ருஷ்ண பரமாத்மா. நம் ஸம்ப்ரதாயத்துக்கு ஏற்பட்ட நெருக்கடிகளைத் தீர்த்துக் காப்பாற்றிய நம் ஆசார்யர்களின் நிலையைச் சற்றேசிந்தித்தால் "த்யாகம்" என்பதன் அர்த்தம் புரியும்.
"ப்ரமாணம்" என்ற "ஸ்ருதப்ரகாஸிகையை " ஸ்வாமி தேஶிகனும் "ப்ரமேயம்" என்ற அரங்கனை ஸூதர்ஶனஸூரியும் காப்பாற்றும் பொருட்டு அடைந்த துயரமும் கஷ்டமும் சொல்லில் அடங்கா! அழியும் தேகத்தைக்காக்க முற்படும் நாம் அழியாத ஆத்ம பலத்தைத்தரும் ஸம்ப்ரதாயத்துக்குத் தர முற்படுவதில்லை. புனரபி ஜனனம் புனரபி மரணம் என்பதை ஆத்மரக்ஷணம் தடுத்து நிறுத்தும்.
 
இதற்குரிய வழிகள்----
1. பர தெய்வம் (மேலான தெய்வம்) எது என நன்கு தெளிதல் வேண்டும்.
2. கர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்பது பற்றி அறிதல்.
3. கர்ணத்ரய ஸாரூப்யம் (அனுஷ்டானம்) தூமலர் தூவி, வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்தல் இம்மூன்றும் ஸௌக்ய ரஸாயனமாய் செயல்படும் என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.
இம்மூன்றினால் எம்பெருமானுக்கும் நமக்கும் நேரடித்தொடர்பு நேர்ந்தபின்
மற்றைத் தெய்வம் நாடுதல் வேண்டாம்  என நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
24 படிகளளாகிய தத்துவங்களைக் கடந்து 25 படியாகிய ஜீவனைத்தாண்டி 26ம் நிலையாக "நானே தத்வம்" என அபயஹஸ்தத்துடன் ஓங்கி உயர்ந்து நிற்கும் வரதனே பரதெய்வம். அவனைக்கண்டுணர்ந்தபின் "உள் வாங்கிய கைக்கு அவன் நீட்டிய கை ப்ரத்யுக்தம்" என்பதனைத் தெளிவாக மனதில் கொள்ள வேண்டும்.
வ்யாஸர் செய்த ஸத்ய வாக்கை மானஸீகமாய்க் கொண்டு எம்பெருமானைத் தவிர இதர தேவதைகளைத் தொழேன் "என்று ஸங்கல்பிக்க வேணும்.
அல்ப, அஸாரமான குழப்பங்களை மனத்திலிருந்து வெளியேற்றினால் ஸாரம் தானே உள்ளே புகும் என பரதேவதா நிச்சயத்தை ஸ்வாமி ஸ்தாபிக்கிறார்.
 
இதனை விளக்கும் அதிகார ஸங்க்ரஹ பாஸுரம்.(13)
வாதியர் மன்னும் தருக்கின் மறை குலையச்
சாது சனங்கள் அடங்க நடுங்கத் தனித்தனியே
ஆதி எனாவகை ஆரணதேஶிகர் சாற்றினர்---நம்
போதமரும் திருமாதுடன் நின்ற புராணனையே
 
***********************************************************************
7. முமுக்ஷூத்வாதிகாரம்
***********************************************************************
சிந்தனை மனதில் தெளிவைத் தரும். அப்யாஸம் கார்யத்தில் தெளிவைத்தரும். "ஸ்தன்யப்ரஜை முலையிலே வாய் வைக்குமாப்போல" என்கிறார் ஸ்வாமி. "ராவண்டி மாடு வண்டிக்காரன் ஓட்டாமலேயே அவன் தூங்கினாலும் பழக்க தோஷத்தில்  போகவேண்டிய இடத்துக்குச் சென்று சேர்வதுபோல" என்கிறார். பாதை பழகிவிட்டால் பயணம் தொடர்வதில் கஷ்டம் இருக்காது. அவித்யா, கர்மா, வாஸனா இவை வஸ்து இல்லாவிடினும் தொடரும். ஆக இந்த அழியும் தேகத்தை பகவத் கைங்கர்யம் செய்ய அப்யாஸப்படுத்த வேணும். "என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக்கொண்டு" என்கிறார் ஆழ்வார்.
இந்த ப்ருக்ருதி மண்டலத்தில் உலகியல் இன்ப துன்பங்களை அனுபவிப்பவர்கள் "பத்தர்" எனப்படுவர். 
இவர்கள் இருவகைப்படுவர் -
1. புபுக்ஷூ  --(உலக இன்பத்தில் ஆசை உள்ளவர்)
2. முமுக்ஷூ  ---(மோக்ஷத்தில் ஆசை உள்ளவர்)
 
