वल्मीकतः श्रवणतो वसुधात्मनस्ते
जातो बभूव स मुनिः कविसार्वभौमः।गोदे किमद्भुतमिदं यदमी स्वदन्ते
वक्त्रारविन्द मकरन्द निभाः प्रबन्धाः ॥७॥
"திருப்பாவைக்குச் சமானமாக ப்ரஸித்தி, மாதுர்யம், அர்த்தானுபவம் வேறெந்த க்ரந்தத்துக்கும் கிடையாது எனபர் ஆன்றோர். ஸாக்ஷாத் பூமிதேவி அருளியதால் இந்த ஏற்றம்.
பூமிக்குக் காது போன்றது புற்று. அந்த புற்றிலிருந்து வந்தவர் வால்மீகி அவர் எழுதிய ராமாயண காவ்யம் அத்புதம் எனப்படும்போது கோதாதேவியின் வாய்மொழிக்கு ஈடு உண்டோ என்கிறார் ஸ்வாமி தேஶிகன் கோதாஸ்துதியில் (கோதாஸ்துதி 7)பாசுரம் 7 - கீசு கீசென்றெங்கும்
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய்! திற ஏல் ஓர் எம்பாவாய்.
பாவை கோஷ்டியின் தலைவியை எழுப்பும் பாசுரம் இது.
சப்த(sound) பாசுரமாக ஆண்டாள் அனுபவிக்கிறாள். பறவை, ஆபரணம்,
ஆய்ச்சியர் தயிர்கடைதல், பகவன்நாமா ஆகிய ஒலிகள் நாயகப் பெண்பிள்ளாயான உனக்கு கேட்க வில்லையா? க்ருஷ்ணானுபவத்தினால் தேஜஸ்ஸுடன் ஒளிர்பவளே !
பகவதனுபவம் மிக்கதால் "பேய்ப்பெண்ணே" என்றழைத்து
கதவைத் திறவாய் என்கின்றனர் தோழியர்
ஸ்வாபதேசம்
வ்ரஜபாஷையில் கன்ஹா என்பதை நாம் கண்ணன் என்கிறோம். கிச்சா என்பதை கீசு கீசு என்று பறவைகள் சப்திப்பதாய்க்கொள்ளப்படுகிறது.
"கூட்டிலிருந்து கிளி எப்போதும் கோவிந்தா" "காலை எழுந்து கரிய குருவிக்கணங்கள் மாலின்வரவு சொல்லி" என்று நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் பறவைகள் எம்பெருமான் பேர்சொல்லும் அழகைக்காட்டுகிறாள்.
கேசவன், நாராயணன் எனப்பாடி பகவதானுபவம் செய்ய எழுந்து வரும்படி தலைவியை அழைக்கிறார்கள்.

ஆனைச்சாத்தம் கலந்து பேசுதல் என்பதன் மூலம் காலக்ஷேப கோஷ்டியில் சேர அழைக்கிறாள். இதிகாஸ புராணங்கள் இந்த உரையாடல்களை கீழ்க்கண்டபடி இப்பாசுரத்தில் ஸ்லாகிக்கின்றன.
க்ருஷ்ணார்ஜுன ஸம்வாதம், ஸுகர் பரீக்ஷித் ஸம்வாதம், உத்தவர் விதுரர்
ஸம்வாதம், மைத்ரேயர் விதுரர் ஸம்வாதம் ஆகியன ப்ரஸித்தமானவை.
க்ருஷ்ணார்ஜுன ஸம்வாதம், ஸுகர் பரீக்ஷித் ஸம்வாதம், உத்தவர் விதுரர்
ஸம்வாதம், மைத்ரேயர் விதுரர் ஸம்வாதம் ஆகியன ப்ரஸித்தமானவை.
காசு என்பது த்வயமந்த்ரமாகவும்
பிறப்பு என்பது திருமந்த்ரமாயும் கொள்ளப்படுகின்றன. இரண்டும்
ஆசார்யர்கள் நமக்களிக்கும் ஆபரணங்கள். அவர்கள் ஞானப் பிறப்பையளித்து பகவானுடன் நம்மைச் சேர்த்து வைக்கிறார்கள் இந்த காசும் பிறப்பும் கடைந்தெடுத்து அளிப்பனவே இதிகாச புராணங்களும், ப்ரபந்தங்களும். ஆக இந்த பகவதனுபவம் பெற நாயகியை தோழிகள் எழுப்புகின்றனர்.

ஞானம், அனுஷ்டானம் என்ற இரு இறக்கைகளைக் கொண்டு ஆசார்யர்கள் சேதனனை உய்விக்கச் செய்யும் மந்த்ரோபதேசங்கள், பதவாக்யார்த்தங்கள் திருமாளிகை தோறும் ஒலிப்பதே "கீசு கீசென்றெங்கும் ஆனைச்சாத்தம் கலந்து பேசின பேச்சு" என்பது. உபநிஷத்துடன் பகவத் விஷயமும் சேர்ந்து கமழ்வது "வாஸ நறுங்குழல் ஆய்ச்சியர் கூந்தல் மணம் போல". புத்தி என்ற மத்தினால் த்வயமாகிய தயிரைக்கடைந்து நாராயணனாகிய வெண்ணெயை எடுத்து மோக்ஷ வழிகாட்டுகின்றார் ஆசார்யன். இத்தகைய ஸப்தங்களைக் கேட்டும் இன்னும் உறங்குகிறாயே! க்ருஷ்ணானுபவத்தால் தேஜஸ்வியாகிய நீ எங்களது அஞானத்தையும் போக்க எழுந்துவா. நாராயணன், மூர்த்தி, கேசவனைப் பாடலாம் என்கிறார்கள் தோழிகள்.
*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************
No comments:
Post a Comment