जातापराधमपि मामनुकम्प्य गोदे
गोप्त्री यदि त्वमसि युक्तमिदं भवत्या।
वात्सल्यनिर्भरतया जननी कुमारं
स्तन्येन वर्धयति दष्टपयोधराऽपि॥२७॥
கோதே! குழந்தை பாலுண்ணும்போது சிலசமயம்
கடித்தாலும் பொறுத்துக் கொள்ளும் தாய்போல், உன் வாத்ஸல்யத்தால் நான் செய்த பாபங்களைப் பொறுத்து என்னை ரக்ஷிக்கவேணும் (கோதாஸ்துதி - 27)
பாசுரம் 27 - கூடாரை வெல்லும்
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப்
பாடி பறை கொண்டு யாம் பெறு சம்மானம்
நாடு புகளும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய்
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப்
பாடி பறை கொண்டு யாம் பெறு சம்மானம்
நாடு புகளும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய்
இது ஆகிஞ்சன்யத்தை வெளிப் படுத்தும் பாசுரம்.
தன்னை எதிர்க்கும் எதிரிகளை வெல்பவன், தன்னை ஆஶ்ரயிக்கும் பக்தர்களிடம் தோற்பவன் கோவிந்தன். இதுவரை அவனை விளித்த நாமங்கள் சிறு பெயர்கள். இந்த கோவிந்த நாமமே உயர்ந்த நாமம். உன்னைப் பாடிப் பறை கொண்ட எங்களுக்கு நீ நாடு புகழும் பரிசுகளை அளிக்க வேண்டும் என்கின்றனர் தோழியர். சூடகம், தோள்வளை, தோடு, செவிப்பூ, கொலுசு ஆகியன சன்மானம். நீ உடுத்துக் களைந்த வஸ்த்ரத்தை நாங்கள் உடுப்போம். பின் நெய்யில் முழுக்கிய பால் சோறு முழங்கை வழிவாறக் கூடியிருந்து உண்டு மகிழ்வோம் என்கின்றனர் ஆண்டாளும், தோழியரும்.
ஸ்வாப தேசம்
யுத்தம் செய்த அழகால் ராவணனை வென்றான். கூடமாட்டேன் என்ற ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷன் ஆகியோரையும் வென்றான்.
கூடமாட்டேன் என்ற ஆழ்வார்கள் முன்னின்று வென்று பாடவைத்தான், வாத்ஸல்யத்தால் வென்றான்.
தன்னுடன் கூடியவரை வெல்ல மாட்டேன் என்பான். பரசுராமனளித்த வில்லை வாங்கிய ராமபிரானை வணங்கிய பரசுராமனின் புண்ணியங்களை எடுத்த அஸ்த்ரத்தால் அழிக்கிறார். சமுத்ர ராஜனிடமும் இதே நிலை தோல்விதான். புல் ப்ரும்ஹாஸ்த்ரமாகியது முதலில். காகாசுரன் ஶரணாகதி செய்த பின் அதற்கு தோற்ற எம்பெருமானின் கருணை ப்ரும்ஹாஸ்த்ரத்தை புல்லாக்கியது.
ராம பட்டாபிஷேகம் நடந்தபின் உலகமே புகழும் வண்ணம் ஹனுமனுக்குத் தன் கழுத்திலிருந்த முத்து மாலையை அளிக்கிறாள் ஸீதை. "நாங்கள் எம்மிலிருந்தொட்டிய கச்சங்கம் நானும் அவனும் அறிதும்" என்கிறாள் ஆண்டாள்.
அதுபோன்ற சம்மானம் வேண்டும் எனக் கேட்கிறார் ஆண்டாள்.. ஹனுமனிடம் ராமனளித்த மோதிர அடையாளமும், பிராட்டி அளித்த சூடாமணியும் இருவருக்கும் சொல்லிய கதைகள் பல. தபஸ்வினி அனுசூயா தன் ஆபரணங்களை அனைத்தையும் ஸீதாபிராட்டிக்குப் பூட்டி அழகு பார்த்து ராமபிரான் முன்பு நிறுத்துகிறாராம்.
"கோவிந்தா" என்ற நாமம் சுரந்த புடவையால் த்ரௌபதியின் மானஸம்ரக்ஷணம் நடந்தது.
- ஸத்கர்மாக்களைச் செய்ய மாட்டேன் என்றும் கூடாரை வெல்பவர்ஙள் ஆசார்யர்கள்.
- சூடகம் என்பது கைகூப்புச்செய்கை.
- தோள்வளை என்பது சங்கு சக்ரப் பொறி.
- தோடு, செவிப்பூ என்பன ஆசார்யன் சொல்லும் த்வய மந்த்ரம்.
- பாடகம் என்பன சிஷ்யன் செய்யவேண்டிய அனுஷ்டானங்கள்.
- த்வாதச புண்ட்ரம், அணியும் கச்சம் முதலியன பிற அணிகலன்களாகின்றன.
- மூடநெய்பெய்த பால் சோறு போல பரம போக்யமான க்ருஷ்ணானுபவத்தைப் பெறுகிறான் ஶரணாகதி செய்த சேதனன் என்பது உட்பொருள்.
*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************
No comments:
Post a Comment