वर्णेषु माति महिमा न हि मादृशां ते।
इत्थं विदन्तमपि मां सहसैव गोदे
मौनन्द्रुहो मुखरयन्ति गुणास्त्वदीयाः ॥२॥
கலைத்துப் பேச வைத்து விட்டனவே"! (கோதாஸ்துதி - 2)
*** பாசுரம் 2 - வையத்து வாழ்வீர்காள் ***
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ, பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து ஏல் ஓர் எம்பாவாய்.
"நாமும் நம்பாவைக்கு....பாடி"---
நமக்காக ஏற்பட்ட ஶரணாகதி என்ற நோன்பைச் செய்யவும், அதற்கு வேண்டிய சடங்குகளைச் செவியால் கேட்டும், அனுஷ்டித்தும் பயன் பெறுவீர்களாக. த்வயமந்த்ரத்தின்
த்யான ஶ்லோகத்தின்படி அவனை வணங்கி அம்மந்த்ரத்தைச்சொல்லி ப்ரபத்தி செய்தல்வேண்டும்.
செய்யும் கிரிசைகள் கேளீரோ, பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து ஏல் ஓர் எம்பாவாய்.
வையத்து வாழ்வீர்காள்!! என்று ஆண்டாள் எல்லோரையும் விளிக்கிறாள். வ்ரதமிருக்க அனுஷ்டிக்கவேண்டியவை எவை என முதலில் சொல்கிறாள். நாட்காலை நீராடுதல், பரமனடி பாடுதல், தானதர்மங்கள் செய்தல் ஆகியன.
செய்யக்கூடாதன - நெய் பால் உண்ணோம், கண்ணில் மையிடோம் கூந்தலில் பூச்சூடோம், செய்யாதன செய்யோம், கோள் சொல்லமாட்டோம் - என்கிறாள் ஆண்டாள்.
வேதாந்தார்த்தம்
வராஹ அவதாரத்தில் எம்பெருமான் சொல்லவந்த அவதாரமே ஆண்டாள்.
க்ருஷ்ணானுபவத்துக்கு தேஹாலங்காரம் வேண்டாம். ஆத்மாலங்காரம்தான் முக்யம். பொறுமை, புலனடக்கம், காமமின்மை ஆகியன ஆத்மாவின் ஆபரணங்கள். உய்யும் வழி ஶரணாகதி அதனை அடைய ஆறு அங்கங்கள் என்பதனை "உய்யுமாறு" என்கிற பதம் காட்டுகிறது.
தர்மத்தையே நினை, பாடு, பேசு, அனுமதி கேள், பார் என்கிறது இப்பாசுரம்.

இதனை அனுஷ்டிப்பவர்களுக்கு ஆசார்யனுக்ரஹமும், எம்பெருமானின் கடாக்ஷமும் கிடைத்து மோக்ஷம் கிடைக்கும்.
நமக்காக ஏற்பட்ட ஶரணாகதி என்ற நோன்பைச் செய்யவும், அதற்கு வேண்டிய சடங்குகளைச் செவியால் கேட்டும், அனுஷ்டித்தும் பயன் பெறுவீர்களாக. த்வயமந்த்ரத்தின்
த்யான ஶ்லோகத்தின்படி அவனை வணங்கி அம்மந்த்ரத்தைச்சொல்லி ப்ரபத்தி செய்தல்வேண்டும்.
"நெய் உண்ணோம்......தீக்குறளை ஓதோம்"----காமவிகாரங்களைத்தரும் பொருட்களை உண்ணாமலும், காம்ய கர்மாக்களை விலக்கியும் சரீர அலங்காரங்களைத் தவிர்த்தும் நித்யகர்மானுஷ்டானங்களைச்செய்தும், பரஹிம்சை, நிஷித்த கர்மா பாகவத அபசாரம் இவைகளைச் செய்யாமல், வாக்காலே தவிர்க்க
வேண்டியவைகளைத் தவிர்த்து செயல் படவேண்டும்.
வேண்டியவைகளைத் தவிர்த்து செயல் படவேண்டும்.
"ஐயமும்....காட்டி.." ஆசார்ய உபகாரம், பாகவத கைங்கர்யம்
முடிந்தவரை செய்து உய்யும் வகை நினைந்து சந்தோஷிக்க கற்க வேண்டும்.
முடிந்தவரை செய்து உய்யும் வகை நினைந்து சந்தோஷிக்க கற்க வேண்டும்.
*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************
No comments:
Post a Comment