இந்த முமுக்ஷூ இருவகைப்படுவர் -
1. பக்தர்  ---பக்தி யோகம் செய்பவர்
2. ப்ரபன்னன்  ---ஶரணாகதி செய்தவன்.
ஸமாஸ்ரயைணம் என்ற ஸம்ஸ்காரத்தால் ஒருவன் ஶ்ரீவைஷ்ணவனாகின்றான். ஆனால் அவன் குலமோ ஜாதியோ மாறுவதில்லை.(பசுபுனிதமானது. கோயில் பசு இன்னும் புனிதமானது. ஆனால் பசு ஒன்றுதானே அதுபோல)
பக்தி யோகம் தற்போது வழக்கில் இல்லை. ஆளவந்தாருக்கே இது ப்ராப்தமாக வில்லை. மிக் கடினமானது. கர்மயோக (இந்த்ரியங்களை அடக்குதல் (ஞானயோக வேதாத்யேனம் செய்வது)
உபநிஷத்தில் கூறிய 32 வித்தைகளில் ஒன்றை அதன் அங்கங்ளுடன் செய்வது பகதியோகம். கர்ம ஞான யோகத்தின் முதிர்ச்சியே பக்தி யோகம். தைல தாரைபோல இடைவிடாது இது தொடர வேணும். இதனால் மோக்ஷமடைய பல பிறவிகளாகலாம். 
3 ஜன்மாக்களுக்குப்பின்தான் ஜடபரதர் மோக்ஷம் பெற்றார். ஶபரீ மோக்ஷம் பெற்றது ராம தர்ஶனத்தாலே என்பது "ஶபரீ மோக்ஷ ஶாக்ஷீ பூத" என்ற ரகுவீரகத்ய வரிகளில் தெரிகிறது.
இந்த ப்ரபத்தி ஸாஸ்த்ரத்தை நம்மாழ்வார் நாதமுனிகளுக்கு உபதேசித்தார். ப்ரபத்தி இருவகைப்படும்.
 
1. ஆர்த்த ப்ரபத்தி (இப்போதே மோக்ஷத்தை வேண்டுவது‌)
2. தேஹாவஸானகாலத்தில் மோக்ஷத்தை ப்ரார்த்தித்து ஶரணாகதி செய்வது. இவர்கள் "த்ருப்தர்" எனப்படுவர்.

"இன்றே இசையில் இணையடி சேர்ப்பர் இனிப்பிறவோம்
நன்றே வருவதெல்லாம் நமக்குபரம் ஒன்றினதே"----என்கிறார் ஸ்வாமி.
ஆக வைராக்யத்துடன் மோக்ஷத்துக்கு ஆசைப்படுபவன் முமுக்ஷூ என்பதை ஸ்வாமி தெளிவு படுத்துகிறார்.ஸ்வாமியின் "ஸம்ப்ரதாய பரிஸுத்தி" என்ற க்ரந்தம் நம் ஸம்ப்ரதாய அடிப்படை விஷயங்களைத் தெளிவுபடுத்துகிறது.

நின்ற புராணன் அடியிணை ஏந்தும் நெடும்பயனும்
பொன்றுதலே நிலை  என்றிட பொங்கும் பவக்கடலும்
நன்றிது தீயது இதென்று நவின்றவர் நல்லருளால்
வென்று புலன்களை வீடினை வேண்டும் பெரும் பயனே--(அதி 14)


*************************************************************************
8. அதிகாரி அதிகார விபாக அதிகாரம்
*************************************************************************
 மோக்ஷோபாயம் அனுஷ்டிக்கும் அதிகாரிக்கு இரு வழிகள் உள்ளன.
1. பக்தி யோகம் - இது பற்றி முன்பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளது.
2. ப்ரபத்தி--- ஆத்ம ஸமர்ப்பணம்.  
உடையவன் பரமாத்மா. அவனது உடைமை ஜீவாத்மா. இந்த ஜீவனுக்கு மோக்ஷமளித்துத் தன்னுடன் சேர்த்துக்கொள்ள எம்பெருமான் பெரும் ப்ரயத்னம் செய்கின்றான்.
கை விரலில் அணிந்த மோதிரத்தை மறதியால் கழற்றிவைத்தோ அல்லது தொலைத்து விட்டோ ஒருவன் படும் கஷ்டத்தை அந்த அசேதனமான மோதிரம் படுவதில்லை.அதேபோல எம்பெருமானை இழந்த ஜீவன் ஏக்கமடைவதில்லை. மாறாக எம்பெருமான்தான் ஏங்குகிறான்.
 
திருமஞ்சனம் கண்டருளி ஈர ஆடையுடனிருக்கும் அரங்கன் கற்பூரம்காட்டும் ஸமயத்தில் "நீ ஸ்வதந்த்ரனில்லை எனக்குரியவன்"--எனஸத்யம் செய்வதாய் பராஸரபட்டர் கூறுகிறார். இதனை பட்டருக்கும் அரங்கனுக்கும் இடையே நடக்கும் உரையாடலாக ஸ்வாமி காட்டுகிறார்.
பக்தியோகம் செய்யும் சாமர்த்யமிருந்த போதும் ப்ரபத்தியைத் தானே அனுஷ்டித்துக்காட்டினார் ஶ்ரீபாஷ்யகாரர். முறைவேறாயினும் அடையும் பலன் ஒன்றே.
ப்ரபத்தி 4 வகைப்படும்-
1. உத்தி நிஷ்டை------ஆசார்யன் சொல்வதைத் திருப்பிச் சொல்வது. (மடத்து ஸம்ப்ரதாயம்) "பதவாக்யார்த்தம் தெரியாமல் தாதிமார் சொன்ன வார்த்தையைச் சொல்லி ஸார்வபௌம ஶரணாகதி அடைந்த ராஜகுமாரன் போல"--ஆசார்யன் சொல்வதை அப்படியே திருப்பிச் சொல்லி அனுஷ்டிப்பதுவே உத்தி நிஷ்டை.
 
