शोणाऽधरेऽपि कुचयोरपि तुङ्गभद्रा
वाचां प्रवाहनिवहेऽपि सरस्वती त्वम्।
अप्राकृतैरपि रसैर्विरजा स्वभावात्
गोदाऽपि देवि कमितुर्ननु नर्मदाऽसि॥६॥
"கோதா தேவியே ! இயற்கையிலேயே நீ கோதா ஆகிலும் சிவந்த உதடுகளால் சோணபத்ரா என்ற சிவந்த நதியாகவும், சொல்லாதிக்கத்தால் ஸரஸ்வதி நதியாகவும், திவ்யமான ஶ்ருங்கார ரஸங்களால் குற்றமற்ற விரஜா நதியாகவும், உன் பர்த்தாவுக்கு அனுகூலமான நர்மதா நதியாகவும், மார்பகங்களில் துங்கபத்ரா நதியாகவும் ஆகிறாய் - (கோதாஸ்துதி - 6)
பாசுரம் 6 - புள்ளும் சிலம்பின்
பகவதனுபவத்தில் புதிதாய் ஈடுபட்ட பெண்ணை விளிக்கிறாள் ஆண்டாள் "பிள்ளாய்" என்று. விடிந்ததற்கு அடையாளமாக பறவையின் ஒலி, கருடனின் ஆலயத்தில் ஒலிக்கும் சங்கின் ஒலி, முனிவர்களும் யோகிகளும் எழும்போது சொல்லும் "ஹரி ஹரி" என்ற திருநாமத்தின் ஒலி. இவை எல்லாம் உனக்குக் கேட்க வில்லையா? பூதனையாகிய பேயிடம் விஷப்பாலையுண்டவனும், கபட சகடாசுரனைத் தன் திருவடிகளால் உதைத்தழித்தவனும், திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மீது யோக நித்ரை செய்பவனுமாகிய எம்பெருமானை த்யானிக்கும் யோகிகள் எழுந்திருக்கும்போது
சொல்லும் ஹரிநாமம் நம் உள்ளத்துள் புகுந்து குளிர்விக்கிறது.
ஸ்வாபதேசம்
ஹம்ஸாவதாரம் எடுத்த பகவானும், அவனருள் பெற்ற ஆசார்யர்களும் ஸத்வகுணம் பெற்ற சங்கைப் போல ப்ரணவத்தின் அர்த்த விசேஷங்களை நமக்கு உபதேசிப்பது கேட்கவில்லையா என்கிறாள்.
அவித்யை என்ற பூதனையை அழித்து, சரீரமாகிய வண்டியை
கெட்ட வழிகளில் ஈடுபடாமல் நல்வழிப் படுத்துவோர் ஆசார்யர்கள். இவர்கள் ஸம்ஸார போகத்தில் ஆசைப்படாது ப்ரபத்தி மார்க்கத்தில் சேதனர்களை சேர்த்து ஹரி என்ற பேரொலி எழுப்பி அவனுள்ளம் குளிரச்செய்து நம்மை அவன் கைங்கர்யத்தில் ஈடுபடுத்தி உபகாரம் செய்கிறார்கள்.

*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************
No comments:
Post a Comment