दूर्वादलप्रतिमया तव देहकान्त्या
गोरोचना रुचिरया च रुचेन्दिरायाः।
आसीदनुज्झितशिखावलकण्ठशोभं
माङ्गल्यदं प्रणमतां मधुवैरिगात्रम् ॥२२॥
"கோதே! ஒருபுறம் பச்சைப்பசும்புல் போன்ற உன் நிறத்தினாலும், மறுபுறம் பெரிய பிராட்டியின் கோரோசனையின் மஞ்சள் நிறத்தினாலும் மயில் கழுத்தின் சாயல் பெற்ற எம்பெருமான் மங்களகரமாக பக்தர்களுக்குக் காட்சி தருகின்றான்"
(கோதாஸ்துதி - 22)
பாசுரம் 22 - அங்கண்மா ஞாலத்து
ஶ்ரீரங்கநாதன் புறப்பாட்டிற்குச் செல்லும் போது பாதுகைகளை அணிந்து, ஸயன சமயத்தில் களைவான். திரும்ப காலை எழுந்ததும் அவர் முதலில் கடாக்ஷிக்கும் பாதுகைகள் போல கண்ணா நீ எங்களைக் கடாக்ஷிக்க வேணும் என்கின்றனர் கோபியர்.
ஶரணாகதனின் தோஷத்தைப் பார்க்காத வாத்ஸல்யம் மிக்க திருக்கண் மலராலும், பாபத்தைக் கண்டு தண்டிக்கத் தோன்றும் மற்றொரு சற்றே மூடிய கண்ணாலும் சிறுச் சிறிதாய் எங்களை விழித்துப் பார்த்து எங்கள் பாவங்களைப் போக்குவாயாக என்பதாம்.
பாசுரம் 22 - அங்கண்மா ஞாலத்து
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிண்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டுங்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்து ஏல் ஓர் எம்பாவாய்
பெரிய தேசங்களைத் தம் அடிக்கீழ் கொணர்ந்து ஆட்சி செய்து நம்மில் மேம்பட்டவரில்லை என்ற அபிமானத்தை விட்டு உன் ஸிம்ஹாஸனத்தின் கீழ் கூட்டமாய் பணிந்து நிற்கும் ராஜாக்களைப்போல நாங்கள் உன்னடியை அடைந்துள்ளோம். இப்படி வந்துள்ள எங்களை மலர்ந்த தாமரை யொத்து சூர்ய சந்த்ரர்கள் ஒரே சமயத்தில் உதித்தது போன்ற கண்களால் அன்புடன் மலர்ந்து நோக்கி, எங்கள் சாபங்கள் போகும்படி க்ருபை செய்ய வேண்டும் என்கின்றனர் கோபியர்.
சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிண்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டுங்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்து ஏல் ஓர் எம்பாவாய்
ஸ்வாப தேசம்
ஐம்புலன்களுடன் கூடிய அழகிய சரீரத்திலிருக்கும் ஜீவராசிகள்
நானே ஸ்வதந்த்ரன் என்பன போன்ற அபிமானங்களை விட்டு ஶ்ரீ வைகுண்டத்தில் உன் பர்யங்கத்தின் கீழ் கூடியிருக்கும் நித்ய முக்தர்களின் கூட்டம் போல நாங்களும் முக்தானுபவம் பெற ஶரணாகதி செய்ய வந்துள்ளோம். எங்கள் பாபத்தைப் பார்த்து கண்களைச் சிறுச்சிறிதே மூடி விழித்தால் உன் பரிபூர்ண கடாக்ஷம் எம்மேல் பட்டு எங்களது ஸஞ்சித, ப்ராரப்த பாவங்களைப் போக்குவாயாக என்பதாம்.

"அபிமான பங்கம்" என்பதற்கு ராமாயணத்திலிருந்து உதாரணம் ஒன்று. ராவணவதம் முடிந்தபின் மந்தோதரி புலம்புகிறாள் இப்படி. "தானவ அரசனான மயன் என் தந்தை. ராக்ஷஸ அரசன் என் கணவன். இந்த்ரனையே ஜெயித்தவன் என் புத்ரன் இந்த்ரஜித். சூர்யனின் ஒளியோ, வெப்பமோ இந்த ராஜ்யத்தில் விழுந்ததில்லை. அப்ஸரஸ்ர ஸ்த்ரீகள் குடையும், சாமரமும் ஏந்தி வருவர் ராவணன் பின்னால். ஆனால் ராவணன் வீழ்ந்ததும் என் இந்த கர்வமும் அழிந்தது. சூர்ய ஒளி இலங்கையில் விழுந்தது. வட்டமிடும் கழுகுகளின் நிழல் ராவணன் மீது விழுந்தது குடை பிடிப்பது போல" என்கிறாள்.
ஶ்ரீரங்கநாதன் புறப்பாட்டிற்குச் செல்லும் போது பாதுகைகளை அணிந்து, ஸயன சமயத்தில் களைவான். திரும்ப காலை எழுந்ததும் அவர் முதலில் கடாக்ஷிக்கும் பாதுகைகள் போல கண்ணா நீ எங்களைக் கடாக்ஷிக்க வேணும் என்கின்றனர் கோபியர்.
ஶரணாகதனின் தோஷத்தைப் பார்க்காத வாத்ஸல்யம் மிக்க திருக்கண் மலராலும், பாபத்தைக் கண்டு தண்டிக்கத் தோன்றும் மற்றொரு சற்றே மூடிய கண்ணாலும் சிறுச் சிறிதாய் எங்களை விழித்துப் பார்த்து எங்கள் பாவங்களைப் போக்குவாயாக என்பதாம்.
அகல்யா சாபம் தீர்த்த ராம பாத தூளிகள் போல, உன் திருவடித் துகள்பட்டு எங்கள் சாபம் தீர வேண்டும் கண்ணா என்கின்றனர் கோபியர்.
*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************
No comments:
Post a Comment