त्वन्मौलिमाल्यभर संभरणेन भूयः ।
इन्दीवरस्रजमिवादधति त्वदीया-
न्याकेकराणि बहुमान विलोकितानि ॥२०॥
அம்மா! எம் பிதாவாவாகிய எம்பெருமானுடைய திருமுடியை நீ சூடிக்களைந்த மாலையைச் சூட்டிப் புனிதமாக்கிய பின், உன் அலை அலையான கடைக்கண் பார்வையாலே நீலோத்பல மாலையொன்றுமிட்டு கழுத்தையும் அலங்கரித்தாய் போலும் (கோதாஸ்துதி - 20)
பாசுரம் 20 - முப்பத்து மூவர்
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்
செப்பமுடையாய், திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பன்ன, மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டு ஏல் ஓர் எம்பாவாய்
முப்பத்து மூன்று வகையான தேவர்களுக்கும் துன்பம் வருமுன்பே அவர்கள் நினைத்த இடத்துக்குச் சென்று துயர் துடைக்கும் மிடுக்குடையவனே! உன்னை அடைந்தவர்களைக் காப்பாற்றியும், அவர்களது விரோதிகளைத் தண்டித்தும் நிர்வகிக்கும் விமலா! செப்பென்ற ஸ்தனங்களும், பவளவாயும், நுண்ணிய இடையும் கொண்ட திருவாகிய நப்பின்னையே! இருவரும் எழுந்திருங்கள். நோன்புக்கு வேண்டிய விசிறி கண்ணாடி இவைகளைத் தந்து உன் மணவாளனுடன் வந்து எங்களைக் கடாக்ஷிக்க வேணும், என்கின்றனர் தோழிகள்.

ஸ்வாபதேசம்
"முப்பத்து மூவர்...அமரர்க்கு"-- எல்லா தேவதைகளுக்கும் அந்தர்யாமியாயிருக்கும் எம்பெருமான் நாமளிக்கும் காணிக்கைகளைப் பெற்றுக்கொள்ளும் மிடுக்குடையவன்.
"முப்பத்து மூவர்...அமரர்க்கு"-- எல்லா தேவதைகளுக்கும் அந்தர்யாமியாயிருக்கும் எம்பெருமான் நாமளிக்கும் காணிக்கைகளைப் பெற்றுக்கொள்ளும் மிடுக்குடையவன்.
செப்பமுடையாய்--தேர்த்தட்டிலும், கடற்கரையிலும் சொன்னபடி அடைக்கலம் அடைந்தவர்களை ரக்ஷிக்கும் ஆர்ஜவம் உடையவன்!
திறலுடையாய்---தடைகளை நீக்கி நிர்வகிக்கும் திறலுடையவன்.
செற்றார்க்கு-----விமலா - ஆஶ்ரித விரோதிகளிடத்தில் துன்பம் உண்டாக்கப்ண்ணுவது எம்பெருமானுக்குக் குற்றமாகாது. ஜயத்ரதனைக் கொல்லும் பொருட்டு சூர்யனை மறைத்துப் பகலை இரவாக்ககினான் பரமன். பாரத யுத்தத்தில் ஆயுதம் எடுக்காவிடினும், ஒவ்வொரு முறையும் தேரோட்டியாக சாட்டையை சொடுக்கும் போதும் பல எதிரிகள் வீழ்ந்தனர் என்பதை "பற்றலர்வீயக் கோல்கொண்டு பார்த்தன் தேர்முன் நின்றானை"--என்கிறார் கலியன்.
கண்ணன், அர்ஜுனன் தேர்தட்டில் ஏறியவுடனேயே கௌரவ பத்னிகளின் திருமாங்கல்யம் ஒரே சமயத்தில் அசைந்தனவாம்
பாஞ்சாலியின் துயிலுரிந்த வருத்தத்தை அந்த நூறு பத்னிகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளித்தானாம்.
பாஞ்சாலியின் துயிலுரிந்த வருத்தத்தை அந்த நூறு பத்னிகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளித்தானாம்.
"பாண்டவர் தம்முடைய மறுக்கமெல்லாம் ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன்மலை" எனகிறார் பெரியாழ்வார்.
ஆசார்ய வைபவத்தை இப்பாசுரம் அழகாய்க் காட்டுகிறது. ஸ்த்ரீகளுக்கு மூன்று விஷயங்கள் அழகைத்தருவதுபோல ஆசார்யன் மூன்று விஷயங்களை சிஷ்யனுக்குத் தெரியப் படுத்துகிறார்.
- சிறு மருங்குல் போல அஷ்டாக்ஷரத்தில் பிராட்டி இருப்பது தெரியாது.
- மென்முலை யொத்த த்வயத்தில் லக்ஷ்மீ ஸ்பஷ்டமாகத் தெரிகிறாள் சைதன்யஸ்தன்ய தாயினியாக எப்போதும் ரக்ஷிப்பதால்.
*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************
No comments:
Post a Comment