तुङ्गैरकृत्रिमगिरः स्वयमुत्तमाङ्गैः
यं सर्वगन्ध इति सादरमुद्वहन्ति।
आमोदमन्यमधिगच्छति मालिकाभिः
सोऽपि त्वदीय कुटिलालकवासिताभिः॥१९॥
மாதாவே! அநாதியான வேதங்களும், உபநிஷத்துக்களும்
"ஸர்வ கந்த மயன்" என்று போற்றிக் கொண்டாடுகின்ற எம்பெருமான் உன் கருங்குழலில் சூட்டிய மாலையைத் தன் தலையில் ஏற்கிறான் (கோதாஸ்துதி - 19)
பாசுரம் 19 - குத்துவிளக்கெரிய
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லையால்
தத்துவம் அன்று தகவு ஏல் ஓர் எம்பாவாய்
குத்து விளக்கு நாலாபுறமும் எரிய,யானைத் தந்தத்தாலான
கால்களையுடைய. கட்டிலின் மீது விரித்த குளிர்ச்சியும், ம்ருதுவானதும், அழகிய வெண்மைநிற வாசனை நிறைந்த பஞ்ச சயனத்தில் (இந்த ஐந்தும் படுக்கையின் லக்ஷணங்கள்) கொத்தான மலரணிந்த கூந்தலுடைய நப்பின்னையின் ஸ்தனங்களில் தலைவைத்துறங்கும் கண்ணபிரானை எழுப்புகின்றனர் தோழிகள்.
மையிட்ட கண்களுடைய நப்பின்னையே! நீ உன் மணாளனை ஒருநொடிப் பொழுதுகூடத் தூக்கத்தை விட்டு எழுந்திருக்க விடுவதில்லை. இது உன் ஸ்வபாவத்துக்கு ஏற்புடையதல்ல என்கிறார்கள்.
ஸ்வாபதேசம்
பிராட்டியும், பெருமானும் மோக்ஷமளிப்பதில் அவரவர் அடியவர்களை விட்டுக் கொடுப்பதில்லை. நப்பின்னை வீரமங்கை என்பதால் கோட்டுக்கால் கட்டில். ருக்மிணி ராஜபத்னியாகையால் தங்கக் கட்டில்.சத்யபாமா அழகி என்பதால் வெள்ளிக்கட்டில் அமைத்திருந்தனராம். மோக்ஷமடைந்து முக்தன்

ஶ்ரீவைகுண்டம் சேர்ந்து திருமாமணி மண்டபத்தில் ஆதிசேஷபர்யங்கத்தில் வீற்றிருக்கும் எம்பெருமான் திருமடியில் சென்றமர்கின்றான். அப்படிச் செல்லும்போது ஆதிஸேஷனைத் துகைத்துக் கொண்டு ஏறுவானாம். இதனையே "மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி" - என்கிறாள்.
மைத்தடங்கண்ணியான நீ உன் மணாளானுடனிருக்கிறாய். க்ருஷ்ணனைப் பிரிந்த ஒரு கணம் ஒருயுகமாயுள்ளது. எங்களை இன்னும் காக்க வைப்பது ஏற்புடையதல்ல என்கின்றனர் தோழிகள். ராவணவதம் முடிந்து ஸீதா பிராட்டியைக்காண வந்த ஹனுமான் ராக்ஷஸிகளை நசுக்கி விடுவாதகக் கூற அவர்களுக்குப் பரிந்து பேசிய பிராட்டி யைப் போல நீயும் எங்களுக்காக இரங்க வேண்டும் என்று வேண்டுகின்றனர் தோழிகள்.
ஸ்திரமான ஸம்ப்ரதாய ப்ரதியே "குத்து விளக்கு" என்பதாம். ஒரு ஆசார்யனிடமிருந்து இன்னொரு ஆசார்யன் வருவதை வழிவழியாக வரும் தீபம் குறிக்கிறது. அஞானத்தைப் போக்கும் ஞான தீபம் இது. நிரபாய ஸம்ப்ரதாய பரம்பரையே இந்த குத்துவிளக்கு.
விளக்கு ப்ரகாசத்தால் தன்னையும் காட்டி பிறவற்றையம் காட்டுமாப்போல நப்பின்னையே! நீ உன் க்ருபையைத் தந்து, கண்ணனையும் காட்டித்தர வேணும் என்கின்றனர்.
விளக்கு ப்ரகாசத்தால் தன்னையும் காட்டி பிறவற்றையம் காட்டுமாப்போல நப்பின்னையே! நீ உன் க்ருபையைத் தந்து, கண்ணனையும் காட்டித்தர வேணும் என்கின்றனர்.
நான்கு வேதங்களையும் கால்களாய் கொண்ட கோட்டுக்கால் கட்டில் சுமக்கும் திவ்ய தம்பதிகளை அடைவதற்கு முன் அந்த பர்யங்கத்தில் வீழ்கினறனர். குத்து விளக்கின் 5 முகங்கள் போல எம்பெருமானின் ஐந்து நிலைகள், பஞ்ச இந்த்ரியங்கள், அர்த்த பஞ்சகம் முதலியன ஆசார்ய உபதேசத்தால் அறியப்படுகின்றன.
ப்ரளய காலத்தில் அசித்தைப்போலக் கிடக்கும்
ஜீவன்களளுக்காக இரங்கி மோக்ஷம் வரையில் இவைகளை அழைத்துச்செல்லும் விசாலமான மனமுடையவனே "மலர்மார்பா" என்பதாம். இப்பாசுரம் பட்டர் உகந்த பாசுரம் என்பர்.
*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************
ஜீவன்களளுக்காக இரங்கி மோக்ஷம் வரையில் இவைகளை அழைத்துச்செல்லும் விசாலமான மனமுடையவனே "மலர்மார்பா" என்பதாம். இப்பாசுரம் பட்டர் உகந்த பாசுரம் என்பர்.
*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************
No comments:
Post a Comment