गोदे त्वमेव जननि त्वदभिष्टवार्हां
वाचं प्रसन्नमधुरां मम संविधेहि॥३॥
"என்னைப் பெற்ற தாயே! உன் கணவன் எம்பெருமானுக்கு கர்ணாம்ருதமாயிருக்கும் உன்சலங்கை ஒலிபோல உன்னைப்பற்றிய துதி என் வாக்கிலிருந்து தெளிவும், இனிமையும் பெற்று வெளிவர அருளவேணும்"-(கோதாஸ்துதி - 3)
*** பாசுரம் 3 - ஓங்கி உலகளந்த ***
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நொலூடு கயல் உகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்து ஏல் ஓர் எம்பாவாய்.
வ்ரதம் அனுஷ்டித்தால் வரும் பலன் சொல்கிறாள் இங்கே.
ராம க்ருஷ்ணாவதாரத்துக்கில்லாத பெருமை ஓங்கி உலகளந்த வாமனனுக்கு. "உத்தமனே"! என்கிறாள். அவன் திருநாமம் பாடி வ்ரதமிருந்தால் கிடைக்கும்பலன் மூன்று - ஜல, நெல், பால் ஸம்ருத்தி.
வேதாந்தார்த்தம்
அஷ்டாக்ஷரமாகிய திருநாமம் பாடினால் அவனுகந்து நம்மை ஏற்பான். கட்டிப்பொன்போல எம்பெருமான் பணிப்பொன்போன்றது அவன் நாமம். நாமத்தை தரிக்கவும் பாடவும் முடியும் அனன்ய சேஷத்வம், அனன்ய உபாயத்வம், அனன்யபோக்யத்வம் என்ற மும்மழையால் ஆத்மா பலம் பெறுகிறது செந்நெல் உயர்வதுபோல். கயல்கள உழல்வது எம்பெருமான் பெறும் கைங்கர்யம்.
வாங்கக் குடம் நிறைக்கும் பெரும்பசுக்கள் போல ஆசார்யர்கள் வள்ளண்மையால் நமக்குஅளிக்கும் ஞானம் சொல்லப்படுகிறது. நீங்காத செல்வம் என்பது எம்பெருமானுடனே சேர்ந்து நாம் அனுபவிக்கும் அந்த மிலா பேரின்பம்.
"ஓங்கி உலகளந்த......தீங்கின்றி"-
த்ரிவிக்ரமனாக வளர்ந்து உலகங்களை அளந்த க்ருஷ்ணனுடைய "யத்ப்ரபத்திம் விநா ஸர்வைர்யஸ்யமாயா துரத்யயா
தனஞ்ஜய ரதோத்தம்ஸம் தத் ப்ரபத்யே பரம் மஹ:"---என்ற தனியனின் அர்த்தத்தை (அவன் விரித்த வலையில் சிக்கி நாம் அல்லல்படுகிறோம். அம்மாயத்திரை விலக, அர்ஜூனன் தேர்தட்டில் ப்ரகாசமாக ஒளிரும் பரம் பொருளாகிய க்ருஷ்ணனை சரண் புகுகிறேன்) நினைத்து ஶரணாகதி ரஹஸ்யத்தைப்பலரும் அறியும் வகையில் உபதேசித்து அனுஷ்டித்தால் அனன்யசேஷத்வம் முதலான தீங்கின்றி இருப்பர்.

*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************
No comments:
Post a Comment