2. ஆசார்ய நிஷ்டை---நமக்காக ஆசார்யனே செய்யும் ப்ரபத்தி (முனித்ரய ஸம்ப்ரதாயம்) "ஒருமலை முகட்டிலிருந்து மறுமுகடு தாவும் சிங்கத்தின் உடம்பில் ஒட்டிய பூச்சிகள் எந்த முயற்சியும் சக்தியுமின்றி மறுமுகடு செல்வதுபோல"--ஆசார்ய நிஷ்டை.
 
3. ஸ்வனிஷ்டை---தனக்குத் தானே செய்து கொள்ளும் ஶரணாகதி (தற்போது வழக்கிலில்லை)
 
4. பாகவத நிஷ்டை----விபீஷணன் தனக்கும் தன்னுடன் வந்த நால்வருக்குமாகச் செய்த ப்ரபத்தி.  
 
ஶ்ரீபாஷ்யகாரர் தன் சிஷ்யர்களனைவர்க்கும் சேர்த்து பங்குனி உத்தரத்தன்று ஶரணாகதி அனுஷ்டித்தார். 
"குருடன் கண்ணுடையவனின் 
கோலைப்பிடித்துக்கொண்டு நடக்குமாப்போல"
"முடவன் ஓடக்காரன் துணைகொண்டு
படகேறி அக்கரை சேருமாப்போல"
"ராஜஸேவகர்கள் கொணர்ந்த போகங்களை அனுபவிக்கும் அவர்களது குழந்தைகள் அவை எங்கிருந்துவந்தன என்று அறியாததுபோல"---ஆசார்யன் நமக்காக ப்ரபத்தி செய்கிறார்.
'ஶரணாகதி' எனறால் எனக்கு அர்த்தம் தெரியாது. ஆனால் உனக்குத்தெரியுமே வரதா! நீ உன்திருவடிகளை எனக்குகீகொடு"
என்கிறார் கூரத்தாழ்வான்..

வேண்டும் பெரும்பயன் வீடென்று அறிந்து விதிவகையால்
நீண்டும் குறுகியும் நிற்கும் நிலைகளுக்கு ஏற்கும் அன்பர்
மூண்டொன்றில் மூல வினை மாற்றுதலில் முகுந்தனடி
பூண்டன்றி மற்றோர் புகல்ஒன்றிலை என நின்றனரே--(அதி 15.)
 
 
*********************************************************************
9. உபாய விபாக அதிகாரம்
*********************************************************************
ஶரணாகதி ஶாஸ்த்ரம் உலகிலுள்ள எல்லா ஜீவன்களுக்கும் பொது என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.
இஞ்சிமேட்டழகியசிங்கரின் ஆசார்யன் ஶ்ரீமுஷ்ணம் ஸ்வர்ணம் 
ஸ்வாமி வஸ்த்ரம் உலர்த்தும் போது அந்த கொம்புபட்டுக்கீழே விழுந்த வௌவ்வாலுக்கு ப்ரபத்தி செய்ததும் ப்ருக்ருதம் அழகியசிங்கர் சில தினங்களுக்குமுன் பசு ஒன்றினுக்கு ப்ரபத்தி செய்ததும் மேற்சொன்ன கருத்தை மெய்ப்பிக்கின்றன.
கர்மயோகமும் ஞானயோகமும் பக்தியோகத்தின் வழியாகப் பலனைக்கொடுக்கும். பக்தியோகம் நேரே பலனுக்குச் சாதனமாகும். அதனை அறிந்து அனுஷ்டிக்கும் நிலை தற்போது இல்லையாகிவிட்டது. அதனால் அந்த பக்தியோக ஸ்தானத்தில் பகவானைப்ரார்த்தித்து ப்ரபத்தி செய்கிறோம்.
அவரவர் வர்ணாஶ்ரம தர்மத்தை அனுஷ்டித்து பகவத்ப்ரீதியுடன் எம்பெருமானுக்கு உகப்பவைகளைச்செய்து அவனுக்கு உகப்பில்லாததை விடுத்து அவனே ரக்ஷகன் என்ற மஹாவிஶ்வாஸத்துடன் 
ஆகிஞ்சன்யத்துடன்‌ அவன் கைங்கர்யத்தை ப்ரார்த்திப்பதே ஶரணாகதி. இப்படியாக தர்மத்தை அனுஷ்டிப்பவன் தாழ்ந்த குலத்தவனாயினும் உயர்குலத்தவனாய் மதிக்கப்படுவான்.
 
