आर्द्रापराधिनि जनेऽप्यभिरक्षणर्थं
रङ्गेश्वरस्य रमया विनिवेद्यमाने।
पार्श्वे परत्र भवती यदि तत्र नासीत्
प्रायेण देवि वदनं परिवर्त्तितं स्यात्॥२४॥
தேவியே!பாவம் செய்தவர்களைப் பற்றிப் பெரிய பிராட்டி பெருமானிடம் ரக்ஷித்தருளும்படி பரிந்துரைக்கும்போது, அங்கு நீ இருப்பதாலன்றோ, அந்த கார்யம் அனுகூலமாக நடக்கிறது. இல்லையேல் எம்பெருமான் முகம் மாறி இருப்பான்
(கோதாஸ்துதி - 24)
பாசுரம் 24 - அன்றிவ்வுலகம்
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடமுதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கு ஏல் ஓர் எம்பாவாய்
இது ஆண்டாள் பாடும் மங்களாஸாஸனப் பாசுரம்.
எம்பெருமானின் திருவடி வைபவம், பாக்ய வைபவம், அதிமானுஷ சேஷ்டித வைபவம் என்று போற்றிப் பாடுகிறாள்.
பாசுரம் 24 - அன்றிவ்வுலகம்
பொன்றச் சகடமுதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கு ஏல் ஓர் எம்பாவாய்
இது ஆண்டாள் பாடும் மங்களாஸாஸனப் பாசுரம்.
எம்பெருமானின் திருவடி வைபவம், பாக்ய வைபவம், அதிமானுஷ சேஷ்டித வைபவம் என்று போற்றிப் பாடுகிறாள்.
- வாமனனாய் வந்து மகாபலியிடம் மூன்றடி மண் யாசித்து, இம்மண்ணையும் ஆகாசத்தையும் அளந்த உன் திருவடிக்குப் பல்லாண்டு!!
- பாரத தேசம் முழுவதும் நடந்து வந்து இலங்கை சேர்ந்து ராவணனை வென்ற உன் திறலுக்குப் பல்லாண்டு!!
- சகடமாய் வந்த அசுரனைக் சகடத்துடன் பொடிப் பொடியாகும்படி உதைத்த உன் பிஞ்சு பாதங்களுக்குப் பல்லாண்டு!!
- கன்றுருவில் வந்த அசுரனைக் சுழற்றி எறிந்த உன் கால் வலிமைக்குப் பல்லாண்டு!!
- கோவர்த்தன மலையைத் குடையாகப் பிடித்து கோகுலத்தையே காத்த உன் குணத்துக்குப் பல்லாண்டு!!
- க்ருஷ்ணாவதாரத்தில் ஸுதர்ஶனாழ்வான் நின் பகைவர்களை அழிக்கும் வேலாகி நின்ற உன் திருக் கரத்துக்குப் பல்லாண்டு!!!
இத்தகைய நின் கல்யாண குணங்களைப் பாடி அடிமை கொள்ள வந்துள்ளோம். மனமிரங்கி வந்து எங்களை ஏற்றுக்கொள் என்கிறாள் ஆண்டாள்.
ஸ்வாபதேசம்
அன்று மகாபலி தர இயலாத மூன்றடியை நான் தருகிறேன் என்கிறாள் ஆண்டாள்
ஸ்வாபதேசம்
அன்று மகாபலி தர இயலாத மூன்றடியை நான் தருகிறேன் என்கிறாள் ஆண்டாள்
- ஓங்கி உலகளந்த
- அம்பரம் ஊடறுத்து
- அன்றிவ்வுலகமளந்தாய் - என
இரண்டு அடிகளால் மகாபலியின் மமகாரத்தையும், மூன்றாம் அடியால் அவனது அகங்காரத்தை அவன் தலையில் வைத்தும் அழித்தான். ஆக ஜீவர்களாகிய நாம் அவன் திருவடியில் தலையை சேர்க்க வேண்டும். அவன் முன்னே தலை குனிந்தால் வாழ்வில் நிமிரலாம் என்பது தத்துவம்.
தண்டகாரண்யத்தில் ராக்ஷஸர்களால் தங்களுக்கேற்பட்டு வரும் கஷ்டங்கள் தீர ராமபிரான் வரவை எதிர்பார்த்திருந்த ரிஷிகள் அவனைப் பார்த்தவுடன் அவனது அழகில் மயங்கி தம் கஷ்டங்களை மறந்து பல்லாண்டு பாடினர். கருடாரூடனாகிய எம்பெருமானைக் கண்டதும் பெரியாழ்வார் பல்லாண்டு பாடினார்.
"அன்றிவ்வுலகம்......அடிபோற்றி" ஸ்ருஷ்டிகாலத்தில் இந்த எல்லா உலகங்களையும் படைத்த உன் திருவடிகளில் ஶரணாகதி செய்து போற்றுகிறோம்.
"இலங்கைசெற்றாய்...போற்றி"--- அவ்வுலகங்களில் விபவமாயும், அந்தர்யாமியாயும், ஆசார்யராயும் அவதரித்து மனதை விவேகம் மூலம் அழிக்கும் திறலைப்போற்றுகிறோம்.
"சகடம் உதைத்தாய்....போற்றி"- ஜீவன்களின் கர்மாவாகிய வண்டியை அழிக்கும் உன் கீர்த்தியைப் போற்றுகிறோம்.
"கன்று.....கழல் போற்றி"---கன்று போல் விரும்பக்கூடிய புண்ய பாபங்ஙளை அழிக்கவல்ல உன் வீரத்தைப் போற்றுகிறோம்.
"குன்று...குணம்போற்றி"....சிகரம் போன்ற வைகுண்ட லோகத்தில்
ஏக சக்ராதிபதியாக வெண்கொற்றக் குடையுடன் வீற்றிருக்கும் உன் குணத்தைப் போற்றுகிறோம்.
ஏக சக்ராதிபதியாக வெண்கொற்றக் குடையுடன் வீற்றிருக்கும் உன் குணத்தைப் போற்றுகிறோம்.
வென்று...வேல் போற்றி".... மோக்ஷ விரோதிகளாக தடைகளை அழிக்கும் வேல் போன்ற உன் ஸங்கல்பத்தைப் போற்றுகிறோம்.
"என்றென்றும்.....இரங்கேலோரெம்பாவாய்"----இவ்விதமாக உன் திருக்கல்யாண குணங்களைப் பாடி பரமபதத்தில் கைங்கர்யம் கொள்வதற்கு வேண்டி வந்துள்ளோம். அருள் புரிவாயாக. என்பது உட்பொருள்.
வானரங்களைக்கொண்டு ராவணனை வென்றான் எம்பெருமான். "இக்கரை" யிலிருந்து "அக்கரை" சேர்க்கும் "அக்கரை"அவனுக்கு மட்டுமே உண்டு.
*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************
No comments:
Post a Comment