हित्वा भुजान्तरगतामपि वैजयन्तीम्।
पत्युस्तवेश्वरि मिथः प्रतिघातलोलाः
बर्हातपत्ररुचिमारचयन्ति भृङ्गाः ॥१४॥
"லோகேஶ்வரியே!நீ சூடிக்களைந்த மாலை எம்பெருமான் திருமுடியில் மணம் வீசிக்கொண்டிருப்பதை உணர்ந்த வண்டினங்கள்அவனது திருமார்பில் துலங்கும் மந்தார மாலையை விட்டு திருமுடியைச்சுற்றி வட்டமிட்டு மயில்தோகையாலான குடைபோல நிழலானது"(கோதாஸ்துதி -14)
பாசுரம் 14 - உங்கள் புழக்கடை
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கொயில் சங்டகிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடு ஏல் ஓர் எம்பாவாய்
நங்காய்! நாணாதாய்! நாவுடையாய்! என்று அழைக்கிறாள்.
பொழுது புலர்ந்ததற்கு அடையாளமாக செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து அல்லி மலர்கள் மூடின. காவி உடைதரித்த வெண்பற்களுடைய துறவிகள் சங்கொலித்துக் கொண்டு தங்கள் கோயில்களுக்கு அனுஷ்டானம் செய்யப் போகிறார்கள். எங்களை
வந்து எழுப்புவார்கள் என சொல்லிவிட்டு வராததற்கு நீ வெட்கப்படவில்லை. சங்கும் சக்கரமும் ஏந்தும் தடக்கையனும் பங்கையக்கண்களுமுடைய ஸ்ரீமன் நாராயணனைப் பாட நீ எழுந்து வா என்கிறாள் ஆண்டாள்.
ஸ்வாபதேசம்
சேதனர்களின் ஹ்ருதயத்தில் ஞானம் மலர்ந்து, அஞானம் நீங்குவதை "செங்கழுநீர். ...கூம்பினகாண்" என்று கூறுகிறார்.
முதன் முதலில் சிறிய திருவடி ராமனைப் பார்க்கும் போதே அவர் பரமாத்மா எனத் தெரிந்து கொண்டாராம். அதுபோல உள்ளே உறங்குபவள் ஞானம் உள்ளவளாயும், நாவன்மை உடையவளாயும் இருக்கிறாள்.
பேயாழ்வார் எம்பெருமானை மங்களாஸாசனம் செய்யும்போது நாபிக்கமலத்தில் ப்ரும்ஹா வீற்றிருப்பதை பார்க்கிறார். அக்கமலம் மலர்ந்து மூடுவதை அவனது திறந்து மூடிய கண்களின் நோக்கால் நிகழ்வது என உணர்ந்தாராம்.
"எங்களை முன்னம்......எழுந்திராய்"...வெகுகாலமாய் ஸம்ஸாரத்தில் தூங்கும் எங்களுக்கு குணபூர்ணரான நீ ஞானம் போதித்து அனுக்ரஹிக்கவேணும் என்கிறாள். தேவதாந்த்ர வ்யாவர்த்தகமாக அடையாளங்களைப் பெற்ற பகவானை உபதேசித்தருள வேண்டுகிறாள்.
*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************
No comments:
Post a Comment