ஞான யோகம் ஆத்ம ஸ்வரூபத்தைக் காட்டித்தரும், பகதியோகம் அந்த ஆத்மாவுக்குள் உறையும் எம்பெருமானைக்காட்டித்தரும்.
விலை உயர்ந்த ரத்னம் வைத்துள்ள பேழையைத் தொலைத்த ஒருவன் பேழையைக் கண்டுபிடித்ததும் த்ருப்திஅடைந்து அதனுள்இருக்கும் ரத்னத்தை மறந்தாற் போன்றது பகதி யோகம் செய்யாத ஞானயோகம்.
ஆத்மானுபவம் செய்துவிட்டு அதனுள்ளுறையும் அந்தர்யாமியை அறியாதவனை அறிவிலி என்கிறார் ஸ்வாமி.
 
"உள்ளிருக்கும் ரத்னம் காண்கைக்கு
கிழிச்சீரை பார்த்தாரபோல"
ஆக இவற்றின் அடிப்படையில் செய்யக்கூடியதே ப்ரபத்தி.
இதனைச்செய்யாது மோக்ஷமடைய வழியில்லை என ஆணித்திறமாக ஸ்வாமி ஸாதிக்கிறார். பெருமானே அவனை அடையும் வழியாகவும் (உபாயம்)
அடையும் பலனாகவும் (உபேயம்) இருக்கிறான். தன்னை
ஜீவன் வந்தடையத் தானே ஸாதனமாயிருக்கும் எம்பெருமானின் மேன்மையை உபநிஷத்துக்கள் உத்கோஷிக்கின்றன.
ஆக கர்ம, ஞான, பக்தி  யோகங்களைவிட ப்ரபத்தியே மேலானது எம்பெருமானை அடைய எனத் தெளிவு படுத்துகிறார் ஸ்வாமி.
 
"நின்ற நிலைக்குற நிற்கும் கருமும் நேர்மதியால்
நன்று என நாடிய ஞானமும் நல்கும் உட்கண் உடையார்
ஒன்றிய பக்தியும் ஒன்றிலா விரைவார்க்கு அருளால்
அன்று பயன்தரும் ஆறும்அறிந்தவர் அந்தணரே"---(அதி 16)
 
 
*****************************************************************************
10. ப்ரபத்தி யோக்யாதிகாரம்
*****************************************************************************
ப்ரபத்தி அனுஷ்டிக்கத் தேவையான தகுதிகளை விவரிக்கிறது இவ்வதிகாரம். ப்ரபத்திக்குப் பொதுவான தகுதிகள்.
1. பலனில் ஆசை
2. சாஸ்த்ரங்களை நன்கறிதல்
3. அறிந்தபடி அனுஷ்டானம் செய்யும் வல்லமை.
4. சாஸ்த்ரங்கள் அனுமதித்த ஜாதி முதலிய தகுதி
 
இவற்றுள் ப்ரபத்தி அனுஷ்டிக்க மிக முக்யமான தேவைகள்
1. அகிஞ்சனத்வம் - வேறெந்தகைமுதலும் இல்லாமை
2. அனன்ய கதித்வம் - வேறு காப்பாற்றுவாரில்லை என்ற உணர்வு
 
இவையிரண்டும் முன்னின்று விபீஷண ஶரணாகதியை பலிதமாக்கியது.
பாகவதாபசாரப்பட்ட துர்வாசர் அம்பரீஷனிடமே ஶரணாகதி செய்கிறார்.
 
அந்தணர் அந்தியர் எல்லையில் நின்ற அனைத்துலகும்
நொந்தவரே முதலாக நுடங்கி அனன்னியராய்
வந்தடையும் வகை வன்தகவேந்தி வருந்திய நம் 
அந்தமில் ஆதியை அன்பர் அறிந்து அறிவித்தனரே---(அதி 17)
 
**********************************************************to be cont.d************

Tuesday, March 23, 2021

ஶ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தின் ரஸங்கள்! - Part 1

                         Thoopul Swami Desikan Durmukhi Varusha Aippasi Sravana Purappadu -  Anudinam.org

Sri APN Swami has compared the contents of this great grantham to a big bottle of fruit juice!  He mentioned that, from that big bottle he is giving the very essence of all the 32 Adhikarams (in 30days ) as 1 spoon, which is beyond one's imagination considering the volume of matter in each of the Adhikaarams.

From that Upanyasam series held during Margazhi 2020 as part of the GSPK programs, adiyen is giving what ever little I have understood and grasped - may be a few drops from that one spoon!!
The real intention of this Upanyasam was to make us understand the great efforts of Swami Desikan to enable the Jeevan to perform Prapatthi, thereby lift the Jeevan from the clutches of samsaaram.

