अर्च्यं समर्च्य नियमैर्निगमप्रसूनैः
नाथं त्वया कमलया च समेयिवांसम्।
मातश्चिरं निरविशन्निजमादिराज्यं
मान्या मनुप्रभृतयोऽपि महीक्षीतस्ते॥२३॥
மாதா கோதா தேவியே! உன்னுடன்கூடிய அரங்கனை மனு,மாந்தாதா முதலானோர் பல நியமங்களையும், மந்த்ரபுஷ்பங்களையும் கொண்டு அர்ச்சித்து தம் சாம்ராஜ்யத்தை நெடுங்காலம் ஆளும் திறம் பெற்றார்கள் (கோதாஸ்துதி - 23)
பாசுரம் 23 - மாரிமலைமுழைஞ்சில்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்ப்பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப் பூவண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி, கோப்புடைய
சீரிய சிங்காசனத்திலிருந்து, யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம்பாவாய்
மழைக்காலத்தில் குகையில் நிலைத்துக் கிடந்துறங்கும்
சிங்கம் உணர்ச்சி பெற்று தீப்பொறி பறக்கக் கண்விழித்து
பிடரியைச் சிலிர்த்துக் கொண்டு உடம்பை உதறி, உரத்த கர்ஜனை செய்து கொண்டு வெளியே வருவதுபோல் பூப்போன்ற மென்மையும் அழகுமுடைய நீ உன் கோயிலிலிருந்து வந்து ஆஸ்தான மண்டபம் சேர்ந்து சீரிய ஸிம்ஹாசனத்தில் எழுந்தருளி, வேறு பலன்களைக்கருதாமல் உன் திருவடிக்கே ஆட்செய்ய வந்துள்ள எங்களது காரியத்தைப் பரிசீலித்து எங்களுக்கு அருள வேணும் என்கின்றனர் கோபியர்.
இது எம்பெருமானின் நடையழகுப் பாசுரம். உத்ஸவ காலத்தில் வீதி உலா வரும்போது நம்பெருமாள் மெதுவாக நின்று நின்று குசலம் விசாரித்துச் செல்வது போலச் செல்வானாம்.

தண்டகாரண்யத்தில் ஏகாந்தத்திலிருந்த ராமனைப் பார்த்து நடை பயிற்சி செய்த யானையைக் கண்டு ஸீதை சிரித்தாளாம். ஸீதையைப் பார்த்து நடை பயின்று தோற்ற ஹம்ஸத்தைக் கண்டு ராமன் சிரித்தானாம். "நாரணன் நம்பி நடக்கிறான்" என்கிறாள் ஆண்டாள்.
ராகவ ஸிம்ஹமாய் ஸீதையைக் கைபிடித்த எம்பெருமான் யாதவ ஸிம்ஹமாய் ருக்மிணி பிராட்டியை மணக்கிறான்.
ஹிரண்யகசிபுவைப் பார்த்த மாத்ரத்தில் சீரிய சிங்கமாய்
வெளிவந்த எம்பெருமான், அவனருகே நின்ற அசுரக் குழந்தை ப்ரஹ்லாதனைப் பார்த்த மாத்ரத்தில் பூவைப்போல மென்மையாகினான்.

ஸ்வாபதேசம்
இப்பாட்டில் க்ருஷ்ணாவதார சிறப்பை ஆண்டாள் காட்டுகிறாள். பாற்கடலில் மலைக்கு ஒப்பான ஆதிசேஷனின் பர்யங்கம் என்ற குகையில் பிராட்டியுடன் மன்னி யோகநித்ரை செய்யும் எம்பெருமான் முன்னே பூபாரம் தாங்க முடியாத பூமிதேவி கம்சன், சிசுபாலன் முதலியோரால் உண்டான கஷ்டம் நீங்க வேண்டும் என வேண்டியபடியால் ஸங்கல்ப ஞானத்தைப் பெற்றான் (அறிவுற்று தீவிழித்து) எழுந்த எம்பெருமான் தன் திருமேனியிலிருந்து, கருப்பு, வெண்மைநிற கேஸத்தையும் எடுத்து வீசியதை "வேரிமயிர் பொங்க" என்கிறாள்.

வாஸனையுடைய இக்கேஸத்தை விடுவித்து, அழகிய தேக உறுப்புக்களை பெற்று ஆதிஸேஷனையும் உதறி, ஆலஸ்யத்தை நீக்கி உடனே அவதாரம் செய்து முழங்கினான் தேவகி வஸுதேவர் மகனாய் வந்துதித்தான்.
பொற்கொல்லன் மெழுகில் ஒட்டிய பொன்னைப்போல ஞானமில்லாத இப்ருக்ருதியில் ஞானமுள்ள ஜீவன் ஒட்டியிருப்பதைக் கண்டு அறிவுற்றுத் தீவிழித்து கரணகளேபரங்களுடன், முக்குணங்களையும் அளித்து மூரிநிமிர்ந்து ஶ்ருஷ்டி செய்து ஸ்தூலத்தில் ஸூக்ஷ்மமாயுள்ளான்.

இப்பாசுரம் அஹோபிலத்தில் எழுந்தருளியுள்ள ந்ருஸிம்ஹனைப் பற்றியது என்றும் சொல்வர். அஹோபில மலையில் மன்னிக்கிடந்த மாலோலன் இக்கலியுக ஜனங்கள் நற்கதி பெறும் பொருட்டு பரிவாரங்களுடன் வெளியே வந்து ஸஞ்சாரமாக பல
க்ராமங்களையும், நகரங்களையும் அடைந்து மக்களை தன் வசமாக்கினான் அழகிய சிங்கர்கள் மூலமாக என்பது வ்ருத்தாந்தம்.

மாரி மாறாத தண்ணப்மலையாம் திருமலையிலிருந்து, ஹஸ்தி கிரி சென்று, ஹயக்ரீவ, கருடகடாக்ஷம் பெற்று, நடாதூர் அம்மாள், அப்புள்ளார் அருள் பெருக்கால் அனைத்துக் கலைகளும் கற்றுத் தேர்ந்து, அரங்கம் சேர்ந்து, சீரிய சிங்கமென வாதியரை விரட்டி, கவிதார்க்கிக ஸிம்ஹமாகி, க்ரந்தங்கள் பலவற்றை நம் ஸம்ப்ரதாயம் உய்ய, நமக்காக அருளியுள்ளார் நம் ஸ்வாமி தேஶிகன்.
ஆக நம்பெருமாளின் "கதியே" நமக்கு "கதி" என்றார்.
இவனது நடையழகாகிய "ஸஞ்சாரம்" ஸேவித்தால் நமக்கு
"ஸஞ்சாரம்" (பிறப்பு/இறப்பு) இருக்காது என்பது திண்ணம்.

*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************
No comments:
Post a Comment