रङ्गे तटिद्गुणवतो रमयैव गोदे
कृष्णाम्बुदस्य घटितां कृपया स्ववृष्ट्या।
दौर्गत्यदुर्विषविनाश सुधानदीं त्वां
सन्तः प्रपद्य शमयन्त्यचिरेण तापान् ॥२६॥
கோதா தேவியே! பெரிய பிராட்டி என்ற மின்னல் கொடி படர்ந்த
க்ருஷ்ண மேகமான ரங்கராஜன் கருணை மழை பொழிய, அதனால் பெருகி ஓடும் அமுத வெள்ளமான உன்னைப் பயன்கொண்டு பெரியோர்கள் தங்கள் தாபங்களைத் தணித்துக் கொள்கிறார்கள் (கோதாஸ்துதி - 26)
பாசுரம் 26 - மாலே மணிவண்ணா
மாலே! மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப்பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருள் ஏல் ஓர் எம்பாவாய்
ப்ரார்த்தனைப் பாசுரமாகிய இதில் நப்பின்னை மாலே!மணிவண்ணா! என விளிக்கிறாள். ஆய்ப்பாடி நங்கையிடம் அளவற்ற வ்யாமோஹம் கண்ணனுக்கு! அவர்கள் சொல்லுக்குக் கட்டுப் பட்டு எல்லாம் செய்ய சித்தமாயுள்ளான்.
பஞ்சவர்க்குத் தூது போனதும், அர்ஜுனனுக்கு சாரதியாயிருந்ததும் பக்த சித்தனானபடியாலே.
சூர்ய மண்டலத்தில் கற்று ப்ருஹஸ்பதியின் (தேவகுரு) சிஷ்யனாகி, உத்தவர் என்ற புத்தி ஸத்தமரைத் தன் மந்த்ரியாக்கிக்கொண்ட க்ருஷ்ணன் எதை ஆலோசனையாகக் கேட்டாலும் "அடியேன்", என்றே உத்தவர் கூறுவாராம்.
18 அத்யாயங்களடங்கிய கீதையை உபதேசித்து பின் "புரிந்ததா" எனக் கேட்ட கண்ணனிடம், "நீ சொல்வதைச் செய்கிறேன்" என்றான் அர்ஜுனன். இதுதான் கீதையின் சாரம். முன்னோர்கள் சொன்னபடி
பாவை நோன்பு அனுஷ்டிக்க உபகரணங்களைத் தந்தருளவேணும் எனப் பட்டியலிடுகின்றனர்.
பாவை நோன்பு அனுஷ்டிக்க உபகரணங்களைத் தந்தருளவேணும் எனப் பட்டியலிடுகின்றனர்.
ஞாலத்தை நடுங்கச் செய்யும் பாலன்ன வண்ணச் சங்கு, பெரிய பறை, பல்லாண்டு பாட கோஷ்டி, கோலவிளக்கு, கோஷ்டிக்கொடி, விதானம் ஆகியன ஆலின் இலையில் கண்வளரும் நீ எமக்குத் தந்தருள வேணும் என்று ப்ரார்த்திக்கிறாள்.
ஸ்வாப தேசம்
மாலே! மணிவண்ணா! பக்த வ்யாமோஹம் உள்ளவன் எம்பெருமான். அதனால் மாலே என்கிறாள்.
மாலே! மணிவண்ணா! பக்த வ்யாமோஹம் உள்ளவன் எம்பெருமான். அதனால் மாலே என்கிறாள்.
"சமுத்ரத்தின் அக்கரையிலிருந்து கூப்பிட்ட உனக்கு ஆதிமூலமே என்றலறிய யானையைக் காக்க ஓடிவந்தது போல ஓடிவந்து ரக்ஷித்திருக்க வேணும்" என்று கூறி விபீஷணனைக் கண்களால் பருகினாராம். அத்தனை ஆஶ்ருத வாஞ்சை!
திருக்காட்கரை அப்பனாகிய வாமன மூர்த்தி நம்மாழ்வாருக்குத் தர்ஶனம் தரச் சென்றபோது, அவரைத் தன் கண்களால் பருகி ஹ்ருதயத்திலிட்டாராம் ஆழ்வார்.
காட்கரை அப்பனும் கண்களை மலர்த்தி உள்வாங்கினார் ஆழ்வாரை!
காட்கரை அப்பனும் கண்களை மலர்த்தி உள்வாங்கினார் ஆழ்வாரை!
"மேலயார் செய்வனகள்"--பெரியோர்கள் அனுஷ்டித்தபடியால் நாங்களும் அனுஷ்டிக்கிறோம். தர்மம் அறிந்த பெரியோர்களின் அனுஷ்டானமே ப்ரமாணம். அதில் பலனும் ப்ரசித்தி எற நோன்பைப் பற்றிச் சொல்கின்றனர்.
அடுத்து நோன்புக்கு வேண்டிய உபகரணங்களைக் கேட்கின்றனர்.
"ஞாலத்தை எல்லாம்....கொடியே விதானமே"--அனுஷ்டானம் ப்ரபத்தி என்னும்போது, அதற்கான அங்கங்கள் உபகரணங்களாகின்றன.
த்ருவனைப் பேசவைத்து ஞானமளித்தது இந்த பாஞ்ச ஜன்யமே. க்ருஷ்ணன் செய்த சங்கநாதத்தைக் கேட்டு ருக்மிணி பிராட்டி கண்ணன் அருகே வந்து விட்டான் என்று மகிழ்ச்சி அடைந்தாளாம். "ருக்மிணி பிராட்டிக்குக் கேட்ட சங்கொலியும்,
ஸீதா பிராட்டிக்குக் கேட்ட சார்ங்க ஒலியும் போல் எனக்கு எப்போது கேட்கும்" என்கிறாள் நப்பின்னை.

சங்கநாதம் போன்றது ஆசார்ய ஸூக்திகள்.
பல்லாண்டு பாடும் ஆழ்வார் ஸூக்திகள்.
பறை கொட்டுவது போல் வாதக்ரந்தங்கள் குத்ருஷ்டிகளை மாய்க்க.
கோல விளக்கு போன்ற சாத்வீக ஞானம்.
பக்தி என்பதன் மூலம் யார் என்பதைக் காட்டும் கொடி.
அகங்காரம் நீங்கிய வைராக்யம் விதானம்.
இப்படியான உபாய அனுஷ்டானம் ஆனந்தம் தரவல்லது என்பதனை ஆண்டாள் காட்டுகின்றாள்.
*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************

No comments:
Post a Comment