*************************************************************
அவதாரிகை
**************************************************************
ஆத்யாத்மிக ஞானம் பெற்று எம்பெருமானை அணுகுவதற்குச் சிறந்த இம்மதி நிறைந்த மார்கழி நன்னாளில் ஸ்வாமி தேஶிகன்  பரமக்ருபையுடன் அருளிச்செய்த "ஶ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்தின் "ரஸத்தை GSPK மூலம் ஶ்ரீ.உ.வே‌ APN ஸ்வாமி  அளிக்க நாம் அனுபவிப்போம்.
ரஹஸ்ய க்ரந்தங்ளை ஆசார்யனை அணுகி நேரிடையாக க்ரஹிக்க வேணும். ஸாஸ்த்ர ஞானம் பெற்று ஆத்மலாபமடைய 3 க்ரந்தங்களைக் காலக்ஷேபம் செய்ய வேணும் என்பர் பெரியோர். "ப்ரஸ்தானத்ரயம்" என்னும் இதில் -
1. உபநிஷத் பாஷ்யம்
2. பகவத் கீதாபாஷ்யம்
3. ப்ரம்ஹஸுத்ரபாஷ்யம் அடங்கும். இவை ஆதிசங்கரர் அருளியவை.
 
ஶ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் "க்ரந்த சதுஷ்டயம்"
என்று 4காரந்தங்கள் காலக்ஷேப க்ரந்தங்களாய் அருளப்பட்டுள்ளன.
அவை- 
1. கீதாபாஷ்யம் 
2. ஶ்ரீபாஷ்யம் (ஸ்வாமி ராமானுஜர் அருளிச்செய்தது)
3. பகவத் விஷயம (பிள்ளான் அருளியது)
4. ரஹஸ்யத்ரய ஸாரம் (ஸ்வாமி தேஶிகன் அருளியது)
 
இவற்றை வாசித்தும், கேட்டும், ப்ரவர்த்திப்பதும்  ஶ்ரீவைஷ்ணவ தர்மமாகக் கொள்ளப்படுகிறது.
 
****************************************************************
16/12/20 - குருபரம்பரா
****************************************************************
கிடைத்துள்ள இப்பிறவியை வீணாக்காது  ஜீவனைக் கடைத்தேற்ற எம்பெருமானே ஆசார்யனாகி செய்த அவதாரமே ஸ்வாமி தேஶிகன். அஷ்டாக்ஷரம் த்வயம் ஶரமஶ்லோகம்  என்ற மூன்றினையும் சேர்த்து ஸ்வாமி அளித்த இக்ரந்தம் 32 அதிகாரங்களைக்கொண்டது. 
இதில்-
1. அர்த்தானுஸாசனம்
2. ஸ்திரீகரணம்
3. பதவாக்ய யோஜனா பாகம்
4. ஸம்ப்ரதாய ப்ரக்ரியாய  பாகம் 
என நான்கு உப பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு அதிகாரத்தின் முடிவுரையாக வரும் பாசுரமே "அதிகார ஸங்க்ரஹம்"  என்ற தேசிகப்ரபந்தமாகிறது.
 
ரஹஸ்யத்ரயஸாரம் என்ற இந்த க்ரந்தத்தினை முழுதுமாய் ஒருவர் அறிந்தால் எல்லாவற்றையும் அறிந்தவராக முடியும் என்பது மெய்ப்பாடு.எல்லார்க்கும் பொதுவான இக்ரந்தம் வேதார்த்தங்கள், இதிகாச, புராண, ஆழ்வார், ஆசார்ய ஸுக்திகளனைத்தலிருந்தும் உதாஹரணங்களைக் கொண்டுள்ளது.
ஆசார்ய சம்பந்தம் இல்லாமல் எதுவும் சித்திக்காது  என்பதையும் அதுவே ஸர்வருக்கும் மோக்ஷம் என்பதையும் அறுதியிட்டுக்கூறுகிறார் ஸ்வாமி.
ஆசார்ய சம்பந்தம் பெறாத காரணத்தால் வசிஷ்ட விஶ்வாமித்ரரை குல குருக்களாகக் கொண்ட தஶரதமஹா சக்ரவர்த்தி எம்பெருமானையே தனயனாகப் பெற்றிருந்தபோதிலும் மோக்ஷம் அடையவில்லை.   
மிக்ககொடுந்தொழிலும்,கொடுங்குணங்களும் கொண்ட க்ஷத்ரபந்துவும், மஹா
தபஸ்வியாகிய புண்டரீகாக்ஷனும் ஆசார்ய சம்பந்தத்தினால் பரகதி
அடைந்தனர்.
வேதத்தை அளித்த எம்பெருமான் வேதவ்யாசராக அனுப்ரவேச அவதாரம் மூலம் அவற்றைத் தொகுத்து  ஸாஸ்த்ர பாணியாக நம்மை கைதூக்கிவிட்டான். ஆசார்யனைக் காட்டி அனுக்ரஹித்தான்.
ஆக நம்மீது கொண்ட பரம க்ருபையால் ஸ்வாமி இக்ரந்த ஆரம்பத்தில் ஶ்ரீவைஷ்ணவ குரு பரம்பரையைக்காட்டுகிறார்.
 
"என்னுயிர் தந்தவரைச்சரணம் புக்கு
யானடையவே அவர்குருக்கள் நிரை வணங்கி
பின்னருளால் பெரும்பூதூர் வந்த வள்ளல் 
பெரியநம்பி ஆளவந்தார்  மணக்கால் நம்பி
நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக்கொண்டான்
நாதமுனி சடகோபன் சேனைநாதன்
இன்னமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு 
எம்பெருமான் திருவடியை அடைகின்றேனே".
- பொய்கை முனி பூதம் பேயாழ்வார்
என்ற பாசுரத்தின் மூலம் ஆழ்வார்களின் பெருமையையும்,திவ்யப்ரபந்தத்தின் 
ஏற்றத்தையும் பேசுகிறார் .
 
"இன்பத்தில் இறைஞ்சுதலில் இசையும் பேற்றில்"----என்ற தனிப் பாசுரத்தால் மதுர கவி ஆழ்வாருக்குத் தனிப்பெருமை அளித்த ஸ்வாமி தேஶிகன் ஆசார்ய மேன்மையை வெளிக்கொணர்ந்த பாங்கு வியக்கத்தக்கது. இத்தகைய தேசிகப்ரபந்தம் ஸாதித்து நம் ஆசார்ய ஸார்வ பௌமன் ஆழ்வார் கோஷ்டியுள் சேர்ந்தார். எம்பெருமானிடம் கீதோபதேசம் பெற்ற அர்ச்சுனனுக்கு அது மனதில் நிற்கவில்லை .யாருக்கும் உபதேசிக்கவுமில்லை. வ்யாசர்மூலம் உபதேசம் பெற்ற ஸஞ்சயன் கீதையை உபதேசம் செய்தார்
ஆக எம்பெருமான் தன் அபிநவ அவதாரமாக ஆழ்வார்களையும் ஆசாரயர்களையும் தோற்றுவித்த இத்தகைய குருபரம்பரையின் மேன்மையை ஸ்வாமிதேஶிகன் இந்த அதிகாரத்தில் ஸ்தாபிக்கிறார்.
 
 
**************************************************************************
முதல்அதிகாரம் - உபோத்காதம்
**************************************************************************
ஶ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்தின் முகவுரையே இந்த அதிகாரம்.
"திருவுடன் வந்த  திருமால் இதயம் 
மருவுமிடம் என்ன மலரடிசூடும் வகைபெறும் 
நாம்கருவுடன் வந்த கடுவினையாற்றில்
விழுந்து ஒழுகாது அருவுடன் 
ஐந்து அறிவார் அருள் செய்ய அமைந்தனரே". (அதி 8) 
 
இப்பாசுரத்தின் அர்த்தம் கூறும் அதிகாரம் இது.
ஸம்ஸாரத்தில் அழுந்தியநாம் அறியவேண்டிய விஷயங்களை இழந்து அதனால் பெறப்போகும் பெருமையையும் இழக்கிறோம்‌. இந்நிலைகளைத்
தாண்டி எம்பெருமானை அடைய வழிகாட்டுகிறது இப்பகுதி.
வேதம் என்னும் ராஜபாட்டையைச்செப்பனிட்டவர்கள் நம் ஆசார்யர்கள்.
எம்பெருமான் திருமேனியில் தாயார்அருகில் உள்ள கௌஸ்துபமணியருகே இருக்க வேண்டியவர்கள் ஜீவர்கள்.
ராஜகுமாரன் ஒருவன் ராஜாவுடன் வேட்டைக்குச் சென்றபோது தொலைந்துவிட, வெகுகாலம் வேட்டுவச்சேரியில் காலம் கழிக்கிறான். அவ்வழியே சென்ற மஹரிஷிகள் ஒருநாள் எதேச்சையாக
அக்குமாரனின் முக தேஜஸ்ஸைக்கண்டு வியந்து விசாரிக்க வேடுவத்தலைவன் விவரங்களக்கூற அவனை ராஜகுமாரன் என அறிந்து அரண்மனையில் கொண்டு சேர்க்க ராஜாவும் ராஜகுமாரனும் அடைந்த சந்தோஷம் அளவிடற்கரியது.
காட்டில் தொலைந்த ராஜ குமாரனின் நிலையில் ஸம்ப்ரதாய ஞானமற்ற நாம் இருக்கிறோம். ஏதோஒரு ஸூஹ்ருத விசேஷத்தால் மஹரிஷிகளின் த்ருஷ்டியினால் ராஜகுமாரன் மீண்டு அரண்மனைக்கு வந்து இளவரசனாகியது போல இன்று ஆசார்யசம்பந்தம் கிடைத்து எம்பெருமான் திருவடி பற்றும் சேதனன் நிலை நமக்கு.
ஆசார்யனை அடைந்த நாம் சாரமான விஷயங்களில் மனதைச் செலுத்தி
எம்பெருமானை அடையும் வழியைத் தேடவேணும். இதற்கு
"கடலிலே படகோடுவார் வழி தெரியுமாப்போல" என்ற உதாரணத்தைக்காட்டுகிறார் ஸ்வாமி.
 
1. ஈஶ்வரஸ்ய ஸௌஹார்தம் (எம்பெருமானின் அனுகூலம்)
2. யதிர்ச்சா ஸுஹ்ருதம் (நாமாக நல்லதைச்செய்தல்)
3. விஷ்ணு கடாக்ஷம் (பிறக்கும்போதே எம்பெருமான் கடாக்ஷம்பெறுதல்)
4. அத்வேஷம் (எம்பெருமானை விட்டு விலகாமை)
5. ஆபிமுக்யம் (எம்பெருமானுக்கே அடிமையாயிருத்தல்)
6. ஸாத்விக ஸம்பாஷணம் (பாகவத சேர்க்கை)
இந்த ஆறு  காரணங்களைப் பற்றிக் கொண்டு ஸதாசார்யன் சம்பந்தம்
பெற்று இந்த ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுபட முயற்சிக்க வேணும்.
 

*************************************************************************
 2 - ஸார நிஷ்கர்ஷ அதிகாரம்
*************************************************************************
ரஹஸ்யத்ரயத்தின் சாரத்தை நிலைநிறுத்துகிறது இந்த அதிகாரம்.
நம்மாழ்வார் திருநாவில் திருமந்திரம் என்ற மத்தால் கடைந்‍‍தெடுத்த அமுதம் திருவாய் மொழியாகும். வேதத்தின் சாரம் இது.
வேதம் கர்ம காண்டம் ஞானகாண்டம் என்ற இருபிரிவு கொண்டது.
விரும்பிய பலன்களைத்தரும் யாகம்
முதலியவற்றை முதல் பிரிவில் காட்டி நிரந்தர பலனாகிய மோக்ஷம்  பெற இரண்டாம் பிரிவைக்காட்டுகிறது.
 
"சிறுகண்ணாடி பெரு உருவைக் காட்டுமாப்போல" எட்டுஎழுத்தில் நம் ஸம்ப்ரதாயமே அடங்கும்.
வண்டு பல புஷ்பங்களிலிருந்து தேனைச் சேகரிப்பது போல வேத
ஸாரத்தை மட்டும் எடுத்துக் கொள்ளவேணும்.என்னகல்வி கற்றாலும் எட்டும் இரண்டும் (அஷ்டாக்ஷரம், த்வயம்) எண்ணிய நம் ஆசார்யர்கள் நமக்குத் தனிநிலை தந்தனர் என்பதை உணர வேண்டும். இத்தகைய ரஹஸ்யத்ரயத்தை  அறிந்தவர் "ஸாரஞர்" எனப்படுவர்.
"அமையா இவை எனும்ஆசையினால் 
அறுமூன்றுலகில் சுமையானகல்விகள் சூழ வந்தாலும்
தொகையிவையென்று இமையா இமையவரேத்திய 
எட்டிரண்டெண்ணிய
நம் சமையாசிரியர்சதிர்க்கும் நிலை தந்தனரே" (அதிகாரஸங்க்ரஹம் 9)


*************************************************************************
3. ப்ரதானப்ரதி தந்த்ர அதிகாரம்
*************************************************************************
விஸிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் தன்னேற்றத்தைச் சொல்லும் அதிகாரம் இது.
ஶரீர / ஶரீரிபாவம், ஆதார/ஆதேயபாவம், ஸ்வாமி/ தாஸபாவம்
நியந்தா /நியாம்ய பாவம்.
இவை எம்பெருமானுக்கும் நமக்கும் உள்ளசம்பந்தத்தைக்காட்டுகிறது.
நாம் ஶரீரத்துக்கு கொடுக்கும் முக்யத்வத்தை ஆத்மாவுக்குத் தருவதில்லை. ஆத்ம பலம்தான் முக்யம்.ஆத்மாவைத்தவிர அனைத்தும் அசேதனம். ஆத்மா ஞானம் உள்ளது.
இந்த ஶரீரத்துக்கு நியந்தா ஆத்மா. 
ஆத்மா அழிவற்றது என கண்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசிக்கிறான்.
ஆத்மாவுக்கு நியந்தாவாக, ஸ்வாமியாக, காரகனாக
இருப்பவன் எம்பெருமான். இதனை தன் ஸங்கல்பத்தினாலும் ஸ்வரூபத்தினாலும் செய்கிறான் எம்பெருமான். இதுவே விஸிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தின் அடிப்படை. 
விஶ்வாமித்ரர் தன் தபோபலத்தால் த்ரிசங்குவை பூமிக்கு விழாமல் தடுத்து நிறுத்த முடிந்ததென்றால் எம்பெருமான் விஷயத்தில் அவன் ஶக்தி சாமர்த்யத்தை தெளிவாய்ப் புரிந்து கொள்ள வேணும். அவனைத்தவிர ரக்ஷகன் இல்லை என்பதும் தெளிவாகிறது.
தன்னுடன் சம்பந்தம் பெற்ற அனைத்து அயோத்தி ஜீவன்களையும் தன்னுடன் கூட்டிச்சென்ற "இராமனையல்லால் மற்றும் கற்பரோ".என்கிறார் ஆழ்வார்.
தனக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள  சம்பத்தத்தைப் புரிந்து கொண்டவர்கள்
யாராலும் கலக்கமடையமாட்டார்கள்.
 
" நிலைதந்த தாரகனாய் நியமிக்கும் இறைவனுமாய்
இலதொன்றெனாவகைஎல்லாம் தனதென்னும் தந்தையுமாய்த்
துலையொன்றிலை எனநின்ற துழாய்முடியானுடம்பாய்
விலையின்றி நாமடியோம் என்று வேதியர் மெய்ப்பொருளே"  ---(அதி 10)
 
 
********************************************************************
  4. அர்த்த பஞ்சக அதிகாரம்
********************************************************************
முமுக்ஷுவானவன் ஆத்ம லாபமடைய  மூன்று ரஹஸ்யங்களுடன் ஐந்து முக்கிய கொள்கைளையும் இணைத்துச் செயல்பட வேணும்.
1. மிக்க இறைநிலை---அடைய வேண்டியபொருள் (Praapta Upaayam)
2. மெய்யாம் உயிர்நிலை---ஜீவன் (Praapta)
3. தக்கநெறியும்--அடையும்வழி (Praapta Upaayam) (Praapta Palam)
5. ஊழ்வினையும் வாழ்வினையும் தடங்கல்கள் (Obstacles to obtain moksha - Praapta Virodhi)
 
லக்ஷ்மியுடன் கூடிய எம்பெருமானே ஜகத்பதி என்பதை திண்ணமாய்க்கொள்ள வேணும்.
அவனே வணங்கும் துறைகளைப் பலபலவாக்கி அந்த தெய்வங்களையும் தானே இயக்குகிறான் என்பதனை  உணர்ந்து நாராயணனே நமக்கு மோக்ஷமளிப்பவன் என்ற திடமான ஞானத்தைப் பெறுபவரே "பரமேகாந்தி" ஆகிறார்.
கர்மாக்களால் கட்டுண்டு இந்த ஸம்ஸாரத்தில் உழல்பவர்கள் "பத்தர்"
ஶரணாகதி செய்து மோக்ஷகதிக்கு தயாராயிருப்பவர *முமுக்ஷு".
பந்தம்நீங்கி எம்பெருமானின் நித்ய கைங்கர்யத்தில் ஈடுபட்டிருப்பவர்கள்
"முக்தர்".
 
"பொருளொன்று எனநின்ற பூமகள்நாதன் அவனடிசேர்ந்து
அருள் ஒன்றும் அன்பன் அவன்கொள் உபாயம் அமைந்த பயன் 
மருள் ஒன்றிய வினை வல் விலங்கு என்று இவை ஐந்து அறிவார்
இருள் ஒன்று இலாவகை என்மனம் தேற இயம்பினரே." --(அதிகார-11)
 
 
*******************************************************************
5. தத்வத்ரய சிந்தனாதிகாரம்
*******************************************************************
சித்து அசித்து, ஈஶ்வரன் என்ற மூன்று தத்துவங்களையும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேணும். சேதனம் என்பது ஞானம்.
அசேதனம் என்பது ப்ரக்ருதிகள்.
ஈஶ்வரன் இந்த இரண்டையும் உண்டாக்கித் தாங்குபவன்.
மனித ஶரீரம் முக்யமானது. அதனை இயக்கும் ஆத்மாதான் ஞானம் என்பது. கர்மானுபவத்தால் பிறவி எடுக்கும்  ஆத்மா கால அவஸ்தைக்கு
உட்பட்டது. ஆத்மாவெளியேறிவிட்டால் ஶரீரம் விழுந்து விடும். ஆக ஆத்மா இருக்கும்போதே ஆத்ம லாபத்தை ஸம்பாதிக்க வேணும்.
கிணற்றிலிட்ட குடம் கயிறு இற்று அறுந்து வீழ்கின்ற தருணத்தில் அதை எப்படி பிடிக்கமுடியாதோ அதேபோல கர்மா முடிந்து ஆத்மா வெளியேறும் தருணம் நமக்குத்தெரியாதாகையால் காலத்தை வீணாக்காது ஸதாசார்யனை அண்டி ஸம்ப்ரதாய விஷயங்களைஅறிந்து ஆத்மலாபம் பெற ப்ரயாசிக்கவேணும்.
மூன்று தத்துவங்களையும் அவற்றின் ஸ்வரூப ஸ்வபாவ லக்ஷணங்களையும் தெளிய அறியவேணும்.
 
ஶரீரமே ஆத்மா ஜீவன் ஸ்வதந்த்ரன் எம்பெருமான் ஸ்ருஷ்டிகர்த்தாஅல்ல----
என்பன குத்ருஷ்டி வாதங்கள். இவை ப்ரபன்னன் மனதில் கலக்கம் 
உண்டாக்கக்கூடாது.
ஸ்வாமி தேஶிகன் காட்டிய வழியில் ஈஶ்வர  தத்வத்தைப் புரிந்து கொண்டு
மோக்ஷ விரோதிகளை விரட்டவேணும்.
 
"தேற இயம்பினர்சித்தும் அசித்தும் இறையுமென
வேறுபடும் வியன் தத்துவமூன்றும் வினையுடம்பில்
கூறுபடும் 
கொடுமோகமும் தானிறையாம் குறிப்பும் மாற 
நினைந்தருளால் மறை நூல் தந்த வாதியரே"---(அதி12)
 
**************************************************************To be contd.***